BREAKING NEWS
Search

மகாத்மா அப்துல் கலாம் ! – ரஜினிகாந்த் புகழஞ்சலி

மகாத்மா அப்துல் கலாம் ! – ரஜினிகாந்த்  புகழஞ்சலி

rajini-kalam2
ப்துல் கலாம் ஒரு மகாத்மா, அவர் காலத்தில் வாழ்ந்தது ஆசீர்வாதம், என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

டாக்டர் அப்துல் கலாம் மரணத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் விடுத்துள்ள இரங்கல்:

மகாத்மா காந்தி, காமராஜர், பாரதியார் அவர்களை எல்லாம் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் மகாத்மா கலாமுடன் வாழ்ந்த ஆசீர்வாதம் கிடைத்தது.

எளிய பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சிகரம் தொட்டவர். மிகப் பெரிய உயரத்தைத் அடைந்தாலும், இறுதிவரை எளிமையாக வாழ்ந்தவர். பல கோடி மக்களுக்கு முன்னுதாரணமாய் திகழ்ந்தவர்.

மாணவர்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்து, ஊக்கப்படுத்தியவர் டாக்டர் கலாம்.

கடவுள் அவரை அமைதியாக அன்போடு அரவணைத்துக் கொண்டார். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

-இவ்வாறு ட்விட்டரில் ரஜினி கூறியுள்ளார்.

இதை தனியாக இரங்கல் அறிக்கையாகவும் ஆங்கிலத்தில் தந்துள்ளார் ரஜினி.

rajini-stat

-என்வழி




3 thoughts on “மகாத்மா அப்துல் கலாம் ! – ரஜினிகாந்த் புகழஞ்சலி

  1. srikanth1974

    கனவு என்பது நீ உறங்கும்போது
    வருவதல்ல

    உன்னை உறங்க விடாமல் செய்வது எதுவோ
    அதுவே [இலட்சிய] கனவு.

    – Dr .அப்துல் கலாம்.

    அவர் கண்ட கனவு மெய்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *