BREAKING NEWS
Search

‘தலைவர் படம் வருது… வேறு படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்குவது கஷ்டம்!’

தமிழகத்தின் அத்தனை அரங்குகளும் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையானுக்கே!

1466121_580006558713283_1636469211_nசென்னை: பொங்கல் ஸ்பெஷலாக வரும் கோச்சடையானுக்காக தமிழகத்தின் பெரும்பாலான அரங்குகளும் இப்போதே ரிசர்வ் செய்யப்பட்டுள்ளன.

ரஜினி படம் வெளியான சில வாரங்களுக்குப் பிறகே மற்ற படங்களுக்கு அரங்குகள் ஒதுக்க முடியும் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை, ரஜினி படங்கள் வெளியாகும் தேதிதான் நிஜமான பண்டிகைக் காலம். தியேட்டரின் டிக்கெட் கவுண்டர் தொடங்கி, வாகனங்களுக்கு டோக்கன் கொடுப்பவர், திண்பண்டம் விற்பவர் என அத்தனை பேருக்கும் லாபம் தருவது ரஜினியின் படம் மட்டுமே.

முன்பு சிவாஜி படத்தோடு ஒரு இந்திப் படம் வெளியானபோது, ‘சிவாஜி படத்தின் வாகன நிறுத்தக் கட்டணத்தோடு வேண்டுமானால் இந்தப் படத்தின் வசூலை ஒப்பிடலாம்’ என பிரபல பாலிவுட் விமர்சகர் தரண் ஆதர்ஷ் எழுதியது நினைவிருக்கலாம்!

எனவே ரஜினியின் படங்களுக்கே திரையரங்க உரிமையாளர்கள் முன்னுரிமை தருவதில் வியப்பில்லை.

இந்தப் பொங்கலுக்கு அஜீத் நடித்த வீரம், விஜய் நடித்த ஜில்லா போன்ற படங்கள் வருவதாக இருந்தன. கமலின் விஸ்வரூபம் 2 கூட பொங்கலுக்கு வெளியாகும் என்றார்கள்.

ஆனால் கோச்சடையான் ரிலீஸ் தேதி அறிவிப்பு, அத்தனை பேரையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது என்றால் மிகையல்ல.

திரையரங்க உரிமையாளர்களும், தங்கள் அரங்குகளை ரஜினியின் கோச்சடையானுக்கே ஒதுக்கியுள்ளனர். குறிப்பாக மல்டிப்ளக்ஸ் அரங்குகள் அத்தனை திரைகளிலும் முதல் வாரம் முழுக்க கோச்சடையானை மட்டுமே திரையிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஒற்றைத் திரை அரங்குகள் நிலை பற்றிச் சொல்லவே வேண்டாம். அவை அதிகபட்ச வசூல் பார்ப்பதே ரஜினி படங்கள் ரிலீசாகும்போதுதான்.

இப்போதுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் குறைந்தது 900 அரங்குகளில் கோச்சடையான் திரையிடப்படும் எனத் தெரிகிறது. ஓடிக் கொண்டிருக்கும் படங்களை சில தினங்களுக்கு நிறுத்திவைத்துவிட்டு கோச்சடையானை வெளியிடவும் முடிவு செய்துள்ளனர் (முன்பு எந்திரன் வெளியீட்டின்போதும் இப்படித்தான் நடந்தது!)

முன்பு பொங்கலுக்கு வெளியாவதாகச் சொன்ன படங்களின் விநியோகஸ்தர்களிடம், ‘தலைவர் படம் வருது… பொங்கல் வாரம் முழுக்க வசூல் பார்க்க இதான் சரியான சந்தர்ப்பம். வேறு படங்களுக்கு தியேட்டர் ஒதுக்க முடியாத நிலை. புரிஞ்சிக்கங்க,’ என்ற பதிலையே பல  திரையரங்கு உரிமையாளர்களும் கூறியுள்ளனர்.

-என்வழி ஸ்பெஷல்
33 thoughts on “‘தலைவர் படம் வருது… வேறு படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்குவது கஷ்டம்!’

 1. மிஸ்டர் பாவலன்

  அஜீத்தின் ஆரம்பம் வெற்றியைப் பார்த்து ரஜினி ரசிகர்கள்
  பொறாமைப் படுவதாக எழுதிய தலை ரசிகர்கள் என்ன
  சொல்வாங்க தெரியலையே..

  ரஜினிக்கு கமல் ரசிகர்கள், கமல் ஹாசன், கொடுக்கும் மரியாதையை
  தலை, குருவி ரசிகர்களிடம் காண்பது அரிதாக உள்ளது. நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 2. KUMARAN

  படம் ஓரளவு நல்ல இருந்தா கூட போதும் , பெரிய வெற்றி பெற்றுவிடும் .

 3. Marthu

  சிங்கத்தின் கர்ஜனை ஆரம்பம் இனி சிறுநரிகளுக்கு ஏது கூடாரம்…

  தல, தளபதி, லிட்டில் சூப்பர் ஸ்டார்(கொடுமைடா சாமி) எல்லா அல்ல சில்லைகளும் தெரிச்சு ஓடுங்கடா….எங்க சிங்கம் வருதுடா..

  என் குழந்தைகளுடன் தலைவனை முதல்நாள் தரிசிப்பேன்…

  தலைவா……………

 4. mangustan

  //முன்பு சிவாஜி படத்தோடு ஒரு இந்திப் படம் வெளியானபோது, ‘சிவாஜி படத்தின் வாகன நிறுத்தக் கட்டணத்தோடு வேண்டுமானால் இந்தப் படத்தின் வசூலை ஒப்பிடலாம்’ என பிரபல பாலிவுட் விமர்சகர் தரண் ஆதர்ஷ் எழுதியது நினைவிருக்கலாம்!///

  சங்கர் சார் அது Enthiran படம்னு நினைக்கிறான்!! தவறு என்றால் மன்னிகவும்!!

 5. Boopathi

  வாங்க தலைவா…வாங்க….உங்க வருகைக்காக தான் இத்தன நாளா காத்துருந்தோம்…..வெற்றி முரசு கொட்டட்டும் உலகமும் எங்கள் தமிழ்நாடும்……………10-ஜனவரி-2014 அன்று ………………………………வாழ்க எங்கள் தலைவர்………….

  அன்புடன்
  பூபதி

 6. srikanth1974

  என்னோட ராசி மட்டும் எல்லாத்துக்கும் சேரும்
  என்னால ஆனமட்டும் எல்லாருக்கும் லாபம்.
  எட்டு மட்டும் வச்சுபுட்டா கீழறங்கி பாதத்திலே
  புள்ளி மட்டும் வைச்சுபுட்டு விட்டுப்புட்டு போறதில்லை

  ஆதாயத்தைத் தேடி நான் போனதில்லப் பாரு
  ஆண் பிள்ள சிங்கம் அட என்னப்போல யாரு

  இந்த உண்மையா புரிஞ்சு உள்ளதைத் தெரிஞ்சு
  ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு

 7. ramesh

  தலைவர் படம் வருதுடா ……வழி விட்டு ஓடி விடுங்கள்….அது தான் உங்களுக்கு நல்லது…………………..என் உயிர் ரஜினி…………………..

 8. sks

  thalaiva u one and only the super star in cinema for ever,”super star enbathu pattam alla athu oli vattam ungal kharishma vinalum ,narpanbugalalum, anbinalum ungaluku pinal thondrum oli vattam athu ungaluku matume sontham ” kochadaiyaan imalaya vettri pera vazhthukal thalaiva

 9. ramesh

  தலைவர் பாடல் ஒன்று நாபகம் வருது………………………….

  என்னோட ராசி மட்டும் எல்லாத்துக்கும் சேரும்
  என்னால ஆனமட்டும் எல்லாருக்கும் லாபம்.
  எட்டு மட்டும் வச்சுபுட்டா கீழறங்கி பாதத்திலே
  புள்ளி மட்டும் வைச்சுபுட்டு விட்டுப்புட்டு போறதில்லை……………..

  ஆதாயத்தைத் தேடி நான் போனதில்லப் பாரு
  ஆண் பிள்ள சிங்கம் அட என்னப்போல யாரு………………..

  இந்த உண்மையா புரிஞ்சு உள்ளதைத் தெரிஞ்சு
  ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு…………………………………

 10. saktheeswaran

  பேர கேட்டாலே உலகமே அதிருதில்ல அது தான் உண்மையான தலைவர் ,உண்மையான சூப்பர் ஸ்டார்

 11. kumar

  எங்கள் அன்பு தலைவரின் கோச்சடையான் படம் மாபெரும் சாதனை படைக்க எல்லாம் வல்ல இறைவனனை வேண்டி வணங்குகிறோம்
  இப்படிக்கு என்றும் அன்பு தலைவரின் வழியில் admin@vellorerajinifans.com

 12. குமரன்

  மிஸ்டர் பாவலன் அவர்களே

  /ரஜினிக்கு கமல் ரசிகர்கள், கமல் ஹாசன், கொடுக்கும் மரியாதை//

  சரி, உங்களுக்காக அரை மனதோடு நம்பறோம்!!!

 13. குமரன்

  இது தெரிந்ததே. கோச்சடையான் அதிகார பூர்வ அறிவிப்பு என்றதும் நான் சொன்னது இதோ

  ////அப்பாடா, வெகுநாள் காத்திருந்தோம்.

  அப்போ பொங்கலுக்கு வந்துவிடும் என்று சொன்ன வீரம், ஜில்லா எல்லாம் தமிழ்ப் புத்தாண்டுக்குத்தான் வரும் ! ///

 14. மிஸ்டர் பாவலன்

  விஸ்வரூபம்-2 ரிலீஸ் டேட் தள்ளிப் போகுமோ?
  நண்பர் ரஜினியுடன் ஒரே தேதியில் ரிலீஸ் செய்து
  போட்டி போடுவதை கமல் விரும்ப மாட்டார்..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 15. r.v.saravanan

  ஒதுங்கு ஒதுங்கு தலைவர் படம் வருது ஒதுங்கு ஒதுங்கு

 16. mugilan

  hello mr pavalan kamal padam vishwaroopam 2 la thalaivar kooda competition nu soli comedy panatheenga mothala unga kamalvijay ajith ku theatre kidaikutha nu papom

 17. மிஸ்டர் பாவலன்

  கடைசியாக வந்த செய்தியின் படி கோச்சடையான், வீரம் இரண்டு
  படங்களும் பொங்கல் ரிலீஸ் என்றும், ஜனவரி இறுதியில்
  கமல் ஹாசன் விஸ்வரூபம்-2 படத்துடன் களம் இறங்குகிறார் எனப்
  படித்தேன். விஸ்வரூபம்-2 படம் ஹாலிவுட் தரத்தில், ஒரு ஆங்கிலப்
  படம் போல், இருப்பதாக நண்பர்கள் மூலம் அறிந்தேன். கமல்-ரஜினி
  ரசிகர்களுக்கு விஸ்வரூபம்-2, கோச்சடையான் படங்கள் சிறப்பாக
  இருக்கும் என நான் நம்புகிறேன். நன்றி!!

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 18. rajagopalan

  Still people beleiving Kochadayan is going to release…
  This is the nth time release date is postponed…
  I spoke to my distributor friends & they lossed interest in kochadayan…
  Only Veram & Jilla are high on the business…
  Note that Iam not against Rajini… Since Kochadayan is only a animated film , this is the reality & has to be accepted…
  People can check todays issue of Times of india also…
  Only god has to save Thalaivar…

 19. மிஸ்டர் பாவலன்

  //வினோ, நான் கேள்விப்பட்டது : கோச்சடையானுக்கு எதிர்ப்பார்த்த அளவிற்கு கொண்டாட்டமில்லையென !/// (S. Vijay)

  குருவி ரசிகர்களிடம் கேட்டீர்களா?

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 20. M.MARIAPPAN

  டியர் வினோ தலைவர் படம் அறிவுப்பு வந்த அடுத்த நாளே வீரம் அறிவிப்பு வந்துள்ளது . இன்று ஜில்லா அறிவிப்பு திரைஅரங்கு பெயருடன் வந்துள்ளது , எப்படி வினோ தலைவர் படம் சொன்ன மாதிரி வந்து விடுமா வியாபாரம் எப்படி இருக்கும் , இது சம்பந்தமாக தங்களுக்கு ஏதும் தெரிந்தால் தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வினோ , வாழ்க தலைவர் வெல்க கோச்சடையான்

 21. Jey

  தலைவர் படம் ரிலீஸ்னு சொல்லியும் அஜீத், விஜய் தங்கள் படங்களை அதே நாளில் வெளியிட முடிவெடுத்திருப்பது கோச்சடையான் ஒரு பொம்மை படம் என்பதால் தானே… எதற்கு தலைவா அவங்க போட்டி போடற அளவுக்கு இது மாதிறி படங்கள்ல நடிக்கிறீங்க. இதே எந்திரன்,சிவாஜி,படையப்பா மாதிரி ஒரு படத்துல நடிச்சிட்டு இதே மாதிரி ரிலீஸ் தேதி சொல்லிருந்தா தலவலியும்,குருவியும் இப்படி தெனாவெட்டா இருந்திருப்பாங்களா? இந்நேரம் அவங்க படத்த தள்ளிவச்சிட்டு, துண்ட காணொம் துணிய காணொம்னு பம்மிருக்க மாட்டானுங்க. எது எப்படியோ தலைவர் கார்டூன் சிங்கமா வந்தாலும் சிங்கிளாத்தான் வரணுங்கிறது என் விருப்பம். அதை தான் தலைவரும் விரும்புவார். எனவே படம் கண்டிப்பா பொங்கலுக்கு வராது.

 22. Basha

  நான் கேள்வி பட்ட வரை தலைவர் படம் பொங்கலக்கு வராது என்று Jan End or Feb Month தான் வரும்………. வினோ ஏதும் தெரிந்தால் கூரவும்.

 23. Basha

  //வினோ, நான் கேள்விப்பட்டது : கோச்சடையானுக்கு எதிர்ப்பார்த்த அளவிற்கு கொண்டாட்டமில்லையென !/// (S. Vijay)

  குருவி ரசிகர்களிடம் கேட்டீர்களா?

  -=== மிஸ்டர் பாவலன் ==-

  இல்லை நான் கேள்வி பட்டவரை தலைவர் ரசிகர்கள் அனைவரும் பெருத்த எதிர்பார்ப்பில் உள்ளனர் அனால் Animation Picture என்றே பயமே மேலோங்கி உள்ளது ஏன் என்றல் 100 % படம் வெற்றி பெறவேண்டும்……….. அடைய செய்வோமாக !!!!

 24. sakthi

  அட போங்கப்பா…
  இதே வேலையா போச்சு!
  தலைவருக்காக காத்து இருக்க வெறுப்பு இல்லை
  ஆனால் தேதியை எதுக்கு அறிவிக்கனும்…
  அப்புறம் ஏன் மாற்றனும்..
  மற்றவர் ரசிகர்களிடம் பேச முடியலை..!
  பயந்து ஓடுறோம்னு சொல்றாங்க….!
  ரசிகர்கள் ரத்தம் உறையும் வரை காத்திருக்க தயார்…
  தயவு செய்து ஒரு முடிவு எடுதுட்டு மாற்றாதீர்கள்…
  முடிவெடித்த பின்னால் நான் தடமாற மாட்டேன் என்று தலைவர் பாடல் வரிகளிலே இருக்கு!
  வெற்றி நமதே
  வீரமும் நமதே
  எல்லா ஜில்லாவும் நமதே!
  வாழ்க கோச்சடையான்…
  இன்னும் காத்திருக்க ஆசைபடுகிறேன்
  கடவுளை காண..!
  ஐ லவ் ரஜினி சார்….!

 25. மிஸ்டர் பாவலன்

  //தலைவர் படம் ரிலீஸ்னு சொல்லியும் அஜீத், விஜய் தங்கள் படங்களை அதே நாளில் வெளியிட முடிவெடுத்திருப்பது கோச்சடையான் ஒரு பொம்மை படம் என்பதால் தானே…//

  கோச்சடையான் ரிலீஸ் டேட் தள்ளிப் போகலாம் என ஒரு இணைய
  தளத்தில் நான் படித்தேன். இனியும் கால தாமதம் செய்யாமல் ரஜினி
  ஏதாவது புதிய இயக்குனர்கள், அல்லது, ஷங்கர் இயக்கத்தில் ஒரு
  படத்தில் நடிக்கலாம். சௌந்தர்யா படம் தாமதம் ஆகிக் கொண்டே போவது
  கவலையைத் தருகிறது. நன்றி.

  == மிஸ்டர் பாவலன் ==-

 26. Kali

  கோச்சடையான் படம் தள்ளிப்போடப்படுவதற்கான உண்மையான காரணம் அதற்கு தியேட்டர் கிடைக்காததுதான. அனைத்து அதிபர்களும் வீரம.ஜில்லா படங்களை வெளியிடவே விரும்புகின்றனர. இந்த படம் தனியாக வந்தால் மட்டுமே தியேட்டர் அதிபர்கள் வாங்குவார்கள் என்று தெரிகிறது. அதோடு ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு பின்வாங்குவதை அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் விஜய்.அஜீத் ரசிகர்கள் தங்கள் வெற்றியாகவே கருதுவார்கள். எனவே ரஜினி புகழை குறைக்கவேண்டும் என்பதற்காகவே இப்படி ரிலீஸ் தேதியை மாற்றினால் அமையும் என்பது என் தாழ்மையான கருத்து.

 27. மிஸ்டர் பாவலன்

  இது பொம்மைப் படமாக இல்லாமல் வழக்கமான ரஜினி படமாக
  இருந்தால் – பி.வாசு படமாக இருந்தாலும் – பெரும் தியேட்டர்கள்
  கிடைத்திருக்கும் என நான் நினைக்கிறேன். அடுத்த படத்தில்
  ரஜினி நடிக்க ப்ளான் செய்யலாம். நன்றி!

  -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *