BREAKING NEWS
Search

உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள ரஜினி தூம் 3-ல் நடிக்கணும்! – அமீர்கான் விருப்பம்

உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள ரஜினி தூம் 3-ல் நடிக்கணும் – அமீர்கான் விருப்பம்

டந்த ஆண்டிலிருந்தே தூம் 3 குறித்து பல செய்திகள். இந்தப் படத்தில் ரஜினி வில்லனாக நடிக்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. ரஜினியுடன் பேசி வருவதாகவும் கூறினார்கள்.

ஆனால் ரஜினி தரப்பிலிருந்தே, இந்தப் படத்தில் அவர் நடிப்பதாக இல்லை என்று விளக்கம் வெளியானது. அடுத்த சில தினங்களில் இந்தப் படத்தில் அமீர்கான் அந்த வில்லன் வேடத்தில் நடிப்பார் என அறிவித்தனர்.

இப்போது மீண்டும் தூம் 3 உடன் ரஜினியை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகி வருகின்றன.

தயாரிப்பாளர் தரப்பில் இதுகுறித்துக் கூறுகையில், “ரஜினிக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது நடிப்பும் ஸ்டைலும் எல்லோராலும் ரசிக்கப்படும் விஷயம். அதனால் அவருடன் நடிக்க வேண்டும் என்பது ஆமிர்கானின் விருப்பம்.

இந்தப் படத்தில் கத்ரினா கைஃபும் நடிக்கிறார். அவரும் ரஜினியுடன் நடிக்க அதிக ஆவல் கொண்டுள்ளார். ஏற்கெனவே அவரால் கோச்சடையானில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அந்தக் குறையை இந்தப் படத்தில் தீர்த்துக் கொள்ள விரும்புகிறார். இதுகுறித்து எங்கள் நிர்வாகிகள் ரஜினியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  கண்டிப்பாக ரஜினி நடிப்பார் என நம்புகிறோம்,” என்றார்.

தூம் படம் 2004-ல் வெளியானது. அதன் வெற்றி தூம் 2 படத்தை எடுக்க வைத்தது. அந்தப் படமும் மெகா வெற்றி. எனவே இப்போது தூம் 3-ஐ எடுக்கின்றனர்!

இந்தப் படத்தில் நடிக்க பேச்சு நடப்பது குறித்து ரஜினி தரப்பில் நாம் விசாரித்தபோது, “ரஜினி சார்தான் இதற்கெல்லாம் பதில் கூற வேண்டும். இப்போது எங்கள் அளவில் சொல்வதற்கு எதுவும் இல்லை,” என்றனர்.

ரஜினி நடித்தால் இந்தப் படம் பெரிய ரேஞ்சுக்குப் போய்விடும் என்பது அமீர்கானின் எதிர்ப்பார்ப்பாம். தயாரிப்பாளரிடம் தொடர்ந்து இதை அவர் வலியுறுத்துவதால், ரஜினிக்கு சம்பளமாக எத்தனை கோடி தரவும் தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளார்களாம்!

கோடிக்கு மயங்குகிற ஆளா அவர்?!

-என்வழி செய்திகள்




7 thoughts on “உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள ரஜினி தூம் 3-ல் நடிக்கணும்! – அமீர்கான் விருப்பம்

  1. பாவலன்

    நண்பர்களே..கமல் ஹாசன் வில்லனாக நடித்தால்
    எடுபடுமா? தசாவதாரம் படத்தில் முயற்சித்தார்.
    ஆனால் அந்த வில்லன் வேடம் சுற்றிலும் அவருக்கு
    suit ஆக வில்லை. ஒரு பேட்டியில் கமல் சொன்னது போல்
    அவர் ஆரம்ப காலத்தில் ஒரு தமிழ்ப் படத்தில் வில்லனாக
    வந்து வித்தியாசமான நடிப்பு காட்டினார் (பாலச்சந்தர்).
    படம் = சொல்லத்தான் நினைக்கிறேன். பின் பாரதிராஜாவின்
    இயக்கத்தில் ‘சிவப்பு ரோஜாக்கள்’ (சைக்கோ வில்லன்).
    நாயகன் படமும் கூட கிட்டத்தட்ட ஒரு வில்லன் (?) ரோல்
    தான். ‘எந்திரன்’ டைப் வில்லன் ரோல் கமல் செய்ய முடியுமா?

    -பாவலன்

  2. குமரன்

    ///கோடிக்கு மயங்குகிற ஆளா அவர்?!///

    சரியான கேள்வி.

    ரஜினி எந்த ரோல் எடுத்தாலும் அவர் செய்வது போல இன்னொருவர் செய்ய முடியுமா என்ற கேள்வி வரும் அளவு செய்பவர்.
    இப்போதுள்ள சூழலில் ரஜினி இப்படிப்பட்ட ரோல்களை ஏற்கக் கூடாது என்பது எனது விருப்பம்.

  3. enkaruthu

    //கோடிக்கு மயங்குகிற ஆளா அவர்?!//

    சும்மா நச் சார்.இவர் சம்பளத்தை உயர்த்தி இவரின் கால்சூட்டை வாங்கும் என்னமோடு அந்த தயாரிப்பாளர் வந்தால் நாமம்தான்.ஏவிஎம் ஸ்டுடியோவை விற்கும் நிலைக்கு வந்ததை கேள்விப்பட்டு ஓடோடிபோய் அவருக்கு சிவாஜி படத்தை தந்த பேருள்ளம் கொண்டவர் நம் தலைவர்.அவர் என்றும் மிரட்டளுக்காகவோ அல்லது பணத்திற்காகவோ பணிந்தது கிடையாது.அவர் பணிவது அன்புக்கு மற்றும் நட்புக்கு மட்டுமே.

  4. kabilan

    தலைவர் கண்டிப்பா இந்த படத்தில் நடிக வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *