BREAKING NEWS
Search

திடீரென எம்பி தேர்தல் வந்தால் அதிமுக கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?

திடீரென எம்பி தேர்தல் வந்தால் அதிமுக கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?

டெல்லி: நாடாளுமன்றத்துக்கு இடைத் தேர்தல் வைத்தால் தமிழகத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பிருப்பதாக என்டிடிவி – இஸ்போஸ் தேர்தல் கணிப்பு முடிவு தெரிவித்துள்ளது.

தற்போது பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட்டால், அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று என்டிடிவி கருத்து கணிப்பில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. இந்தக் கணிப்பில், மாநிலத்தில் உள்ள 2 சட்டமன்றத் தொகுதியை மாதிரிக்கு எடுத்துக் கொண்டு, அதில் 100 பேரைத் தேர்வு செய்து கருத்துக் கேட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு 20 இடங்களும், தி.மு.க. கூட்டணிக்கு 18 இடங்களும் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. 1 தொகுதியில் வேறு கட்சி வேட்பாளர் ஜெயிக்கும் நிலை உள்ளதாம்.

இப்போதைய நிலையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், திமுக – காங்கிரஸ் கூட்டணி 27 இடங்களைப் பெற்றுள்ளது. தனி ஈழம் பெற்றுத் தருவேன் என பிரச்சாரம் செய்த ஜெயலலிதாவின் அதிமுகவுக்கு 10 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

-என்வழி செய்திகள்




7 thoughts on “திடீரென எம்பி தேர்தல் வந்தால் அதிமுக கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?

  1. தினகர்

    இது தான் அந்த 50 சதவீத கணக்கா? தமிழகத்தில் செயல்பட்டு வந்த ’என்.டி.வி இந்து’ டிவி சானலைத் தான் தினத்தந்தியிடம் விற்று விட்டார்களே, உண்மையை சொல்ல இன்னும் என்ன நடுக்கம்?..

    ‘அம்மா’ன்னா ’சும்மா’ வா என்ற பயம் நீங்க வில்லை போலும். மென்று முழுங்கியிருக்கிறார்கள்

    ஆமா யாரு அந்த ‘others – 1 ’?. கேப்டன் விஜயகாந்த் சென்னையை விட்டு விட்டு , பாராளுமன்றத்தில் முழங்கப்போகிறாரோ? வேறு யாரும் கண்ணில் தெரியவில்லையே.. எல்லாமே உடான்ஸ்தானா?

  2. Manoharan

    இது தவறு. அதிமுக 40 இடங்களையும் வெல்லும்.

  3. குமரன்

    வாக்குச் சாவடியில் மின்விளக்கு எரியுமா?

    இல்லை, மொத்த விலைக்கு மெழுகுவர்த்தி வாங்கிவிடுவார்களா?

    இதுக்கு யாராவது ஒரு கருத்துக் கணிப்பு வெளியிடுங்கப்பா ….

  4. மிஸ்டர் பாவலன்

    எப்போதோ வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு
    இப்போது எதற்கு இந்த சர்வே?!

    -== மிஸ்டர் பாவலன் ===-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *