BREAKING NEWS
Search

இப்படியெல்லாம் கூடவா செய்வார்கள்… சினிமாவில் நேர்மைக்கு இடமே இல்லையா?

இப்படியெல்லாம் கூடவா செய்வார்கள்… சினிமாவில் நேர்மைக்கு இடமே இல்லையா?

Sandiyar-Movie-New-Stills-9

ண்டியர் என்றொரு படம் சமீபத்தில் வெளியானது எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்குமோ…

அந்தப் படத்தோடு ஜிகிர்தண்டா மற்றும் சரபம் ஆகிய இரு படங்கள் வெளியாகின.

இவற்றில் மேற்சொன்ன இரு படங்களும், சண்டியரை விட அதிகம் விளம்பரப்படுத்தப்பட்ட படங்கள்.

மூன்றும் கடந்த வாரம் வெளியாகின. அதிக பாராட்டுகள் கிடைத்ததென்னமோ சண்டியருக்குதான். நடித்தவர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள் வேறு. தியேட்டர்களும்கூட சுமாராகத்தான் கிடைத்தன. ஆனால் படம் மிகத் தரமாகவும், தஞ்சை மண்ணின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுவதாகவும் இருந்தது.

நல்ல விமர்சனங்கள், வாய்மொழி விளம்பரம் போன்றவற்றால் அந்தப் படம் இந்த வாரம் சூடுபிடித்து ஓரளவு வசூலைத் தரும் என எதிர்ப்பார்த்தனர். அதற்கேற்ற மாதிரி இந்த வாரம் சொல்லும் அளவுக்கு புதுப்படங்கள் வெளியாகவில்லை… ஆனால் நடந்ததே வேறு!

ஜிகிர்தண்டா, சரபம் படங்களின் தயாரிப்பாளர்கள் கூட்டு சேர்ந்து, சண்டியர் படத்தை திரையரங்குகளிலிருந்து தூக்க வைத்துவிட்டு, அவற்றில் தங்களின் படங்களைத் திரையிட கட்டாயப்படுத்தியதாக சண்டியர் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

“அந்தப் படத்துக்கு பப்ளிசிட்டியெல்லாம் இல்லை. மக்கள் பார்க்க வரமாட்டார்கள். எனவே எங்கள் படங்களுக்கு தியேட்டர்களைத் தாருங்கள். மேலும் எங்கள் கைவசம் அடுத்தடுத்து படங்கள் உள்ளன..,” என்று கூறியே, சண்டியர் படத்தைத் தூக்க வைத்துவிட்டார்களாம்.

இந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில், எந்தெந்த அரங்குகளில் சண்டியர் ஓடிக் கொண்டிருந்ததோ, அந்த அரங்குகளில் குறிப்பிட்ட இரு தயாரிப்பாளர்களின் படங்களே திரையிடப்பட்டுள்ளன.

சின்னப் படங்களுக்கு வழியில்லையே என்று புலம்பிக்கொண்டே, அவற்றுக்கு குழி தோண்டுவதுதான் கோடம்பாக்க ஸ்டைல். இந்த முறையற்ற வணிகமே தமிழ் சினிமாவின் பெரும் சாபக்கேடு!

-என்வழி




2 thoughts on “இப்படியெல்லாம் கூடவா செய்வார்கள்… சினிமாவில் நேர்மைக்கு இடமே இல்லையா?

  1. Rajagopalan

    Kamal Sandiyarnu Peru vacha bodhu edhirtha ulagam? epodhu en ondrume solla villai…

    Rajinikum , kamalukum dhan edhirpu pola…

    ______________

    தலைவரும் கமலும் சிகரங்கள்.. எந்த எதிர்ப்பும் அவர்களை ஒன்றும் செய்யாது!

    -என்வழி

  2. Deen_uk

    ///தலைவரும் கமலும் சிகரங்கள்.. எந்த எதிர்ப்பும் அவர்களை ஒன்றும் செய்யாது!

    -என்வழி///_
    நச்ச் வார்த்தைகள் வினோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *