BREAKING NEWS
Search

இது வியாபாரமல்ல.. கேவலமான மோசடி

நேர்மையற்ற சினிமா வியாபாரிகள்

lingaa-box-office-collection

ண்பர்களே, தலைவருக்கும் அவரது லிங்கா படத்துக்கும் எதிரான சதிவலை பெரிதாகிக் கொண்ட போகிறது.

நேர்மையற்ற ஒரு கைக்கூலி நபர் ஆரம்பித்த இந்த நாடகத்தில் இன்னும் சிலரும் இணைந்திருக்கிறார்கள். எல்லாம் திட்டமிட்ட சதி வேலை. வந்த வசூலே போதும் என்று அமைதியாக இருந்த சிலரையும் இந்த சதியில் சேர வைத்துள்ளது அந்த இழிபிறவி.

யாரெல்லாம் இப்போது நஷ்டம் என்று கூற ஆரம்பித்துள்ளார்களோ, அவர்கள் தங்கள் பகுதியில் லிங்காவை வெளியிட்டு கொழுத்த லாபம் பார்த்தவர்கள். நாம் இதை மேம்போக்காகக் கூறவில்லை. லிங்கா வெளியான நாளின் அந்த நள்ளிரவு காட்சியிலிருந்து பார்த்து வரும் உண்மை. தமிழகம் முழுக்க உள்ள நமது நண்பர்களின் உதவியுடன் தெரிந்து கொண்ட உண்மை!

ஒரு உதாரணம்… இந்த கேவலப் பிறவி, தஞ்சை திரையரங்கமான விஜயாவில் 25 பேர்தான் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு நாள் பெரும் பொய்யை அவிழ்த்துவிட்டது. அந்த நபர் சொன்ன அதே நேரத்தில் நாம் தஞ்சையிலுள்ள ஒரு நண்பரை அனுப்பி அது உண்மையா என்று பார்க்கச் சொன்னோம். ‘திரையரங்கில் 80 சதவீதம் கூட்டம் நிறைந்திருக்கிறது. முன்புறம் மூன்று வரிசையில் மட்டும்தான் கூட்டமில்லை’ என்றார் அவர்.

இது நடந்தது படம் வெளியான 15 வது நாள்!

திருச்சியில் உள்ள ஒரு செய்தியாளரை அழைத்து, எல் ஏ சினிமாவில் நிலைமை என்ற பார்க்கச் சொன்னோம். அவர் நேரில் போய் பார்த்துவிட்டு வந்து சொன்னார் நல்ல கூட்டம். கிட்டத்தட்ட அரங்கம் முக்கால்வாசி நிரம்பியிருக்கிறது என்றார். இதுவும் அதே நாளில்தான்.

ஆனால் இந்த நபரோ, வெறும் 25 பேர்தான் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புளுகுகிறார்.

ஒரு பத்திரிகையில் இந்த நபரின் பேட்டியென்ற பெயரில் ஒரு மகா உளறல் வெளியாகியுள்ளது.

திருச்சி – தஞ்சையில் 54 அரங்குகளில் வெளியிட்டதாகவும், இவற்றின் இருக்கை எண்ணிக்கை மட்டும் 126000 என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் முதல் நாளில் 70 ஆயிரம் பேர்தான் வந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதை விட வடிகட்டின பொய் ஒன்று இருக்க முடியுமா? தலைவரின் படத்துக்கு முதல் நாளில் எப்படி கூட்டம் அலை மோதும், டிக்கெட்டுக்கு முட்டி மோதுவார்கள் என்பது யாருக்கும் தெரியாததா?

முதல் நாளில் இந்த திருச்சி தஞ்சைப் பகுதியில் அத்தனை அரங்குகளும் ஹவுஸ்புல். சின்னச் சின்ன ஊர்களிலும் கூட இதேநிலைதான். வசூல் நிலவரத்தைப் பாருங்கள்.. முதல் நாள் மொத்தம் ரூ 32 கோடியும், அடுத்த நாள் ரூ 34 கோடியும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரூ 38 கோடியும் குவித்தது இந்தப் படம். கூட்டம் வரவில்லை என்றால் எப்படி இது சாத்தியம்?

ரஜினி படங்களின் வசூலைப் பொறுத்தவரை தமிழக விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் பாதிக் கணக்கு கூட காட்டுவதில்லை. இப்போது முழுப்பூசணிக்காயையும் சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்கள். இப்போது குரைத்துக் கொண்டிருக்கும் ஆசாமிகள் வைத்திருப்பது 100 சதவீதம் போர்ஜரி டிசிஆர் (டெய்லி கலெக்ஷன் ரிப்போர்ட்) என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இந்த கேவல ஜென்மம் என்னிடம் பேசும்போது சொன்ன ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். கேட்டுவிட்டு இவரைப் போன்றவர்களை எதனால் அடிப்பது என முடிவு செய்யுங்கள்..

‘ஏங்க.. படம் வெளியாகி நான்காம் நாளே இப்படி அவதூறாகப் பிரச்சாரம் செய்கிறீர்களே.. இது நியாயமா? இரண்டாவது வாரத்தில் தேனி, காரைக்குடி, மதுரை, கம்பம் போன்ற பகுதிகளில் உள்ள அரங்குகளுக்கு நானே நேரில் போய் தியேட்டர்களில் பார்த்தேன். அத்தனை ஊர்களிலும் படம் ஹவுஸ்ஃபுல். அதுவும் வார நாட்களான செவ்வாய், புதனில். ஆனால் நீங்கள் இப்படி அபாண்டமாகச் சொல்கிறீர்களே?’ – இது நான் கேட்ட கேள்வி.

‘என்ன சார்.. நீங்க ஒரு பேன் மாதிரி கேக்கறீங்களே… ஒரு விஷயம் தெரிஞ்சிக்கங்க. தன்னோட படம் ரிலீசாகும்போதே படத்துக்கு நஷ்ட ஈடா கொடுக்க ஒரு அமவுன்டை ரஜினி சார் ஒதுக்கி வச்சிடுவார். அதை வாங்க நாங்க இப்போதிலிருந்தே அவர் கவனத்தைக் கவரும் வகையில் எங்கள் கோரிக்கையைச் சொல்கிறோம். அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு ஒரு தொகை கண்டிப்பா கிடைக்கும்!!’ – இது அந்த நபரின் பதில். நான் ஒரு வார்த்தை கூட இங்கே மிகைப்படுத்தவில்லை. சொல்லாததை எழுதவில்லை.

இன்னொன்று அந்த நபர் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் என்னுடன் பேசினார். கடுமையாக வாதாடினேன் என்றுதான் சொல்ல வேண்டும். அதில் நான் தெரிந்து கொண்டது, அவர் தீவிர விஜய் ஆதரவாளர் என்பதே…

‘கத்திதான் பெரிய படம். அதோட ஒப்பிட்டா லிங்கா ஒண்ணுமில்ல… இவர் ஏன் இன்னும் நடிக்கிறார்… விஜய்க்குதான் சார் மாஸ்.. ரவிக்குமாருக்கு சீன் வைக்கவே தெரியல… கர்நாடக தயாரிப்பாளரைத்தான் ரஜினி ஆதரிக்கிறார்.. பணத்தை தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகத்துக்கு கடத்திவிட்டார்கள்..’

-இதெல்லாம் அந்த நபர் உதிர்த்தவைதான். இதையெல்லாம் அப்போதே நாம் சொல்லாமலிருந்தது, தேவையற்ற கலகத்துக்குக் காரணமாக இருக்கக் கூடாது என்பதால்தான். ஆனால் இப்போது வேறு வழியில்லை.

ரஜினி என்ற இமயத்தை அசைத்துப் பார்க்க சிலர் குரைக்க ஆரம்பித்துள்ளனர். அதற்கு மீடியாக்கள் முழுமையாக துணை போகின்றன. குறிப்பாக தமிழகத்தின் வாக்கு வங்கிகளாக உள்ள கிராமப் பகுதிகளில் ரஜினி எதிர்ப்புப் பிரச்சாரம் சத்தமின்றி நடந்து வருகிறது. அதற்கு இது போன்ற கைக்கூலிகளின் பங்களிப்பு அபாரமாகவே உள்ளது. தலைவரின் ரசிகர் மன்றங்கள் இந்த விஷமப் பிரச்சாரங்களை முறியடிக்க குறைந்தபட்ச முயற்சி கூட மேற்கொள்ளவில்லை என்பதுதான் இதில் வருத்தமான விஷயம்.

‘தலைவர் பாத்துப்பார்’ என்று நினைப்பு அவர்களுக்கு.

எல்லாவற்றையும் அவரும் ஆண்டவனும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இந்த விஷமப் பிரச்சாரங்களை முறியடிக்க நாமும் முடிந்ததைச் செய்ய வேண்டும்.

என்ன செய்யலாம்..? அடுத்த கட்டுரையில் சொல்கிறேன்!

-விதுரன்
என்வழி

 
22 thoughts on “இது வியாபாரமல்ல.. கேவலமான மோசடி

 1. kabilan.k

  சொல்லுங்கள் விதுரன் சார்…அனைவரும் ஒன்று திரள்வோம் !!

 2. baba

  Dear Friends,

  Below is my simple calculation with very less ticket price, with this we will hw much they earn and hw they r cheating
  Total Seats Percentage Booked Seats Days Ticket price Collections
  126000 90% 113400 3 100 34020000
  126000 70% 88200 7 100 61740000
  90000 60% 54000 7 100 37800000
  75000 40% 30000 7 100 21000000
  Total Collections(15.5 Crores) 154560000
  Above is minimum avg collection details. They might earn more than 18 crores.
  To cheat like this they can do other business…

 3. arulnithyaj

  vino..இதை நீங்கள் நான் உங்களிடம் பேசியபோதே சொன்னீர்கள். வினோ எனது ஊர் உசிலம்பட்டியில் (Madurai அருகில்) மற்றும் சுற்று வட்டராத்தில் இதை கவனித்தேன். இதற்கு காரணம் தலைவர் ரசிகர் மன்றங்கள் ஆக்டிவா இல்லை முன்பு போல். தலைவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இவ்வளவு புகழ் உள்ளவருக்கு எதிரிகள் இருக்கவே செய்வார்கள். அதை கெடுப்பதற்கு நேரம் பார்த்து கொண்டு தான் இருப்பார்கள். தலைவர் அரசியலுக்கு வராவிட்டாலும் அவர் புகழை கெடுக்க நினைத்து அவருக்கு எதிராக சினிமா துறையிலும் இதை செய்து கொண்டு தான் இருப்பார்கள். நல்லவனாய் இருக்கலாம் வினோ, ஆனால் பன்றி கூட்டத்துக்கு நமது நல்ல குணத்தை காட்டினாலும் பன்றி பன்றியாத்தான் இருக்கும். தலைவர் ரஜினி சார் சத்திரிய தருமத்தை தான் பின்பற்றனும் இந்த கலிகாலத்தில். விதுரா நீதியை அல்ல. தலைவர் இருப்பது போர்களத்தில்! தலைவர் அரசியலுக்கு வராவிட்டாலும் ஒரு அமைப்பாக தனது மன்றத்தை மீண்டும் செயல்பட வைத்தால் அன்றி நடிகர் விஜய் போன்ற சீமான் போன்ற sathiya(?)ராஜ் போன்ற, குமுதம், dinamani,தினமலர் போன்ற இன்னும் எவ்வளவோ ஜென்மங்கள் இப்படிதான் seiyumm…

 4. Naveen

  இந்த விஷமப் பிரச்சாரங்களை முறியடிக்க நாம் enna செய்ய வேண்டும்.
  Iam ready to join your hands

 5. manithan

  விரைவில் சொல்லுங்கள் ,போருக்க முடியல ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

 6. s venkatesan, nigeria

  புதிய ரசிகர்கள் மன்றங்கள் ஆரம்பிக்க அனுமதி தர வேண்டும். அவர் அனுமதி தராவிட்டாலும் தற்போது உள்ள மன்ற நிர்வாகிகள் முன்னெடுத்து செய்ய வேண்டும். எல்லா ரசிகர்களையும் ஒரு facebook ID மற்றும் ஒரு Twitter ID மூலம் ஒன்றினைக்க வேண்டும்.

 7. BP

  when I see Thalaivar fans supporting Ajith or Vikram movie at this junction it’s really painful. When v don’t get support from media and other stars why do u guys watch teaser or promote movies. I watch only Thalaivar movies in theatres. I don’t watch their trailers or teasers etc. we should show the power together by boycotting as vijay fans did.

  If all this problems were created by some people by now people in that area could have collected or arranged some means to show what they are doing

 8. Muru

  We surely need to take this information to Thalaivar and thalaivar friends like KS.Ravikumar , muthuraman ,prabhu and other directors and well wishers.

  This is high time for thalaivar to re-unite the fans club and start as a சமூக அமைப்பு .

  Please do something to bring this to thalaivar’s attention. We are all matured enough to handle any situation . All we need is order from thalaivar.

  பொறுத்தது போதும் !

 9. Rajini Rasigan Viswa

  Lingaa 24th Day Box Report

  lingaa box office collectionRajinikanth starrer blockbuster movie of this year Lingaa has broken the total domestic BO Collections record of numerous biggies in that region on its third week’s end. After claiming such a fantastic position it has now entered its fourth week and the total collections are just fabulous. How so ever the film has dropped considerably with respect to every week. This superb action cum romantic entertainer has turned into another motion picture of Rajinikanth whose total box office collection has crossed 150 Crores at domestic level.

  This film is the most astounding grosser of the year at south Indian and also overseas box office collections. Lingaa has now few audiences in the halls owing to the release of firstly super hit PK and now the new flicks and seeing the proper graph the drop in occupancy looks genuine on the grounds that Sunday is off for the greater part of the individuals.

  Film has turned out blockbuster especially in the early two weeks but after that the film dropped gradually each day. It is the 24th day of release for this fanatically supported film and the total income done by Lingaa today is around 2.1 Crores*.
  – See more at: http://boxofficecollection.in/box-office-report/lingaa-24th-day-total-box-office-collection-response-7932#sthash.yZtPkoAy.dpuf

 10. raju

  இந்த விஷமப் பிரச்சாரங்களை முறியடிக்க நாம் என்ன செய்ய வேண்டும்.

 11. Ramamoorthy

  நீங்க அங்கேயே அவன உங்க செருப்பால அடிசுருந்திங்கான நாங்க சந்தோஷ பட்டிருப்போம் வெறுமனே பேசாம தீர்வு சொல்லுங்க அத செய்யலாம் இவனுங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம் நாம்மளோட பலம் என்னனு காட்டனும் தயவு செய்து சும்மா பேசிட்டு மட்டும் போக கூடாது தயவு செய்து எதாவது பண்ணனும்

 12. saranya

  “வந்த வசூலே போதும் என்று அமைதியாக இருந்த சிலரையும்” apdina potta kaasu vanthidichi. idhu podhumda saami nu amaithiya irunthaanga nu solreengala. enaku intha line ku artham purila konjam velakkunga

 13. raja paris

  இதற்கு ஜெய டிவி ஒரு காரணம் உண்மை நிலை விளக்க ஒரு ப்ரொமோட் நிகழ்ச்சி கூட இதுவரை இல்லை …இசை வெளியிடு விழா நிகழ்ச்சி கூட பத்தி வெட்ட பட்டு தான் காட்டினார்கள் …இதே சன் டிவி இடமோ அல்லது விஜய் டிவி இடமோ கொடுத்து இருந்தால் இந்நேரம் பல உண்மைகள் வேல் வந்து இருக்கும் ( பணத்துக்கு ஆசைப்பட்டு தலைவர் புகழை ஜெய விடம் அடமானம் வாய்த்த EUROS நிறுவனத்துக்கு நன்றி )

 14. sk

  there are 2 reviewers who also indirectly attack thalaivar since they want to promote vijay..one is sreedhar pillai (sify) and another is prashanth on twitter
  as someone mentioned here , i agree that we need to all unite on mainstream & social media to show thalaivar power..

  the box office calculations shown by mr.baba in this comment section is just a sample…if 1lac people had watched it everyshow in trichy circuit then minimum these guys would have made 4 -5 crores per day

 15. kumaran

  எல்லோரும் சேர்ந்து தலைவரை வீழ்த்த எண்ணுகிறார்கள்! ஆண்டவா?

 16. குமரன்

  ///கத்திதான் பெரிய படம். அதோட ஒப்பிட்டா லிங்கா ஒண்ணுமில்ல… இவர் ஏன் இன்னும் நடிக்கிறார்… விஜய்க்குதான் சார் மாஸ்.. ரவிக்குமாருக்கு சீன் வைக்கவே தெரியல… கர்நாடக தயாரிப்பாளரைத்தான் ரஜினி ஆதரிக்கிறார்.. பணத்தை தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகத்துக்கு கடத்திவிட்டார்கள்..’///

  ஆக, ரஜினி நடிப்பதை நிறுத்தி விடவேண்டும் என்பதுதான் நோக்கம்…. அப்படி நடந்து விட்டால் நான்தான் சுப்பர் ஸ்டார் என்று விசை கூத்தடிக்கமுடியும்?

  ///கேட்டுவிட்டு இவரைப் போன்றவர்களை எதனால் அடிப்பது என முடிவு செய்யுங்கள்..///
  கேடுகெட்ட ஜன்மங்களை சாக்கடையில் ஊறவைத்த செருப்பால் வாயிலேயே அடிக்கவேண்டும்.

 17. venkat

  வினோ

  IT IS YOUR FAULT yoU SHOULD HAVE EXPOSED THIS GUY SAME DAY AND HIGLIGHTED TO MEDIA.. in FUTURE TRY TO CARRY MINI RECORDER AND PUBLISH IT WITHOUT THIER KNOWLEDGE. tHIS gUYS ARE AHB———-TARDS

 18. yaseenjahafar

  அருல்நித்யாஜ் நன்றாக சொன்னார் அவர் எழுதிய வரிகள் எனக்கு பிடித்து இருந்தது. காரணம் ஒரு பத்திரிகை விற்க பட வேண்டும் என்றாலும் ரஜினி வேண்டும் வேறு எது வேண்டும் என்றலும் ரஜினி தவிர வேறு யாரும் கிடையாது என்பது உலகம் அறிந்த விஷயம் விஜய் விஜய் என்று சொல்கின்றகூட்டம் ஒரு நேரத்தில் விஜய் ஆகிய நீ ரஜினி படத்தை கண்பித்து கண்பித்து வளர்ந்தவன் கொஞ்சம் நீ வளர்ந்தவுடன் நன்றி மறப்பது நன்றல்ல நன்றல்ல அன்ற மறப்பது நன்று உனது புத்தி காண்பித்து இருக்கிறார் விஜய் யாருக்கு போய் யாரை போட்டியகா பார்க்கிறாய் ரஜினி ஒரு எவரஸ்ட் சிகரம் விஜய் இன்னும் நீ மூன்று மீட்டர் மலையெ இன்னும் பிடிக்க வில்லை விஜய். ரஜினி எத்தனை பாசையில் நடித்து இருப்பார் ஹிந்தி, தமிழ், இங்கிலீஷ், மலையாளம், கன்னடம், தெலுங்கு , பங்காலி , போஜ்போரீ, எத்தனை பாசையில் அவர் பேசுவர் நடித்த அத்தனை பாசையில்
  அவர் பேச கூடியவர். நிரை கொடம் என்றும் தளும்பாது அது தான் ரஜினி விஜய் ஆகிய நீ தகப்பனின் அண்டயில் வாழ்பவன் நீ வளரும் பொழுது எல்லுருகும் ரஜினி வேண்டும் வளர்ந்தவுடன் மறந்து விட வேண்டும் ஏன்
  1996 வருடம் ரஜினி 47 வது பிறந்த நாள் அப்பொழுது நடிகர் அஜித் AK 47 போன்ற தூப்பாக்கி போட்டு தின தந்தி பேப்பரில் ரஜினியெய் வாழ்த்தினர் ஆனால் அதற்கு பிறகு அவர் வாழ்த்து சொல்வதே இல்லை அவர் வளர்ந்து விட்டார் ஒரு சமயம் நம்ம விஜய் கூட சேர்ந்து விட்டாரோ

 19. Murali

  Producers and Front line distributors of Lingaa have miserably let down Superstar’s image. Superstar needs to instruct them to work overtime and expose those because they have profited luckily inspite of the detractors and hooligans because of Rajini’s brand name. If this brand name is attacked by false rumors , the producers and distributors who have profited has basic duty to establish the truth.
  Before the truth loving die-hard fans lose patience , something needs to be done which will positively impact Rajini sir’s next move.

 20. Karthick shadi

  Avana serupala adichi velila thallanum. Malai malar, hindu newspaper, vikatan ethu pondru maanam ketta newspaper la thaan varudhu.

 21. jegan

  I have made a comment before all this issues have initiated..that something is going wrong against thalaiver…..thalaiver is not an elephant……he is a horse..every time when he falls….he has risen up with more power….I m sure that this time also with gods grace he ll tackle all the issues and come back to full form …..than ever before…..haters be happy for a while…..v ll come back very sooonnnnn.god blesss thalaiver….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *