BREAKING NEWS
Search

ஓட்டுக் கேட்டு நீங்க வருவீங்க.. பிரச்சினைன்னா ரஜினி வரணுமா.. வெக்கமா இல்ல? – இயக்குநர் அமீர்

பிரச்சினைன்னா ரஜினிகாந்த் வரணுமா..? – இயக்குநர் அமீர் விளாசல்


சென்னை: கர்நாடகம் – தமிழகம் இடையிலான காவிரிப் பிரச்சினையைத் தீர்க்க ரஜினிகாந்த் வரவேண்டும் என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் அமீர்.

காவிரிப் பிரச்சினை குறித்து நாம் தமிழர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், இதுகுறித்துப் பேசுகையில், “காவிரிப் பிரச்சினையில் நான் தலையிட மாட்டேன். உச்ச நீதிமன்றம் தலையிட்டிருப்பதால் நான் தலையிடக் கூடாது என்கிறார். எங்களின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் உச்ச நீதிமன்றம்தான் தலையிட வேண்டும் என்றால்… பிரதமர் எதற்கு? உச்ச நீதிமன்ற நீதிபதியே போதுமே.. இத்தனை லட்சம கோடிகள் செலவழித்து எதற்கு தேர்தல்?

மத்தியில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன் ஒரு பேட்டி கொடுக்கிறார். அதில் ‘நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இரு மாநிலத்துக்குமான உறவைச் சேர்த்து வைக்க வேண்டுமாம்.. பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமாம்’.

ஓட்டுக் கேட்க நீங்க வருவீங்க… பிரச்சினையைத் தீர்க்க ரஜினிகாந்த் வரணுமா? ஏன்டா வெக்கமா இல்ல… எப்படி வெட்கமே இல்லாம, மான வெட்கம் சூடு சுரணை இல்லாம நீங்கள்லாம் டிவி முன்னாடி நின்னு பேட்டி கொடுக்கறீங்க?

ஏன்டா, ரஜினிகாந்தா வந்து என்கிட்ட ஓட்டுக் கேட்டாரு? ரஜினிகாந்த்தா மேக் இன் இந்தியான்னு என்கிட்ட சொன்னாரு?

ரஜினிகாந்தா க்ளீன் இந்தியா சொன்னாரு? சொன்னவங்கெல்லாம் ஓடிப் போயிட்டாங்க…,” என்றார்.

அமீரின் இந்த சவுக்கடிப் பேச்சு தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு மட்டுமல்ல, கருத்துச் சொல்கிறேன் பேர்வழி என சமூக வலைத் தளங்களில் தலைவரைப் பற்றி கண்டபடி உளறும் பேர்வழிகளுக்காகவும்தான்.

-என்வழி




6 thoughts on “ஓட்டுக் கேட்டு நீங்க வருவீங்க.. பிரச்சினைன்னா ரஜினி வரணுமா.. வெக்கமா இல்ல? – இயக்குநர் அமீர்

  1. Karthik

    arumaiyaana karuthu… PM yaaru Rajiniyaa ill Modiya ?? Rajini arasiyal velaya paatha, Modi cinemala nadika vara poraara ? muttap pasanga BJP..

  2. Rajagopalan

    Well Said…
    I think time is not good now for thalaivar.
    Hearing so many rumours.
    O God We want our Basha Back to normalcy…

  3. arul

    super amir.you always speaking the truth.rajinikanth never think wrong to any person.he is calm because if he says something it will create severe impact in this issue and it will become critical to solve this problem and also it will create problems to tamilians in karnataka.

  4. jegan N

    Anna there is a rumour that thalaivars daughter Mrs soundarya is going to divorce…..is it true…..if it is true..then…thalaivar Ku en intha sothanai….?

  5. srikanth1974

    தலைவருக்கு ஆதரவா குரல் கொடுத்ததற்கு இயக்குநர் திரு.அமீர்
    அவர்களுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *