சென்னையில் மட்டும் 48 அரங்குகளில் பில்லா 2!
சென்னையில் மட்டும் இன்று 48 அரங்குகளில் வெளியாகி சாதனை படைத்துள்ளது பில்லா 2.
பொதுவாக பெரிய நடிகர்களின் படம் சென்னையில் முன்பெல்லாம் 5 அல்லது 6 அரங்குகளில் வெளியாகும். ஆனால் அன்றைக்கு ஓரிரு மல்டிப்ளெக்ஸ்கள் மட்டும்தான் இருந்தன.
ரஜினியின் சிவாஜி- தி பாஸ்க்குப் பிறகு எல்லாமே மாறிப் போயின. தமிழ் சினிமா வியாபாரத்தில் பல வகையிலும் முன்னோடியாக பார்க்கப்படும் இந்தப் படம்தான், அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிடும் போக்கையும் ஆரம்பித்து வைத்தது.
2007-ல் சிவாஜி – தி பாஸ் படத்தை 19 அரங்குகளில் வெளியிட்டனர் 2007-ல். படத்துக்குத் தரப்பட்ட பெரும் விலையை, நான்கைந்து வாரங்களிலேயே எடுத்ததோடு, நல்ல லாபத்தையும் சம்பாதித்தனர்.
அதற்குப் பிறகு பலரும் தங்கள் படங்களை அதிக அரங்குகளில் வெளியிட்டு, குறைந்த நாட்களில் போட்ட பணத்தை எடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
அதன் பிறகு 2010-ல் வந்த சூப்பர் ஸ்டாரின் எந்திரன் 44 அரங்குகளில் வெளியாகி புதிய சரித்திரம் படைத்தது.
இப்போது, அஜீத் நடிப்பில் வெளியாகும் பில்லா 2 படத்தை 48 அரங்குகளில் வெளியிட்டுள்ளனர் சென்னை நகரில் மட்டும். சர்வதேச அளவில் 2500 அரங்குகளில் படம் வெளியாகியுள்ளது.
ரஜினி படத்துடன் பேனர்கள்…
பில்லா என்பது ரஜினி நடித்த அட்டகாசமான அதிரடிப் படம். தொடர்ந்து பல படங்கள் சறுக்கிய நிலையில், ரஜினி ஆசியுடன் அந்தப் படத்தை அஜீத்துக்காக ரீமேக் செய்தார்கள். படம் பிரமாண்ட வெற்றி.
இப்போது பில்லா 2 என அந்தப் படத்தின் முதல் பகுதியை உருவாக்கியுள்ளனர். அதாவது சாதாரண டேவிட், பில்லா என்ற தாதாவாக ஆனது எப்படி என்ற ப்ளாஷ்பேக்தான் இந்தப் படம்.
பில்லா 2- வெளியீட்டை தமிழகம் முழுவதும் அஜீத் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
படத்தின் போஸ்டர்கள் மற்றும் பேனர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தை பெரிய அளவில் இடம்பெறச் செய்துள்ளனர். தலைவர் ஆசியுடன் தல கலக்கும் பில்லா 2 என்ற தலைப்புடன் பட இடங்களில் போஸ்டர்கள் அடித்துள்ளனர்.
-என்வழி செய்திகள்
thalaivar and thala rockz…………
billa 2 super hit movie
thala dialogue super
தல உங்களுக்கு எப்போதும் தலைவருடைய ஆசிர்வாதம் இருக்கும்
அஜித்துக்கு வாழ்த்துகள் சொல்லும் அதே நேரத்தில் ஆஸ்காரின் நம்பகத் தன்மையற்ற விளம்பர யுக்தியை நம்பாதீர்கள். 2500 தியேட்டர் ரிலீஸ் என்பது அவருடைய வீச்சுக்கு சாத்தியமே இல்லை.
எந்திரன் 44 , பில்லா 2 , 48 கொஞ்சம் இரண்டும் ரிலீஸ் ஆன தியேட்டர் லிஸ்ட் பாருங்க சாமி.
அஜித்தையும் தலைவரையும் ஒப்பிடாமல் —-ஆஸ்காரின் வலைக்குள் விழ வேண்டாம்.
billa 2 vetri பெற enadhu ஆசிகள்
தலைவரின் மகனாக இருந்தா கூட தலைவர் நடிச்ச படம் தான் டாப் ல இருக்கணும் .தலைவர் படம்தான் அதிக தியேட்டர்களில் ரீலிஸ் ஆகணும். ரஜினியிடம் ஆசி பெற்றவராக அஜித் இருக்கலாம் .ஆனாலும் அதிக தியேட்டர்களில் சென்னையில் ரீலிஸ் ஆகி எந்திரன் சாதனையை பில்லா 2 முறியடித்திருப்பது சிறிது வேதனை அளிக்கிறது . இதெல்லாம் அந்த ஆஸ்கார் ர.ச. னின் வேலை . வேண்டுமென்றே செய்திருப்பார் ..ஆனால் எந்திரன் போல நிற்பாரா இந்த பில்லா 2 பார்ப்போம்
Ascaar plays dirty politics coz he is hatter of our thalaivar in his recent interview to sify he mentioned kamal & rajini the superstars.he swapped the orders donno what he going to get,
anyhow but thala don’t drag him coz he always keeps himself away from all promotions.
he is a genuine !!
பில்லா ………
…………. பேரைக் கேட்டாலே ச்ச்சும்மா அதிருதில்லே ……………
பில்லா 2 பார்த்தாச்சு ………..படம் மகா குப்பை…எந்திரன் மதுரையில் 13 திரையரங்குகளில் ரிலீஸ் ஆச்சு. இதில் 4 திரையரங்குகள் மல்டி தியேட்டர். ரிலீஸ் அன்று மட்டும் 20 * 5 =100 ஷோ திரையிட்டார்கள். இன்று பில்லா 2 -7 திரையரங்குகளில் ஓடுகிறது. இதில் 3 திரையரங்குகள் மல்டி தியேட்டர். பின்ன எப்படி எந்திரன் 2000 திரையரங்குகளில் ரிலீஸ் என்றால் பில்லா 2 – 2500 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும். நண்பன் படம் வசூலில் எந்திரனை முந்தியது என்ற பொய்க்காக கட்டுரை வெளியிட்டீர்கள் அது பொய் என்று .ஒகே….. பில்லா 2 க்கு ஏன் பாராட்டு கட்டுரை. பதில் வேண்டும்……..
பில்லா ரங்கா பாட்ஷா ரஜினி மட்டுமே…..
இப்படி ரொம்ப தியேட்டர்ல படம் வெளிடும் காரணம் தா, தியேட்டர்ல டிக்கெட் ரேட் ரொம்ப இருக்கு.
ரஜினியை திரையில் காப்பி அடிப்பது ஒரு வகை… நிஜ வாழ்க்கையில் காப்பியடிப்பது இன்னொரு வகை… அஜீத் எந்த வகை?