BREAKING NEWS
Search

லிங்கா… ஒரு பயணம்

லிங்கா… ஒரு பயணம்

1416143728rajinikanth-lingaa1

லுவலகத்திலிருந்து அடித்து பிடித்துப் போய் லிங்கா முதல் காட்சி பார்த்துவிட்டு, வரும் வழியில்,  நள்ளிரவு காட்சி பார்த்த நண்பருடன் பேசிவிட்டு வீட்டுக்கும் வந்தாச்சு.. இரவு உணவை முடித்துவிட்டு சோபாவில் சாய்ந்து கொண்டு விட்டத்தை பார்த்துக் கொண்டே லிங்கா பயணம் தொடங்குகிறது…

முதலில் இறைவனுக்கு நன்றி..சீக்கிரம் வந்துடுறேன் ராஜாக்களா என்ற குரலை கேட்டு, திரும்பி வந்து போது பார்த்த சற்றே தளர்ந்த நடையையும் பார்த்து, தலைவர் இனி நடிக்கவே வேண்டாம், அவ்வப்போது ரசிகர்களுக்கு நேரடி தரிசனம் தந்தாலே போதும் என்ற மன நிலைதான் இருந்தது.

லிங்கா தரிசனம் கிடைத்தபிறகு, அந்த பழைய நினைவுகள் ஏதோ போன பிறவி போல் தெரிகிறது… சந்திரமுகி, சிவாஜி ஸ்டைலில் இன்னும் அதிரடியாக மறுபடியும் களம் கண்டுள்ள தலைவரை தந்த இறைவனுக்கு மீண்டும் நன்றிக் கூறிக்கொண்டு தொடர்வோம்.

தலைவரின் அறிமுகத்திற்கு தேவையான கதையோட்ட ஆரம்பத்திற்கு பிறகு அதிரடியாக ஏ நண்பா.. என்று தோன்றிய போதே டிக்கெட் காசு வசூலாகிவிட்டது. அந்த சொகுசு கப்பலில் ஆடிப்பாடி வரும் அந்த ஸ்டைலுக்கு நிகர் அவர் மட்டுமே. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதையும் தனக்கே உரிய பாணியில் கோடிட்டுக் காட்டுவதை ரசிக கண்மணிகள் நிச்சயம் கடைப்பிடிப்பார்கள்.

அதிரடி ஆரம்பம் அப்படியே சந்தானம் அன் கோவுடன் தடாலடியாக மாறிய போது எடுத்த திரைக்கதை ஓட்டம் இடைவேளை வரை நிற்கவே இல்லை.. தலைவரின் ஒன் லைன் வசனங்கள், டைமிங் காமெடிக்காக எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்கப்போவதில்லை.

என்னமோ கெமிஸ்ட்ரின்னு சொல்றாங்களே.. தலைவருக்கும் அனுஷ்காவுக்குமான காட்சிகளை பார்த்து விட்டு சொல்லச் சொல்லுங்கள். யதார்த்தமாகவும் அத்தனை அன்னியோன்யமாகவும்  நம்மையும் அவர்களுடைய கேரக்டர்களுக்குள் இழுத்துச் செல்கிறார்கள். தலைவரும் அனுஷ்காவும் அடிக்கும் இளமை லூட்டி நமக்கே சற்று பொறாமையாகி விடுகிறது.

ராஜா லிங்கேஸ்வரனின் அறிமுகம்… வாவ்….சொல்ல வார்த்தைகளில்லை…. தலைவா என்றைக்குமே நீங்கள் தான் ராஜா. ப்ளாஷ்பேக் முழுக்க நம்மை பலவித அனுபவங்களுக்கு அழைத்துச் செல்கிறார்.. அப்படியே ஒன்றிப்போய் 1939ம் ஆண்டுக்கே போய்விடுகிறோம். தலைவருக்கு அனுஷ்கா மட்டும்தான் பொருத்தமா என்ன.. இதோ என்னை என்ன சொல்லப்போகிறீர்கள் என்று கேட்காமல் கேட்கிறார் சோனாக்ஷி. ராஜாவுக்கு ஏற்ற ராணி.. எப்படி அத்தனை எதார்த்தமாக பொருத்தமாக இருக்கிறார்கள் என்று நம்ப முடியவில்லை.. கதையுடன் திரையில் அனுபவியுங்கள்.

rajini2

தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முடியும் வரை ஆர். சுந்தர்ராஜன் வெளியே தலையை காட்டாமல் இருப்பது நல்லது.  நாட்டாமை விஜயகுமாரை விட ராதாரவி மனசை அள்ளுகிறார்.

அந்த வெள்ளைக்கார கலெக்டர், அவர் மனைவி இருவருமே படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்கள்.. இளவரசு நல்லா ரவுசு காட்டுகிறார்.. வில்லன் ஜெகபதி பாபு பொருத்தமாக இருக்கிறார்.

சுதந்திரத்திற்கு முன்னால் ஒரு அணை எப்படி கட்டப்பட்டிருக்கும் என்று விஷுவல் விருந்தே படைத்துள்ளார்கள். அணை கட்டிமுடியும் தருவாயில் வரும் நெருக்கடி நெஞ்சை பிசைகிறது.. ச்சே நல்லது செய்றவங்களுக்கு இன்றைக்கும் இப்படித்தான் சோதனை வருகிறது என்ற நவீன உலக நிஜத்தையும் புட்டு வைக்கிறது. அணை பலவீனம் என்று நம்ப வைக்க  வில்லன் செய்யும் தகிடுத்தம் நிஜமாக இருக்கக்கூடும் என்றே நினைக்க வைக்கிறது.  நிஜத்துடன் இணைத்துப் பார்த்து மனசு பதை பதைக்கிறது.

நல்லது செய்யனும்ன்னு நினைச்சா மட்டும் போதாது. அதற்கு எப்படிப்பட்ட உறுதியும் எதற்கும் தயங்காத உள்ளமும் வேண்டும் என்பதை அழுத்தமாகவே சொல்கிறார் நம் லிங்கேஸ்வரன், முக்கியமாக நல்லது செய்வது மக்களுக்காக மட்டுமல்ல, நம்முடைய மன திருப்திக்காக என்ற கருத்தை தெளிவாகவே பதியவைத்துள்ளார் நம் தலைவர்.

p8b

இரண்டு காலக் கட்டத்திற்குள் கட்டமைத்துள்ள கதை, திரைக்கதை வசனம் அற்புதம். மேக்கிங் பற்றி பாடமே எடுத்துள்ளார்கள் ரவிக்குமாரும் அவரது குழுவினரும். ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டம். எது க்ராபிக்ஸ், எது செட் என்றே தெரியாமல் நிஜத்தை பிரதிபலிக்கும் ஒளிப்பதிவு. பாடல் காட்சிகள் பிரமாண்டத்தின் புதிய அத்தியாத்தை எழுதியுள்ளது. இந்த படத்தை  6 மாதத்தில் முடித்துள்ள கே.எஸ்.ரவிக்குமார் இயக்குனர்களுக்கு பாடம் எடுத்துள்ளார். அந்த சாதனையை  நிகழ்த்திய தலைவருக்கு திரையுலகமே கடமைப்பட்டுள்ளது.

க்ளைமாக்ஸ் காட்சியில் சேஸிங்கும், க்ராபிக்ஸும் நமக்கு சற்று தளர்வைத் தந்தாலும், புத்தம் புது தலைவர் ரசிகர்களான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புதிதாக இருக்கும். அவர்களுக்காகவே அந்த காட்சிகளோ என்றே தோன்றுகிறது.
ராஜ லிங்கேஸ்வரன் மனதில் கோட்டை கட்டி குடியேறிவிட்டார். அவரை இன்னும் சில முறைகள் தியேட்டர் தரிசனம் செய்து வரவேண்டும்!

-இர தினகர், டல்லாஸ்
7 thoughts on “லிங்கா… ஒரு பயணம்

 1. arulnithyaj

  நன்றி தினகர்..எனக்கும், என் குடும்பத்தின் எண்ணங்களில் நிறைய நேர்மறை நல்ல சிந்தனைகளை தலைவர் படம் கொடுத்தே வந்திருக்கிறது..இது தலைவரால் மட்டுமே முடியும்.. என் 6 வயது மகள் லிங்கேஸ்வரன் ரஜினி கிராமத்தாரால் வெளியேற்றப்படும் பொழுது அழுது விட்டாள்.. பின்பு அவளே “நமக்கு கெடுதல் செய்தாலும் நல்லேதே செய்யனும் டாடி” என்றாள் வீட்டிற்கு வந்தவுடன்.. உண்மையில் தலைவர் படங்கள் பொழுதுபோக்கு மட்டும் அல்ல நிறைய positive எண்ணங்கள் நிறைந்தவை..நல்லவன் எப்பொழுதும் வெல்வான் என்று நல்ல எண்ணங்களை விதைக்கும் படங்கள்..லிங்கா அதில் ஒரு மகுடம்..நன்றி K S ரவிக்குமார் சார் அண்ட் டீம் ..நன்றி தலைவருக்கு .. என் இரண்டு மகன்களும் (twins வயது 3) ரெம்ப என்ஜாய் பண்ணி பார்த்தார்கள்..:)

 2. srikanth1974

  அற்புதமான பதிவு தலைவரையும்,படத்தையும்,
  குறைக் கூறுவோர் படிக்கவேண்டிய பதிவு.

 3. gandhidurai

  நல்ல பதிவு ovvoru ரசிகனின் மனதை அப்படியே படம் பிடித்தார்போல சொல்லீட்டீங்க .நன்றி

 4. Devaraj

  Good analysis, except for climax the movie is good.
  People r jealous about Rajini success ,shameful.
  But Thaliver wins.
  I sincerely hope move does better than break even, as people have paid exuberant price.
  Dev.

 5. chozhan

  இப்பொழுது சொல்லுங்க, படம் எப்படி போகுது திரை அரங்கில், செய்தி வருகிறது 50% அரங்கம் மட்டும் நிறைகிறது என்று உண்மையா? பல ஏரியாவில் போட்ட பணம் வராது என்கிறார்கள் குறிப்பாக இப்போதைய தகவல் படி திருச்சி ஏரியா… விசாரித்து சொல்லவும். 3000 ரூபா செலவு செய்து முதல் நாளே பார்த்தாச்சி, எனக்கு ஓகே. ஆனால் ஒரு வாரத்திற்கு பிறகு இப்போ எதிர்மறையான தகவல் வருகிறது. உண்மையான தகவல் தரவும் மற்றவர்கள் மாதிரி 100 கோடி, 200 கோடி என்று எழுதவேண்டாம். நான் சினிமாவில் இருப்பவன் என்பதால் 100 கோடி வசூல் என்றால் என்ன என்று எனக்கு தெரியும். ஆனால் ஒரு உண்மையை யாராலும் மறுக்கமுடியாது இந்த வயதிலும் ரஜினியின் உழைப்பு. நான் ரஜினி ரசிகன் இல்லை ஆனால் நான் ரஜினியை நடிகராக பார்க்கவில்லை ஒரு சித்தராக மட்டுமே பார்க்கிறேன் பலமுறை கனவிலும் சித்தராகவே வந்தும் இருக்கிறார். இதை இங்கே சொல்லவேண்டிய அவசியமில்லை ஆனாலும் எழுதவேண்டும் என்று தோன்றியது அவ்வளவுதான். ரஜினியை நேரில் பார்த்தது லிங்கா ஆடியோ விழாவில்தான் முதல் ஆளாக 8.15am சென்று அமர்ந்து இருந்தேன். நேரில் பார்த்தது ஒரு அலாதியான சந்தோசம். மற்றவர்கள் பேசுவது எதுவும் அவரை பாதிக்காது, அவர் சராசரி மனிதனுக்கு மேல, தேவையில்லாமல் அவரை சீண்டுவது/புகழ்வது/இகழ்வது (மேடையில் அமீர் போல, இவர் பேச்சை ரஜினியே ரசிக்கவில்லை என்பதுதான் உண்மை) தன்னை உயர்த்திக்கொள்ள மட்டுமே பயன்படும், அதனால் தான் இவரை சித்தர் என்றேன். மேலும் ஒரு விஷயம் ரஜினி எந்த காலத்திலையும் அரசியலுக்கு வரமாட்டார். இவரை தொந்தரவு செய்யவேண்டாம் வீண். அதற்க்கு பதிலாக வேற எதாவது மக்களுக்கு கேட்டு பெறலாம். அரசியலுக்கு வந்துதான் செய்யவேண்டும் என்பது இல்லை. அரசியலுக்கு வராமல் இவரால்/இவரிடம் என்ன பெறலாம் என்று சிந்தியுங்கள். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *