BREAKING NEWS
Search

நானும் ரஜினி ரசிகன்தான்.. ஆனா…..!!

நானும் ரஜினி ரசிகன்தான்.. ஆனா…..!!

1920545_617847504963560_589323310_n

நானும் ரஜினி ஃபேன் தாங்க.. போன படம் எவ்வளவு சூப்பரா இருந்துச்சி.. ஆனா இந்த படம் எனக்கு  அவ்வளவா புடிக்கலங்க.. என்னங்க ரஜினி எப்பவும் கை கால ஆட்டி ஸ்டைல் பண்ணிட்டு மட்டுமே நடிச்சிகிட்டு இருக்காரு. ஒரு வித்யாசமான ரோல்ல நடிச்சாதான நல்லாருக்கும். அட என்னங்க.. இந்த படத்துல ரஜினி ஸ்டைலே இல்லீங்க. அவர்ட புடிச்சதே அந்த ஸ்டைல்தான். அது இல்லாம படம் எடுத்தா எப்டிங்க பாக்குறது. என்னடா மாறி மாறி உளருறானேன்னு பாக்குறீங்களா?

இப்புடி உளர்றதெல்லாம் நா இல்லீங்க. “நானும் ரஜினி ரசிகன் தான்”ன்னு சொல்லிகிட்டு சுத்திகிட்டு திரியிற சில ஜந்துக்கள்.

சிவாஜி வரும் போது படையப்பா சூப்பர்ங்க,, இது அவ்வளவு நல்லா இல்லைன்னு சொல்லுவாய்ங்க. எந்திரன் வரும்போது ‘அட சிவாஜி எவ்வளவு செம்மையா இருந்துச்சி, இந்த படத்துல ரஜினி மாதிரியே இல்லீங்க’ம்ப்யாங்க.

ஒவ்வொரு  ரஜினி படம் வரும் போதும் அதற்கு முந்தைய படம் அவர்களுக்கு மிகவும் பிடிச்சிருந்ததாகவும் இப்போ ரீலீஸ் ஆவுற படம்தான் இவுகளுக்கு பிடிக்காத மாதிரியும் சீன் போட்டுகிட்டு திரியிறவிங்கதான் இந்த “நானும் ரஜினி ரசிகன் தான் சார்” குரூப்பு.

அதாவது ஒவ்வொரு படம் வரும்போதும் அது நல்லாருக்குன்னு பகிரங்கமா ஒத்துக்க முடியாத சில அந்நியர்களோட முட்டாள்தனமான பேச்சுக்கள்தான் இதெல்லாம். எதாவது குறை சொல்லனும். சரி சும்மா சொல்லி வைப்போம் அப்டின்னு அந்த படம் சூப்பர்ங்க பத்து வருசம் முன்னால வந்த படம் சூப்பர்ங்கன்னு எதாயாவது சொல்லிக்கிட்டு திரிய வேண்டியது.

மத்த நடிகர்களோட ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கும். ஒருத்தன் ரஜினிக்கு ரசிகனாயிட்டான்னா அதுக்கப்புறம் அவன் மாறமாட்டான். ஆனா மத்த நடிகர்களுக்கு அப்படி இல்லை.

எங்க கம்பெனியில அஜித் ஃபேன் ஒருத்தன் இருந்தான். ஒரு நாள் ஆஞ்சனேயா படத்த வச்சி அவன ஓட்டும் போது “ஹலோ.. ஆஞ்சனேயா படம் வரும் போது நா ஒண்ணும் அஜித் ஃபேன் இல்லீங்க. அப்போ நா விஜய் ஃபேன்” ன்னான். எனக்கு தூக்கி வாரிப் போட்டுருச்சி. ஏண்டா… என்னடா நம்ம அரசியல் கட்சிகள்
எலெக்சனுக்கு எலெக்சன் மாறி மாறி கூட்டணி வக்கிற மாதிரி ஆயிட்டீங்க. ஆனா இதுக்கு காரணம் வேற ஒண்ணும் இல்லை. யாராவது ஒருத்தரோட ரசிகனா ஃபார்ம் ஆயிட வேண்டியது. அப்புறம் அவனோட நாலு படம் மட்டையான உடனே பொத்துனாப்புள எவன் படம் ஓடுதோ அவன் பக்கம் திரும்பிக்க வேண்டியது.

1904131_844697892223280_379685797_n

ஆனா அன்னையிலிந்து இன்னிக்கு வரைக்கும் ரசிகர்கள ஏமாத்தாத ஒரே ஆள் தலைவர்தான். அவர் ரசிகர்களா இருக்கும் போது வேற ஒருத்தன நெனைச்சு கூட பாக்க முடியாது. எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. நா ரெண்டாவது படிக்கும் போது (இப்போ வரைக்கும் நீ அவ்வளவு தானடா படிச்சிருக்க) கஷ்டப்பட்டு ஏழு ரூவா சேத்து பக்கத்து வீட்டு அண்ணன்கிட்ட சொல்லி ருத்ராட்சை வாங்கி போட்டேன். ஆனா ரெண்டு நாள்ல எங்க சார் பொடனில தட்டி அத கழட்ட சொல்லிட்டாருங்கறது வேற விஷயம். ஆனா அன்னிக்கு அவர எந்த அளவு புடிச்சிதோ இப்போ வரைக்கும் அத விட பல மடங்கு அதிகமா புடிக்கிதே தவற கொஞ்சம் கூட குறையல.

ரஜினியைப் பிடிக்காதவர்கள்ன்னு யாரும் இருக்க முடியாது. பிடிக்காதது போல காட்டிக்கொள்ள விரும்பும் சில பேருதான் இந்த மாதிரி உளரிக்கிட்டு இருக்காய்ங்க. இப்போ இந்த மாதிரி ஆளுங்களுக்கு இன்னொரு வயித்தெரிச்சல் சேந்து வந்துருச்சி. சில உலகநாயகர்களோட படங்கள் உள்ளூரக்கூட தாண்ட முடியாத சமயத்தில நடிப்பு பதிவாக்க தொழில் நுட்பம் (motion capturing) ங்குற அடுத்த கட்ட சினிமாக்குள்ள தலைவர் நுழைஞ்சிட்டது பலபேரால பொறுக்க முடியல.

அதுவும் என்னடா ஆறாயிரம் தியேட்டருங்குறாய்ங்க, 10 மொழில ரிலீசுங்குறாய்ங்க அப்போ இப்போலருந்தே  ஆரம்பிப்போம்னு கோச்சடையான் இசையிலருந்து வேலைய ஆரம்பிச்சிருக்காய்ங்க. ஏ.ஆர்.ரஹ்மான் இத விட கேவலமா மியூசிக் போட்டதே இல்லையாம். ஏண்டா டேய்.. ஒரு பீரியட் பிலிமுக்கு இத விட சூப்பரா போடமுடியுமான்னு தெரியல. விட்டா குத்து பாட்டே இல்லைன்னு குறை சொல்லுவாய்ங்க போல.

Kittu daughter Marriage_12

இவிங்க என்ன நம்பிக்கையில இருந்தாய்ங்ன்னா.. அந்தப் புள்ள சவுந்தர்யா முன்னால சுல்தான்னு ஒரு படம் எடுத்துச்சி. அது அப்டியே ஆஃப் ஆயிருச்சி. அதே மாதிரி இதையும் கொஞ்ச நாள்ல ஊத்தி மூடிருவாய்ங்கன்னு நெனைச்சிட்டு இருந்துருப்பாய்ங்க போல. ட்ரெயிலர பாத்தே மெரண்டுட்டாய்ங்க. இந்தப்படம் ரிலீஸ் ஆனாலே நீங்கல்லாம் வாழ்க்கைல அப்புறம் ரஜினிய பத்தியே பேசக்கூடாதுடா!

அப்புறம் இந்த வட இந்தியகாரய்ங்க.. நாம முப்பது வருசத்துக்கு முன்னால பாத்த படத்தயெல்லாம் இப்போ ரீமேக் பண்ணி பாத்துகிட்டு இருக்காய்ங்க. அவிங்களுக்கு பேச்சு. அனிமேஷன் சரியில்லையாமாம். அவதார் அளவுக்கு இல்லையாமாம். டின் டின்ல மூஞ்சி நல்லா தெரியிதாமா.. கோச்சடையான்ல அந்த அளவுக்கு இல்லியாமா.  டேய் அவதார் கூட கம்பேர் பண்றதுக்கு கூட ஒரு ரேஞ்ச் வேணும்டா.  நாங்க உங்க ஊர்ல படத்த ஓட்ட ஷாருக்கான நடிக்க வைக்க  தேவையில்லை. ஆனா நீ எங்க ஊருக்குள்ள நுழையனும்னாவே ரஜினி பேர சொன்னா தான் முடியும். அதான்டா எங்க தலைவர் ரஜினி.

அவரோட நடிச்ச சமகால ஹீரோக்கள் இப்போ நடிச்சிக்கிட்டு இருக்கறது மாதிரி அப்பா ரோல்ல நடிச்சதில்லை. “நம்பிக்கை அதானே எல்லாம்”னு விளம்பரங்களுக்கு வந்ததில்லை. வருசத்துக்கு ஒரு படம் ரிலீஸ் பண்ணனும்னு அவசியமும் இல்லை. மூணு வருஷத்துக்கு ஒரு படம் தான் நடிப்போம். ஆனா ‘Indian of the year’ ன்னாலும்  அவர் தான். ‘Entertainer of the year’ ன்னாலும் அவர் தான்.  அதான் ரஜினி!

பொதுவா தமிழ் சினிமாவ பொறுத்த அளவு ரஜினி எப்பவுமே ஒரு 10 வருஷம் முன்னாலதான் இருப்பாரு. அவரு பதினைஞ்சி வருஷத்து முன்னால நடிச்ச படங்கள தான் இப்போ அஜித், விஜய் படங்களா வந்துகிட்டு இருக்கு. எந்தெந்த கால கட்டத்துல மக்களுக்கு என்னென்ன படங்கள் குடுக்கனும்னு அவரவிட நல்லா தெரிஞ்சவங்க யாரும் இல்லை.

பாட்ஷாவோட வரலாற்று வெற்றிக்கு அப்புறமும் அவரோட அடுத்த படங்கள்ல அந்த படத்தோட சின்ன தாக்கம் கூட இருந்ததில்லை. ஆனா இப்போ ஒருத்தனுக்கு ஒரு படம் தெரியாத்தனமா ஓடிட்டா போதும்,  அடுத்த 5 படம் அதே மாதிரி எடுத்து அறுத்து கொன்னுட்டுதான் விடுவாய்ங்க.

rajini-at-16-vayathinile28

ரெண்டு மாசத்துக்கு முன்னால “தமிழ் – தி ஹிந்து” ல ரஜினியப் பத்தி ஒரு கட்டுரை வந்துருந்துச்சி. அதாவது ரஜினி படங்கள் என்பது ஜேம்ஸ்பாண்ட் படங்கள் மாதிரி ஒரு ஜானர் (genre) ஆ மாறிவிட்டது. ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஹீரோக்கள் மாறி மாறி நடிப்பது போது இப்போது தமிழ்நாட்டில் ரஜினி படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த பொங்கலுக்கு “வீரம்” “ஜில்லா” என்ற இரண்டு ரஜினி படங்கள் வந்திருக்கின்றன. ஒன்றில் அஜித்தும் இன்னொன்றில் விஜய்யும் நடித்திருகின்றனர்”. – இது எப்டி இருக்கு.

ரஜினி அவரோட போட்டியாளர்காளாக சித்தரிக்கப்படும் பலரை விட எட்டாத உயரத்தில் பயணித்துக்  கொண்டிருக்கிறார்.  எனவே உங்களை வித்யாசமானவராகக்  காட்டிக் கொள்ள நீங்கள் செய்யும் இந்த சல்லித்தனமான வேலைகளை விட்டுவிட்டு, சரித்திரத்தில் இடம்பெறப் போகும் இந்தியாவின் முதன் மோஷன் கேப்சர் திரைப்படத்தைக் கொண்டாடத் தாயாருங்கள்.

சம்போ மகா… தேவாஆஆஆஆ!!!

-நன்றி: முத்துசிவா

-என்வழி
43 thoughts on “நானும் ரஜினி ரசிகன்தான்.. ஆனா…..!!

 1. Sanjev

  நெத்தி அடி , நான் நினைத்ததை அபடியே பதிந்து இருக்கிறார்.
  நன்றி வினோ

 2. endhiraa

  செம சூப்பர் ! பின்னிட்டீங்க முத்துசிவா!!

  சம்போ மகா… தேவாஆஆஆஆ!!!

 3. கார்த்திக்

  நச்! செம!! இதுக்குமேல சொல்றதுக்கு ஒன்னுமில்ல!

 4. குமரன்

  அட்டகாசமா பேசுறாய்ப்பிலேயே பின்னிட்டீங்கா ….. முத்துசிவா ஆ ஆ ஆ ஆ !!

 5. S. RAVI

  சூப்பர். நன்றி vinoo மற்றும் முத்துசிவா அவர்களுக்கு. வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.

 6. மிஸ்டர் பாவலன்

  ///உலகநாயகர்களோட படங்கள் உள்ளூரக்கூட தாண்ட முடியாத சமயத்தில///

  கமல் மீது தேவையில்லாத attack! ஆனால் தசாவதாரம், விஸ்வரூபம்
  படங்களில் இமாலய வெற்றிகள் கட்டுரையாளருக்கு தெரியாது போல!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 7. sivashanmugam

  மத்த நடிகர்களோட ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கும். ஒருத்தன் ரஜினிக்கு ரசிகனாயிட்டான்னா அதுக்கப்புறம் அவன் மாறமாட்டான். ………….TRUE WORD……………..
  மூணு வருஷத்துக்கு ஒரு படம் தான் நடிப்போம். ஆனா ‘Indian of the year’ ன்னாலும் அவர் தான். ‘Entertainer of the year’ ன்னாலும் அவர் தான். அதான் ரஜினி! ………….TRUE WORD……………..

 8. sivashanmugam

  9 songs superb ஜி தலைவர் பாடிய songs & லதா mam பாடிய songs & ரஹ்மான் சார் பாடிய songs படம் ரிலீஸ் பிறகு பெரிய ஹிட் ஆகும் பாருங்கள் நாம தலைவர் வாய்ஸ் கேட்கும் பொது ஒரு சிலிர்ப்பு வரும் பாருங்க ஒரு கோடி கொடுத்தாலும் வராது கண்டிப்பாக AR ரஹ்மான் song & Background சூப்பர் ஹிட் ஆகும்

 9. முத்துசிவா

  @மிஸ்டர் பாவலன்:

  //ஆனால் தசாவதாரம், விஸ்வரூபம்
  படங்களில் இமாலய வெற்றிகள் கட்டுரையாளருக்கு தெரியாது போல!//

  ஆமாம் இது எந்த ஊரில்? இமாலய வெற்றி என்பதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. அது நீங்கள் மேலே கூறிய படங்களுக்கு கண்டிப்பாகப் பொருந்தாது.

  அதிலும் விஸ்வரூபம் சென்னையைத் தவிற வேறு எந்த நகரத்திலும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. சி செண்டர்களில் நான்கு நாட்களில் தியேட்டர்கள் காற்றாட ஆரம்பித்துவிட்டன.

  சென்னையில் கூட ஆரோ 3ட் சவுண்ட் சிஸ்டம் செய்யப்பட்ட ஒரிரு தியேட்டர்களில் மட்டுமே படத்தைப் பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டினார்களே தவிற வேறெங்குமில்லை. இந்த தகவலெல்லாம் பாவலர் அய்யாவுக்கு தெரியாது போல

 10. M.MARIAPPAN

  மிகவும் அருமையான பதிவு Mr . முத்து சிவா நன்றி . நான் நினைத்ததை அப்படியே எழுதி உள்ளீர்கள் இது போல மிகவும் அருமையான பதிவை எதிர் பார்க்கிறேன் . வாழ்க தலைவர் வெல்க கோச்சடையான்.என்றும் தலைவர் வெறியன் .

 11. kumaran

  தலைவரின் புதிய முயற்சிக்கு ஏன் உலகநாயகனின் ஆதரவு இல்லை ?

 12. ROSHAN , MUMBAI

  முதலில் அவருடைய BLOG இல் படித்து பின்பு பின்னோட்டம் இட முடியாமல் தவித்து , பின்பு face book இல் RBSI என்ற ID இல் படித்து , முன்றாவதாக நமது ENVAZHI இல் படித்து COMMENT செய்கிறேன் . REALLY NO WORDS TO THANK MR . MUTHU SIVA . Wonderful article . proud to be a Thalaivar fan . KEEP IT UP Mr SIVA

 13. Raghul

  கமல் மீது தேவையில்லாத attack! ஆனால் தசாவதாரம், விஸ்வரூபம்
  படங்களில் இமாலய வெற்றிகள் கட்டுரையாளருக்கு தெரியாது போல!

  -== மிஸ்டர் பாவலன் ==-

  தசவதாரம் – the costliest fancy dress competition… utter flop in hindu dubbed version
  Viswaroopam.. “நான் நாட்ட விட்டே போறேன்”… போன்ற டிராமா ஓரளவு காப்பாதிச்சு ..

  இப்பவும் எந்திரனுக்கு பினனால் சிவாஜி தான் இன் ஓவரால் கோல்லேச்டின்…

 14. ramesh

  தலைவரை வெல்ல இன்னொருத்தன் பிறக்க வேண்டும்………

 15. வேலன்

  சீமானுக்கு தான் இதை தாங்கமுடியாது..அவரை பொறுத்தவரை கமல் மட்டும் தான் தமிழ் நடிகர் அவர் செய்தால் தான் தமிழுக்கு பெறுமையாம்..
  தலைவரை பொறுத்த வரை எந்திரனே அல்டிமேட் படம் இல்லை என்று கே.பி சார் கிட்ட சொன்னாரு D40 விழால அதுவும் படம் நல்லா ஒடி வசுல் மற்றும் வெற்றி பெற்ற பின்..
  “நீ என்பது உடலா உயிரா பெயரா
  மூன்றும் இல்லை… செயல்”
  எங்கள் தலைவர் செய்துவிட்டார்..
  வேற புது முயர்ச்சி இருந்தால் சொல்லுங்கள்..இல்லை வேற நடிகர் வைத்து எடுத்தால் கை சுட்டு விடும் என்று நினைத்தால் எங்கள் தலைவரிடம் வாருங்கள்..நிச்சியம் கை கொடுப்பார் உங்கள் புதிய முயர்ச்சி மற்றும் சிந்தனைக்கு
  “ஆகாய மேகங்கள் பொழியும்போது
  ஆதாயம் கேளாது
  தாய்நாடு காக்கின்ற உள்ளம் என்றும்
  தனக்காக வாழாது”
  “கோழை மகன் மன்னித்தால் அது
  பெரிதல்ல பெரிதல்ல‌
  வீர மகன் மன்னித்தால் அது
  வரலாறு வரலாறு”
  “மாற்றம் ஒன்றுதான் மாறாதது…”

 16. Raghul

  RAJNI fan… இது என்னுடைய அடையாளம்

  superb article..Siva.. Thank you…
  I am sorry I can not type fluently in Tamil..

  The whole Tamil population has evolved into Rajni fans.. This is history.
  My tryst with Thalaivar started with his days of Bhuvana oru kelvikuri, Mangudi Minor…
  I too initially had my own complaints that he spoke fast Tamil to comprehend by everyone..watch those movies (eg. Karjanai) now, every tamil can very clearly understand what he speaks.. That’s why I told the entire tamil present generation evolved to accept him, his movies, his style and his tamil..
  In ‘Kaali’ vimarsanam.. Kumudam had written its worry that why this talented actor continues to do “கும்.. கும் ” movies after mentioning about his histrionics after his brother was murdered in that movie. I understood it was a very conscious decision that today made him the most liked actor in the country..
  Any doubt ? In a recent survey- Thaliavar was adjudged as the most loved and respected identity for indians overseas.

  Once in a NDTV programme, Actor Vikram had to clarify about some superlative potentials of our Thlaivar to an interviewer (NDTV) who had doubted his acting skills. The same NDTV considers him now as the most popular face of living Indians. It is an evolution.

  Kochadaiiyan songs and Trailer has sent shock waves throughout that nobody can digest just songs and trailer could create such a magic.. what’s in store from April 11..

  No other actor had or will this distinction – that his is genre now although everyone accepts he is a phenomenon. I too read that..
  ரெண்டு மாசத்துக்கு முன்னால “தமிழ் – தி ஹிந்து” ல ரஜினியப் பத்தி ஒரு கட்டுரை வந்துருந்துச்சி. அதாவது ரஜினி படங்கள் என்பது ஜேம்ஸ்பாண்ட் படங்கள் மாதிரி ஒரு ஜானர் (genre) ஆ மாறிவிட்டது. ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஹீரோக்கள் மாறி மாறி நடிப்பது போது இப்போது தமிழ்நாட்டில் ரஜினி படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த பொங்கலுக்கு “வீரம்” (sounding like veera) “ஜில்லா” (sounding like billa) என்ற இரண்டு ரஜினி படங்கள் வந்திருக்கின்றன. ஒன்றில் அஜித்தும் இன்னொன்றில் விஜய்யும் நடித்திருகின்றனர்”. – இது எப்டி இருக்கு.

  I am the most relieved person on earth….

  Thank you for continuing to be the one one only RAJNI fan… இது என்னுடைய அடையாளம்

 17. muthukumar

  அது “மோஷன் கேப்சரிங்” தொழில்நுட்பம் இல்லங்க, “பெர்பார்மன்ஸ் கேப்சரிங்”.

 18. Dev

  Someone close to the komali actor mentioned that he is so jealous of his ‘friend’ Rajini, he spends a lot of time in front of his computer and writes all these hate comments, mails etc in a pseudo names……. He was so happy during the baba days, thinking that it was the end of the legend….I keep hitting my head on the wall when someone tells me that he is a very close friend of our thalaivar…. It is similar to this article when someone says i am a fan of thalaivar, but i thought the last movie was better than this….

 19. மிஸ்டர் பாவலன்

  //தலைவரின் புதிய முயற்சிக்கு ஏன் உலகநாயகனின் ஆதரவு இல்லை ?//

  உலக நாயகன் எது செய்தாலும் press meet வெச்சுட்டு செய்யனுமா
  என்ன? கமல் ஹாசன் பத்ம பூஷன் விருது வாங்கினதுக்கு சூப்பர்
  ஸ்டார் வாழ்த்து சொன்னதாக இன்னும் ப்ரெஸ்ல வரலே! அதனால
  அவர் வாழ்த்து சொல்லலேன்னு யாரும் எழுத முடியாது. போன்ல
  சொல்லி இருக்கலாம்! அதே மாதிரி கோச்சடையான் படம் நல்ல முயற்சி
  அப்படீன்னு கமல் ஒரு press meet வெச்சு சொல்ல வேண்டியது இல்ல.
  கோச்சடையான் படம் பற்றி கமல் ஹாசனுக்கு ஒரு special show
  ரஜினி arrange செய்ய இருப்பதாக ஒரு தகவல் வெளி வந்திருந்தது.
  அது பற்றி கமல் ஹாசனிடம் கேட்ட போது – “ரஜினி நல்ல நண்பர்.
  Special show arrange செய்தால் என் கருத்துக்களை ரஜினிக்கு சொல்வேன்”
  என்பது போல் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்!

  விஸ்வரூபம்-2 படத்தில் கமல் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறார்!
  உலகத்தில் உள்ள தியேட்டர்கள் அதிர இருக்கின்றன!!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 20. முத்துசிவா

  //விஸ்வரூபம்-2 படத்தில் கமல் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறார்!
  உலகத்தில் உள்ள தியேட்டர்கள் அதிர இருக்கின்றன!!//

  இவரு சீரியஸா பேசுறாரா இல்ல காமெடியா பேசுறாரான்னே தெரியாலையே!!

 21. murugan

  நண்பர் திரு முத்து சிவா அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் !!!

  தலைவரை பற்றி நமக்கும் நம்மை பற்றி தலைவருக்கும் நன்றாகவே தெரியும்
  இவை அனைத்தையும் விட தலைவரின் ரசிகர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உலகறியும்

  யாருக்கும் விளக்கம் கொடுத்து நமது பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம்
  அவரவர்களின் எண்ணங்கள் அவரவர்களோடு இருக்கட்டும்

  ஞானிகளும் மகாபுருஷர்களும் அதிகம் பேசுவதில்லை
  நமது தலைவரும் அவர்களைபோலத்தான்
  ஊராரின் பேச்சுக்கு தமது செயலாலும் வலிமை மிக்க தமது மௌனத்தாலும் பதில் அளிப்பவர்

  அவரது வழி நின்று நாம் ஆற்றவேண்டிய கடமைகள் ஏராளமாக உள்ளன
  நாம் நமது கவனத்தை அதில் செலுத்துவோம் !!!

 22. மிஸ்டர் பாவலன்

  //இவரு சீரியஸா பேசுறாரா இல்ல காமெடியா பேசுறாரான்னே தெரியாலையே!!// (முத்து சிவா)

  விஸ்வரூபம் படம் வெளிவந்த பின் நான் –
  கணேஷ்,முருகன் இவர்களுடன் கலந்து கொண்டு
  பேசி வெளி வந்த “புஸ்வானம்” படம் பற்றிய விவாதம்
  இந்த வலையில் மிகவும் பேசப்பட்டது. அதன் இணைப்பு இதோ!

  -==== பழைய பதிவு — மறுபடியும் ! =====
  கணேஷ்: பாவலன்.. Good evening ..
  பாவலன்: Good evening.. முருகன் எங்கே போயி? ஞான் அவரையும் விளிச்சல்லே?
  முருகன்: வணக்கம்..
  பாவலன்: வரு! இரிக்கு.. ஞான் நேராய் சப்ஜெக்டுக்கு வரும்..
  முருகன்: சிறிது தமிழில் பேசுங்கள்!
  பாவலன்: குழப்பமில்லா.. ஞான் தமிழில் பறையும்!
  கணேஷ்: அறையப் போறேன்! ஒழுங்கா தமிழ்ல பேசுடா!
  Trivandrum போய்ட்டு வந்து ஆளே loose மாறிப் போயிட்டான்!
  பாவலன்: நான் ஒரு படம் எடுக்கப் போறேன்!
  கணேஷ்: நீ! (மேலும் கீழும் பார்க்கிறார்) படம்.. எடுக்கப் போற..
  பாவலன்: சத்தியம் பறையும். Sorry! உண்மையாகவே தான் சொல்றேன்.
  கணேஷ்: பேசாம கோவளம் போய் ரெண்டு photo எடு..
  ஏதாவது பத்திரிக்கையில போடுவான்..
  பாவலன்: நான் சினிமா படம் சொன்னேன்டா..
  கணேஷ்: மனசுல என்ன சூப்பர் ஸ்டார்னு நினெப்பா?
  இல்ல, கமல் ரசிகன்கிற மிதப்பா?
  முருகன்: ஏங்க.. பவர் ஸ்டார் நடிக்கலையா?
  கணேஷ்: அவர் பவர் ஸ்டார்.. இவர் புவர் ஸ்டார்!
  பாவலன்: (மனதிற்குள்) மனோகரன் மாதிரி பேசறாரே..
  கூப்பிட்டிருக்கக் கூடாதோ?
  கணேஷ்: படத்தோட பேர் என்ன?
  பாவலன்: வைக்க மாட்டானே! படம் பார்த்துட்டு ஒவ்வொருத்தனும்
  என்ன பேர்னு அடிச்சுக்கிட்டு சாகனும்.. நீ வேணா பாரு.. நடக்கத்
  தான் போகுது..
  முருகன்: இதைக் கூட ஏதோ நாகேஷ் படத்தில் கேட்டாப் போல்
  இருக்கிறது!
  பாவலன்: கேள்விக் குறியோடு வைக்கலாம்னு விட்டுட்டேன்..
  முருகன்: (மனதிற்குள்) இப்படி காப்பி அடிக்கிறானே இவன்?!
  கணேஷ்: எப்போ release படம்?
  பாவலன்: என் அண்ணன் சந்திரனோட படம் தயாரிக்கலாம்னு
  இருக்கேன். தீபாவளி release.
  முருகன்: அப்படியானால் தீபாவளியை ஒட்டி ஒரு பெயர் வையுங்கள்.
  கணேஷ்: தீபாவளி release-ஆ? படம் புஸ்வானம் தான்!
  பாவலன்: (குதிக்கிறார்) ஆஹா! ஆஹா! வளர மனோரஞ்சிதமான பெயர்!
  கணேஷ்: என்னது?
  பாவலன்: புஸ்வானம்! (டைரியில் எழுதிக் கொள்கிறார்)
  இது தான் என் புதிய படத்தோட பெயர்! உலக தரத்தில்
  இயக்கப் போறேன்!
  முருகன்: அப்போ ஹீரோ?
  பாவலன்: நான் தான்.. கதை, வசனம், பாடல்கள், இயக்கம், ஹீரோ..
  இந்த மாதிரி பல பொறுப்புக்கள்..
  முருகன்: பாட்டு???
  பாவலன்: கேளுங்கள்.. (பாடுகிறார்)
  எந்த வெடி வெடித்தாய்?
  எதைக் கண்டு பயந்தாய்?
  திரி ஒன்று பற்றினால்
  வெளிப்படும் புஸ்வானம்!
  (புஸ்வானம்..புஸ்வானம்..)
  முருகன்: பெயருக்காகவே உங்கள் படம் ஓடும்!
  கணேஷ்: சரி..உன் அண்ணன் சந்திரனோடு discuss பண்ணு.. வர்ரோம்!

  -=== காட்சி 2 ===
  (சந்திரன் சோபாவில் படுத்தபடி.. பாவலன் யோசித்தபடி
  இங்கும் அங்கும் நடந்து வருகிறார்..)
  சந்திரன்: ஏன்டா பாவலா..
  பாவலன்: அண்ணே!
  சந்திரன்: சினிமா..கினிமான்னு சொல்லிக்கிட்டு இருக்கியே..
  பாவலன்: ஆமாம்..
  சந்திரன்: படம் பேர் என்ன?
  பாவலன்: புஸ்வானம்!
  சந்திரன்: படம் புஸ்ஸா?
  பாவலன்: புஸ்னு சொல்லாதீங்க.. புஸ்வானம்!
  சந்திரன்: அந்த புஸ்ஸொட கதையைச் சொல்லேன்!
  பாவலன்: கதையை சொன்னா படம் finance பண்ணுவீங்களா?
  சந்திரன்: நீ மொதல்ல கதையைச் சொல்லுடா.. தர்றேன்!
  பாவலன்: வக்கீல் அண்ணா? கிண்டலா?
  சந்திரன்: இல்லடா..உனக்கு புத்திசாலித் தனம் இருக்கான்னு பாக்கணும்ல?
  பாவலன்: (serious ஆகி) அப்போ கதை நல்லா இருந்தா படம் தருவீங்களா?
  சந்திரன்: நீ மொதல்ல கதையை சொல்லுடா..தர்றேன்..
  பாவலன்: (சுற்றி வந்து) ஒரு suspense.. thriller.. world class movie..
  Terrorists பத்தி..
  சந்திரன்: பயங்கரமான கதையா?
  பாவலன்: கதையை ஏற்கெனவே Twitter-ல ஒருத்தருக்கு சொன்னேன்..
  பாதிக் கதையை கேட்கும் போதே சிஸ்டத்தை shut-down
  பண்ணீட்டான்..
  சந்திரன்: ஹா..ஹா..ஹா.. கோழைப் பய.. கோழைப் பய..
  பாவலன்: கா.. ஆ.. ஆ… ஆ..
  சந்திரன்: என்னது இது???
  பாவலன்: காக்கா.. படம் காக்கால தான் ஆரம்பிக்கிறது.. கனடால
  ஒரு சுவத்துல காக்காயா உட்காந்திருக்கு..
  சந்திரன்: கனடால எது காக்கா?
  பாவலன்: நான் எதுலையும் புதுமையா காண்பிக்கிறவன்.. கதை
  சொல்லும் போது disturb பண்ணாதீங்க..
  சந்திரன்: அப்பறம்?
  பாவலன்: காக்கா பறந்து போகுது.. காமெரா பின்னாடியே போகுது..
  ஒரு busy ரோட்டுல உட்காருது.. சர்ர்ர்ர்…
  சந்திரன்: என்ன சத்தம்?
  பாவலன்: Shoe.. ஹீரோ நடந்து வர்றார்..
  சந்திரன்: அவர் நல்லவரா, கெட்டவரா?
  பாவலன்: அது படத்துல சஸ்பென்சா வச்சிடறோம்…டர்ர்ர்..
  சந்திரன்: என்னது?
  பாவலன்: ரோடை cross செய்யறார்.. அங்கே ஒரு சர்ச் இருக்கு..
  சந்திரன்: கனடாவில சர்சுக்கு போகறது பெரிய விஷயமா?
  பாவலன்: அங்கே ஒரு twist இருக்கு.. அவர் தலைல ஒரு குல்லா இருக்கு..
  அவர் ஒரு முஸ்லீம். ஹிந்து கோயிலுக்கு போகற மாதிரி
  நடந்து போயிட்டு சர்சுக்கு போயிடறார்..
  சந்திரன்: தலைய இப்பவே எனக்கு சுத்துதே?
  பாவலன்: சுத்தும்.. ஏன்னா.. ஹீரோவும் சர்ச்சுக்கு உள்ளே போகாம
  வெளியிலையே ரெண்டு சுத்து சுத்தறார்..
  சந்திரன்: ஏன்?
  பாவலன்: அவரை பின்னாடி ஒருத்தன் follow பண்ணிக் கிட்டு வர்றான்..
  அதான் சுத்தறார்..
  சந்திரன்: அவன் என்ன பண்றான்?
  பாவலன்: பின்னாடியே சுத்தறான்..
  (டக்க்!!)
  சந்திரன்: என்ன சத்தம்?
  பாவலன்: mobile கீழே விழுந்தது!
  சந்திரன்: படத்திலா?
  பாவலன்: என்னோட mobile கீழ விழுந்தது.. படத்துலையும் follow
  பண்றவர் கைல இந்த ஓட்டை mobile-ஐ கொடுத்துடலாம்..
  சந்திரன்: அப்பறம் என்ன ஆச்சு?
  பாவலன்: hero பயந்து போய் ஓடறார்..
  சந்திரன்: பின்னாடி வர்றவர்?
  பாவலன்: இன்னும் வேகமா ஓடறார்..
  சந்திரன்: ஏன்?
  பாவலன்: அது கனடா.. ரெண்டு பேரையும் நாய் துரத்த ஆரம்பிச்சுடுச்சு.
  சந்திரன்: அப்பறம்?
  பாவலன்: ஒரு பழைய கட்டிடம்.. அது பக்கத்தல போய் hero side-ல
  பதுங்கீடராரு!.
  சந்திரன்: பழைய கட்டிடமா???
  பாவலன்: கும்மிருட்டு.. டக்க் .. follow பண்றவர் டார்ச் எடுக்கறார்..
  அவருக்கு ரெண்டு கண்ணு.. ஒரே மூக்கு!
  சந்திரன்: என்னது.. ரெண்டு கண்ணுள்ள மூக்கா? கதை வேண்டாம்!
  பாவலன்: கதை இன்னும் பாகிஸ்தான் எல்லாம் போகுது!
  சந்திரன்: மண்ணாங்கட்டி..எனக்கு கதை வேண்டாம்!
  பாவலன்: அப்போ பணம்?
  சந்திரன்: இந்தக் கதையைக் கேட்டதுக்கு நீ தான் எனக்கு பணம் தரனும்!
  Good night!

  -=== A skit by மிஸ்டர் பாவலன் ==-

 23. kabilan.k

  அருமையான பதிவு,ஒவ்வொரு ரசிகனும் சொல்ல நினைத்தது,அருமையாக வெளிப்படுத்தி உள்ளார் முத்து சிவா அண்ணன்.என்வழியில் இதை போட்டது,மிகவும் சிறப்பு,பல நபர்களை சென்று அடையும்.சத்தியமா அருமையான கட்டுரை….!!!!

 24. Deen_uk

  //ஏ.ஆர்.ரஹ்மான் இத விட கேவலமா மியூசிக் போட்டதே இல்லையாம்.//
  _ஞான சூனியங்கள்..அல்லது இதே மியூசிக் அவங்க தலைவர் படத்துக்கு வந்து அமைந்து இருந்தால்,தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்..!
  அவர்கள் படங்களுக்கு இந்த மியூசிக் அமையாது ,காரணம் இது தலைவரின் பிரம்மாண்ட ஸ்க்ரீன் presence மனதில் வைத்து அமைக்கப் பட்ட இசை..நிச்சயம் ( ஒரிஜினல் ) ஆஸ்கர் நாயகனின் மகுடங்களில் இந்த இசையும் ஒன்று.தமிழனின் இசைடா நு உலகம் முழுதும் பெருமையுடன் சொல்லிகொள்ளகூடிய இசை..! நல்ல ஒரு மியூசிக் சிஸ்டத்தில் இந்த மியுசிக்கை கண்ணை மூடிக்கொண்டு கேட்டு பாருங்க..தலைவரின் பவர் மற்றும் பிரம்மாண்ட காட்சிகள் உங்கள் கற்பனையில் விரியும்.

  /////மூணு வருஷத்துக்கு ஒரு படம் தான் நடிப்போம். ஆனா ‘Indian of the year’ ன்னாலும் அவர் தான். ‘Entertainer of the year’ ன்னாலும் அவர் தான். அதான் ரஜினி!////
  _கெத்து கெத்து!!!! super words !!! நாம இதை தைரியமா பெருமையா சொல்லலாம்!! வேறு யாராலையும் இதை சொல்ல முடியாது!

  ///உலகநாயகர்களோட படங்கள் உள்ளூரக்கூட தாண்ட முடியாத சமயத்தில///
  _பதிவுகள் படிக்கும்போது இந்த மாதிரி கொஞ்சம் காமெடி இருந்தா தான் நமக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்கும்!!

  _அருமையான பதிவு முத்து சிவா சார்…பதிவுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..

 25. J.Venkatesh

  அருமையான பதிவு முத்து சிவா அவர்களே

  பாருங்கள் – கோச்சடையான் வந்த பிறகு நம் குழந்தைகள் அவருடைய ரசிகர்கள் ஆகி விடுவார்கள் .

  ரஜினி என்ற அற்புதமான மனிதரை தலைவராக பெற்றதற்கு நாம் பெருமை கொள்ள வேண்டும்.

 26. Rajagopalan

  Please dont write anything about other actors in this site… this site is only for our kochadayaan…
  Audio rocks…..
  I will give 5 stars to the audio… ARR done a neat job…

 27. raghul

  பாட்ட கேட்டாலே சும்மா அதிருதில்லே …
  இது ரஹ்மான் தலைவர்க்காக அமைத்த கெத்து பாட்டு..

 28. srikanth1974

  அதிரடிக்காரன் னா’ அதிரடிக்காரன்தான் ச்சும்மா பட்டயக் கெளப்பிட்டீங்க
  நண்பர் திரு.முத்துசிவா அவர்களுக்கு எனது நன்றி.
  என்றும் அன்புடன்
  ப.ஸ்ரீகாந்த்.

 29. jegan n

  Mr PA vAlan.as kamal confuses the audience in stage.u his fan proved the same with ur skit.our ilavum puriala…………

 30. Ramesh

  “ரஜினி படங்கள் என்பது ஜேம்ஸ்பாண்ட் படங்கள் மாதிரி ஒரு ஜானர் (genre) ஆ மாறிவிட்டது. ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஹீரோக்கள் மாறி மாறி நடிப்பது போது இப்போது தமிழ்நாட்டில் ரஜினி படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த பொங்கலுக்கு “வீரம்” “ஜில்லா” என்ற இரண்டு ரஜினி படங்கள் வந்திருக்கின்றன. ஒன்றில் அஜித்தும் இன்னொன்றில் விஜய்யும் நடித்திருகின்றனர்”. – இது எப்டி இருக்கு.”

  சூப்பர் super

 31. geetha

  நான் ரஜினியை நம்புறேன். ஆனா ரஜினி மகளை நம்ப தயாராக இல்லை. அவங்க கம்பெனி ஆரம்பிச்சு ஒம்பது வருஷம் ஆச்சு. உருப்படியா ஒன்னும் கிழிக்கல.
  ரஜினி குரல் & ரஹ்மான் இசை மட்டுமே படத்துக்கு யானை பலம். மத்த படி ஒன்னும் இல்லை.
  இந்த trailer-க்கும் இவளோ பில்டப்பா? நிசமா முடியல முத்து சிவா
  நான் உங்களை விட தீவிர ரஜினி ரசிகை.
  அதுக்காக ரஜினி மகள் என்பதற்காக ஜால்ரா அடிக்க கூடாது என்று கேட்டு கொள்கிறேன்.

 32. முத்துசிவா

  @geetha :

  //இந்த trailer-க்கும் இவளோ பில்டப்பா? நிசமா முடியல முத்து சிவா. நான் உங்களை விட தீவிர ரஜினி ரசிகை.// அப்போ இந்த பதிவோட முதல் பாரா உங்களைப் போன்றவர்களுக்காகத் தான் ஸ்பெஷலாக எழுதப்பட்டது. இன்னொரு முறை படித்துக் கொள்ளுங்கள்.

  இந்த ட்ரெயிலருக்கு இவ்வளவு பில்டப்பாவா? கோச்சடையான் டீசர் எனக்கு அந்த அளவு நம்பிக்கையைத் தரவில்லை. ஆனால் ட்ரெயிலர் நான் எதிர்பார்த்தை விட பல மடங்கு நன்றாக இருக்கிறது.

  நீங்க என்ன எதிர்பாத்தீங்கன்னு எனக்கு தெரியாது. ராமநாராயணன் பட டைப் கிராஃபிக்ஸ்கள பாத்துகிட்டு திரிஞ்ச நம்மூர் ஆளுங்க திடீர்னு அவதார விட குவாலிட்டி கொஞ்சம் குறைஞ்சா கூட நல்லா இல்லைன்னு சொல்லிடுவாங்க போலருக்கு.

  //அதுக்காக ரஜினி மகள் என்பதற்காக ஜால்ரா அடிக்க கூடாது என்று கேட்டு கொள்கிறேன்//

  இது ஜால்ராவெல்லாம் இல்லை. என் மனதில் தோன்றியதை எழுதியிருக்கிறேன். உண்மையான தலைவர் ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் அதன் உண்மை புரியும்.

  அப்படியே நீங்கள் இதை ஜால்ரா என எடுத்துக்கொண்டாலும் எனக்கு கவலையில்லை. யாருக்கு ஜால்ரா போடுறோம்? எங்க தலைவரோட மகளுக்குத் தானே? இதுல எங்களுக்கு பெருமையே தவிற எந்த பிரச்சைனையும் இல்லை.

 33. மிஸ்டர் பாவலன்

  /// Mr PAvAlan.as kamal confuses the audience in stage.u his fan proved the same with ur skit.our ilavum puriala……// (ஜெகன்)

  புரியாமல் எழுதும் படி நான் எழுதியுள்ள உங்கள் கருத்து
  எனக்கு புரிகிறது என்றாலும், எண்ணத்தில் வண்ணம் காட்டி
  சிறகுகள் கொண்டு வானில் பறப்பது போல் புதுமைகளைக்
  காட்டினாலும் கண்களில் மழை பொழிவது போல் உங்கள்
  அன்பை இரு கரம் கூப்பி வரவேற்கும் நேரத்தில் அடுத்த
  பதிவில் சில புதுமைகளைக் காட்ட,உளிகளைக் கொண்டு
  புதிய கலைச் சிற்பம் ஒன்று செதுக்க பிரியா விடை பெறுகிறேன்.

  நன்றி, வணக்கம்!

  =\\ மிஸ்டர் பாவலன் //==

 34. micson

  உண்மையான ரசிகர்களின் கருத்துகளின் பிரதிபலிப்பு இந்த கட்டுரை.நாம் எதை நினைக்கிறோமோ அதை மறு நாளே என்வழி கட்டுரையாக தருகிறது .
  உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் .நன்றி

 35. Arun

  ஹாய் , இப்போ கமலோட உத்தம வில்லன் ல அவர் கேரக்டர் பெயர் உச்ச நட்சத்திரம். இந்த படத்தில் கமலுக்கு கள்ள காதலி இருப்பது போல் கதை உள்ளது என கேள்வி பட்டேன். இது உண்மையா வினோ ?

 36. Siva

  Hi Muthu Siva,

  Nicely written words are “Those who become Rajni fans cannot become fans for others”. I have been a fan of Thalaivar from third std.As you said i have also seen friends/relatives who say they are a fan of particular actor and then when the actor’s movie flops they shift to another actor.I myself have teased them saying “See iam a fan of Thalaivar Rajni and cant even think of accepting any other actor upto that level”.

  He is not just an actor,but an inspiration to all who want to achieve something in life without hurting too many people and being humble after achieving so much

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *