BREAKING NEWS
Search

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு – ஆ ராசாவுக்கு ஜாமீன் கிடைத்தது!

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு – ஆ ராசாவுக்கு ஜாமீன் கிடைத்தது – திகாரிலிருந்து வெளிவருகிறார்!

டெல்லி:  2 ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டு திகார் சிறையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்த முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ ராசா இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.  சிபிஐ நீதிமன்றம் அவருக்கு ஜாமீனை இன்று அறிவித்தது.

2 ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் ரூ 1.76 லட்சம் கோடி இழப்பு என்று சிஏஜி அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, ஆ.ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 12 பேர் ஜாமீனில் விடுதலையாகினர்.

இந்த வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஜாமீன் கோரி கடந்த டிசம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 9ம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

பெகுராவுக்கு ஜாமீ்ன் கிடைத்ததையடுத்து தனக்கும் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ராசா மனு தாக்கல் செய்தார். தனது மனுவில், நான் நிரபராதி, என் மீது பொய்யான வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டதால், என்னையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் ராஜா.

இந்த மனு நீதிபதி ஓ.பி.சைனி முன் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ராசாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறி சிபிஐ பதில் மனு தாக்கல் செய்தது. தீர்ப்பை 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் ஓபி சைனி.

இந் நிலையில் இன்று ராசாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி சைனி உத்தரவிட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் வெளியில் உள்ளபோது, ராசாவை மட்டும் காவலில் வைத்திருப்பது நீதியற்றது என ராசாவின் வழக்கறிஞர் வாதிட்டதை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து கிட்டத்தட்ட 15 மாதங்களுக்குப் பிறகு டெல்லி திகார் சிறையிலிருந்து ராசா விடுதலையாகிறார்.

-என்வழி செய்திகள்




3 thoughts on “2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு – ஆ ராசாவுக்கு ஜாமீன் கிடைத்தது!

  1. குமரன்

    ராசா கைய வச்சா அது ராங்காப் போனதில்லே !

  2. HOTLINKSIN.COM

    கோடி கோடியா கொள்ளை அடித்தாலும்… ஜாமின் கிடைத்துவிடும்… ஆனால் சிறு தவறு செய்து மாட்டிக் கொள்பவனுக்கு… ஜாமீன் கடல்ல கூட கிடைக்காதுப்பா….
    ………
    யாரும் தேவையில்லை நயன்தாரா அதிரடி
    http://www.hotlinksin.com/story.php?id=10779
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,
    இரட்டை குதிரை சாவாரி செய்யும் அமலா பால்
    http://www.hotlinksin.com/story.php?id=10778

  3. anbudan ravi

    2 ஜி ஊழல் என்ற வார்த்தையே இனி இருக்காது இந்த நாட்டில்….எல்லாமே மறக்கடிக்கப்பட்டுவிடும்…நீதிமன்றங்களும் நீதிபதிகளும் விதி விலக்கா என்ன. எல்லா அரசியல்வாதிகளுக்கும் இனி துணிச்சல் வந்துவிடும்….எவ்வளவு பெரிய ஊழல் செய்தாலும் ஒரு வருஷத்தில் வெளியில் வந்து விடலாம் என்று.

    கலைஞர் ஈழத்தை கையில் எடுக்க பரிகாரமாக காங்கிரஸ் அரசு ராசாவிற்க்கு ஜாமீன் கொடுத்துவிட்டது. இனி கலைஞர் ஈழத்தை தொட மாட்டார் என்று நம்புவோம்.

    அன்புடன் ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *