BREAKING NEWS
Search

ஆரம்பம்… ஒரு அபத்தத்துக்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?

ஆரம்பம்… ஒரு அபத்தத்துக்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?

arrambam

ரம்பம் படத்துக்கு இதுவே சரியான விமர்சனமாக இருக்க முடியும் என்ற நினைப்போடு இதை எழுதுகிறேன்.

கற்பனை வறட்சி, காட்சிகளில் நேர்மையின்மை, எப்படி யோசித்தாலும் சமாதானமடைய முடியாத ஹீரோயிசம்… இவற்றின் மொத்த உருவம்தான் அஜீத் நடிப்பில் வெளிவந்திருக்கும் ஆரம்பம் திரைப்படம்.

இரண்டே விஷயங்களில் இந்தப் படம் மொத்தமாக அடிபட்டு தூக்கில் தொங்குகிறது.

ஒன்று.. சுவிட்சர்லாந்து ரகசிய வங்கி மற்றும் துபாய் வங்கிகளின் கணக்குகளை அத்தனை சுலபத்தில் அஜீத் – ஆர்யா போன்ற குப்பனும் சுப்பனும் (கதைப்படி சாதாரண வெடிகுண்டு பிரிவு அதிகாரி) கண்டுபிடிக்க முடியாது.

அடுத்த முக்கியமான ஒன்று, ரிசர்வ் வங்கியின் கணக்கு. அது வங்கியின் ஆளுநருக்கு மட்டுமே தெரிந்த சமாச்சாரம். அது கூட தனிநபர் கணக்குப் போன்ற விஷயமல்ல.

இந்த அடிப்படை உண்மைகளைக் கூட தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் சினிமா எடுக்கக் கிளம்பிய அரை வேக்காடுகளையும், அவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடும் குறைவேக்காடுகளையும் என்னவென்பது!!

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரசிக்கும்படி இல்லை என்பதே நூறு சதவீத உண்மை. மகா செயற்கையானவை. ஆர்யாவை அஜீத்தும் நயன்தாராவும் நாடகமாடிக் கடத்துவதுதான் பார்வையாளர்களுக்கே அப்பட்டமாகத் தெரிகிறதே.. அப்புறம் அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது?

ஒரு மத்திய அமைச்சர் இத்தனை கேனயனாகவா இருப்பார்? அடடேய்… உங்களால் ஒரு ’15 நாள் புகழ்’ நாராயணசாமியைக் கூட முட்டாளாக்க முடியாதுப்பா… இதில் மத்திய உள்துறை மந்திரியையே பஃபூனாக்குவது உச்சகட்ட அபத்தம்!

வில்லன்களின் விஷத்தில் எல்லோரும் மொத்தமாக செத்துப் போகும் தருணத்தில் அஜீத்தும் நயன்தாராவும் மட்டும் தப்பிப்பதும், அந்த மட்டமான க்ளைமாக்ஸும்… அஜீத் படத்தின் இவ்வளவு ஓட்டைகளையும் மீடியா ஏன் அடைகாத்து நிற்கிறது என்பதுதான் புரியவில்லை.

எல்லாவற்றையும் விட கொடுமை அஜீத். இதுவரை வந்த படங்கள் எப்படியோ.. ஆனால் இந்தப் படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டுவது, பெரும்பாடுபட்டு கைப் பணத்தை செலவழித்து தன் திறமையை நிரூபிக்கப் போராடிக் கொண்டிருக்கும் விஷால், சூர்யா போன்ற இளைஞர்களை அவமானப்படுத்தும் செயல்.

காட்சிக்குக் காட்சி நடந்து கொண்டே இருப்பதும், சின்ன ரிஸ்க் கூட இல்லாமல் தனக்கு தெரிந்த பைக், கார், போட்களை ஓட்டிக் காட்டுவதும் சர்க்கஸில் வேண்டுமானால் சகித்துக் கொள்ளலாம்! சினிமாவில் தனக்குக் கிடைத்துள்ள இந்த மிகப் பெரிய வாய்ப்பை அஜீத் ஏன் இப்படி வீணடிக்கிறார் என்று புரியவே இல்லை.

விஜய் மோசம் என்பதற்காக மட்டுமே ‘அஜீத் அப்பாடக்கர்’ என்ற ரீதியில் வெளியாகும் கட்டுரைகள் ஊடக விபச்சாரத்தின் உச்சம். அதுவே ‘ரிவர்ஸ் எஃபெக்’டாகி, அஜீத்தை விரும்புபவர்களைக் கூட வெறுப்புக்குள்ளாக்குகிறது.

யார் படமாக இருந்தால் என்ன.. நன்றாக இல்லை என்றால், உள்ளது உள்ளபடி எழுதித் தொலைக்கலாமே! விஜய் மோசம்தான்.. ஆனால் அஜீத்… நடிப்பில் மிகவும் மோசம்… நடிப்பு என்றால் வீசை என்ன விலை என்று கேட்கிறார் மனிதர். ஆரம்பம் போன்ற மோசமான படங்களை சூப்பர் என்று கொண்டாட ஆரம்பித்தால், அடுத்த படத்தை இதைவிட கேவலமாகத்தான் தரப் போகிறார். விஷ்ணுவர்தன் அஜீத்தை வைத்து சினிமா எடுக்கக் கற்றுக் கொண்டு வருகிறார் என்பது ‘ஆரம்ப’த்தில் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

யுவன் இசை, ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு நன்றாக இருந்தாலும் ரசிக்க விடாமல் செய்வது, சுபாவின் கேவலமான வசனங்கள். படம் முழுக்க எத்தனை முறை அஜீத், ஆர்யா, நயன்தாரா போன்றவர்கள் ஷிட் ஷிட் என ஷிட்டிக் கொண்டே இருக்கிறார்கள் எனக் கேட்டு ஒரு போட்டியே வைக்கலாம், அஜீத் ரசிகர்களுக்கு.

ஒரு சினிமா விமர்சகனாக என்னைப் பொருத்தவரை ஆரம்பம்.. மகா மட்டம்… விஜய்யின் தலைவாவுக்கு சளைக்காத தரம். இந்தப் படத்தை மெச்சுவது அஜீத் ரசிகர்களின் சினிமா ரசனை எந்த அளவுக்கு கேவலமாகிவிட்டது என்பதற்கு சான்று, அவர்கள் என்னதான் பொங்கினாலும் உண்மை இதுவே.

சினிமாவில் எந்தப் பின்னணியும் இல்லாதவர் என்ற சப்பைக் கட்டெல்லாம் இனியும் வேண்டாம்!

-வினோ
21 thoughts on “ஆரம்பம்… ஒரு அபத்தத்துக்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?

 1. raja

  இந்த பதிவை படித்த பிறகி ஒரு அஜித் ரசிகனாக மிகவும் சந்தோஷபடுகிறேன்முன்ன எல்லாம் விஜய் ரசிகர்கள் மட்டுந்தான் வயிறெரிவாங்க இப்ப தல அடுத்த கட்டத்துக்கு போயிட்டாரு போல்

 2. Sivam

  (ஆ)ரம்பம் தான்.. சரியான விமர்சனம் எழுதியுள்ளீர்கள்.

 3. senthil

  ஹலோ சார்

  I am true Die hard fan of Both Rajini and Ajith sir, But i dont accept ur review and comment abt Ajith Sir. After seeing your comment i came to conclusion that u are true Rajini sir fan.

  Even Rajini Sir wont like ur comment

  Your Statement was like a Politician

 4. Ananth

  எனக்கு புரியல சார். அஜித் பற்றிய உங்க perspective change ஆக கரணம் என்ன?
  ///உண்மையான அஜீத்தை, அவரது சினிமா பொறுக்கித்தனங்களை தமிழ் சினிமா தெரிந்த அனைவரும் அறிவார்கள்!//
  இது உண்மைனா எங்களுக்கும் அது புரிய வையுங்க

 5. noushadh

  வினோ,

  என்னை யாரோ ஒருவரின் ரசிகனாக அடையாளப்படுத்திகொண்டு இதை சொல்ல வேண்டியதில்லைஎன்று நம்புகிறேன்.
  நீங்கள் ஒருதலைப்பட்சமானவர், அஜித்திற்கு எதிரானவர் என்று கூறுவதை நான் மறுக்கிறேன். அதற்கு பழைய பதிவுகள் சான்று.

  ஆனால் இந்த விமர்சனம் மிகவும் காட்டமாக உள்ளது. நானும் ஆரம்பம் பார்த்துவிட்டே எழுதுகிறேன். நிறைய குறைகள் இருந்தாலும் ஆரம்பம் நல்ல பொழுதுபோக்குப்படம். நாயகனுக்கு நடிக்க இடமில்லாத வேகமான வணிக படம். நாம் எப்படி சிவாஜியை ரசித்தோமோ அப்படி ரசிக்கவேண்டிய படம். இன்னும் சிறப்பாக செய்து இருக்கலாம், எதிர் பார்த்த அளவுக்கு இல்லை என்று எனக்கும் தோன்றியது. ஆனால் தாங்கள் கூறியபடி மோசமான படம் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதை மிக மோசமாக பதிவு செய்துள்ளீர்கள்.

  உங்களின் பட விமர்சனங்களை ரசித்த நாட்களும் உண்டு. அது பழைய கதை. சமீபத்தில் வணிக/பொழுதுபோக்கு படங்களை நீங்கள் விமர்சிப்பது சரியில்லை என்பது என் கருத்து. இப்படி காட்டமாக விமர்சிப்பதை விட விமர்சனம் செய்யாமல் இருக்கலாம். நன்றி.

 6. shanmugam

  சிவாஜி யில் இல்லாத தர்க்க மீறல்களா ? ஒரு அமைச்சர் வீட்டிலிருந்து கருப்புப்பணம் சம்பந்தப்பட்ட தகவல்களை ரஜினியும் விவேக்கும் எடுப்பதெல்லாம் சாத்தியமா? அமைச்சர் என்ன அமைச்சர் ? ஒரு கவுன்சிலர் வீட்டிலிருந்து கூட எடுக்க முடியாது நிஜத்தில். ஆனாலும் நாம் ரசிக்கவில்லையா?
  பொழுது போக்கு படங்களை அதற்கான மனநிலையிலிருந்து பார்க்க வேண்டும்.

 7. Veera

  Ithuvarai naan paarthathileye ரொம்ப mosamaana comment ithuthaan
  ….
  Envazhiyi ரஜினி படம் thavira matra அணித்து படங்களுமே குப்பை என்று solli varigireergal….
  Kochadayaan teaser paarthen…. மிக மிக mosamaana ரஜினி படம் போல தெரிகிறது….. எனக்கு ரஜினி ரொம்ப பிடிக்கும்… அனால் அதில் ரஜினியை ஒரு சுட்டி டிவி இல் வரும் ஒரு கார்ட்டூன் போல காட்டி இருப்பது மிக மோசம்…

  ஒருத்தருக்கு ரசிகரை இருப்பது வேறு, ஜால்ராவாக இருப்பது வேறு…

  ரசியன் என்றல் மற்றவர்களின் திறமையும் பாராட்ட வென்றும், ஜால்ரா என்றால் மற்றவர்கள் எது செய்தலும் அது வேஸ்ட் என்று சொல்ல வேண்டும்…

 8. shanmugam

  Even Rajini Sir wont like ur comment

  Your Statement was like a பொலிடிசியன்

  Even Rajini Sir wont like ur comment

  Your Statement was like a பொலிடிசியன்

  Even Rajini Sir wont like ur comment

  Your Statement was like a Politician

 9. குமரன்

  கண்ணா….

  கோபம் இருக்கும்போது நியாயம் கண்ணுக்குத் தெரியாது. (தலைவர் படவசனம்)

  கோபம் எதற்கு என்றுதான் எங்களுக்குப் புரியவில்லை.

  பரவாயில்லை, நியாயம் என்றும் ஒன்றுதான் மாறிவிடாது எனவே கோபம் தணிந்தபின் கண்ணுக்குத் தெரியும்.

 10. soundar

  Vino anna…i like your honest stand on many issues…. U wrote an article against Enthiran team on its unplanned shooting, which troubled public in NH road, chennai (i’m not sure when it was published in envazhi, probably when it was filming). Not only that, envazhi reviewed dhanush’s mappilai movie as like Ajith’s aarambam movie was reviewed. All those who think it is personal attack on Ajith, just try to accept the fact and reality like making a fake buildup for a worthless movie and the crew behind it. Anyway, hiding the truth and reality is not going to help Ajith or Dhanush or anyone else.

 11. K S RAJ

  சிங்கம் உலக தரமான படமோ? சூர்யாவிற்கே கமெர்சியல் தேவைபடுகிறது? எத்தனை பேர் கிரீடம் படத்தை சப்போர்ட் பண்ணினீங்க? சூர்யாவும் விஷாலும் ரொம்ப பெரிய நடிகர்கள் என்றால் கம்மேர்சியலில் இருந்து முதலில் வெளியே வந்து தரமான படங்களை தரட்டும் பின் அஜித்வுடன் கம்பரிசன் செய்யலாம். மோசமான படங்களை மக்கள் நிராகரிப்பார்கள். உதாரணம் இதே அஜித்தின் பில்லா-2 மற்றும் அசல், ஏகன். மக்கள் ஆதரிக்கும் எந்த படமும் நல்ல படங்களே, இல்லை என்றால் ரஷ்யன், ஈரான், கொரியன் படங்களை தான் நாம் கொண்டாட வேண்டி இருக்கும் ஆனால் மக்கள் ஏற்பார்களா என்பது சந்தேகமே. ரஜினி படத்தையும் சேர்த்தே சொல்கிறேன். உங்களுக்கு எல்லாம் அஜித் என்பது தான் பிரச்சனையே………

 12. Ravi

  வினோ நீங்கள் சொல்வது மிக சரி. ஆ ரம்பம் …. . ரம்பம் …. . வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.

 13. micson

  மிக சரியான விமர்சனம். யானை போற அளவிற்கு கதையில ஓட்டையை வச்சிகிட்டு ,மக்களை அதுவும் தமிழ் மக்களை முட்டாளாக நினைச்சி படமெடுக்கும் இயக்குனர்களுக்கும் , நடிகர்களுக்கும் உங்கள் விமர்சனம் ஒரு சவுக்கடி.வாழ்த்துக்கள்

 14. sakthivel

  நேர்மையான விமர்சனமாக தோன்றவில்லை….
  ரஜினி மட்டுமே பிடிக்கும் என்றால், அவர் படத்திற்கு மட்டும் புகழ் பாடினால் போதுமே…..

 15. Selvakumar

  நான் உங்கள் விமர்சனத்தை முழுமையாக ஏற்றுகொள்கிறேன்.

 16. nirmal

  தாங்கள் சொலவதில் எள்ளளலவும் என்னால் ஏற்று கொள்ள முடியாது. படம் அப்படி ஒன்றும் மோசம் இல்லை.. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படை கொண்டு எடுக்க பட்டதை தாங்கள் பாராட்ட மறந்து விட்டீர்கள். இதிலிருந்தே தங்களின் விமர்சன லட்சணம் புரிகின்றது..

 17. Manoharan

  என்னை பொருத்தவரை நீங்கள் சொல்லும் அளவுக்கு படம் மோசமில்லை. கமர்சியல் படங்கள் என்றால் லாஜிக் மீறல்கள் இருக்கத்தான் செய்யும் . அதன் அளவு படத்துக்கு படம் மாறும். ஊர்காவலனில் ரகுவரன் முழு வீச்சில் மாருதி ஜிப்சியை நகர்த்த முயலும் போது ரஜினி அதை காலில் கயிறை கட்டி நகர்த்த முடியாமல் செய்வார். அதைவிடவா லாஜிக் மீறல்கள் இதில் இருக்கிறது. மனிதன் படத்தில் வெடிகுண்டு வீசினால் அதை பிடித்து ஏதோ வெங்காய வெடிபோல் திருப்பி வீசுவார் …அதை நாம் ரசிக்கத்தானே செய்தோம். மிக அபத்தமான காட்சிகள் உள்ள ரஜினி,கமல்,விஜய், படங்கள் இருக்கும்போது அஜித் மட்டும் விதிவிலக்கல்ல.

 18. kabilan.k

  Mr .குமார் பாபா,குசேலனை விட நல்ல படமாக இருக்கட்டும்.அனால் அந்த இரண்டு படமும் ராஜா,ஆழ்வார்,ஏகன்,பில்லா 2,அசல்,ஜனா படங்களை விட மிக சிறப்பான படங்கள் என்பதை மறந்து விடாதிர்கள்

 19. Sargunaraj

  வாங்க வாங்க எல்லாரும் வாங்க…..
  சூப்பர் ஜி இப்படி ஒரு சுவாரசியமான காரசாரமான ஒரு பக்கத்த பார்த்து ரொம்ப நாள் ஆச்சி…

  கைல ஒரு துப்பாக்கி வச்சிகிட்டு கூலிங் கிளாஸ் போட்டு டு படம் புல் எ வந்தா படம் சூப்பர் ஆ…..???

  எனக்கு தெரிஞ்சி ஒபெனிங் சாங் மட்டும் தான் நல்ல இருந்தது….!!

  படம் செம்ம மொக்கை ….

  தம்பி குமாரு ,

  குசேலனை விட நல்ல படமாக இருக்கட்டும்.அனால் அந்த இரண்டு படமும் ராஜா,ஆழ்வார்,ஏகன்,பில்லா 2,அசல்,ஜனா படங்களை விட மிக சிறப்பான படங்கள் என்பதை மறந்து விடாதிர்கள்

  பாபா பட. கால் துசிக்கு வருமா டா ஆரம்பம் …???

  இது வரைக்கும் விஜயை ய மட்டும் தான் எதிரியா பார்க்கிறோம் …

  அஜித் எ அந்த லிஸ்ட் ல சேர்திராதிங்க …..!!!

  தாங்க மாட்டிங்க….!!!

  வினோ நீங்கள் சொல்வது மிக சரி. ஆ ரம்பம் …. . ரம்பம் …. . வாழ்க சூப்பர்

  ஸ்டார் ரஜினி அவர்கள்.

  ரஜினி வெறியன்,

  சர்குனராஜ் திருநெல்வேலி…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *