BREAKING NEWS
Search

நோயைப் பரப்பும் டாக்டர்!

நோயைப் பரப்பும் டாக்டர்!

vikatan-1ருத்துவர்கள் நோயைக் குணப்படுத்துவார்கள். ஆனால், டாக்டர் ராமதாஸ் சாதி நோயைப் பரப்புபவராக மாறிவிட்டார். எங்கே அவரது அரசியல் பயணம் ஆரம்பித்ததோ, மறுபடியும் அங்கேயே திரும்பிவிட்டார்.

மிகவும் பின்தங்கிய வகுப்பான வன்னியர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் அவர் அரசியலுக்குள் நுழையக் காரணமாக அமைந்த கோரிக்கை. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக் கீட்டில் வன்னியர்களை மட்டும் பிரித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோராக அடையாளப்படுத்தி இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர். ஆட்சியில் அவர் கோரிக்கை வைத்தார்.

ஒரு மாத காலம் வட தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அடுத்து அமைந்த தி.மு.க. ஆட்சியில் இந்தக் கோரிக்கையை கருணாநிதி நிறைவேற்றிக் கொடுத்தார். அதற்குப் பிறகு அரசியல் முக்கியத்துவம் உள்ள நபராகத் தன்னைக் காட்டிக்கொள்ள ஆரம்பித்தார் ராமதாஸ். அதுவரை வன்னியர் தலைவராக இருந்த அவர், தமிழ்த் தேசியப் பிரச்னைகளைக் கையில் எடுத்து தமிழ்த் தேசியத் தலைவராக வளர்ந்தார். தமிழ்த் தேசத் தன்னுரிமை மாநாட்டை நடத்தினார்.

ராமதாஸ் தலைமையில் தனித் தமிழ்நாடு அடையப் போவதாகச் சிலர் பிரசாரமும் செய்தார்கள். திராவிட, தேசிய, மதவாத இயக்கங்களுக்கு மாற்றாக ‘பாட்டாளிகளின் தலைவர்’ என்று அடையாளம் காட்டப்பட்டார். இந்தப் புகழ் அனைத்தையும் அரசியல் முதலீடாக மாற்ற ஆரம்பித்த ராமதாஸ், 1998 தேர்தலில் அ.தி.மு.க., பாரதிய ஜனதா கூட்டணியில் சேர்ந்தார்.

அடுத்து காங்கிரஸ் கூட்டணிக்கு மாறினார். ஜெயலலிதா வுடன் கைகோத்தார். கருணாநிதியுடன் கைதூக்கி நின்றார். கடந்த 15 ஆண்டுகளாக நடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் மாறிமாறிக் கூட்டணி வைத்துக் கொண்டதன் மூலமாக அனைத்து அணிகளின் நம்பிக்கையும் இழந்தார். இன்று அவரை அழைக்க கருணாநிதியும் தயாராக இல்லை. ஜெயலலிதாவும் தயாராக இல்லை. இந்த நிலையில் தன்னுடைய அரசியல் பாணியை மீண்டும் சாதியின் பக்கம் திருப்பியிருக்கிறார்.

”திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை” என்று சில மாதங்களாகச் சொல்லி வந்தவர், ”வன்னியர் இந்த நாட்டை ஆள வேண்டும்” என்று சொல்ல ஆரம்பித் தார். ”தமிழகத்தை ஆள்வதற்கு முன்னால் புதுச்சேரியைக் கைப்பற்று வோம்” என்றும் சில ஆண்டுகளுக்குச் சொன்னவர்தான் ராமதாஸ். ஆனால், அதை அவரே மறந்துவிட்டார். இப்படி அவர் மறந்துபோன வாக்குறுதிகள் பல இருக்கின்றன.

அரசியலுக்கு வந்ததும் அவர் இந்த நாட்டு மக்களுக்குச் செய்துகொடுத்த சத்தியங்களில் முக்கியமானது, ‘நானோ எனது குடும்பத்தினரோ அரசியலில் எந்தப் பதவிக்கும் வர மாட்டோம்’ என்பதுதான். மகனை, ஐந்து ஆண்டுகள் மத்திய அமைச்சராக ஆக்கிவிட்டார். அடுத்து அமையப்போகும் ஆட்சியில் மத்திய அமைச்சராக ஆக்கத் துடிக்கிறார். அதற்காகவே சாதி அஸ்திரத்தைக் கையில் எடுத்திருக்கிறார் ராமதாஸ்.

சுய சாதிப் பெருமை பேசுவதுகூடப் பரவாயில்லை. மற்ற சாதியை இழித்துப் பேசுவதன் மூலமாக ராமதாஸுக்கு எம்.பி.பதவி கிடைக் குமோ இல்லையோ… கொஞ்சம் இருந்த நல்ல பேரும் ரிப்பேர்!

-நன்றி: முகுந்த், விகடன்
3 thoughts on “நோயைப் பரப்பும் டாக்டர்!

 1. arasan.

  இவர்கள் கொட்டத்தை அடக்கணும்னா ?
  கட்டாயம் மீண்டும் ஒரு எமர்ஜென்சி வரவேண்டும் .நாடும்,நாட்டுமக்களும்,அமைதியாக வாழ நோய் பரவாமல் தடுக்க நோயைப் பரப்பும் இந்த நச்சுக்கிருமிகள் முழுமையாக ஒழிக்கப்படவேண்டும்.

  நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
  வாய்நாடி வாய்ப்பச் செயல் .குறள்-948
  இது உடல்நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் பொருந்தும்.
  இப்படிக்கு
  சமூக நலன் விரும்பும் ஓர் குடிமகன்.

 2. குமரன்

  1980 களின் ஆரம்ப வருடங்களில், திண்டிவனத்தில் எட்டுக்கு எட்டு அடி அறையில் அமர்ந்து இரண்டு ரூபாய்க்கு (மாத்திரை, ஊசி உள்பட) வைத்தியம் பார்த்தபோது ராமதாஸ் ஏழை மக்களுக்கு சேவை செய்தார். அதில் வந்த பெயரும் புகழும் அலாதி. நானே ஒரு முறை நண்பருடன் அங்கே சென்றதுண்டு.

  பின்னர் நூன்று நான்கு வருடங்களுக்குப் பின்னால் வன்னியர் சங்கத்தில் முன்னணியில் இருந்து தனது சாதிக்காக என்றாலும் கூட பிற்பட்ட மக்கள் வாழ்வுக்கு எனப் போராடி இட ஒதுக்கீடு பெற்ற போது கூட சாதி அளவிலாகவாவது பொதுநலன் பேணினார். அந்தக் காலகட்டங்களில் வட மாவட்டங்களில் படி தொட்டிகளில் எல்லாம் சென்று வன்னியர் மத்தியில் ஒரு எழுச்சியை உருவாக்கும்போது ஈ.வே.ரா பெரியார் போலவே கடும் பயணமும் உழைப்பும் அவரிடம் இருந்தது.

  ஆனால் அரசியலில் முன்னணிக்கு வந்த பின்னர் கருணாநிதி பேச்சைக் கேட்டு மகனுக்கு மத்திய மந்திரி பதவி வாங்கிய நாளில் இருந்து, கருணாநிதி வழியில் நடந்து குடும்பத்துக்கு பதவி, ஊழல், பணம், சொத்து என்று அவர் போக்கே மாறிவிட்டது.

  இப்போதோ சாதிப் பாகுபாட்டை வைத்து அரசியல் செய்து நாடு எக்கேடு கேட்டால் என்ன, சமுதாயம் எக்கேடு கேட்டால் என்ன, சாதாரண மக்கள் கிராமங்களில் அவர்களுக்குள்ளே ஒற்றுமை இழந்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு செத்தால் என்ன நமக்கு வேண்டியது அரசியல் அதிகாரம் என்ற போக்கில் நடக்கிறார்.

  இது கூட கருணாநிதி வழிதான். ஈழத்தில் எத்தனை லட்சம் செத்தால் என்ன, முடமானால் என்ன, வீடிழந்து வாழ்விழந்து அடிமகளானால் என்ன, நமக்கு நமது குடும்பத்தாருக்கு மத்திய மந்திரிப் பதவியும், ஊழலில் பல்லாயிரம் கோடிப் பணமும் வந்தால் போதும் என்று நடந்து கொண்ட கருணாநிதி வழியில் ராமதாஸ் அவர் லெவலுக்கு நடந்து கொள்கிறார்.

  இந்த லட்சணத்தில் அவர் மற்றவர்களைக் குறை கூறுகிறார்.

  அடிக்கடி மாறக் கூடியவர் ராமதாஸ் என்பதால் இதிலும் மாறுவார் என நம்பலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *