BREAKING NEWS
Search

கோச்சடையான் இசை வெளியீட்டு விழா.. அஜீத்தும் பங்கேற்கிறார்?

கோச்சடையான் இசை வெளியீட்டு விழா.. அஜீத்தும் பங்கேற்கிறார்?


ப்பானில் நடக்கவிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார் அஜீத்.

ஜப்பானில் முதல் முறையாக நடக்கும் இசை வெளியீட்டு விழா ரஜினியின் கோச்சடையான்தான். இந்த விழாவில் ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார் என படத்தின் நட்சத்திரங்கள் அத்தனைபேரும் பங்கேற்கின்றனர்.

படத்தில் நடித்தவர்கள் மட்டுமின்றி, முக்கிய நடிகர், நடிகைகள், இயக்குநர்களும் விழாவில் பங்கேற்கக் கூடும் எனத் தெரிகிறது.

அப்படி பங்கேற்பவர்களில் முக்கியமானவர் அஜீத்குமார்!

டைட்டானிக் கலைஞர்கள்…

இதற்கிடையே, கோச்சடையான் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படத்தின் 3 டி தொழில்நுட்பப் பணிகளை கவனிக்க ‘டைட்டானிக்’ படத்துக்கு பணியாற்றிய 3டி தொழில்நுட்ப கலைஞர்கள் மூன்றுபேர் சென்னை வந்துள்ளனர். இரவு பகலாக வேலை நடக்கிறது.

இந்தியாவில் நடக்கும் பணிகள் மட்டுமின்றி, லண்டன், ஹாங்காங் என வெவ்வேறு பகுதிகளிலும் நடந்து வருகிறது.

திரும்பத் திரும்ப இந்தப் படம் அனிமேஷனாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்புவதால், சௌந்தர்யா ரஜினி ஒரு விளக்கத்தைத் தந்துள்ளார். 100 சதவீதம் நிஜமான படம் மாதிரியே இருக்கும். எந்த இடத்திலும் அனிமேஷன் தெரியாது. இளமை, துள்ளல், ஸ்டைல் நிறைந்த நிஜ ரஜினியை 100 சதவீதம் பார்த்து ரசிக்கலாம்!

-என்வழி ஸ்பெஷல்




4 thoughts on “கோச்சடையான் இசை வெளியீட்டு விழா.. அஜீத்தும் பங்கேற்கிறார்?

  1. chozan

    புண்ணாக்கு விற்கிறவன் புடலங்கா விற்கிறவன் எல்லாம் தொழிலதிபர்.

  2. enkaruthu

    //புண்ணாக்கு விற்கிறவன் புடலங்கா விற்கிறவன் எல்லாம் தொழிலதிபர்.//

    சொல்லிட்டராரப்பா அப்படியே கோயம்புத்தூர் லக்ஷ்மி மில்லுக்கு பக்கத்தில் 1000 ஏக்கரில் தொழில் பண்ணும் தொழிலதிபர்.அய்யா சோழரே எங்கள் தலைவரும் அஜித்தும் ஒன்னும் தொழிலதிபர்கள் அல்ல.அந்த தொழிலதிபர்கலையே இவர்களின் தேதிக்காக காத்திருக்க வைத்த உழைப்பால் முன்னேறியவர்கள் அவர்கள்.

  3. simple fan of superstar!

    chozannnu யார் யாரோ பேர் வச்சுகிட்டு கருத்து போடற ********** ல்லாம் இங்கே வந்து எதுக்கு வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கணும்

  4. Deen_uk

    வேற ஏதோ சைட்ல தொழிலதிபர் பற்றிய கட்டுரை படிச்சுட்டு ,இந்த பதிவுல மாற்றி கருத்து அனுப்பி இருக்கீங்கனு நினைக்கிறேன்..அல்லது உங்க பவர் கிளாஸ்ல பவர் போய் இருக்கலாம்….எதுக்கும் டபுள் செக் பண்ணிட்டு அனுப்புங்க சோழ வேந்தரே…பெயரை மாற்றி கண்டபடி கருத்து எழுதுறவன் எல்லாம் வாசகன்…நீங்க தான் ஒரு பதிவு கூட படிக்க தெரியாம போயிட்டீங்க .. , போங்க , போய் புள்ள குட்டிங்களயாவது படிக்க வைங்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *