BREAKING NEWS
Search

‘விஷமப் பிரச்சாரங்களை மீறி’ உலகெங்கும் 521 திரையரங்குகளில் லிங்கா!

‘விஷமப் பிரச்சாரங்களை மீறி’ உலகெங்கும் 521 திரையரங்குகளில் லிங்கா!

FE_0901_MN_22_Cni3442

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா திரைப்படம் உலகெங்கும் இன்னும் 521 அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக இன்று விளம்பரம் வெளியாகியுள்ளது.

லிங்கா படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி உலகெங்கும் 3000-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது.

தமிழகத்தில் மட்டும் 650 அரங்குகளுக்கும் மேல் வெளியானது. முதல் மூன்று நாட்களில் ரூ 104.6 கோடியைக் குவித்து சாதனையைப் படைத்த லிங்கா, இதுவரை ரூ 180 கோடி வரை வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் அதிகபட்சமாக ரூ 73 கோடியை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படி ஒருபக்கம் தகவல்கள் வந்தாலும், படம் வெளியான நான்காவது நாளே லிங்காவால் நஷ்டம் என்று ஒரு கோஷ்டி கிளம்பிவிட்டது. குறிப்பாக திருச்சி – தஞ்சை மாவட்ட விநியோகஸ்தர் என்று கூறிக் கொண்ட சிங்கார வேலன் என்பவர் இதனை ஒரு பிரச்சாரமாகவே முன்னெடுத்தார்.

‘லிங்கா நஷ்டம். படம் சரியில்லை. கர்நாடகத் தயாரிப்பாளருக்கு ஏன் படம் செய்தார் ரஜினி? ரஜினிக்கு வயதாகிவிட்டது. ரஜினி ரசிகர்கள் படம் பார்க்க வரவில்லை… தமிழ் நாட்டுப் பணத்தை கர்நாடகாவுக்கு கொண்டு போய்விட்டார்கள்…’ இந்த ரீதியில் அமைந்தது அவரது பிரச்சாரம்.

‘இது படத்துக்கு நஷ்ட ஈடு கேட்பது போல இல்லையே.. யாரோ தூண்டிவிட்டு நடத்தும் விஷமப் பிரச்சாரமாக அல்லவா தெரிகிறது’ என்ற சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது நடுநிலையாளர்கள் பலருக்கும். நேற்று அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலும் இந்தக் கேள்வியே பிரதானமாகக் கேட்கப்பட்டது.

லிங்கா படத்தின் நஷ்ட ஈட்டைக் கேட்பதாகக் கூறும் நீங்கள், தமிழ்நாடு – கர்நாடகா என இன ரீதியாகப் பிரச்சினை கிளப்புவது ஏன் என்ற கேள்விக்கு அவரிடம் சரியான பதில்  இல்லை. மேலும் தங்களின் உண்ணாவிரதத்துக்கு தமிழ் அமைப்புகள் சிலவற்றின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சினிமா வியாபாரத்தின் லாப நஷ்டத்தில் தமிழ் அமைப்புகளுக்கு என்ன வேலை? படத்தை வாங்கியபோது தெரியாதா, தயாரிப்பாளர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பது? முதல் மூன்று நாட்களில் ரூ 1000, 500 என டிக்கெட் போட்டு சிறப்புக் காட்சிகளில் வசூலித்த தொகையெல்லாம் எங்கே?

-இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்த உண்ணாவிரத கும்பல் நேற்று எந்த தெளிவான பதிலையும் சொல்லவில்லை. மழுப்பலாக சொல்லி வைத்தார்கள்.

இந்த நிலையில்தான், இன்று படத்தின் தயாரிப்பாளர்கள் ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளனர். லிங்கா வெளியாகி 30 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இன்னும் 521 அரங்குகளில் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
trichy
படம் நஷ்டம் என்று கூறப்படும் திருச்சி – தஞ்சையில் இன்றும் 12 அரங்குகளில் லிங்கா ஓடுகிறது. இந்தப் பகுதியில் ஒரு புதிய படம் வெளியானால் கூட இத்தனை அரங்குகளில் ஓட்ட முடியாது.

kovai (2)

கோவை – ஈரோடு – திருப்பூர் பகுதிகளில் இன்றும் 35 அரங்குகளில் லிங்கா ஓடிக் கொண்டுள்ளது. மக்களே வராத ஒரு படத்தை இத்தனை அரங்குகளில் ஓட்ட முடியுமா… சிங்கார வேலன்களுக்கே வெளிச்சம்!

-என்வழி

trichy
9 thoughts on “‘விஷமப் பிரச்சாரங்களை மீறி’ உலகெங்கும் 521 திரையரங்குகளில் லிங்கா!

 1. Murali

  A case has to be registered on all the false propaganda parties and it has to be investigated to completion. It was very clear that these hooligans had the backing of Superstar’s detractors from the beginning. In spite without verifying facts , all the magazines published the hooligan’s statements and demoralized Rajini’s die-hard fans. In someway I think the hooligans succeeded with the help of some magazines hand in glove. Will now at least , truth loving magazines come together and expose these snakes (doubtful?) . But I am sad that certain damage has already been done.
  Dear Rajini,
  This is internet world . Time for you to understand the power of internet and gather your well wishers all over Tamilnadu and announce your entry into Politics . Technology, intelligence and Iron fist towards detractors are the need of the hour. Not silence Baasha Bhai. My humble submission.

 2. கணேசன் நா

  //கர்நாடகத் தயாரிப்பாளருக்கு ஏன் படம் செய்தார் ரஜினி?
  தமிழ் நாட்டுப் பணத்தை கர்நாடகாவுக்கு கொண்டு போய்விட்டார்கள்… //

  அப்போ கத்தி யின் தயாரிப்பாளர், கத்தி படத்தின் லாபம் எந்த நாட்டுக்கு போச்சு?

 3. Ravikumar

  பொய்கள் புயல் போல் வீசியது … ஆனால் உண்மை மெதுவாய் பேச ஆரம்பிகிறது ….

 4. saranya

  “தமிழகத்தில் மட்டும் 650 அரங்குகளுக்கும் மேல் வெளியானது. முதல் மூன்று நாட்களில் ரூ 104.6 கோடியைக் குவித்து சாதனையைப் படைத்த லிங்கா, இதுவரை ரூ 180 கோடி வரை வசூலித்துள்ளது” idhu romba kammi thaan

 5. saranya

  by now it shud hav crossed more than 250+ crs. then oly they ll say it as hit. adhanaala thaan avan nashtamnu solran

 6. குமரன்

  இவனை சும்மா விடக் கூடாது. எதிர்ப் போராட்டம் ஆரம்பித்தால் ஓடி விடுவான்.

 7. venkat

  you have to bell the cat right now. I am away from country. Vino Why you dont organize a big protest. I live in usa people are believing the loss news. I tried to explain the dynamics they refused to believe. Silence is a good weapon but not always. Please do it before tommorrow. Unfortunately i am outside the country otherwise i would have joined

  Rajini fans has to use the media well.

  Regards,

  Venkatesh

 8. Muru

  லிங்கா படம் எடுத்தது நம்ம இந்தியன்தானே !

  கத்தி படம் எடுத்த கருணா ,தமிழ் மக்களை கொன்று குவித்த தமிழன துரோகி ராஜபச்சே ஆளு பத்தி பேசாம இந்த சீமான் எங்க போனான் ?

  இவனுகள இப்படியே விட்டுட கூடாது . இதுக்கு சரியான பதில் அடி கொடுக்கணும் . We will use the internet media power to bring the justice to these cowards.,..

 9. r.cardoza

  We are ready to support in any terms and any kind of protest against these bastards ,these people are unfit to live in this country. Rajini sir please dont be silent now ,,just draw a line we will make a national highway.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *