BREAKING NEWS
Search

சார்… நண்பா… பிரதர்…. கபாலிக்கு ஒரே ஒரு டிக்கெட் கிடைக்குமா?

கபாலிக்கு ஒரே ஒரு டிக்கெட் கிடைக்குமா?

thalaivar-tickets -1

2002- ம் ஆண்டு. தினமணியில் ஒரு கட்டுரை இப்படி ஆரம்பித்திருந்தது.

“இன்று மட்டும் கடவுள் கண் முன் தோன்றி உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்.. தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கேட்கும் வரம், ‘சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாபா முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் வேண்டும்,’ என்பதாகத்தான் இருக்கும்.”

14 ஆண்டுகள் கழித்து கபாலி வெளியாகும் இந்த நேரத்தில், அதே நிலை நீடிப்பதை உணர முடியும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள “கபாலி’ படத்தின் டிக்கெட் முன் பதிவு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் உலகம் முழுவதும் தொடங்கியது.

டிக்கெட் முன்பதிவு திங்கள்கிழமைதான் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதலே ‘ஆன்லைனில்’ ரசிகர்களின் முன் பதிவு செய்யத் தொடங்கிவிட்டனர்.

“கபாலி’ திரைப்படத்தை முதல் காட்சியிலேயே பார்க்க வேண்டும் என்று ஏராளமானோர் ஆர்வத்துடன் உள்ளதால், முன்பதிவு செய்வதில் ரசிகர்களிடையே கடும் போட்டி நிலவியது.

முதல் நாள் மட்டுமல்ல, முதல் நான்கு நாட்களுக்கு அனைத்து அரங்குகளிலும்
டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. சத்யம் குழுமத்தில் மட்டும் 26 அரங்குகளில் கபாலி படம் வெளியாகிறது. இந்த 26 அரங்குகளிலும் கபாலியின் முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இன்னமும் தேவி, சங்கம், ஏஜிஎஸ் அரங்குகளில் முன்பதிவு தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழத்தின் பிற பகுதிகளிலும் இதே நிலை. இந்தியா தவிர உலகின் பிற நாடுகளில் கபாலியைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலியை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) வெளியாகிறது. தமிழ் தவிர மலாய் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே வரலாறு காணாத எதிர்பார்ப்பும் வரவேற்பும் எழுந்துள்ளது.

-என்வழி




3 thoughts on “சார்… நண்பா… பிரதர்…. கபாலிக்கு ஒரே ஒரு டிக்கெட் கிடைக்குமா?

  1. Rajagopalan

    Boss ennum 75% theatres open panna villai 🙁
    Mayajal, Sangam , Albert, Udhayam, Vetri, PVR, Inox etc

  2. srikanth1974

    இந்த நேரத்தில் பாபாவை நினைவு படுத்தியிருக்க வேண்டாம் என்பது
    எனது தாழ்மையான கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *