BREAKING NEWS
Search

கோச்சடையான் பாடல் ஒரு காவியம் பார்த்த பிரமிப்பைத் தந்தது! – ஏஆர் ரஹ்மான்

‘ஸ்டீராய்டில் ஒரு காவியம்’ – கோச்சடையான் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான்!

kochadaiyaan-press-meet copy

கோச்சடையான் பாடல் காட்சி பார்த்தது, ஒரு காவியத்தைப் பார்த்த மாதிரி இருந்தது என்று இசை அமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சௌந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள கோச்சடையான் முன்னோட்டக் காட்சிகள் சிலவற்றை படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் சமீபத்தில் பார்த்தார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “ரஜினி சாரின் கோச்சடையான் திரைப்படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியைப் பார்த்தேன். அது ஸ்டீராய்டில் (நிஜ உடலில்) அனிமேஷன் கலந்த ஒரு காவியம் மாதிரி இருக்கிறது,” என்று கூறியிருக்கிறார்.

இதற்கிடையே படத்தின் வேலைகளை முடித்துவிட்ட சௌந்தர்யா, தனது டீமுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இனி அடுத்தடுத்து கோச்சடையான் குறித்து ஆச்சர்யத் தகவல்களை, படங்களை தொடர்ந்து வெளியிடப் போவதாக அவர் கூறியுள்ளார்.

kochadai-team copy

-என்வழி ஸ்பெஷல்




One thought on “கோச்சடையான் பாடல் ஒரு காவியம் பார்த்த பிரமிப்பைத் தந்தது! – ஏஆர் ரஹ்மான்

  1. Raja Boopathi

    சீக்கிரம் படத்த release பண்ணுங்கப்பா ………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *