அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னதற்கே விஜய்யை காய்ச்சி எடுத்தார்கள். லிட்டில் சூப்பர் ஸ்டார், யங் சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் போட்டுக் கொண்ட சிம்புவை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை. கடைசியில் அவர் எனக்கு எந்த பட்டமும் வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.
நான் ஒரு ரஜினி ரசிகன், பக்தன், ரஜினிதான் என் குரு, அவர் வழியில் நான் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த ராகவா லாரன்ஸ், முன்பு சொன்ன எந்த நடிகரும் செய்யாத காரியத்தை மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் செய்து, மொத்த ரசிகர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்துவிட்டார்.
லாரன்ஸின் படங்களுக்கு அபரிமிதமான ஆதரவைத் தந்து வந்த ரஜினி ரசிகர்கள் ஒரே நாளில் அவரை அடியோடு வெறுத்துவிட்டனர். அவர் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பரப்புரையையும் தொடங்கிவிட்டனர்.
ரஜினி ரசிகர்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில் ராகவா லாரன்ஸை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று முழுக்க மீம்ஸ்கள், கிண்டல்கள், வசவுகள் என அத்தனை வடிவத்திலும் லாரன்ஸை காய்ச்சி எடுத்தார்கள்.
நேற்று இரவு, இந்த மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று ராகவா லாரன்ஸ் விளக்கம் வெளியிட்டார். படத்தின் இயக்குநர், நான்தான் லாரன்ஸுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தர அப்படி ஒரு பட்டத்தைத் தந்தேன் என்று அறிக்கை வெளியிட்டார்.
ஆனால் எல்லாமே திட்டமிட்ட பப்ளிசிட்டி என்பதில் தெளிவாக இருந்த ரசிகர்கள் எதையுமே ஏற்கவில்லை. லாரன்ஸுக்கு அர்ச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நடிகர் அருள் தாஸ்
ரசிகர்கள் மத்தியில் இப்படி நாறிப் போன லாரன்ஸ் மீது, திரையுலகினரும் கடும் வெறுப்பில் உள்ளனர். ரஜினி ரசிகன் என்று கூறிக் கொண்டு ராகவா லாரன்ஸ் செய்திருப்பது பச்சைத் துரோகம், இவருக்கு இது வேண்டாத வேலை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் அருள் தாஸ் இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில், “தமிழ்த் திரையுலகில் ‘சூப்பர் ஸ்டார’ என்றால் திரு.ரஜினிகாந்த் அவர்கள் மட்டுமே. ஆனால் கண்ட பயலும் மக்கள் சூப்பர் ஸ்டார்னு டைட்டில் போட்டுக்கிறான்…,” என்று கூறியுள்ளார்.
–என்வழி
Dear Shankar anna,
Do you have any update news for Thalaivar and Director Ranjith movie?
Still no news about it.
Please update.
Thanks,
Swami
உண்மையிலேயே உன்ன முனி பிடிச்சு
ஆட்டுது.