BREAKING NEWS
Search

டெங்குவின் கோர முகம்… நடிகர் விவேக் மகன் மரணம்!

நடிகர் விவேக் மகன்  மரணம்!

vivek
சென்னை: டெங்குவின் கோரப் பிடியில் சிக்கி சென்னையில் உயிர் துறந்தார் நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா (13).

பிரசன்னாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அது என்ன நோய் என்று ஆரம்பத்தில் கண்டறிய முடியவில்லை. பின்னர்தான் டெங்கு காய்ச்சலால் குழந்தை பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

ஆனால் அதற்குள் உடல்நிலை மோசமாகி, கோமா நிலைக்குப் போய்விட்டார். சென்னை எஸ்ஆர்எம் மருத்துவமனையில் மகன் அருகிலேயே இருந்து கவனித்து வந்தார் நடிகர் விவேக்.

அவர் பிழைத்து வர ஏராளமான பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன. ஆனால் எதுவும் பலனின்று மிக இளம் வயதில் உயிரிழந்தான் பிரசன்னா.

பல கோடி மக்களை தன் நகைச்சுவையால் மகிழ்வித்த இணையில்லா கலைஞனான விவேக்கை, மகனின் மரணம் ஆறாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

அவருக்கு ஆழந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறோம்.

அதே நேரம், மக்கள் இந்த மரண நிகழ்வை ஒரு மிகப் பெரிய அபாய மணியாகக் கருதி, டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

-என்வழி




2 thoughts on “டெங்குவின் கோர முகம்… நடிகர் விவேக் மகன் மரணம்!

  1. enkaruthu

    மக்கள் நல்லா இருக்கவேண்டும் என்று நினைத்து பல பிரச்சாரங்களை பண்ணியவர் நீங்கள் உங்களுக்கு இந்த தருணம் வேதனையதுதான்.உங்கள் மகன் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

  2. simbu

    பாவம் , மிக கொடிய தருணம் … பெற்ற பிள்ளையை பறிகொடுத்த விவேக்கிற்கு ஆண்டவனே ஆறுதல் தர வேண்டும் …. அரசாங்கம் கடந்த 3 வருடமாக எந்த ஒரு நடவடிக்கையும் துரித படுத்த வில்லை …. தமிழ் நாட்டில் அனேக குழந்தைகள் டெங்கு விற்கு பலியாகி விட்டனர் …. அரசின் அலட்சிய போக்கு இதில் மிக அதிகம் … சத்தியமாக அரசியல் நோக்கில் கூறவில்லை …… அனைவரும் குழந்தைகளுக்கு 2 முறை காய்ச்சல் வந்தது என்றால் உடனே ரத்த பரிசோதனை செய்து கொள்வது நலம் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *