BREAKING NEWS
Search

எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான் அஜ்மல் கசாப்!

எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான் அஜ்மல் கசாப்!

மும்பை: மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கஸாப் இன்று காலை தூக்கிலிடப்பட்டான். காலை 7.30 மணிக்கு எரவாடா சிறையில் அவனுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 164 பேர் கொல்லப்பட்டனர். 310 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட பாணியில், மும்பையின் தாஜ் ஹோட்டலை தகர்க்க முயன்றனர்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும், சிசிடிவி உதவியுடன் உயிருடன் பிடிபட்டான். மும்பை சிறையில் அடைக்கப்பட்ட கஸாப்புக்கு தூக்குத்தண்டனை விதித்து, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்தநிலையில், கஸாப் தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை மகாராஷ்டிர அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது.  குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியும் இந்த மனுவை நிராகரித்தார். இதனையடுத்து , புனேயில் உள்ள எரவாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பால் பயிற்றுவிக்கப்பட்டவன் இந்த கஸாப். ஆரம்பத்தில் இதனை மறுத்தது பாகிஸ்தான். ஆதாரங்களைக் காட்டியதும் அமைதியாகிவிட்டது.




2 thoughts on “எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான் அஜ்மல் கசாப்!

  1. srikanth

    ஜனநாயகத்தின்மேலும்,சட்டத்தின்மீதும்,நம்பிக்கை உள்ள ஒவ்வொரு தேசப்பக்ததனுக்கும்,கிடைத்த மிகப்பெரிய வெற்றி.[லேட்டா ,கிடைத்தாலும் கிரேட்டா கிடைத்தத் தீர்ப்பு ] ஜெய்ஹிந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *