BREAKING NEWS
Search

இந்த நாவல்பழம் எத்தனை ருசியாக இருக்கிறது! – ஜென் கதைகள் -3

இந்த நாவல்பழம் எத்தனை ருசியாக இருக்கிறது! – ஜென் கதைகள் -3

ந்தப் பூட்டு பூட்டப்படவே இல்லை என்பதுதான் உண்மை. எவ்வளவு பெரிய பிரச்சினையையும் தெளிவாக,  பதட்டமில்லாமல், உறுதியாக அணுகினால் எளிதாக தீர்வு கிடைக்கும் என்பது இந்தக் கதையின் நீதி.

அநேகமாக வாசக நண்பர்கள் பலரும் இந்தக் கருத்தை எழுதியிருந்தனர். இனி… அடுத்த கதை…

குருவுக்கு வயசாகிவிட்டது. மரணப் படுக்கையில் கிடக்கிறார். சீடர்களைக் கூப்பிட்டார்.

‘‘இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்’’ என்று கூறிவிட்டார். சீடர்களுக்கு கவலை.

விஷயம் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும், வேறு சிஷ்யர்களும் மாலைக்குள் ஆசிரமத்துக்கு வந்துவிட்டனர்.

மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். ‘‘ஏய்… என்ன மடத்தனம் பண்ணுகிறாய்… குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு?’’ என்றனர் மற்றவர்கள்.

மூத்த சீடர், ‘‘குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

எல்லோரும் கவலையோடிருந்தனர். குரு கண்களைத் திறப்பதும் யாரையோ தேடுவதும் பின் மூடிக் கொள்வதுமாக இருந்தார்.

மூத்த சீடர் வந்ததும், ‘‘வந்து விட்டாயா… எங்கே நாவல்பழம்?’’ என்றார்.

அவர் கையில் நாவல் பழத்தைக் கொடுத்ததும், சற்றும் நடுக்கமின்றி, மலர்ச்சியோடு அதை வாங்கிக் கொண்டார்.

ஒரு சீடர் குருவிடம், ‘‘குருவே… தள்ளாத வயதிலும் உங்கள் கைகளில் நடுக்கமில்லையே?’’ என்றார்.

குரு சிரித்தபடி, ‘‘என் கைகள் ஒருபோதும் நடுங்கியதில்லை. ஏனென்றால் எப்போதும் எதற்கும் நான் பயந்ததே இல்லை!’’ என்று சொல்லிவிட்டு நாவல் பழத்தை ருசித்து தின்னத் தொடங்கிவிட்டார்.

இன்னொரு சீடர் குருவிடம் பணிந்து, ‘‘ஐயா, தாங்கள் சீக்கிரமே இந்த உலகை விட்டுப் பிரியப் போகிறீர்கள். நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தங்களின் இறுதி உபதேசம் என்ன?’’ என்று கேட்டார்.

எல்லோரும் அவர் முகத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

குரு சிரித்தபடி, ‘‘இந்த நாவல்பழம் என்ன அருமையான சுவையுள்ளதாக இருக்கிறது,’’ என்று சொல்லிவிட்டு தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்!

சீடனுக்கு அவர் சொல்லாமல் சொன்ன சேதி தெரிகிறதா… நம்ம குரு சூப்பர் ஸ்டார் அடிக்கடி சொல்லும் சேதியும் இதுதான்!

-என்வழி ஸ்பெஷல்
9 thoughts on “இந்த நாவல்பழம் எத்தனை ருசியாக இருக்கிறது! – ஜென் கதைகள் -3

 1. M. Senthil

  நிகழ் காலத்தில் வாழவேண்டும் அதுவும் அனுபவித்து வாழவேண்டும் ?

 2. மிஸ்டர் பாவலன்

  சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் அடிக்கடி அனைவரும் கேட்கும் கேள்வி:
  “வயதானாலும் எப்படி சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள்? Active ஆக
  இயங்குகிறீர்கள்?” என்று. அதற்கு அவர் அடிக்கடி சொல்லும் பதில்களில்
  – சில உணவுகளைத் தவிர்க்க சொல்வார். பின் – வயதானால் நமக்கு
  உடல் தளர்ச்சி அடைவது இயல்பு, ஆனால் நம் மனம் தளர்ச்சி
  அடையக் கூடாது, மனதை சந்தோஷமாக, இளமையாக வைத்துக்
  கொள்ள வேண்டும்” என்பார்.

  இந்தக் கதையும் அதையே வலியுறுத்துகிறது. சிஷ்யர்களுக்கு குரு
  சொல்லாமல் சொன்ன செய்தி என்றால் – நாம் நாளைய பொழுது,
  அடுத்து ஆண்டு என எண்ணாமல் – இன்றைய நாள், இந்த வேளை, NOW,
  இதை நல்ல வகையில் நல்ல பாதையில் (enlightenment) செயல்பட
  வேண்டும் என்கிறார். அதாவது நமது வாழ்க்கை என்பது இந்த நொடி
  (NOW) என்பதில் இருக்கிறது. அதை உணர்ந்து நேரத்தை வீணாக்காமல்
  செயல்பட அறிவுத்துகிறது இந்த கதை. Delay செய்வது, தாமதம் செய்வது
  உகந்தது அல்ல என இந்த கதை அறிவுறுத்துகிறது. நல்ல பாதையை
  உடனே செய்யுங்கள்.

  இதே கருத்தில் ஒரு அவ்வையார் பாடலும் உள்ளது:

  “ஒன்றே செய் – ஒன்றும் நன்றே செய்
  நன்றும் இன்றே செய் – இன்றும் இன்னே செய்”

  இந்த இரண்டு வரிகள் தான் ஜென் கதை போதிக்கும் நீதி.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 3. HOTLINKSIN.COM

  சேதி புரிந்தது… தொடரட்டும் ஜென் கதைகள்…
  …………………
  ஆண்கள் இல்லாமல் பெண்களால் வாழமுடியும்!!நயன்தாரா சூடான பேட்டி
  http://www.hotlinksin.com/story.php?id=௧௦௮௦௪
  ………………..
  கிரிக்கெட் பிரபலங்களின் சிறுவயது இரகசியங்கள்
  http://www.hotlinksin.com/story.php?id=10787

 4. மிஸ்டர் பாவலன்

  ஜென் கதையின் சாரம் கண்ணதாசன் வரிகளில்:

  “ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
  என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
  பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் – அதில்
  பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்”

  இந்த பாடல் இடம் பெற்ற படம் சூப்பர் ஸ்டாரின் முக்கியமான படம் !

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 5. மு.முத்துக்குமார்

  நம் மனதுக்கு பிடித்ததையே எப்பொழுதும் செய்ய வேண்டும் என்பதே இக்கதையின் நீதி என்று நினைக்கிறன்.

 6. மிஸ்டர் பாவலன்

  நண்பர் குமரன், கிருஷ்ணா அவர்களே:

  நான் குறிப்பிட்ட கண்ணதாசன் வரிகளை இன்று காலையில் திரும்ப
  படித்த போது இவை அப்படியே பகவத் கீதையின் சாரமாக உள்ளது.
  கண்ணதாசன் கவியாற்றல் நம்மை பிரமிக்க வைக்கிறது. எளிய சொற்களில்
  அரிய தத்துவங்களை எடுத்து வைப்பது கவிஞரின் திறமை.

  படத்தில் ஸ்ரீவித்யா, கமல், ரஜினி நடிப்பு அபாரம். ஆனால் ஏற்கெனவே
  பல தடவை இதே வலையில் இந்தப் படத்தை நான் பாராட்டி இருக்கிறேன்.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 7. noushadh

  மிஸ்டர் பாவலன்,

  பாடல் அருமை. எந்த படம் இது என்பதையும் சொல்லியிருக்கலாமே?

 8. மிஸ்டர் பாவலன்

  ///பாடல் அருமை. எந்த படம் இது என்பதையும் சொல்லியிருக்கலாமே?///
  (Nousadh)

  படம்: அபூர்வ ராகங்கள் (1975)
  பல்லவி: ஏழு ஸ்வரங்களுக்குள்
  பாடியவர்: வாணி ஜெயராம்
  பாடல்: கவியரசு கண்ணதாசன்
  இசை: மெல்லிசை மன்னர் M.S.V.

  சூப்பர் ஸ்டாரின் முதல் படம்!

  இந்தப் படம் பெற்ற விருதுகள்!

  23rd National Film Awards

  National Film Award for Best Feature Film in Tamil —
  D. Jayalakshmi, G. Vijayalakshmi (Producers) and K. Balachander (Director)
  National Film Award for Best Cinematography — B. S. Loknath
  National Film Award for Best Female Playback Singer — Vani Jayaram

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 9. noushadh

  மிக்க நன்றி மிஸ்டர் பாவலன்.
  இதைப்போன்ற செய்திகள் (சினிமா மட்டுமல்ல அரசியலும் தான்) தங்களிடமிருந்து நிறைய நான் தெரிந்து கொண்டுஇருக்கிறேன், தங்களின் பின்னூட்டங்கள் மூலமாக. மிக்க நன்றி.

  அ. நௌஷாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *