BREAKING NEWS
Search

தயாரிப்பாளர் நலன் கருதி தனது அறுவைச் சிகிச்சையை ஒத்திப் போட்ட அஜீத்!

தயாரிப்பாளர் நலன் கருதி தனது அறுவைச் சிகிச்சையை ஒத்திப் போட்டு நடிக்கும் அஜீத்!

IMG_0496

ஜீத்துக்கு வரும் அக்டோபர் மாதம் காலில் அறுவைச் சிகிச்சை நடக்கவிருக்கிறது. இந்த சிகிச்சையை இப்போதே அவர் செய்து கொள்ளலாம். ஆனால் இரண்டு தயாரிப்பாளர்கள் பாதிப்படைவார்களே என்பதால் 6 மாதங்களுக்கு ஒத்திப் போட்டு, நடித்துக் கொடுத்த பிறகே சிகிச்சைக்குப் போகிறார்.

தமிழ் சினிமா என்றில்லை… வேறு மொழிகளில் ஒப்பிட்டால் கூட உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், அதையும் மீறி நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜீத் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

பைக் ரேஸ் விபத்தில் அடிபட்டு முதுகில் மட்டும் அவருக்கு மூன்று பெரிய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிறகும் பல முறை அவர் சிகிச்சையில் இருந்தார்.

ஆனாலும் தொடர்ந்து முழு ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வருகிறார் அஜீத். வெற்றி தோல்விகளுக்கு அப்பால், சிறந்த மனிதராகவும் பார்க்கப்படுகிறார்.

சமீப காலமாக அஜீத்தை குறித்தும் அவரது எதிர்கால படங்களையும் குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வந்தன. பல தயாரிப்பாளர்களுக்கு அவர் கால்ஷீட் தரவிருப்பதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் அதற்கு முற்றுப் புள்ளி வைக்க அஜீத் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில், “ஏஎம் ரத்னம் தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தயாராகும் படத்தின்  படபிடிப்பில் கார் சேஸிங்  காட்சியில் ஏற்பட்ட விபத்தின் விளைவாக அஜீத்துக்கு   காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதற்கான மருத்துவ ஆலோசனைக்கு சென்றபோது அறுவைச் சிகிச்சைதான் நிரந்தர தீர்வு என்று கூறப்பட்டதால் வருகிற அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி  அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்துள்ளார். அது வரையில் எந்த புதிய படத்தையும் ஒப்புக் கொள்வதில்லை என தீர்மானித்துள்ளார்.

அறுவை சிகிச்சைக்கான கால தாமதம் ஏன்? ஏஎம் ரத்னம் நீண்ட  இடைவேளைக்கு பிறகு தயாரிக்கும் இப்படத்தில் அஜீத்துடன்  ஆர்யா, ராணா, நயன்தாரா, டாப்ஸி ,  கிஷோர், அதுல் குல்கர்னி, மகேஷ் மஞ்ச்ரேகர், சுமா ரங்கநாத் என நட்சத்திர கூட்டமே உள்ளது. தன்னுடைய  சிகிச்சையினால் இவர்களின் தேதியும்  வீணாகும் எனக்  கருதிய அஜீத் தன சிகிச்சை காலத்தை ஒத்தி வைத்தார். தொடர்ந்து தான் முன்னரே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி  விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார்.

தான் பெரிதாக மதிக்கும் மறைந்த நாகி ரெட்டியாரின் நூற்றாண்டை ஒட்டி ஒப்பந்தமான படம் என்பதாலும் இப்படத்திலும் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் சிலர் இருப்பதால் அவர்களின் கால்ஷீட் வீணாக கூடாது என்று கருதுவதாலும்  இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னரே அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளார்.

விஜயா புரொடக்ஷன்ஸ் படம் வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-என்வழி செய்திகள்
4 thoughts on “தயாரிப்பாளர் நலன் கருதி தனது அறுவைச் சிகிச்சையை ஒத்திப் போட்ட அஜீத்!

 1. குமரன்

  தனக்காக மாட்டும் வாழ்வோர் நிறைந்த இந்த உலகில் இப்படியும் சில மனிதர்கள்.

  வாழ்த்துக்கள் அஜீத்!

 2. Ravi.S

  திரு. விநோ அவர்களே,

  நமது என்வழி தளத்தில் தலைவரின் செய்திகள் மட்டும் வெளியிடவும். மற்ற யாரை பற்றியும் வேண்டாமே . ப்ளீஸ். தலைவர் ஒருவரே நமது கடவுள். அவரின் புகழ் மட்டுமே பாடுவோமே.

 3. தினகர்

  ” Indha paetchaiyellam kaeta Pitchai thaan yedukanum ”

  யாரை இப்படி சொல்கிறீர்கள் இளங்கோ.. உங்களுக்கே இது அசிங்கமாகத் தெரியவில்லையா?. என்வழி தளத்தை நடத்தித்தான் வினோ வாழ்கிறாரா?. அவரைப்பத்தி உங்களுக்கு என்ன தெரியும், இந்த தளத்தால அவருக்கு நேரம், பணம் எல்லாமும் விரயம் தானே அன்றி, எந்த லாபமும் இல்லை. இந்த நேரத்தை அவர் வேறு பக்கம் செலவழித்தால் நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும்.நாம் சொல்லும் வார்த்தைகள் தான் நமக்கு அடையாளம் இளங்கோ. உங்களிடம் இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்க்கவில்லை.. யாகாவாராயினும் நாகாக்க… மீதியை நீங்களே நினைவு கூர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *