BREAKING NEWS
Search

உண்மை உடனுக்குடன் வெல்லும்!

உண்மை உடனுக்குடன் வெல்லும்!

Lingaa-Movie-Superhit-Poster-800x562

ரு படத்துக்கு எதிராக என்னவெல்லாம் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்? பொதுவாக படம் ஓட வேண்டும், சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பிரச்சாரம் செய்வதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இத்தனை எதிர்மறை விமர்சனங்களையும் தாண்டி படம் வசூல் சாதனை செய்கிறதே.. இதை எப்படி நிறுத்துவது என்று யோசித்து லிங்காவுக்கு எதிராக பொய்யை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.

படம் வெளியாகி முழுசாக ஏழு நாட்கள் கூட ஆகவில்லை. தமிழகத்தில் வெளியிடப்பட்ட அரங்குகளில் 95 சதவீத அரங்குகளில் நல்ல கூட்டத்துடன் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் தமிழகத்தின் சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, காரைக்குடி, தேனி, கம்பம் என நான் பயணித்த பல ஊர்களிலும் வார நாட்களில் இரவுக் காட்சி கூட நல்ல கூட்டத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

lingaa2

ஆனால் படத்துக்குக் கூட்டமில்லை என்று கிளம்பிவிட்டது ஒரு ப்ராட் கும்பல். இந்தப் படத்தால் எனக்கு இத்தனை கோடி நஷ்டம் என்று பேட்டி கொடுக்க வந்த சில ஆசாமிகளிடம் நாம் கேட்ட கேள்விகள் இவை:

* உண்மையிலேயே நீங்கள் விநியோகஸ்தரா? அதற்கான ஆதாரம்?

* லிங்காவை வாங்கியதற்கான ஆதாரம்?

* கூட்டமே இல்லாத படம் எப்படி இரண்டாவது வாரமாக திருச்சியில் 11 அரங்குகளில் ஓடுகிறது? சேலத்தில் 16 அரங்குகளில் ஓடுகிறது? கோவை பகுதியில் 100 அரங்குகளில் வெளியிடப்பட்டு, இரண்டாவது வாரத்தில் இன்னும் 90 அரங்குகளில் ஓடுவது எப்படி?

* வெளியான முதல் வாரத்திலேயே லாப நஷ்டக் கணக்கு தெரிந்துவிடுமா?

* இந்தப் புகாரை விநியோகஸ்தர்கள் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் தெரிவிக்காமல், ஒரு முட்டுச் சந்தில் நின்றபடி சொல்வது ஏன்?

– இந்தக் கேள்வி எதற்குமே அந்த ஆசாமிகளால் பதில் சொல்ல முடியவில்லை. ஜகா வாங்கினார்கள். அவர்களின் போன் நம்பர் எதுவும் இப்போது வேலை செய்யவில்லை!

kovai

ஒரு படம் ஓடி முடியும் வரை கூட காத்திருக்காமல், படத்துக்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்துவது, இந்த தமிழ் சினிமா தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக் கொள்வதற்கு சமம். திரைத்துறையினருக்கு இது புரியாதா? ஒரு ரஜினி படம் வெளியாகும்போதுதான் தியேட்டர்கள் புத்துயிர் பெறுகின்றன. அதை அனுபவிக்க விடாமல், கழுத்தை நெறிக்கப் பார்க்கும் மோசடிப் பேர்வழிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?

trichy

திங்களன்று மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து படத்துக்கு மீண்டும் நல்ல கூட்டம் வருமென்பது நன்கு தெரிந்து, திட்டமிட்டு இந்த சதியை அரங்கேற்றுகிறார்கள் சில அரைவேக்காடுகள் என தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக ஒரு நடிகரின் ரசிகர்கள் இவர்கள் என்று கூறப்படுகிறது. ஆதாரம் கிடைத்தால் வெளுத்தெடுப்போம். நமக்கு கிடைத்த தகவல்படி, புகார் சொன்ன யாரும் விநியோகஸ்தர்கள் இல்லை. தியேட்டரில் வேலை பார்த்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அது பொய் புகார் என்பது தெரிந்ததும், யுட்யூபிலிருந்து வீடியோவும் நீக்கப்பட்டுவிட்டது.

உண்மை உடனுக்குடன் வெல்லும்.

-வினோ

(இன்று பேஸ்புக்கில் நான் எழுதியதன் விரிவாக்கம் இது)
31 thoughts on “உண்மை உடனுக்குடன் வெல்லும்!

 1. Rajesh

  But still a formal announcement from the production unit / distributor will clear all the smoke. It’s now social media world so for sure there should be official update. Once an update comes no one will talk. We ourselves giving chance to everyone and they are enjoying.

 2. manithan

  இப்படிப்பட்ட போறன்மை பிடித்தவர்களை ரஜினி ரசிகர்கள் ,எங்கு கண்டாலும் பொலிசில் பிடித்து கொடுக்க வேண்டும் ,இவர்களுக்கு பின்னல் யார் இருக்கிறார்கள் என்று கண்டு பிடிக்க வேண்டும் . இதை சாதாரணமாக விட கூடாது ,

 3. Govardhanan

  தேங்க்ஸ் போர் கிளியரிங் இன்போ…வாஸ் ரியலி உப்செட் ஒன சீஇங்க் தட் வீடியோ…

 4. குமரன்

  ///ஒரு ரஜினி படம் வெளியாகும்போதுதான் தியேட்டர்கள் புத்துயிர் பெறுகின்றன. அதை அனுபவிக்க விடாமல், கழுத்தை நெறிக்கப் பார்க்கும் மோசடிப் பேர்வழிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?///
  இவர்கள் செய்வது பொன் முட்டையிடும் வாதத்தைக் கழுத்தை அறுத்துக் கொள்வது போன்றது.
  ரஜினி படம் என்பது திரைத் துறைக்குப பொன்முட்டை இடும் வாத்து.

  சீமான் போன்ற தமிழை, தமிழ் உணர்வை வைத்துப் பிழைப்பு நடத்தும் கும்பல், அரசியல்வாதிகள் சிலர், தலைவரைக் கன்னடர்/மராத்தியர் என்று பொய் சொல்லித் திரியும் பதர்கள், அவர் நெற்றி நிறையத் திருநீறு பூசி நடிப்பதைப் பிடிக்காத ஜென்மங்கள், அவர் படத்தில் சிவபூஜை செய்வது பிடிக்காதவர்கள் இப்படிப் பட்ட தவறான பிரகாரத்தைச் செய்கிறார்கள். பாபா படத்தைப் பற்றியும் இப்படிப் பேசியவர்கள் இந்தக் காரணத்தால்தான் இப்படிப் பேசினார்கள். இவர்கள் குறி/நோக்கம் வேறு. அவர் அரசியலுக்கு வந்து விடுவாரோ, வென்று விடுவாரே என்ற பயம்தான் காரணம்.

  ரவிக்குமார் சொன்னது போல, அடுத்த வருடம் டி.வியில் லிங்கா வரும்போது நன்றாக இருக்கிறது என்று பார்த்து மகிழ்வார்கள், இதே கும்பல். இப்போதும் கூட பாபா படத்தை டி.வியில் போட்டால் எல்லாரும் விடாமல் பார்க்கிறார்கள். ரஜினி படம் டி.வியில் போட்டால் எல்லா ஊரிலும் தெருவில் வாகனங்கள் குறைவாகத்தானே இருக்கின்றன? அதை இவர்களால் மாற்ற முடியுமா? இவர்கள் இப்போது பேசுவது இயலாமையின் வெளிப்பாடு.

  இங்கே பிரிட்டனில் நான் தற்போது இருக்கும் இடத்திலிருந்து இரண்டரை மணி நேரப் பயணத்தில் கிளாஸ்கோவில் படத்தைப் பார்த்தேன். எல்லாரும் ரசித்துதான் பார்த்தார்கள். என்ன படம் கொஞ்சம் நீளம், பலூனுக்குத் தாவும் காட்சி ஒப்பவில்லை என்றார்கள். ஆனால் சிலர் புலம்புவதுபோல ஒன்றும் இல்லை. இது நல்ல பொழுதுபோக்குப் படம். நல்ல படமாக்கம், பிரம்மாண்டம், நல்ல நடிப்பு. தொய்வில்லாமல் படம் நகர்கிறது. நல்ல நகைச் சுவை இருக்கிறது. வெட்டிப் பயல்களின் பொறாமைப் பேச்சுக்கள் உழைப்பின் வெற்றியைத் தடுக்க முடியாது.

 5. குமரன்

  சந்திரமுகி, சிவாஜி, இந்திரன் இவற்றுக்கெல்லாம் இப்படிப் புலம்பாதவர்கள், பாபாவுக்கும், லிங்காவுக்கும் மட்டும் புலம்புவதன் காரணம் யோசித்தால் புரியும். தமிழ் நாட்டில் ஒரு கும்பல் இதையே நோக்கமாக அலைகிறது.

 6. sk

  i still cant understand why actor vijay’s fans are talking so bad about the movie. Its kiddish for them to compare vijay with rajini and trying to boast that kathi did more collection & so on. He is a small fry compared to Thalaivar. i feel irritated and sometimes sad for them.
  having thalaivar’s movie as a benchmark is ok but insulting isnt going to do any good for them. why have so much grudge on thalaivar who is not a competitior for vijay ? if they think so, them i feel sorry for them.
  Another thing I want to highlight is , vijay isnt a full time commercial hero itself. Can he do thalaivar’s moondru mugam or netrikan role ? thalaivar did those when he was probably 30 years of age. Finally Twitter & facebook can be mediums to exchange jokes but that isnt the end of the world. Those fans should better grow up rather than spewing venom on Rajni sir !!!!

 7. saro

  இந்த மானம் கெட்ட பொழப்பு நடத்த பேசாம ஒரு முழ கயித்தில் தொங்கலாம் சீ இது ஒரு பொழப்பு கருமம் தலைவர் பாட்டுக்கு சும்மா அமைதியாக இருக்காரு அவரை உசுப்பி உட்டு வேடிக்கை பார்க்க நினைகின்றர்கள் போல . ஒரு பேட்டியில் சீமான் நடிகன் தலைவரை பார்த்து தமிழ்நாட்டில் ரஜினி வழ தகுதி உண்டு ஆனால் நாட்டை ஆழ தகுதி இல்லை என்று கூறுகிறான்.இந்த பொழப்பு தேவையா ஏன் உனக்கு படம் ஏதும் இல்லையா உனக்கு வீட்ல விளையாட ஆள் இல்லையா சொல்லுயா நீ அதான் உன்னோட தங்க கம்பி 4 வருடமாக படம் வாய்ப்பு தரலையா அந்த கடுப்புல தன் இப்படி வம்பு இழுகுரிய ஒன்னும் புரியலை சொல்லுப்பா

 8. arulnithyaj

  நன்றி வினோ..மிக சிறந்த பொழுது போக்கு படம் நல்ல சிந்தனைகளுடன் ..நன்றி KSR சார் அண்ட் தலைவர்..

 9. venkat

  ajinikanth’s “Lingaa” has concluded the first week with superb collection at the Andhra Pradesh and Nizam (AP/N) box office and has become the highest grosser dubbed movie, beating the previous record of Rajini’s “Robo”.

  Rajinikanth in LingaaFacebook/ Linga The Movie
  “Lingaa” released in large number of screens across both the states on 12 December. The movie opened to an earth-shattering response at the ticket counters with its occupancy ranging between 90% and 100% in both single screens and multiplexes on Friday. The film did record-breaking collection at the AP/N box office on the first day.

  The business of “Lingaa” dropped around 20% on Saturday, but the movie witnessed big jump on Sunday. The Rajinikanth, Sonakshi Sinha and Anushka Shetty starrer collected approximately ₹14 crore at the AP/N box office in the first weekend and smashed the records of all the dubbed versions of superstars such as Kamal Hassan, Vijay, Ajith and Surya.

  “Lingaa” witnessed 50% dip in its collection on Monday and maintained rock-steady on the following days. The movie has raked in ₹6.5 crore at the AP/N box office on the weekdays. The film has collected approximately ₹20.50 from its Telugu version in these two states in the first week of its release.

  Rajinikanth’s “Robo”, which is the Telugu version of his Tamil film “Endhiran”, had collected ₹15+ crore at the AP box office its opening week and it was the highest grosser dubbed movie in the states. Several superstars from Kollywood and Bollywood had made attempt to break it, but in vein. Now, Rajini himself has erased this record and set a new benchmark with “Lingaa”.

  The makers of “Lingaa” have sold the theatrical rights of its Telugu version for a whopping price of ₹25 crore. The movie has been successful in recovering 80% of its investments in the first week. The distributors in these are all happy and hoping that the film will return their investments and also earn them decent amount of profit in the second week.

 10. Devaraj

  தலைவரை அசைக்க யாராலும் முடியாது. பொய் பிரச்சாரம் செய்றவங்க போக போக புரிந்து கொள்வார்கள் லைக் “உண்மை ஒரு நாள் வெல்லும்”

 11. baba

  தலைவர் பிறந்த நாள் என்ன தேசிய விடுமுறையா என்று கேட்ட அந்த திருட்டு நாயை செருப்பால் அடிக்க வேண்டும்…

 12. anbudan ravi

  அந்த மோசடி நடிகரின் (அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அலையும்) நாசகார கும்பலின் வேலைதான் இது. யூடுபிலும் நேற்று பார்த்தேன் ‘ரெட்பிக்ஸ்’ என்னும் தொலைகாட்சிக்கி பேட்டி கொடுத்தார்கள். அவர்களை காவல் நிலையத்தில் இன்னும் வேந்தர் மூவீஸ் புகார் கொடுக்காமல் இருப்பது ஆச்சரியமே.

  எந்த ஒரு தவறான விமர்சனகளும் தலைவர் படத்தை ஒன்றும் செய்ய இயலாது. நீண்ட காட்சிகளை நீக்கிய பிறகு படம் மிகவும் அருமை…..பாடலை இப்பொழுது பார்க்க மிகவும் அருமையாக உள்ளது. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. படம் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டது.

  அன்புடன் ரவி.

 13. Thalaivar Fan

  தலைவரை நேரடியாக தோற்க அடிக்க முடியாத காரணத்தினால், இந்த மாதிரி கீழ்த்தரமான வேலைகளில் இறங்கி உள்ளனர் அவர்கள். இந்த செய்தி கண்டிப்பாக மற்ற வலைதளங்களில் வர வேண்டும். உண்மையை கண்டுபிடித்து அந்த கயவர்களின் உண்மையான முகத்தை வெளி கொணர வேண்டும். தாங்கள் கண்டிப்பாக இதனை செய்ய வேண்டும்.

  இந்த விஷயம் அந்த நடிகருக்கு தெரிந்தே செய்ய படுகிறதென்றால் அதுவும் கண்டிப்பாக அனவைருக்கும் தெரிந்தே ஆக வேண்டும். அனைத்து வலைதளிங்களிலும் அந்த 3 டிச்ற்றிபுடோர்ஸ் உடைய பேட்டி பற்றி வந்துள்ளது.

 14. Tamilan

  நான் அந்த நடிகரை பத்தி think பண்ணிட்டுதான் படிச்சேன் .

  அவனை கண்டிப்பா வறுத்து எடுக்கணும் . தலைவர் கொஞ்சம் gap விட்டு வந்ததாலே வால ரொம்ப ஆட்டராணுக ….

  நிச்சயமா அவனுக வால வெட்டனும் ! அப்பத்தான் thalaivar power என்னன்னு தெரியும் அந்த இப்போ மொளச்ச காளானுக்கு …

 15. கிரி

  வினோ முந்தின நாள் இரவு நாங்கள் அடைந்த மன உளைச்சல் சொல்லி மாளாது.. ஒரு படம் ஒரு வாரம் முடியும் முன்பே இது போல கிளம்புவர்களை நினைத்து கடும் ஆத்திரம் ஏற்பட்டது… ரவிக்குமார் அவர்கள் கேட்டது போல ஒரு வாரத்திலேயே 8 கோடி வரணும் என்று எதிர்பார்க்கறாங்களா..!!!

  வரும் நாட்களில் ஊடகங்கள், சமூகத்தளங்கள் புரிந்து கொள்ளாமல் புரிந்தும் கண்டு கொள்ளாமல் என்னென்ன பேசுவார்கள் என்று நினைத்து உண்மையிலேயே ரொம்ப வருத்தப்பட்டேன்..

  காலையிலேயே உங்கள் செய்தி தட்ஸ்தமிழ் ல் பார்த்த பிறகு நான் அடைந்த திருப்தி சந்தோசம் அளவிட முடியாது.. பின்னாளில் இது தெரியவரும் என்றாலும் இது படத்தை பெரியளவில் பாதிக்கும்.. ஆனால் கொஞ்சமும் எதிர்பார்க்காத அளவிற்கு உடனே நீங்கள் செயல்பட்டதற்கு ரஜினி ரசிகர்கள் மிகவும் கடமைப் பட்டு இருக்கிறார்கள்.

  இதற்கு உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நீங்கள் செய்து இருக்கிற பணி பத்திரிகையாளராக வழக்கமான ஒன்று என்றாலும் ரசிகராக எங்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சியை கொடுத்து விட்டீர்கள். நான் சரியாகும் உண்மை வெளியே வரும் என்று நினைத்தாலும் இப்படி அடுத்த நாளே வரும் என்று சத்தியமாக நினைக்கவில்லை.

  ரொம்ப நன்றி வினோ.

  _________________

  இது நமது கடமை கிரி. லிங்கா நமக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் மிகப் பிடித்த படம் என்பதை தியேட்டர் தியேட்டராகப் போய்ப் பார்த்து மகிழ்ந்தவன். இந்தப் படத்துக்கு எதிரான எந்த சதியாக இருந்தாலும் முறியடித்தே தீர வேண்டும். தவறான தகவல்கள் பரவுவது இணையத்தில் மட்டும்தான். அந்த இணையத்தை வைத்தே சதியை முறியடிப்போம்.

  -வினோ

 16. srikanth1974

  திரு.வினோ அவர்களுக்கு நன்றி.
  விரைவில் உங்களை நேரில் சந்தித்து
  என் சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

  என்றும் அன்புடன்
  ஸ்ரீகாந்த்.ப

 17. Ramamoorthy

  evan ena venumnalum sollattum padam super intha solli ena agapothu , ivanunga ellam thalaivar pakkathula kuda nekka mudiyathu , entha mutta …….. achum padam mosamnu sonna avana mattum kattunga avan mandaiya na odikuren ,

 18. மிஸ்டர் பாவலன்

  //குறிப்பாக ஒரு நடிகரின் ரசிகர்கள் இவர்கள் என்று கூறப்படுகிறது. //

  பாவலனின் சந்தேகம் குருவியின் மேல் தான்!

 19. devaraj

  I entirely agree with Mr. Giri, hats off to Vino.
  But this negative news like fake distributors issue will not help the movie.
  I pin my hope on family crowds in this coming weeks.
  Cunning and jealous people all are waiting to see Thaliver fall, big time.
  But we believe in GOD, truth will prevail.
  cheers
  dev.

 20. மிஸ்டர் பாவலன்

  முன்பொரு காலத்தில் கமல்-ரஜினி ரசிகர்களுக்குள் போட்டி, விவாதம்
  என இருந்தாலும் அது நாகரிகமான அளவில் நடந்தது. “சூப்பர் ஸ்டார்” ஆக
  கமல் இருக்க வேண்டும் என்ற பொய்யான பிரச்சாரங்களில் கமல் ரசிகர்கள்
  ஈடுபட்டதில்லை. கமல் படங்கள் ஓட வேண்டும், கமல் அவார்டு வாங்க
  வேண்டும் என கமல் ரசிகர்கள் விரும்புகிறோம், அவ்வளவு தான்.
  குருவியை கமலுடனோ, ரஜினியுடனோ ஒப்பிட முடியாது. குருவி ரசிகர்கள்
  அடுத்த சூப்பர் ஸ்டாராக குருவியை முன்னிறுத்துவதை தவிர்க்கலாம்!
  தமிழத்தில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் – அது ரஜினி மட்டுமே! நன்றி!!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 21. Ghouse

  சகோ நன்றி நன்றி.தலைவரின் அணைத்து உலக ரசிகர்கள் சார்பாக என்னுடைய நன்றிகள் உங்களக்கு.தலைவரின் மிகப்பெரிய பலம்களில் ஒன்று உங்களைப்போல உண்மை ரசிகர்கள்.நாங்கள் எல்லாம் படத்தை பல முறை பார்ப்பதுடன் சரி..நிச்சயம் உங்களின் உழைப்பிற்கு கோடி நன்றிகள்

  ரஜினி ரசிகனாக மாறியதால்,1978 (மாங்குடி மைனர்) இல் இருந்து உங்கள் சகோதரன்

  <<<<>>>

 22. Raj

  சரியாக சொன்னீர்கள் மிஸ்டர் பாவலன். ரஜினி ரசிகர்கள் கமல் படத்தை பார்ப்பதும், கமல் படத்தை ரஜினி ரசிகர்கள் பார்த்து மகிழ்வது உலகறிந்த விஷயம். என்றுமே ஒருவர் மீது மற்றவர் சேற்றை இறைத்தது இல்லை.

 23. gandhidurai

  சரியா சொன்னீங்க வினோ .
  உங்க face book link என்ன?

 24. Gouse

  அன்புள்ள வினோ ஏன் எனது கருத்தை நீக்கி விட்டீர்கள்
  அன்புடன் உங்கள் சகோதரன்
  <<>>>
  ——————————————————————

 25. velmurugan

  ரஜினி படம் வரும் போது நெகடிவ் கமெண்ட்ஸ் கண்டிப்பா வரும். ஆனா படம் சக்சஸ் ஆகும் . அது சில பொறாமைக்காரர்களின் செயல்.
  This time vetti Vijai and his fans trying to show that kaththi is super hit and lingaa is mega flop. so, Vijay is superstar and so…

  Surely, they can’t make it. they are using sun TV technique…..
  As a fan of real ” Human Being ” i decided to avoid his movies even in pendrive….
  Hope my brothers ( all rajini fans ) will accept my decision and may follow….
  To make us Joy Our Anna did the movie eventhough in his health condition….
  i am doing this to show to the world that rajini fans are not just fans they are the blood of rajini. ( Eventhough the world already knows this)

  PLEASE DO SOMETHING TO SHOW THAT THE NEWS ARE FAKE . EVERYONE MUST REALIZE THE FACT AND ABOUT THE CULPRIT

 26. Natarajan

  Poramapudicha simon sepastin athan tamila kappathra seeman avaru mudhalla passportla seeman tamil pera mathitu thalaivara kura sollatum avarellam oru alu vayitherichal pudichavanungathan ippadi polambuvanuga ivanunganala thalaivar nilala kooda thoda mudiyathu

 27. மிஸ்டர் பாவலன்

  வேல் முருகன் அவர்களே.. பள்ளிகளில் அரை இறுதி தேர்வுகள்
  செவ்வாய் அல்லது புதன் முடிய இருக்கின்றன. புனித கிறிஸ்துமஸ்
  திருநாள் அன்று துவங்கி பிள்ளைகள், பெற்றோர்கள் கூட்டம்
  தியேட்டர்களில் அலை மோதப் போவது உறுதி. இது தெரிந்த குருவி
  ரசிகர்கள் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னாள் ரஜினி படத்தை
  தூக்க விரும்பிகிறார்கள்.. லிங்கா படத்திற்கு உண்மையான வில்லன்
  குருவி தான்! ஏன் என்றால் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக தான் இருக்க
  வேண்டும் என்று சில மாதங்களாக குருவி போராடி வருகிறார்..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 28. saranya

  ippa ellarukkum santhoshama irukume. padam flop nu ellarum declare pannitaanga. even rajini fans. blockbuster nu sonnavanga ellam padam flop nu jaga vaanga aarambichitaanga. vijay fansum kamal fansum avanga nenachatha saathichitaanga

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *