BREAKING NEWS
Search

கபாலி முதல் நாள் முதல் காட்சி… காத்திருக்கும் அக்ஷய் குமார்!

‘கபாலியை முதல் நாள் முதல் காட்சி பார்க்க ஆவலாக உள்ளேன்!’

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க ஆவலாக உள்ளேன் என்று நடிகர் அக்ஷய் குமார் கூறியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.ஓ படத்தின் ஷூட்டிங்குக்காக சென்னை வந்துள்ளார் அக்ஷய் குமார்.

உலக சாதனைப் படைத்துள்ள கபாலி படத்தின் டீசர் காட்சியை தனது ஐபோனில் பார்த்து ரசித்தார் அக்ஷய். பின்னர் கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று அவர் கூறியதாக லைகா நிறுவனத்தின் நிர்வாகி ராஜு மகாலிங்கம் ட்விட்டரில் தெரிவித்தார்.

ஏற்கெனவே இந்திப் பட இயக்குநர் ராம்கோபால் வர்மா, ‘கபாலி படத்தை தொடர்ந்து நான்கு முறையாவது பார்த்து ரசிப்பேன்… ரஜினிகாந்துக்காக’ என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

கபாலி டீசர் 13 நாட்களில் 17 மில்லியனைத் தொட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *