BREAKING NEWS
Search

‘ரஜினி யாருக்குக் கால்ஷீட் தர வேண்டும் என நிர்பந்திக்க இவர்கள் யார்?’

‘ரஜினி யாருக்குக் கால்ஷீட் தர வேண்டும் என நிர்பந்திக்க இவர்கள் யார்?’

11112583_1631815377054980_2213571402223968139_n

மிழ் சினிமா இதுவரை பார்க்காத சில காட்சிகள், அருவருப்பான பேரங்களை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஒரு படம் வெளியாகி பெரும் லாபம் குவிக்கும்போது, அதை முழுவதுமாக அனுபவிப்பவர்கள் அதைத் தயாரித்த தயாரிப்பாளர்கள், வெளியிட்ட விநியோகஸ்தர்கள், திரையிட்ட தியேட்டர்காரர்கள்தான். அட, இடையில் வரும் மீடியேட்டர்களுக்குக் கூட நல்ல லாபம். அப்போதெல்லாம் அந்த வெற்றிக்குக் காரணமான படத்தின் நாயகனுக்கோ அல்லது இயக்குநருக்கோ லாபத்தில் யாரும் பங்கு தருவதில்லை. கேட்டால் ‘இது யாவாரம்.. லாப நட்டம் சகஜம்’ எனத் தத்துவம் பேசுவார்கள்.

ஆனால் அதே படம், குறிப்பாக ரஜினி படம் சரியாகப் போகவில்லை என்றால், உடனே நஷ்டத்தை திருப்பிக் கொடுங்கள் என ரஜினியை நெருக்குகிறார்கள். இப்போது, அந்த ‘வியாபார எத்திக்ஸ்’ எங்கே போனதென்று தெரியவில்லை. எரியும் வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்ற கொடூர புத்தி.

‘உலகில் எந்த நாட்டு சினிமாவிலும் படத்தின் நஷ்டத்தை அதில் நடித்த ஹீரோ ஈடுகட்டியதாக கட்டுக் கதைகள் கூடக் கிடையாது. ஆனால் பாபா படத்துக்காக முதன் முதலில் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் நஷ்ட ஈடு கொடுத்தவர் ரஜினி. இத்தனைக்கும் அப்போது யாருமே அவரிடம் நஷ்ட ஈடு கேட்கவில்லை. அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதி காத்தார்கள். ஆனால் நஷ்டம் என்ற முணுமுணுப்பு காதில் விழுந்ததால் அந்த நஷ்ட ஈட்டை முன்வைந்து கொடுத்தார் ரஜினி.

அதையே ஒரு சாக்காக வைத்துக் கொண்டு இப்போது லிங்காவுக்கு ப்ளாக் மெயிலை விட மோசமான முறையில் நஷ்ட ஈடு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது அநாகரீகத்தின் உச்சம் மட்டுமல்ல, மிக மோசடியானது,” என்கிறார் அனுபவசாலி விநியோகஸ்தர் ஒருவர். ரஜினி படங்கள் மூலம் பல கோடிகள் லாபம் பார்த்தவர் இவர்.

எல்லாவற்றையும் விட கொடுமை, இப்படி கேவலமான முறையில் நஷ்ட ஈடு கேட்டவர்களுக்கும் ரூ 12.50 கோடி வரை நஷ்ட ஈட்டுத் தொகை கொடுத்துள்ளார் ரஜினி. அந்தத் தொகையை ஒழுங்காகப் பிரித்துக் கொள்ளக் கூட முடியாத இவர்கள், இப்போது மீண்டும் நஷ்டஈட்டுப் புராணத்தை ஆரம்பித்துள்ளனர்.

பேராசை என்ற கொடிய வியாதிக்கு மருந்துமில்லை.. தீர்வுமில்லை. லிங்கா விநியோகஸ்தர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலரின் பேராசை இன்று தமிழ் சினிமாவையே கேவலமாக்கிக் கொண்டிருக்கிறது.

ரஜினி என்ற பெரும் கலைஞனை இந்த நஷ்ட ஈடு என்ற ஒற்றைச் சொல்லைக் கொண்டு மிரட்டப் பார்க்கிறார்கள்.

லிங்காவில் உண்மையிலேயே நஷ்டம் ஏற்பட்டிருந்தால், அடுத்த ரஜினி படம்  வெளியாகும்போது, அதை வாங்கி விநியோகித்து லாபம் சம்பாதித்துக் கொள்ளலாம் என்றுதானே உண்மையான விநியோகஸ்தர்கள் முயற்சிப்பார்கள். ஆனால் இந்த ப்ளாக்மெயில் கோஷ்டி என்ன கேட்கிறது பாருங்கள்… ‘ரஜினி இன்னாருக்குதான் படம் செய்ய வேண்டும்… அந்தப் படத்துக்கு நாங்களும் பங்குதாரர்களாவோம்.. நஷ்டத்தைச் சரி கட்டிக் கொள்வோம். இல்லாவிட்டால், இன்னொரு பதினைந்து கோடி ரூபாய் அவர் தரவேண்டும்’!

வழிப்பறி, பகல் கொள்ளை போன்ற வார்த்தைகளையெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்குகிறது இந்த ‘லிங்கா நஷ்ட ஈடு’ என்ற வார்த்தை!

‘ரஜினி யாருக்கு கால்ஷீட் தர வேண்டும், யார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் நிர்பந்திக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அதுவும் எழுத்துப் பூர்வ ஒப்பந்தமே இல்லாத நிலையில், அவரை நேரில் கூடப் பார்த்திராத இந்த கூட்டம் அவருக்கு நெருக்கடி தருவது சட்டவிரோதமல்லவா… ரஜினி நினைத்தால் இந்த கூட்டம் மொத்தமும் கம்பி எண்ண வேண்டி வரும். ஆனால் அவர் என்றைக்குமே அந்த தீவிர நடவடிக்கையை எடுக்க நினைப்பதில்லை.. அவரது கருணை மனசை காசாக்கப் பார்க்கிறார்கள்,” என்கிறார் தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர் ஒருவர்.

இத்தனைக்கும் லிங்கா பிரச்சினை முடிந்துவிட்டது.. இனி எந்தப் பிரச்சினையும் செய்ய மாட்டோம் என்று ஒப்பந்தம் போட்டு, அதை கலைப்புலி தாணு கையால் பெற்றுக் கொண்டு, போட்டோவுக்கும் போஸ் கொடுத்த சிங்காரவேலன் என்ற நபர், மீண்டும் மீண்டும் இந்த லிங்கா பிரச்சினையைக் கிளப்புவது திட்டமிட்ட திருட்டுத்தனம் என்கிறார்கள் அவருடன் இருக்கும் சக விநியோகஸ்தர்களில் சிலர்.

தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், ஃபெப்சி என வலுவான அமைப்புகளைக் கொண்ட தமிழ் சினிமா, இந்த மாதிரி ப்ளாக்மெயில் வர்த்தகத்தை எப்படி மவுனமாக வேடிக்கைப் பார்க்கிறது? என அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துள்ள தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு இப்போது சாட்டையை கையிலெடுக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த மோசடி வர்த்தகத்துக்கு இவர் காலத்திலாவது முடிவு வருமா.. பார்க்கலாம்!
30 thoughts on “‘ரஜினி யாருக்குக் கால்ஷீட் தர வேண்டும் என நிர்பந்திக்க இவர்கள் யார்?’

 1. Swaminathan

  “Super Star” gave a statement in 1996 against JJ and he also made a statement “Even the god can’t save Tamilnadu, if JJ comes to power again” and in 2015, he attends the same JJ’s swear-in function. He thinks his fans are all idiots or make his fans idiots. Don’t think this is an unnecessary post in this column. Hope you will approve this post as it is to be available in the comments column. It is a big mistake that he attended the swear-in function. It is total contradiction to his statement and reality.

 2. arulnithyaj

  வினோ அண்ணா நான் வெளியூரில் இருந்ததால் உங்களிடம் பேச முடியவில்லை ..லிங்கா 100 நாள் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை..அண்ணா திரும்பவும் லிங்கா பிரச்சினைய கிளப்புறாங்க ..குமுதம் (கூமுட்டை), ரிப்போர்ட்டர் (இதெல்லாம் ஒரு பத்திரிக்கை .. நமது எம் ஜிஆர் பரவாயில்ல) newtamilcinema RS அந்தணன் சார் எல்லோரும் தலைவருக்கு கடன் அதனாலதான் படம் பன்னுர்ராருனு எழுது கிறார்கள் அண்ணா ..தலைவர் நமக்காக தான் நடிகிரார்னு தெரியும்..இருந்தாலும் தலைவருக்கு பணப் பிரச்சினையா ?

  சுவாமிநாதன் சார் ..ஜெ முதல்வரா பதிவி ஏற்க அழைத்ததினால் தலைவர் சென்றார் ..96ல் மக்கள் தண்டனை கொடுத்து விட்டார்கள் அதே மக்கள் 2001, 2011ல் திருமபுவும் அவரை தான் தேர்ந்து எடுத்துள்ளார்கள் ..அவர் சட்டத்தின் படி மீண்டும் குற்றவாளி என்று நிருபிக்கபட்டால் அவர் பதவி இழப்பது உறுதி ..ஜெ ஜெ நீதியை விலைக்கு வாங்கி விட்டார்னு எனக்கும் தெரியும் தலைவருக்கும் தெரியும் இருந்தாலும் பெரிய பதவியில் இருப்பவர்களிடம் இப்படி தான் இப்போதைக்கு நடந்து கொள்ள வேண்டும் இது தான் கரெக்ட் ஆனா வழிமுறை ..புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்

 3. Manikandan G

  not a supporter of any political party. From my childhood i ve been blindly
  worshipping thalaivar, he is my demi god. but his silence in this linga issue,
  and attending JJ’s Ceremony is something which i couldnt digest.there is a big gap
  between thalaivar and his fan’s for sure. No one can force him, Thalaivar does not have to listen to anyone but
  at the same time he should not hurt the feelings of his ardent fans, We are not asking him to come to politics,
  we are not asking him to fight against people who working against linga, we are not asking him to not to support JJ. But
  he should atleast express him thoughts directly so that fans feelings doesnot get hurt.

 4. மிஸ்டர் பாவலன்

  சூப்பர் ஸ்டார் அம்மாவை நேரில் சென்று சந்தித்து ஒரு சிறிய
  விண்ணப்பம் கொடுத்தால் போதும்.. சிங்காரவேலன் வெளியே
  தலை காட்ட முடியாத வகையில் அடங்கி விடுவார்..

  -== மிஸ்டர் பாவலன் ==

 5. Rjakumar

  Rajani Sir should give a statement regarding this. The sooner, the better. Already he had lost so much of time. He should take some action against these third rated people, to prove that he is still the same Rajani when took a stand during Uzhaippali issue.
  Keeping mum on this issue is creating doubts on Fan’s minds. If he is the same Rajani of the old, he should come of his shell and utter some words. If he is not going to do this, then the fans will get disillusioned (I think we are already) and loose hope on their demi God.
  It is upto Rajani whether to remain a king or a joker.

  My words might be strong, but it hurts to see all these things happening around him.

  Thanks!

 6. hari

  எனக்கு ஒன்று புரியவில்லை. அவர் விருப்பபடி இருக்க அவருக்கு உரிமை இல்லையா?

  காலம் எவ்வளவோ மாறிகிட்டு வருது. அன்று இருந்த அரசியல் சூழல் வேறு. இன்று இருக்கும் அரசியல் சூழல் வேறு. எல்லா நேரத்திலும் ஒருவர் மேல் சேற்றை வாரி பூசமுடியாது.

  அவருடைய சூழ்நிலையில் நாம் என்ன முடிவெடுதிருப்போமோ தெரியாது.

  ஜே ஜே அவர்கள் அன்று செய்த அரசியல் சிறுபிள்ளைதனமாக இருந்தது. இன்று எவ்வளவு மாற்றம்.

  கேட்டது நடக்கும்போது தட்டி கேட்கவும் வேண்டும். நல்லது நடக்கும்போது துணை நிற்கவும் வேண்டும். என்னை பொருத்தவரை அவர் செய்தது சரியே.

 7. SK

  Dear Swami,
  As human beings we need to forget the past and move on in life. Never carry vengeance or revenge on any one. He spoke at that time becoz the situation demanded. However he shares a cordial relationship with everyone and doesnt oppose someone for the heck of it.
  Life is all about forget & forgive.
  Now Thalaiavar is a wonderful human being & great soul. He knows that things have changed for the good and cannot carry vengenace or take revenge. This is not his movie.
  I hope you will understand this if u r a true fan of Thalaivar.
  We need to learn a lot of life lessons from him which will help us think , calm down and take right decisons and not emotional ones. BTW, he also would make mistakes but the greatness lies in learning from ur mistakes and not to repeat them

 8. Nattu

  சுவாமிநாதன், சும்மா காமெடி பண்ணாதீங்க.. 20 வருஷத்துக்கு முன்னாடி ரஜினி ஏதோ சொன்னாராம்.. அதுக்கு அப்புறம் ரஜினி ஜெ பத்தி சொன்ன எதுவுமே நீங்க படிக்கலையா? இல்ல உங்கள யாரவது நாடு கடத்திட்டாங்களா?? இன்னும் எத்தன நாளுக்கு இந்த பல்லவி? 2006ல நீங்க எப்படி இருந்தீங்களோ அப்படி தான் இன்னும் இருக்கீங்களா? கொஞ்சம் வளருங்க பா !!

 9. winston raj

  i totally disapprove with the statement of Mr. Swaminathan. he reviewed 91-96 government and stated his views in 96. After than in 2004 itself, he publically said, he voted for ADMK, he never mis lead his fans. She have become thrice since 1996 and people elected her. it is a real blunder that what this guys expect. they want rajini to oppose her everytime. Why should he.?
  and one more thing to add. if Some one inviting for function, attending the function is Manners, which we can see in delhi politics but it is totally new to tamil nadu politics. so this people dont know about it.

 10. jegan N

  mr swaminathan……rajini told that in 1996….after that jeyalalitha failed…..in 2001 again the same people only elected jeyalalitha….do u think people are fools?..u r a foolish……rajini is also one among the comman people….

  now she has come to power again ….with full people support 39 seats…….never post any such comment again n …….kovatha kilarathinga……..

  ethukeduthalum rajiniya comment panrathukune irukra ungala pontra aalkal than muttalgal……get lost

 11. Raj

  Dear Mr Swaminathan,

  Thalivar given voice at 96 not for his personal benifits and now attending function When invited not for his personal benifits , We can not talk past for so many years , our thinking will change due to situation , now we don t have any choice other than jayalalitha , in 96 our thalaivar tried to bring moopanar – national party , but it doesnt work out due to narashima rao , so forced to support karunanidhi , now so many people supporting jaya while the same people opposed jaya in 96 .

  Maatram onedra maarathathu.- be practical , One who accept the realility without selfishness is a intelligent person – larger interest is imported than our self ego etc.

  Please understand the situation and be practicl

 12. jegan N

  Share it maximum to show that this RAJINI is a
  waste person
  ரஜினி சுத்த வேஸ்ட் ..
  எல்லாரும் சம்பாதித்த பணத்தை
  வாரி வரி அள்ளி அள்ளி
  கொடுக்குரார்கள். சசிகலா
  குடும்பம், கலைஞர் குடும்பம், மூப்பனாகுடும்பம்,
  வைகுண்டராஜன் குடும்பம், சிமன்ட்
  சீனிவாசன் குடும்பம், ராமதாஸ் அய்யா
  குடும்பம், கே.என் நேரு குடும்பம், பி.ஆ.பி குடும்பம்,
  கல நிதி மாறன் குடும்பம், பசிதம்பரம்
  குடும்பம், இவர்கள் எல்லாம்
  ரொம்ப நல்லவர்கள் சினிமா நடிகள்
  ரஜினி மட்டுமே மோசமானவர்
  காரணம்
  படையப்பா வெள்ளிவிழாவில் தனது
  சொத்துக்களில் பெரும் பகுதியை
  மக்களுக்கு உயில் எழுதி வைத்தாரே…
  தனது படங்களில் சாதி மத
  பிரசினைகளை தூண்ட வில்லை..
  கார்பரேட் பொருட்ட்களின் விளம்பர
  படங்களில் நடிப்பதில்லை…
  பொது இடங்களில் மேக்கப்
  இல்லாமல்
  வந்து விடுகிறார் பார்க்க சகிக்கல…
  தமிழகதில் முக்கிய மான
  விவகாரங்களில் மக்கள் பக்கம்
  ஆதரவளிக்கிறார்….
  ஈழ விவாகாரத்தில் ஈழத்தை அடைந்தே ஆகனும்
  என்றார்…
  ஒகெனக்களில் கருனாடக மிக
  முக்கியமான தலைவர்களின் பெயரை
  சொல்லியே எலெக்சனுக்காக
  ஆட்டம் போடாதீங்கன்னு
  சொன்னார்,…
  பிறர் படங்களுக்கு பிரமோட் செய்கிறார்,..
  தனது படம் நஷ்டத்திற்கு
  பணம் திரும்பக் கொடுக்கிரார்,…
  கோவை குண்டு வெடிப்பு சமயங்களில்
  இவர் சிறுபான்மை மக்களுக்கு
  ஆதரவாக பேசி வசமாக சிக்கி ரஜினிக்கு
  தீவிரவாதிகளுடன் தொடர்பு என
  சர்ச்சையை எழுப்பினர்…
  இவர் எம்பிய எம் எல் ஏ வா இவர் ஏன்
  இப்படி மோசமானராக நடக்கிறார்
  ரஜினி போன் போட்டு காவிரிக்கு தண்ணி குடுக்க
  கூடாதுன்னு சொல்வாரோ
  பாலாறு பிரச்சினை திர்க்கமாட்டுராரே ரஜினி
  முல்லை பெரியார் பிரச்சனைய பேசிமுடிக்க
  மட்டுராரே,
  கட்ச தீவயாவது மீட்டு கொடுக்க
  மாட்டுராருங்க இந்த நடிகர் ரஜினி
  ரஜினி சுத்த வேஸ்ட் , காவெரில
  தண்ணி விடமாட்டுராரு,
  இலங்கைக்கு போயி ராஜ பக்ஷே
  கழுத்த சீவமாட்டுராரு, முல்லை
  பெரியாறு பிரச்சனைய
  மம்முட்டியோடு ஒக்கந்து பேசி
  முடிக்க மட்டுரார்,
  நிலத்த நீர் பற்றி கவலை
  படமாட்டுராரு, எல் நினோ பற்றி
  மக்களுக்கு புரியவைக்க
  மாட்டுராரு, மதுக்கடை டாஸ்மார்க்
  நிறைய பெருகிட்டு ரஜினி தான்
  இதுக்கு காரணம்,
  ரோட்ல பைக் ஆக்சிடென்ட்
  ஆகிட்டு ரஜினி கம்முன்னு
  இருக்கார்
  தமிழ் நாட்டுல 144 போட்டதே
  தப்புங்க ரஜினி சுத்த வேஸ்ட்
  காலையிலே முதல் ஆளா ஓட்டு
  போட்டுட்டார் கியூவிலயே
  நிக்க மட்டுரார்
  கலைஞருக்கு மூனு பொண்ண்டாட்டி
  எம்ஜியாருக்கு ரெண்டு
  பொண்டாட்டிங்க, ரஜினி
  ரொம்ப
  மோசமுங்க
  கமல் கவுதமியோட வாராருங்க,
  ரஜினி மட்டமான ஆளுங்க,
  தினதந்தி பேப்பர் அளுங்கட்சிக்கு
  சாதகமாகவும், தினமலர் மோடிக்கு
  ஆதராவாகவும் செய்தி போடுராங்க,
  ரஜினி இதைக்கூட தட்டி கேக்க
  மாட்டுராருங்க
  நேரு சிக்ரெட் பிடிப்பார்,
  ணேதாஜி சிக்ரெட் புடிப்பார்,
  சேகுவாரா சுருட்டு எப்போதுமே
  புகைப்பர். சி.என். அண்ணாதுரை
  பார்லிமென்ட்டாக இருந்தாலும், ஐ
  நா சாபையாக இருந்தாலும் மூக்கு
  பொடி பொட்டுட்டார்ன்ன
  ா என்னமா ஆக்ரோஷமா பேசுவாரு
  தெரியுமா?
  மூப்பனார் பாக்கு போடாம இருக்க
  மாட்டாராமே..
  இதெல்லாம் கெடக்கட்டும்
  தமிழர்கள் சிக்ரெட் பழக்கம்
  ஏற்பட ரஜினி மட்டும்தான் காரணமுங்க
  தளபதி ஹாங்காங் போயிட்டார்,
  அம்மா கொட நாடு போயிட்டாங்க,
  இங்க உள்ள பிரச்சினைய தீர்க்கிறது
  யாரு , ரஜினி என்னதான் நினைச்சுட்டு
  இருக்காரு,
  ரஜினி அரசியலுக்குதான் வரமாட்டுராரு,
  சட்டமன்றத்துகாவது போகலாம்ல அங்கயும்
  போகமாட்டுராரு…. ரஜினி வயசு பொண்ணுக கூட ஆடுனா வெவஸ்தை கெட்ட மனுசனாம்,கமல் இந்த் வயசுலையும் ஈரோயின் உதட்ட கடிச்சா கதைக்கு தேவைப்படுதான் …..்

 13. anbudan ravi

  தலைவர் இதையும் அமைதியான முறையில் கையாள்வார்….ஆனால் இந்த கொள்ளை கூட்டம் மீண்டும் இதுபோல வால் ஆட்டத்தான் செய்யும். இவர்களுக்கு தாணு போன்றவர்கள் பெருத்த அடி கொடுக்க வேண்டும்.

  சுவாமிநாதன் அவர்களே, உங்களைபோன்றே என்போன்ற பல ரசிகர்களும் தலைவர் ஜேஜே விழாவிற்கு சென்றதில் மகிழ்ச்சி இல்லை. ஆனால் காலங்கள் மாறிவிட்டது…..அவரை விட இவர் பரவா இல்லை என்றாகிவிட்டது. பேய் சிறந்ததா பிசாசு சிறந்ததா? மீண்டும் கலைஞர் முதல்வர் ஆக வேண்டும்….ஆனால் அவரின் முதுமை காரணமாக சிறப்பான ஆட்சி என்பது கேள்விகுறி…..ஸ்டாலின் மற்றும் அழகிரி வந்தால் சிறப்பாக ஆள முடியுமா? ஸ்டாலின் சற்று பரவா இல்லை, ஆனால் அவரால் திறம்பட ஆள முடியுமா? அவருக்கு கலைஞர் எந்த சந்தர்ப்பமும் வழங்கவில்லையே நிரூபிக்க… இல்லை விஜயகாந்த் தமிழ் நாட்டை தூக்கி நிறுத்தி விடுவாரா? நல்லவரோ கேட்டவரோ தற்போதய கால கட்டத்திற்கு ஜேஜேவே சரி என்றே தொன்றுகிறது. அடுத்த வருடம் மக்கள் சிறந்த தீர்ப்பு வழங்கட்டும். தலைவர் விழாவிற்கு சென்றதிலும் ஒரு நோக்கம் இருக்கும் என்று நம்புவோமாக.

  அன்புடன் ரவி.

 14. rajagopalan

  Boss Nan pota commentai than ellarum potrukanga but u deleted my post
  ____________

  என்ன கமெண்ட்? நான் அப்படி எதையும் பார்க்கவில்லை. வேண்டுமானாலும் மறுபடியும் போடவும். நன்றி.

  -என்வழி

 15. Kumar

  மனசாட்சியுடன் உண்மையை எல்லோரும் ஒப்புக்கொள்ளுங்கள். ஜெ பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், தலைவர் நினைத்திருந்தால் அதை தவிர்த்திருக்கலாம். வேறு எந்த முன்னணி நடிகரும் வரவில்லை. ஜெவை பகைத்துக்கொள்ள தலைவர் விரும்பவில்லை என்பதே உண்மை. ஒரு ஊழல்வாதியின் விழாவில் அவர் கலந்து கொண்டதால், ஆட்சியில் இருப்பவர் பக்கம் சாய்கிறார் ரஜினி என்று எல்லோரும் பேசுவதற்கு அவரே வழி வகுத்துவிட்டார். தலைவர் இருக்கும் உயரத்துக்கு அவர் ஜெவுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. மனசுக்கு ஒப்பாத விஷயங்களை துணிச்சலுடன் மறுத்துவிட வேண்டும். இந்த விஷயத்தில் அஜீத் நிஜமாகவே தைரியசாலி.

 16. RADHA RAVI

  எந்த கொம்பனும் என் இறைவன் என் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு நிர்பந்தம் கொடுக்க முடியாது. இந்த மோசடி பேர்வழி அசிங்காரவேலன் முகத்திரையை கிழிக்க வேண்டும்.

 17. D.Elango

  don’t criticize thalaivar. when someone invited thalaivar for attending their function, its s courtesy to attend whether you like or dislike. Thalaivar is a common person at the moment to everyone.

 18. ELUMALAI

  அசிங்கப்பட்டாண்டா இந்த அசின்காரவேலன். நாயா செருப்பால அடித்து துரத்த வேண்டும். சிங்காரவேலன் ஒழிக. ஏமாற்று பேர்வழி அசிங்கார வேலன் ஒழிக.

 19. ELUMALAI

  அசிங்கப்பட்டாண்டா இந்த அசின்காரவேலன். நாயா செருப்பால அடித்து துரத்த வேண்டும். சிங்காரவேலன் ஒழிக. ஏமாற்று பேர்வழி அசிங்கார வேலன் ஒழிக. சினிமா சங்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இவனை துரத்தி அடிக்க வேண்டும்.

 20. kumaran

  சிங்காரவேலனுக்கு செருப்படி தான் கிடைக்கும்

 21. Anandkg

  தலைவர் விழவிற்கு போனாலோ போகவிடலோ அது அவரோட தனிப்பட்ட விஷயம். தலைவர் நாகரிகம் தெரிந்தவர், நல்லது நினைப்பவர்.
  அதை விடுங்க சார்..

  எனக்கு பல கேள்விகள் திரு வினோத்,

  யார் இந்த சிங்காரவேலன்?
  எப்படி இவ்வளவு செயல்கள் செய்ய முடிந்தது ?
  யார் இந்தாளுக்கு பக்க பலம் ?
  எப்படி தலைவரை இப்படி எதிர்க்க, அசிங்க பண்ண முடிந்தது ?
  எப்படி இப்படி கூட்டம் போட முடிந்தது?
  எப்படி இந்த ஆள் ஒரு தனி மனிதனாக இப்படி எல்லாம் செய்தும் செய்துகொண்டும் இருக்க முடிகிறது?

  இந்த திரை உலகில் எவ்வளவு ஜாம்பன்வகள் இருந்தும் ஏன் ஒருவரும் இது பற்றி பேசவோ, எதிர்க்கவோ, அட, தலைவர் கூட ஒரு சப்போர்ட் ஆ கூட நிக்கவில்லையே?

  தலைவர் இவ்வளவு செல்வாக்கு படைத்தவராக இருந்தும் ஏன் ஒன்னும் செய்ய முடியவில்லை? .

  தலைவர்காக ஏன் ஒருவரும் துணை நின்று சப்போர்ட் செய்யவில்லை?
  அதை விடுங்கள், நீங்கள் அவனை துகில் உரித்து காட்டி விடீர்கள், மற்ற பத்திரிகைகள் ஏன் ஒன்றும் செய்யவில்லை?

  அப்படி என்றால், தலைவருக்கு திரை உலகில் நண்பர்கள் யாரும் இல்லையா? போற்றி காக்க வேண்டிய கலைஞனை, 25 வருடங்களுக்கு மேலாக மக்களை மகிழ்வித்த கலைஞனை, பல பேர்களுக்கு வாழ்கை கொடுத்த, உதவி செய்த, செய்து கொண்டிருக்கின்ற மனிதனுக்கு சப்போர்ட் செய்ய யாரும் இல்லையா? தட்டி கேட்க ஒரு நல்ல நண்பனும் ரசிகனும் இல்லையா?

  அட, நம்ம தலைவர் ரசிகர்கள்? என்ன செய்தார்கள்? சும்மா செய்தியை பார்த்து, ப்ளாக்லே எழுதி ஜஸ்ட் ஷேர் பன்னார்களே? நல்ல தானே இருந்ந்தது லிங்கா ஏன் ஓட வெக்க முடியலை?

  எப்படி ஒரு தனி மனிதன் ஒரு படத்தை அதுவும் தலைவர் படத்தை 3 நாள்லே பலாப் நு சொல்ல வெச்சு, செய்தி ஆக்கி, நிருபிச்சு காட்நாங்க்லே, எப்படி ஐயா?

  அப்படி என்றான் இந்த ஆளு மேலே அவ்வளவு பயமா ? அப்படி என்றால் அவன் பின்னணி என்ன?
  ஏன் தலைவரை குறி வெக்கறாங்க?
  தலைவர் எவ்வளவு பலம் இருந்தும் ஏன் சும்மா இருக்கார் ?

  இவன் இப்படி தான் இருப்பான ? இவனை யார் தூண்டி விடுறாங்க ? எதனால்? இதற்கு ஒரு முடிவு இல்லையா?

  பல கேள்விகள் வினோத்……

  நெஞ்சு பொறுக்கவில்லையே !

 22. MUTHU

  தலைவர் ரஜினி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் அற்ப பயல்களுக்கு சுளுக்கு எடுப்போம். எங்கள் இதய தெய்வம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை வம்புக்கு இழுத்தால் நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். தெய்வத்தின் கட்டளைக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்.

 23. Swaminathan

  Mr. Kumar

  This is what I was trying to everyone. But most of the readers unable to understand the point. As everyone says “Super Star” is always a “Super Star” why should he change himself from his stand point. For his personal reasons he asked us to vote against JJ and now he attends the function after 20 years. because he wants to have a cordial relationship with politicians for his personal reasons… He made up our mind in 1996 (which was my voting) to vote against JJ and he changes his mind now for obvious reasons… but how an ardent fans can accept this change…

 24. satkhi

  திரு சுவாமிநாதன் அவர்களே , ஒருவர் தவறு செய்யும்போது தட்டி கேட்கணும் அதைதான் ரஜினி அவர்கள் அன்று செய்தார்,அதன் பின் 2001- 2006 மற்றும் இப்போது வரை அவர் மீது தனிப்பட்ட எந்த விமர்சனும் சொல்ல முடியத அளவில்தான் இருக்கிறார் .இரண்டாம் முறை பதவி ஏற்றதில் இருந்து செல்வி ஜெயலலிதா அவர்களின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றம் இருந்தது என்பது அனைவரும் ஏற்றுகொள்ள வேண்டிய விஷயம் .யாரோ ஒரு சிலர் செய்யும் தப்புக்கு எல்லாம் ஒருவரையே மையப்புள்ளி ஆக்கக்கூடாது .தவறு என்று தெரிந்தால் ஒரு கட்சி தலைமை என்ன செய்யுமோ அதை சரியாக செய்யகிறார் என்றே தோன்றுகிறது , அவர் போல கட்சி ஆட்களிடமும் பதவியில் உள்ளவர்களிடமும் நடவடிக்கை எடுக்கின்ற நிலையான தலைமை இபோதைக்கு இங்கே இல்லை என்பதை நான் சகித்து கொள்ள வேண்டும் .தவறு செய்யாதவர்கள் யாருமே இல்லை , அதை மாற்றிக்கொண்டால் அதையும் நாம் ஆதரிக்கணும் சாமிநாதன் சார் ,சும்மா அரசியல் கட்சி பேச்சாளர்கள் போல் பேசகூடாது என்பதே என் எண்ணம் .

 25. Rajini Sridhar

  எனது இறைவன் எனது கடவுள் எனது தெய்வம்
  எனது தலைவர் சூப்பர் ஸ்டார் ஸ்டைல் மன்னன் பாட்டாளிகளின் தோழன் உழைப்பாளிகளின் தொண்டன் ரஜினி அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு வாழ வேண்டுகிறேன்.

 26. வினயரசு

  சிங்காரவேலன் குழுவினருக்கு விநியோக உரிமை கொடுத்தால் அவ்வளவு தான் – கொதிக்கும் திரையுலகம். லிங்கா, கங்காரு, புறம்போக்கு என்ற பொதுவுடமை என்று விநியோக உரிமை பெறும் எல்லாத் திரைப்படங்களிலும் நஷ்டக் கணக்கு காண்பித்து பிரச்னை கிளப்பி வருகிறார்கள் சிங்காரவேலன் தரப்பினர்.

  “எல்லா வியாபாரங்களிலும் லாப நஷ்டம் சகஜம். திரைத்துறையைப் பொறுத்தவரையில் லாபம் எவ்வளவு அதிகமோ, அவ்வளவு நஷ்டமும் இருக்கும். காலம் காலமாக இந்தத் துறையில் ஈடுபட்டு வரும் பலரும் நஷ்டம் வரும் போதெல்லாம் சுமுகமாகப் பேசித் தீர்த்து வரும்நிலையில், சிங்காரவேலன் குழுவினர் போட்ட காசுக்கு ஒரே வாரத்தில் பல மடங்கு லாபத்தை எதிர்பார்த்து, அது வந்தாலும், வராவிட்டாலும் நஷ்டக் கணக்கைக் காண்பித்து பிரச்னை செய்து வருகிறார்கள். லேட்டஸ்டாக ‘புறம்போக்கு என்ற பொதுவுடமை’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் என்று நடத்தப்பட்டது. சமீப காலமாக திரைப்படங்கள் தயாரித்து வெளிவருவதே சிரமமான சூழலில் இந்த மாதிரியான ‘சக்சஸ் மீட்’டுகள் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தை பார்க்க மக்களை மேலும் கவர்ந்திழுக்கும். புறம்போக்கு என்ற பொதுவுடமை ஊடகங்கள் மத்தியில் பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது. ஆனால் இந்தப் படத்தின் சில ஏரியாக்களின் விநியோகஸ்தர்களான சிங்காரவேலன் குழுவினர் ‘எங்களுக்கு நஷ்டம். இதில் UTV தயாரிப்பு நிறுவனம் சக்சஸ் மீட் நடத்தியது சரியல்ல” என்ற ரீதியில் அறிக்கை விட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது, இவர்களின் தொடர் நடவடிக்கைகள் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏதோ ஒரு திட்டத்துடன் திரைத்துறையில் நுழைந்து பிரச்னைகளைக் கிளப்பி திரைத்துறையைக் கைப்பற்றி யாருக்கோ ஜால்ரா அடிக்கும் நடவடிக்கைகள் இது. இனிமேலும் இந்தக் குழுவினருக்கு யாரும் விநியோக உரிமை கொடுத்தால் என்னவாகும் என்பதை வரிசையாக ஆராய்ந்து பார்ப்பது நல்லது” என்கிறார்கள் திரைத்துறையினர்.

 27. srikanth1974

  சிக்கலில் இருந்து தலைவர் மீண்டு வருவார்.
  மீண்டும் வெல்வார்.

 28. ஸ்வேதா ரவி

  நான் வணங்கும் தெய்வம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.
  தலைவா உங்கள் வருகை தான் எங்களுக்கு உயிர் துடிப்பு.
  நீங்கள் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

 29. குமரன்

  இந்த பிளாக்மெயிலர் சிங்காரவேலன் மீது காவல் துறையில் புகார் கொடுத்துக் கைது செயதாலன்றி இது போன்ற மிரட்டல் தொழில் ஓயாது.

  இவனைக் கைது செய்து அவமானப் படுத்தவேண்டாம் என்று இருக்கும் நல்லவருக்குக் காலம் இல்லை என்பது தொடர்ந்து நிரூபிக்கப் படுவதுதான் வேதனையாக இருக்கிறது.

 30. S Venkatesan, Nigeria

  மோடியே என் நண்பர் ரஜினி என்கிறார். ஒரு போன் போட்டால், சிங்காரவேலன் பற்றிய மொத்த விவரமும் எடுக்கப்பட்டு வைக்க வேண்டிய இடத்தில அவனை வைக்கலாம்.

  இல்லை என்றால் அவரின் புகழை கெடுத்து மன உளைச்சல் கொடுத்ததற்காக 500 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு போடணும். கோர்ட்டில் வந்து பம்முவான் அந்த நாய்.

  தலைவரிடம் எனக்கு பிடிக்காத விழயம் இதுதான். நல்லவராக இருந்தால் போதுமா? சிங்காரவேலன் கொ@$#ய நசுக்கி கதற விடனும். அப்போதான் என் கோவம் அடங்கும். ரசிகர்கள் பெரும் மன உளைச்சலில் இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *