BREAKING NEWS
Search

‘தெளிவானது’ தேர்தல் களம்…. பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் குடியரசுத் தலைவர் ஆகிறார் பிரணாப்!

‘தெளிவானது’ தேர்தல் களம்…. பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் குடியரசுத் தலைவர் ஆகிறார் பிரணாப்!


ரு வழியாக நாட்டின் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் களம் தெளிவாகிவிட்டது.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி களத்தில் நிற்கிறார். அவருக்கு ஆளும் ஐக்கிய முன்னணி கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தவிர, மற்றெல்லா கட்சிகளும் தங்கள் ஆதரவை பிரணாபுக்கு அளித்துள்ளன.

அதுமட்டுமின்றி, சிவசேனா, தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சந்திரபாபு நாயுடு போன்ற பாஜக ஆதரவு கட்சிகளும் பிரணாபுக்கே ஆதரவை அளித்துள்ளன. பாஜகவில் இப்போது அதிருப்தியுடன் இருக்கும் கர்நாடகத்தின் எடியூரப்பா கோஷ்டியும் பிரணாபை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டனர்.

எனவே பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி ராஷ்ட்ரபதி பவனுக்குள் நுழைவது உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா, இந்தத் தேர்தலில் தங்கள் வேட்பாளர் யார் என்பதைச் சொல்ல முடியாமல் திணறியது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் ஒதிஷா முதல்வர் நவீன பட்னாயக்கும் பிஏ சங்மாவை (இத்தனைக்கும் சங்மா, காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் பிரமுகர்!) வேட்பாளராக அறிவித்து, அவரை பாஜகவும் ஆதரிக்க வேண்டும் என்றனர்.

ஆனால் பாஜகவுக்குள்ளேயே பிரணாபுக்கு ஆதரவு தெரிவித்தனர். இன்னும் சிலர் சங்மாவுக்கு பதில் வேறு வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிக்கலாம் என்றனர்.

இந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக, யார் வேட்பாளர் என்பதை முடிவு செய்வதில் பெரும் இழுபறி நீடித்துவந்தது. அந்த அணியினர் தினமும் கூடுவதும், முடிவெடுக்காமல் கலைவதுமாக இருந்தனர். தேர்தல் முடிந்த பிறகாவது பாஜக ஒரு முடிவுக்கு வருமா என கிண்டலடிக்கும் அளவுக்குப் போய்விட்டது.

ஒருவழியாக வியாழக்கிழமை, தாங்கள் முடிவை அறிவித்தது பாஜக. “என்டிஏ கூட்டணியில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இப்போதைக்கு பாஜக மட்டும் பிஏ சங்மாவை ஆதரிக்கிறது, என அக்கட்சி அறிவித்துள்ளது.

மார்க்சிய கம்யூனிஸ்ட் பிரணாபுக்கு ஆதரவு

இன்னொரு பக்கம், கம்யூனிஸ்ட் கட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பார்வர்டு பிளாக் ஆகியவை பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியும் பிரணாப்பை ஆதரிக்க மறுத்துவிட்டன. இரண்டு கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலரான டி. ராஜா கூறியுள்ளார்.

பிரணாப் முகர்ஜி ஆதரவுக் கட்சிகள்

இந்திய தேசிய காங்கிரஸ்,
சமாஜ்வாடி,
பகுஜன் சமாஜ்,
தேசியவாத காங்கிரஸ்,
தி.மு.க.,
ராஷ்டிரிய ஜனதா தளம்,
ஐக்கிய ஜனதா தளம்,
சிவசேனா,
தேசிய மாநாட்டு கட்சி,
ராஷ்டிரிய லோக்தளம்,
மதச்சார்பற்ற ஜனதா தளம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
தெலுங்குதேசம்
என்ஆர் காங்கிரஸ்
எடியூரப்பா தலைமயிலான பாஜக

-ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

சங்மா ஆதரவு கட்சிகள்

அதிமுக,
பாஜக,
பிஜூ ஜனதாதளம்,
சிரோமணி அகாலிதளம்

இதையெல்லாம் வைத்துப் பார்த்தால்,  தற்போது பிரணாப் முகர்ஜிக்கு கிட்டத்தட்ட 57 சதவீதத்திற்கு மேலான வாக்குகள் உறிதியாகிவிட்டன. உதிரிக் கட்சிகள், சுயேட்சைகள் ஆகியோர் வாக்குகள் உதவியுடன் இந்த அளவு இன்னும் கூட இரண்டு சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

அதேசமயம், சங்மாவுக்கு தற்போது கிட்டத்தட்ட 32 சதவீத அளவுக்குத்தான் வாக்குகள் உள்ளன. மமதா ஆதரவைப் பெற்றாலும் அவரால் 34 சதவீதத்தைத் தாண்ட முடியாது!

-என்வழி செய்திகள்
2 thoughts on “‘தெளிவானது’ தேர்தல் களம்…. பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் குடியரசுத் தலைவர் ஆகிறார் பிரணாப்!

  1. தினகர்

    புதிய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்துக்கள்.

  2. enkaruthu

    உண்மையாலுமே எனக்கு பிரணாப் முகர்ஜி ஒரு நல்ல நிதி நிர்வாகி என்பது மட்டும் தெரியும் .ஆனால் வினோ சார் போட்ட ஒரு பதிவில் இந்த விசயத்தில் மன்மோகன் சிங்குக்கே இவர் சீனியர் என்பதை படித்த பின்புதான் இவர் சரியான மனிதர்தான் என்பதை கண்டுகொண்டேன்.இதற்க்கு இன்று அவருக்கு எதிர்கட்சிகளிடம் இருந்து கூட கிடைத்த ஆதரவே சாட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *