BREAKING NEWS
Search

அஜீத் பிறந்த நாள்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

அஜீத் பிறந்த நாள்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

 IMG_0539

டிகர் அஜீத் குமார் தனது 42வது பிறந்த நாளை இன்று மனைவி மகளுடன் கொண்டாடினார்.

தனது பிறந்த நாளுக்காக ரசிகர்கள் ஆடம்பரமாக எதுவும் செய்யக் கூடாது என அஜீத் கேட்டுக் கொண்டதால், அவரது பல்வேறு சமூக சேவைகள் மூலம் பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்.

அஜீத், பிறந்தநாளை தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாட அஜீத் ரசிகர்கள் ஏற்பாடு செய்தனர். கட் அவுட், போஸ்டர்களும் தயார் செய்தார்கள். அஜீத் இதற்கு தடை வித்தார்.

தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்றும் கட்-அவுட் பேனர்கள் வைக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து ஆடம்பர கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ரசிகர்கள் ரத்து செய்து விட்டனர். அஜீத் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் பங்கேற்று நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடந்து வருகிறது. அங்கு கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக முகாமிட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

அஜீத் பிறந்தநாளையொட்டி அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்காவுடன் ராஜஸ்தான் புறப்பட்டுச் சென்றார், படப்பிடிப்பில் மனைவி மகளுடன் அஜீத் பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு படக்குழுவினர் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

அஜீத்துக்கு திரையுலகினர் பலரும் இன்று வாழ்த்து தெரிவித்தனர்.

-என்வழி சினிமா செய்திகள்




3 thoughts on “அஜீத் பிறந்த நாள்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

  1. srikanth1974

    திரு.அஜீத் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

  2. c.muthu

    நல்ல மனிதராக, நிஜ வாழ்க்கையில் நடிக்க விரும்பாத ரஜினிக்கு பிறகு அவர் பாணியில் அஜித் திகழ்கிறார்.. அஜித் அவரகளுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *