BREAKING NEWS
Search

ரஜினியை.. கோச்சடையானை.. வெளியீட்டுக்கு முன்பே குறை சொல்லி உங்கள் அறியாமையை அம்பலப்படுத்தாதீர்!

ரஜினியை.. கோச்சடையானை.. வெளியீட்டுக்கு முன்பே குறை சொல்லி உங்கள் அறியாமையை அம்பலப்படுத்தாதீர்!

1920545_617847504963560_589323310_n

கோச்சடையான் பற்றி அபத்தமாக சிலர் எழுதுவதையும் திட்டமிட்ட பொய்கள் பரப்புவதையும் பார்க்கும்போது வேடிக்கையாய் இருக்கிறது. இதுதான் தமிழ் சினிமா பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் மிகச் சிலரின் மூடத்தனம் அல்லது அறியாமை என்பது!

இந்தப் படத்தின் தன்மை என்னவென்று முதலிலேயே தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். ரஜினிக்கு இந்தப் படத்தில் வேலை 15 நாட்கள். முதல் பத்து நாட்களை அவர் லண்டன் ஃபைன்வுட் ஸ்டுடியோவிலும், அடுத்த 5 நாட்கள் கேரள அரசுக்குச் சொந்தமான சித்ராஞ்சலி ஸ்டுடியோவிலும் இருந்து தன் பணியைச் செய்து கொடுத்தார். அதற்குப் பிறகு டப்பிங், பாடல் பதிவிலும் நேரம் செலவிட்டார்.

ரஜினியுடன் நான் சில நாட்கள்தான் நடித்தேன் (2 நாட்கள்) என தீபிகாவே சொல்லிவிட்டார் (அதற்கு மேல் நடித்திருந்தால் ரஜினிக்கும் தீபிகாவுக்கும் கசமுச என்று கதை கட்டவும் தயங்காத கம்னாட்டிகள் இவர்கள்!)

உலகில் எந்த ஹீரோயினாவது, தன் கதாநாயகன் தன்னை சொந்த மகள் போல் பார்த்துக் கொண்டார் என்று கூறிக் கேட்டிருக்கிறீர்களா.. ரஜினியைப் பார்த்து தீபிகா படுகோன் இப்படித்தான் சொன்னார். அதுதான் ரஜினி எனும் நல்ல மனிதனின், உன்னத கலைஞனின் அடையாளம்!!

10 நாட்கள் இழுத்தடிக்க வேண்டிய டப்பிங்கை 1 நாளில் முடித்துவிட்டார் ரஜினி. இது அவர் குற்றமா.. அவர் இயல்பே அதுதானே! (ஒரு மாதம் இழுக்க வேண்டிய ப்ளட்ஸ்டோன் ஆங்கிலப் பட டப்பிங்கை அரை நாளில் முடித்துக் கொடுத்து ஹாலிவுட்டை வாயடைக்க வைத்தவர்தான் ரஜினி.. விஷமிகளுக்கு இது மறந்திருக்கும் அல்லது அவர்கள் இந்த சினிமாவுக்கே அப்போது அறிமுகமாகியிருக்க மாட்டார்கள்!!)

ஒரு சினிமாவில் சில காட்சிகளுக்கு டூப் போடுவது புதிய விஷயமோ, அதிர்ச்சி தரும் விஷயமோ அல்ல. எம்ஜிஆர் காலம்தொட்டே இருந்து வருவதுதான். இதை ‘பன்னிப் பன்னி’ பேச வேண்டிய அவசியமென்ன.. Funny & Illiterate fellows!

மோஷன் கேப்சரிங் போட்டோ ரியலிஸ்டிக் தொழில்நுட்பத்தில், ஒரு படத்தின் அத்தனை காட்சிகளிலும் ரஜினி நடிக்க வேண்டிய அவசியமில்லை. அவரது உடல் மொழியை, அசைவுகளை முற்றாக ஸ்கேன் செய்துவிட்டு, திரையில் அவர் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்ய வைக்க முடியும், தொழில்நுட்பக் குழுவால். அதற்கு ஒரு குறைந்தபட்ச Reference கூடத் தேவையில்லை. அதுதான் இந்தத் தொழில் நுட்பத்தின் சிறப்பு.

அவதாரில் நாயகனாக வந்த சாம் வொர்த்திங்டன், மிகச் சில தினங்களில் தன் வேலையை முடித்துக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார் (10 நாட்கள்). ஆனால் அந்தப் படம் முற்றாக முடிந்து வெளியாக 12 ஆண்டுகள் ஆகின. இங்கே கோச்சடையான் பற்றிப் பேசும் யாருக்காவது இந்த உண்மை தெரியுமா?

ரஜினிக்கு யாரையும் ஏமாற்ற வேண்டிய அவசியமில்லை. ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்ட சினிமாவில், இன்றுவரை அவர் அப்படிச் செய்தவரும் இல்லை.

kochadaii-posters1

நேர்மைதான் அவர் சொத்து. இந்தப் படம் இந்திய சினிமாவுக்கு புதிய கதவுகளைத் திறக்கிறது என்பது புரிந்ததால்தான் ரஜினி நடிக்க ஒப்புக் கொண்டாரே தவிர, வேறெந்த காரணமும் இல்லை. நான்காண்டுகள் வரை நடிக்காமல் கோடம்பாக்கத்தை வேடிக்கைப் பார்த்த மனிதர்தான் அவர்!

நினைத்துப் பாருங்கள்.. இந்த வேலையை கமல் செய்திருந்தால், இந்த So called குற்றவாளி.. ச்சீ, குற்றம்சாட்டும் கூட்டம் என்னமாய் பொங்கிப் பிரவகித்திருக்கும்… எத்தனை உலக நாயகன் அடைமொழிகளை பிரயோகித்து புளகாங்கிதமடைந்திருக்கும்!!

இது கமல் மீதான விமர்சனம் அல்ல. ரஜினி என்ற மனிதரை கண்மூடித்தனமாக திட்டும் கூட்டத்துக்கான பதில். ‘கமல் நடிக்க வேண்டிய படங்கள் எனக்கு வருகின்றன.. இது இறைவனின் செயல்’ என்கிறார் ரஜினி. சக போட்டியாளனை இந்த அளவுக்கு கவுரவிக்கும் யோக்கியதை யாருக்காவது இருக்கிறதா!

விமர்சனங்களில் வளர்ந்து உச்சத்தில் நிற்கும் ஒரு மாமனிதனல்லா அவர்!

ரஜினி எனும் இந்த மனிதர் இந்த சென்னையில் இருப்பதால் தமிழகத்துக்குப் பெருமைகள் தேடி வருகின்றன (மோடியெல்லாம் ஜூஜுபி!). காரணம், ரஜினியை விமர்சிக்கும் வெத்துவேட்டுகளை தமிழ் மக்கள் இம்மியளவும் நம்பியதே இல்லை… அதைப் புந்து அவரை ரசியுங்கள்.

ரஜினியை.. அவர் படங்களைக் குறைசொல்வதாக, புலனாய்வதாக நினைத்து உங்கள் முட்டாள்தனத்தை அம்பலப்படுத்திக் கொள்ளாதீர்கள்!!

Lingaa - Envazhi 2a

ரஜினியை நம்புகிறவன், உண்மையை நம்புகிறவன் என்று அர்த்தம்!

அவரைக் குறை சொல்லும் எவனும் யானையைத் தடவிப் பார்த்த குருடன்களே (இந்தப் பதத்தை பயன்படுத்தியதற்காக மன்னிக்கவும்.. ரஜினியை விமர்சிப்பவர்கள் இதைவிட கடும் சுடுமொழிகளுக்கு ஆளாக வேண்டியவர்களே!)

-வினோ என்கிற ரஜினி ரசிகன்..

இல்லையில்லை நாலும் தெரிந்த தலைவர் வெறியன்!

என்வழி ஸ்பெஷல்
26 thoughts on “ரஜினியை.. கோச்சடையானை.. வெளியீட்டுக்கு முன்பே குறை சொல்லி உங்கள் அறியாமையை அம்பலப்படுத்தாதீர்!

 1. S. RAVI

  WELL DONE MR. VINOO.

  PL. AVOID THESE TYPE OF CULPRITS WHO SPREAD FALSE RUMOURS.

  LONG LIVE OUR SUPER STAR RAJINI AVARGAL.

 2. Arun Prasad

  #ரஜினியை நம்புகிறவன், உண்மையை நம்புகிறவன் என்று அர்த்தம்!

  #அவரைக் குறை சொல்லும் எவனும் யானையைத் தடவிப் பார்த்த குருடன்களே

 3. murugan

  நெத்தியடி வினோ
  தலைவரை விமர்சிப்பவர்கள் ஒட்டுமொத்த வயித்தெரிச்சல் மற்றும் பொறாமையின் சொந்தக்காரர்கள்
  அது ஏன் தலைவரை மட்டும் எப்போதும் சீண்டிக்கொண்டே இருக்கிறார்கள் ?
  அவர் அமைதியாக இருக்கும் ஒரே காரணத்தால் அவரை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்னும் எண்ணம் போல
  எங்கள் தலைவர் எங்களுக்கு வஞ்சனையையும் பொறாமையையும் கற்றுக்கொடுக்கவில்லை மாறாக அன்பு பொறுமை மற்றும் விவேகத்தை கற்று கொடுத்திருக்கிறார்
  தலைவர் சந்திக்காத விமர்சனங்களா?
  அவர் எப்படி அதை எதிர் கொண்டாரோ அதே போல அதே திசையில் பயணிக்கவே உலகெங்கும் உள்ள ஒவ்வொரு தலைவரின் ரசிகனும் விரும்புவான்
  தலைவர் தம்மைநோக்கி வரும் கேள்விக்கணைகளுக்கு வார்த்தையால் பதில் கூறியதே இல்லை தமது செயலால் கேள்வி கேட்டவர்களை தலைகுனிய வைத்திருக்கிறார்

  விடுங்கள் வினோ
  இவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் உரைக்காது

  தலைவரது பாணியில் சொல்ல வேண்டும் என்றால்

  எதிரிகளை ஒழிக்க எத்தையோ வழிகள் உண்டு – அதில் முதல் வழி – மன்னிப்பு

  நண்பா

  எல்லாம் கொஞ்ச காலம் ….

 4. parthi

  robot thalaivar nadichadhala than super a irundichu

  hollywood movies vida namma ENTHIRAN Top o top

  THALAIVA NEENGA EPPOVUM KING

  NEENGA UNIVERSAL SUPER STAR

  UNGALA BEAT PANNA YARUM ILLE

  vera yaravathu robot la nadichu irundha athu SOMBERI Machine a irunthirukkum
  NAN KAMAL SIR A SOLLALE

 5. parthi

  YARAVATHU KOCHADAIYAAN PATHI THAPPA PESI PARUNGA

  NANGA ONNUM PANNA MATTOM

  PADAM OSCAR AWARD VANGIDUM

  NEENGA THALAILA THUNDU POTTUTU SINGA KUTTIKALA (SUPER STAR FANS) PAKKA VENDIYATHA IRUKKUN

 6. venkat

  vino

  How many times you try to explain these idiots it is waste. It is like passing information to deaf years.

  Please try to concentrate on other issue rather than focusing on this idiots. They will continue to write and we fans will support thaliavar at any cost.

  God bless

 7. Swaminathan

  ரஜினி ரசிகர்களாகிய நாம் நிக்ஹில் முருகன் மீது வழக்கு மானநஷ்ட வழக்கு தொடர வேண்டும். This is ridiculous to see such messaged from Nikhil on his Tweeter and Facebook… Whenever he talks about “Kamal” he says “Ulaganayagan” and he simply says “Rajini” when he talks about “Thalaivar”…. also he says Riaz an unknown source in his tweeter… when he is not involved on a particular project, why the hell he is poking his nose and gives update about the movie, when an official PRO is working on his activities. Nikhil should be condemned severely by the Rajini fans very quickly. Please do something to make it happen..

 8. jegan n

  during padayapa success these idiots told that ramyakrishnan is the reason.during chandremuki they told bcz of jothika…..before enthiran they compare the film with i robot / Hollywood robot films and spread negative news.this time they started their usual habit.every time they shut their mouth atfer record break collection of thalaivar movies…..and this time also it will happen.neglect such news and get ready to make kochadayaan a huge hit as usual

 9. மிஸ்டர் பாவலன்

  லிங்கா படத்திற்கு கன்னட வெறியர்கள் சிலர் ரஜினி அவர்களின்
  உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பு போராட்டங்கள் செய்து
  வருவதாக சில பத்திரிகைகளில் படித்தேன். இது கவலையாக உள்ளது!
  மைசூரில் நடக்கும் படப்பிடிப்பு ஆந்திராவிற்கு மாறுமா எனத்
  தெரியவில்லை.. படத்தின் தயாரிப்பாளர் ‘ராக்லைன் வெங்கடேஷ்’
  என்பவர் தெலுங்கா, கன்னடமான்னு தெரியலை. ஒரு வேளை, அவர்
  கன்னடமாக இருந்தால் உடன் பிரச்சினையை சரிசெய்வார் என நம்புவோம்!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 10. குமரன்

  ஒரு பத்திரிகையாளரான வினோ எனது இந்தக் கருத்துக்கு மன்னிக்கவும்.

  பொதுவாகவே சில பல பத்திரிகையாளர்கள் “கவர்” வாங்கித்தான் எழுதுகிறார்கள். அதற்காக சில சமயங்களில் ஒருவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் முதலில் எழுதிவிட்டு, பின்னர் அவர்களிடம் வேரு பத்திரிகையாளர் மூலம் தொடர்பு வைத்துப் பணம் வாங்கி அவரைப் பற்றி நல்லதை எழுதிக் காசு பார்க்கிறார்கள். சில பத்திரிகைகள் இதை தங்கள் தொழிலாகவே வைத்திருக்கிறார்கள். நக்கீரன் பத்திரிக்கை வீரப்பன் உள்ளிட்ட சில விஷயங்களில் ஆற்றிய சமூகத் தொண்டு அடிபட்டதன் காரணமே அப்பத்திரிகை செய்யும் இப்படிப் பட்ட பணம் செய்யும் தொழில்தான்.

  இப்படிப் பட்டவர்களுக்குத் தலைவர் போன்ற பெரும்புகழ் பெற்றவர்கள் வசதியான இலக்கு. இது ஒருவகை பிளாக் மெயில். தலைவர் இப்படிப்பட்டவர்களைக் கண்டுகொள்வதே இல்லை. ஏனெனில் இவர்கள் வீசும் சிறு கல் அந்த அண்ணாமலை மீது மோதித்தெறித்துப் போகும், சிதறிப் போகும் என்பதால்தான்.

  தொழில் நுட்பம் பற்றி எல்லாம் இவர்களுக்குத் தெரியாது, தெரிந்துகொள்ளவும் அக்கறை இல்லை. தெரிந்துகொள்ளவும் அறிவும் கிடையாது. ஆனால் பண ஆசையில் பினாற்றுவார்கள்.

  இன்று கூட ஒரு பத்திரிக்கையில் ஒரு பண ஆசை பிடித்த நிருபர், என்னவோ மைசூரில் படப்பிடிப்பு செய்வதால் தமிழ் நாட்டைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் மனக் கசப்பில் இருப்பதாக எழுதி இருக்கிறார். அவரை முட்டாள் என்று தான் சொல்லவேண்டும்.

  ///ஒரு சினிமாவில் சில காட்சிகளுக்கு டூப் போடுவது புதிய விஷயமோ, அதிர்ச்சி தரும் விஷயமோ அல்ல. எம்ஜிஆர் காலம்தொட்டே இருந்து வருவதுதான். இதை ‘பண்ணிப் பண்ணி’ பேச வேண்டிய அவசியமென்ன//

  இதில் ஒரு பிழைத் திருத்தம் . “பண்ணி பண்ணி” என்பது எழுத்துப் பிழை.
  “பன்னி பன்னி” என்றுதான் வரவேண்டும், அதிலும் ஒற்று இரட்டித்துப் “பன்னிப் பன்னி” என்று ஆகும்.

  “பன்னுதல்” என்பதன் பொருள்: “தேங்காய் நார் போன்ற நாருடைய பொருட்களை ஒவ்வொன்று இழையாகப் பிரித்தல்”.

  தேங்காய் நாரைப் பன்னி நாம் அந்த நாரைக் கயிறு திரிக்கப் பயன் படுத்துகிறோம்.

  இந்தச் சொல்லை ஒருவிஷயத்தைப் பலவிதமாக ஆய்ந்து பார்ப்பதற்கும் பயன் படுத்துகிறோம். இவர்கள் அப்படி ஆய்வதில்லை என்பதுதான் விஷயம், satire

 11. மிஸ்டர் பாவலன்

  //“பன்னுதல்” என்பதன் பொருள்: “தேங்காய் நார் போன்ற நாருடைய பொருட்களை ஒவ்வொன்று இழையாகப் பிரித்தல்”. // (குமரன்)

  ‘பஞ்சு’ என்ற தமிழ்ச் சொல்லே கூட ‘பன்+து’ என்பதன் மருஉச் சொல்
  ஆகும். ‘பன்னுதல்” என்பதற்கு பஞ்சு நூற்றல், ஆராய்ந்து சொல்லுதல்,
  பாடுதல், பேசுதல், படித்தல், என பல பொருள்கள் உண்டு. ‘ஆராய்தல்’
  என்பது ஒரு நல்ல பொருளாகும். ‘பல் –> பன் -> பன்னுதல் ‘..

  தமிழில் எவ்வாறு ‘பன்னுதல்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது
  என்பதற்கு சில எளிய பாடல் விளக்கம் கீழே தருகிறேன்.

  1) அபிராமிப் பட்டர் பாடல்:

  “சென்னியது உன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
  மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே!
  முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
  பன்னியது உந்தன் பரமாகமப் பத்ததியே!”

  2) சம்பந்தர் பதிகம்: (திருவலஞ்சுழி)

  “என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து
  முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
  மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
  பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடு மதனாலே.”

  3) அப்பர் தேவாரம்:

  “பன்னிய மறையர் போலும் பாம்பரை யுடையர் போலும்
  துன்னிய சடையர் போலுந் தூமதி மத்தர் போலும்
  மன்னிய மழுவர் போலும் மாதிட மகிழ்வர் போலும்
  என்னையு முடையர் போலும் இன்னம்ப ரீச னாரே.”

  எளிய தமிழ்ப் பாடல்கள் என்பதால் விளக்கம் எதற்கு! நன்றி!!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 12. P SHANMUGAM

  ரஜினியை நம்புகிறவன், உண்மையை நம்புகிறவன் என்று அர்த்தம்!
  அவரைக் குறை சொல்லும் எவனும் யானையைத் தடவிப் பார்த்த குருடன்களே (இந்தப் பதத்தை பயன்படுத்தியதற்காக மன்னிக்கவும்.. ரஜினியை விமர்சிப்பவர்கள் இதைவிட கடும் சுடுமொழிகளுக்கு ஆளாக வேண்டியவர்களே!)

  செம செம சூப்பர் சார்

 13. geetha

  கோச்சடையான் வெற்றிக்காக ராமேஸ்வரம் கோயிலில் ரசிகர்கள் நடத்திய 1008 சங்கு பூஜை! –

  * பூஜை பண்ணியவங்களுக்கு அவங்க அப்பா அம்மா பொறந்த நாள் கூட தெரியாதது ரஜினி செய்த பாக்கியம்.. ஹி ஹி.. 🙂

 14. குமரன்

  மிஸ்டர் பாவலன் அவர்களே

  தமிழின் இனிமையை அனுபவிக்க ஏதுவாகத் தமிழ் மறைகளில் இருந்து “பன்னுதல்” கையாளப்பட்ட பதிகங்களை எடுத்தியம்பியமைக்கு என் சென்னி தாழ்த்திய வணக்கங்கள்.

 15. saktheeswaran

  ரஜினி யை குறை சொல்லி பிழைப்பு நடத்தும் ஒரு சிறு கூட்டம் தமிழகத்தில் உள்ளது
  அவர்கள் குறை சொல்வதற்கு முதல் காரணம் வயிற்றெரிச்சல்

 16. srikanth1974

  தலைவரைப் பற்றி தப்பா பேசறவங்களுக்கும்,
  தலைவரைப் பற்றி தப்பா எழுதறவங்களுக்கும்,
  தலைவரோட பாடல் வரிகளே பதில் சொல்லும்.

  [1] கல்லடிப் படுமென்பதாலே மரம் காய்க்காமல் போவதில்லை
  சொல்லடிப் படுமென்பதாலே வெற்றிகள் காணாமல் ஓய்வதில்லை

  [2] உன்னைப் பற்றி யாரு அட என்ன சொன்னால் என்ன?.
  இந்தக் காதில் வாங்கி அதை அந்தக் காதில் தள்ளு.
  மேகம் மிதந்தாலும்,காகம் பறந்தாலும்,
  ஆகாயந்தான் அழுக்காக ஆகாதுன்னு சொல்லு.

  பட்டறைல அடி படுற இரும்பு பட்டாக்கத்தியாகத்தான் வெளிவரும் என்பதை
  இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது.எனவே தலைவரை தப்பாப்
  பேசறவங்களையும், தப்பாய் எழுதறவங்களையும்,நாம் பொருட்படுத்த தேவையில்லை.இறுதியாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்

  பல்லி கத்துனா பஞ்சாங்கத்தப் பாக்கலாம்
  பன்றி கத்துனா என்னத்தப் பாக்குறது. [நாட்டாமை வசனம்]

  நன்றி.

 17. srikanth1974

  திட்ட திட்ட திண்டுக்கல் வைய்ய வைய்ய வைரக்கல்

 18. chozhan

  //(மோடியெல்லாம் ஜூஜுபி!).//

  இது தேவையில்லாதது, இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

  ஒருவரை உயர்வாக சொல்லவேண்டும் என்பதற்காக மற்றவரை குறைத்து எழுதவேண்டாம்.

 19. Thalaivar fan

  @geetha,
  Ulagathil, yen padam parungga, rasingga, ana muthalla unga amma appa gavaningga, unga kudumdathai gavaningga nu sonna orey nadigar ivarthan.
  Wat, u think fans neglect everything n just stared at his poster for all these 4 yrs?
  When other actors release their movies thrice a year, when their fans waste money each time, when they do milk, blood abhisegham, when fans called them next superstars n waste time comparing those dorks with Rajini in social medias, nobody bats an eyelid.
  But, when Rajini fans spend a few hours for his sake every three or four years, every idiots loses their mind.

 20. Thalaivar fan

  @elango,
  Who r u? Representative for c class ppl?
  Ungaluku intha technology puriyavillai yendral, just admit it. Athukaga appavi makkalin peyar payanpadutavendam.
  Inthanai varushama Rajini padanggal yeppadi parthangallo, appaditan ithaiyum parpanggal.
  Dont u worry ur head off.
  Science fiction padamana Endhiranil kudhe athigamma scientific thories irunthathu, athukkaga yarum padam parkalaiya, illai ventri peravillaiya?
  Yellarukkum puriyira mathiri padam nadikiranalthan, avarukku madthum yelloridathil selvakku irukku.

  கமல் காலம் காலமாய் …தமிழ் சினிமாவை உச்சத்திற்கே கொண்டு செல்லும் … வேலையை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார் …எத்தணை பேருக்கு அது புரிந்தது ??? அப்படியென்றால் குருதிபுனல் …ஆளவந்தான் எல்லாம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லையே?

  ரஜினியாவது முதல் டேக்கில் செய்வாரா ?? படத்தின் முடிவை பொறுத்திருந்து பார்போம்!

  Kamal just talk the talk, but never walk the walk.
  Avarukku tamil cinema utchathil kondu porathu vide, tan oru ocsar nayagan agum kanavutan athigam.
  If his films flop, wat should that do with us? Ask him.
  Rajiniku ithutan mudhal take ah? ithanai varushamma yarukkum teriyatha intha tamil cinemavai ulagathukku yeduthu ponavar yaru? Unga gaptain ah?
  20 varusha munnadiye Japanil peyar pothavar. Indru ulagatharathil yella nadigargalum padam release panranggalle, athuku karanam yaru?
  He daringly took the first step n first hurdle while every one else happily skip along the path he paved.

  Ithu ivarudaiya website, yethuvendum yendralum yelutha avarukku urimai irukku.
  Ungalai mathiri nabargal tevai illamal comments podurathukku urimai irunthal, avarukku illaiya?
  Ithu vemburathu illai, unmai.

 21. aryan

  அவதாரில் நாயகனாக வந்த சாம் வொர்த்திங்டன், மிகச் சில தினங்களில் தன் வேலையை முடித்துக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார் (10 நாட்கள்). ஆனால் அந்தப் படம் முற்றாக முடிந்து வெளியாக 12 ஆண்டுகள் ஆகின. இங்கே கோச்சடையான் பற்றிப் பேசும் யாருக்காவது இந்த உண்மை தெரியுமா?

  Vino, அவதார் படம் முடிஞ்சு வெளி வர 12 வருஷம் ஆகவில்லை, இது james Camerone மனதில் 10 வருடமாக இருந்த கதை, அதற்கான தொழிநுட்பம் அமைய அவர் 10 வருஷம் காத்திருந்தார் அவ்வளவுதான் சும்மா பொய் பிட்டு எல்லாம் போடாதீங்க,

 22. Thalaivar fan

  James Cameron wrote the story in 94, the works of avatar began on mid 2005.
  Since the intended technology was not up to his imagination, he worked on the script to create a concept clip of wat avatar would look like. He already knew wat he was going to way back b4 he started shooting.
  Muthalle peyar olungga yeluthungga.
  Endhiran’s script was written in, like 1999 or 2000, but due to the same technical issue, the shooting only started at 2008. Athukku madthum yellarum appadiye support pannitangalakkum.
  If foreign stars or any other local stars do something different, u will praise up to maximum no matter how horrible or crappy it is, in the name of ‘kalainyanai vaazhavaikkannum’. Ana Rajini madthum yethavuthu panna, ithungalukku porukkathu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *