BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாளில் அலெக்ஸ் பாண்டியன் இசை வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாளில் அலெக்ஸ் பாண்டியன் இசை வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மறக்க முடியாத பிறந்த நாளான 12.12.12 அன்று கார்த்தி நடித்துள்ள அலெக்ஸ் பாண்டியன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தப்போவதாக அதன் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

சகுனி திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படம் அலெக்ஸ் பாண்டியன்.

இந்தப் படத்தை சுராஜ் இயக்குகிறார். படத்தின் தலைப்பு, மூன்று முகத்தில் ரஜினி ஏற்று நடித்த புகழ்பெற்ற பாத்திரத்தின் பெயர்… போலீஸ் ஆபீஸர் அலெக்ஸ் பாண்டியன்.

ரஜினியின் பாத்திரப் பெயரை தலைப்பாக வைத்ததால், அவருக்கு மரியாதை செய்யும் விதத்தில், சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான 12.12.12 அன்று இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போவதாக இன்று அறிவித்துள்ளனர் அலெக்ஸ் பாண்டியன் குழுவினர்!

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “12.12.12 அன்று அலெக்ஸ் பாண்டியன் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டை நடத்துவதில் பெருமை அடைகிறோம்.


சூப்பர் ஸ்டாரின் பிறந்த தினமான அன்று இந்த இசை வெளியீடு நடப்பது மட்டற்ற மகிழ்ச்சி. மேலும் 30 ஆண்டுகளாக ரசிகர்கள் மனதில் நிலைத்த பெயர் இந்த அலெக்ஸ் பாண்டியன். நமது சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான மூன்று முகம் படத்தில் அவரது புகழ்பெற்ற பாத்திரத்தின் பெயர். அந்தப் பெயரில் உருவாகியுள்ள படத்தின் நிகழ்வுகளை நடத்த ரஜினி சார் பிறந்த தினத்தை தேர்வு செய்துள்ளோம்,” என்று குறிப்பிட்டுள்ளனர். முதலில் நவம்பர் 24-ம் தேதிதான் இந்த நிகழ்ச்சியை நடத்தவிருந்தனர்.

விளம்பரம்தான் என்றாலும்… சந்தோஷமே!

-என்வழி சினிமா




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *