BREAKING NEWS
Search

தலைவரின் கோச்சடையானின் மகத்தான வெற்றி சொல்வது என்ன?

தலைவரின் கோச்சடையானின் மகத்தான வெற்றி சொல்வது என்ன?

1601399_713194945399301_1900824753_n

தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் பெற்றிருப்பது எப்படிப்பட்ட வெற்றி?

இந்தப்படம் மாதிரி வெளியாகும் முன்பே வேறு எந்தப் படத்துக்காவது இப்படியொரு எதிர்மறை விமர்சனங்கள் வந்திருக்குமா என்பது தெரியவில்லை.. ஆனால் இப்போது? எந்திரனுக்குபின் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றி இதுதான். உண்மையை எங்கள் ஊரிலிருந்தே ஆரம்பிக்கிறேன். கோவையில் இதுவரை அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல்… மல்டிப்ளெக்ஸ்களில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வாரத்துக்கு பிறகு அர்ச்சனா (பாபா காம்ப்ளெக்ஸ்) போன்ற பெரிய தியேட்டர்களில் கோச்சடையான் திரையிடப்படுகிறது.

திருப்பூரில் இரண்டாவது வாரம் மூன்று திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.

இது, இதுவரை எந்த ரஜினி படத்துக்கும் நடந்திராத ஒன்று… பொம்மை படம் என்று புறக்கணித்தவர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.\ விழித்துக் கொண்டோர் ஒரு வாரம் போனாலும் பராவயில்லை என்று திரையிடுகிறார்கள்! படத்தைத் திரையிடவே தயங்கிய கொங்கு பெல்ட்டில் தலைவர் பெற்ற மகத்தான வெற்றி இது!

என்ன காரணம் ?

ஒரிஜினலோ, அனிமேஷனோ… ரஜினி எப்படி வந்தாலும் அவரை பார்க்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். மோசமான அனிமேசன் என்று சிலரால் விமர்சிக்கப்படும் இப்படத்தில் ரஜினியின் ஒவ்வொரு பஞ்ச் வசனங்களுக்கும் தியேட்டர் அதிருகிறது. தளபதிக்கு பிறகு பெரும்பாலான மக்களை கண்கலங்க வைத்த ரஜினி படம் இதுதான் என்று கிட்டத்தட்ட படம் பார்த்த அனைவரும் சொல்கிறார்கள். உயிரே இல்லாத அனிமேசன் என்று வர்ணித்தவர்களும் கண்கலங்கியதாக சொன்னதுதான் இப்படம் செய்த மிகப் பெரும் சாதனை.

எந்திரனில் சிட்டி Dismantle செய்யும்போது வராத உணர்வு, கோச்சடையான் மரணிக்கும்போது வருகிறது என்பது ரவிக்குமாரின் திரைக்கதைக்கும் அதனை காட்சிப்படுத்திய சௌந்தர்யாவுக்கும் கிடைத்த மிகப் பெரும் வெற்றி. படத்துக்கு ரஹ்மானின் பிண்ணனி இசையும், ரசூல் பூக்குட்டியின் ஒலிக் கலவையும் உயிர் கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.

எல்லாவற்றுக்குக்கும் மேல் அந்த ரஜினிகாந்தமான குரல்… அதற்க்கு ஈடு இணையே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு கூட இப்படத்தை ரசிக்கமுடியும் என்றால் அது இந்த குரலுக்காக மட்டுமே இருக்கமுடியும்!

இதன் தாக்கம் எப்படியிருக்கும்?

ரஜினியின் மக்களுக்கு எவராலும் செய்யமுடியாத ஒன்றை செய்திருக்கிறார் நம் சௌந்தர்யா. அது, தமிழ் சினிமாவில் ரஜினியை சாகாவரம் பெற்ற ஒருவராக்கிவிட்டர். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ரஜினி இனிமேல் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களிலும் நடிக்கமுடியும். உலகையே வெல்லும் மாவீரனாக… சகல சக்திகளும் மிக்க ஒரு சூப்பர் மேனாக ரஜினியைக் காட்ட இந்த தொழில்நுட்பம் உதவும். அதாவது இனிமேல் ரஜினியின் படங்களுக்கு முடிவே கிடையாது. இந்திய சினிமாவின் நிரந்திர சூப்பர்ஸ்டார் ரஜினிதான். ஏனென்றால் ரஜினிகாந்த் என்னும் பிராண்ட் இந்த தொழில்நுட்பம் மூலம் Trial and Error ஆக பரிசோதிக்கப்பட்டு Tried and Tested ஆக மாறிவிட்டது!

10388343_244566842399129_933690724_n

இதன்மூலம் எந்த ஒரு பிரம்மாண்ட கதைகளையும் எடுக்க முடியும், அதில் ‘ரஜினிகாந்த்’ என்ற ஒருவர் இருந்தால். ஏனென்றால் இப்படம் தொழில் நுட்பத்துக்காக பாரட்டப்பட்டிருந்தால் அது அந்த தொழில் நுட்பத்திற்காக கிடைத்த வெற்றியாக இருந்திருக்கும். ஆனால் தொழில்நுட்பம் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் ரஜினியின் தாக்கம் பாராட்டப்பட்டிருப்பதால் இனிமேல் இந்த சலனப் பதிவாக்க தொழில் நுட்பம் இந்தியாவில் வெற்றிபெற நிச்சயம் ரஜினிகாந்த் என்னும் பிராண்ட் அவசியம் தேவை. அதாவது மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்துக்கான சந்தை மதிப்பு என்பது இனிமேல் ரஜினிகாந்த் என்னும் பிராணட்-ஐச் சார்ந்ததாகத்தான் இருக்கும்.

மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி என்ற சந்தை சௌந்தர்யாவால் இந்தியாவில் திறந்து விடப்பட்டிருக்கிறது. இதை இனிமேல் பலரும் பயன்படுத்தக்கூடும். ஆனால் அதன் உச்சம் என்னவென்பதை ரஜினிகாந்த் என்னும் பிராண்ட்-தான் தீர்மானிக்கும்.

125 கோடியில் பரிசோதிக்கப்பட்டு வெற்றி பெற்ற இந்த தொழில்நுட்பம் அடுத்து சுமார் 250 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்டு மீண்டும் ரஜினி மூலம் சந்தைக்கு வரும். அதுவும் வெற்றி எனும் பட்சத்தில் 1000 கோடியில் ஒரு ரஜினியின் அவதார் இந்தியாவில் சாத்தியமாகும் காலம் தொலைவில் இல்லை.

Not but the least… ஒரு ரஜினி ரசிகன் ரஜினியை வைத்து படமெடுத்தால் எப்படி எடுப்பான்.. அதைத்தான் சௌந்தர்யா செய்திருக்கிறார்… அவர் அளவுக்கு இப்படி ரஜினியை ரசித்து இன்னொருவர் படம் எடுக்க முடியுமா என்பதை காலம்தான் சொல்லவேண்டும்!

-மனோகரன்
என்வழி ஸ்பெஷல்




5 thoughts on “தலைவரின் கோச்சடையானின் மகத்தான வெற்றி சொல்வது என்ன?

  1. Aryan

    சூப்பர் படம்,
    நெனைச்சு கூட பார்க்க இல்ல, ரஜினி எப்படி நடிச்சாலும் ஹிட்டு தான். ஸ்க்ரீன் ப்ளே சூப்பர், ஆனா இதே படத்தை இதே லோகேஷன்ஸ் செட் வச்சி எடுக்க முடிஞ்சா.., அவதார் என்ன அவதார், உலக சினிமாவுக்கே கோச்சடயான் புது அவதாரமாயிருக்கும். கோச்சடயான் ஜுரம் இறங்க இன்னும் பல நாட்கள் புடிக்கும்,

  2. saranya

    மற்ற மாவட்டங்களில் எப்படி. மற்ற மாநிலங்களில் எப்படி போகிறது. படம் ஓடவில்லை என்று சொல்கிறார்களே. அதற்கு உங்கள் கருத்து என்ன. மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *