BREAKING NEWS
Search

ஒரு ஊர்ல ஒரு ராஜா! – ஜென் கதைகள் -5

ஒரு ஊர்ல ஒரு ராஜா! – ஜென் கதைகள் -5

வமரியாதை எனும் கதை உணர்த்திய நீதியை வெகு அருமையாகச் சொல்லியிருந்தனர் வாசக நண்பர்கள்.

ஒருவர் தரும் பரிசை ஏற்றுக் கொள்ளாதவரை, அந்தப் பரிசு கொடுத்தவருக்கே சொந்தமாகிறது. அது மரியாதையாக இருந்தாலும் சரி, அவமரியாதையாக இருந்தாலும் சரி!!

அடுத்த கதை….

ரே ஒரு ஊரிலே, ஒரே ஒரு ராஜா.

அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான்.

அரசனின் முகத்தைக் கவனித்த அமைச்சருக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம்.

ஆகவே அமைச்சர் ஒரு யோசனை சொன்னார். ‘அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?’

‘ஆமாம்’ என்றான் அரசன். ‘ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லையே!’

‘மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் அரசே’ என்றார் அமைச்சர்.

‘புறப்படுங்கள். போகிற வழியில்தானே உங்களுடைய குருநாதரின் ஆசிரமம்?’ அவரையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம்!’

‘குரு’ என்றவுடன் அரசன் முகத்தில் புதிய நம்பிக்கை. மகிழ்ச்சி. வேட்டைக்காக இல்லாவிட்டாலும் அவரைச் சந்தித்தால் தன்னுடைய குழப்பத்துக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைத்தான் அவன்.

அரசனின் குருநாதர் ஒரு ஜென் துறவி. ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவரும் அவருடைய சீடர்களும் அரசனை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள்.

சம்பிரதாயங்கள் முடிந்தபிறகு அரசன் தன் குருவைத் தனியே சந்தித்தான். தனது குழப்பங்களைக் கொட்டினான். அவற்றைச் சரி செய்ய தான் மனதில் வைத்திருக்கும் தீர்வுகளையும் சொன்னான். குரு எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டார்.

கடைசியாக அரசன் கேட்டான்…

‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே?’

அவர் எதுவும் பதில் பேசவில்லை. சில நிமிடங்களுக்குப்பிறகு ‘நீ புறப்படலாம்’ என்றார்.

அரசன் முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ இல்லை. புதிய மலர்ச்சி. உற்சாகமாகக் கிளம்பிச் சென்று தன் குதிரையில் ஏறிக்கொண்டான். நாலு கால் பாய்ச்சலில் நாட்டை நோக்கிப் பயணமானான்.

அமைச்சருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘அரசருடைய பிரச்னையை எப்படித் தீர்த்துவைத்தீர்கள் குருவே?’ என்று ஆர்வத்தோடு கேட்டார்.

‘உன் அரசன் ரொம்பப் புத்திசாலி. அவனே தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான். என் யோசனை அவனுக்கு தேவைப்படவில்லை’ என்றார் குரு.

அப்படி என்ன செய்திருப்பார் குரு?

-என்வழி ஸ்பெஷல்
7 thoughts on “ஒரு ஊர்ல ஒரு ராஜா! – ஜென் கதைகள் -5

 1. HOTLINKSIN.Com

  பிரச்சினைகளைக் கண்டு கலங்கக் கூடாது என்பதை புரிந்திருப்பார்…

  விஜயின் யோகன் விரைவில் ஆரம்பம்…..
  http://www.hotlinksin.com/
  தனுஷ் எடுத்த முடிவு!!ரசிகர்கள் வருத்தம்
  http://www.hotlinksin.com/

 2. மிஸ்டர் பாவலன்

  //அப்படி என்ன செய்திருப்பார் குரு?//

  ஜென் கதைக்கு விளக்கம்:

  கதையில் உள்ள வரிகளை நாம் மீண்டும் படிப்போம்:

  //அவர் எதுவும் பதில் பேசவில்லை. சில நிமிடங்களுக்குப்பிறகு
  ‘நீ புறப்படலாம்’ என்றார்.//

  இதன் பொருள் என்னவென்றால்: ஒரு problem என வந்தால்
  அதை எப்படி solve செய்வது என யோசித்து ஒரு நல்ல முடிவுக்கு
  வரவேண்டும். முடிவு எடுத்ததும் நேரத்தை வீணாக்காமல்
  உடனே அதை செயலாக்க வேண்டும். குழப்பத்தை மனதில்
  போட்டு குழம்பிப் போய் புலம்புவதில் பயன் இல்லை என்கிறார் குரு.

  இதையே கண்ணதாசன் ஒரு பாடலில் சொல்கிறார்:
  (பாடல்: “ஏழு ஸ்வரங்களுக்குள்”)

  “நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு..
  அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று..
  நமக்காக நம் கையால் செய்வது நன்று.”

  (தனது கடமையை செய்ய ராஜா புறப்பட்டார் என பொருள் கொள்வோம்)

  -======= மிஸ்டர் பாவலன் =====-

 3. குமரன்

  “நீ புறப்படலாம்” என்ற குருவின் வார்த்தைகள் மன்னன் தனது பிரசினைகளுக்கு அவனது மனதில் வைத்திருக்கும் தீர்வு சரியானதே என்று அதனை அனுமதித்தார் என்பதே பொருள்.

  அந்தத் தீர்வுகள் சரியல்ல என்றால் அதை அவர் சொல்லவேண்டும்.

  “நீ புறப்படலாம்” என்ற வார்த்தைகள் “நீ செல்லும் பாதை சரி. மேலும் அதே பாதையில் செல். வெல்வாய்” என்றே பொருள் படும்.

  எனவே மன்னன் வேட்டைக்குப் பயணம் செய்யும் தேவை அற்றுப் போய் விட்டது.

 4. JB

  எனக்கு என்னவோ, மனதில் போட்டு குழப்பத்தை மறைத்து கொண்டு இருந்ததால், அரசனால் சரியாக யோசிக்க முடியவில்லை. அதை நம்பிக்கையான ஒருத்தருக்கு சொன்னபோது, மனம் தெளிந்தது. குழப்பத்துக்கு வழியும் புரிந்தது. அதுதான் பதில் என்று தோன்றுகிறது.

 5. மிஸ்டர் பாவலன்

  “துணிந்து நில்… தொடர்ந்து செல்… தோல்வி கிடையாது தம்பி !”

  இந்த எம்.ஜி.ஆர் பாடல் தான் ஜென் கதை புகட்டும் நீதி!
  (வினோ நல்ல எம்.ஜி.ஆர் ரசிகர் என்பதால் இந்த விளக்கத்தை
  அவர் ஏற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு கூடுதல் உள்ளது!)

  -=== மிஸ்டர் பாவலன் ===-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *