‘என்வழியில் எழுதினால் மட்டும் போதுமா?’ – கேள்வி பதில் -14
June 27, 2010 by envazhi
Filed under Uncategorized
ஒரு வாசகர் கருத்தும் சில விளக்கங்களும்… – கேள்வி பதில் -14
ஈழம் தமிழ் எனும் பெயரில் கருத்தெழுதும் ஒரு நண்பர் தனது சமீபத்திய கருத்துரையில் இப்படிக் கூறியிருந்தார்:
//One small challenge to Vino (not sure whether you will publish this comment)
You are good on expose these news on seeman, suriya, vivek and asin.. it great… we understand your concerns and support for tamils and voice for them… It is all just in your site… why you can not go above that?
I found that you are one of the tamil cinema news reporter organization (some thing like) active member.. Why you could make move from tamil cinema media to show red card on their media to these people who gone SL and support Mahinda’s actions…If you can really do this small thing, then i really salute you…
And some more thing you could do on this.. such as you could get comments on south india tamil cinema union or who ever made statements earlier and now silent for these recent things which make every to go on track and keep up the words…
What i try to say is rather than just write in your site and expose to your readers and get just comments and fight with them.. you could show some thing above that… Looking forward to seeing your constructive actions which are really needed at this moment.. Pls//
திரு ஈழம் தமிழ்,
என்னைப் பற்றிய தனிப்பட்ட அல்லது துறை சார்ந்த விஷயங்களைக்கூட பொதுவாக பகிர்ந்து கொள்வதில்லை. பத்திரிகையாளனின் நதிமூலம், ரிஷி மூலம் வாசகர்களுக்குத் தேவையில்லாதது என்பதால்.
ஆனால் எல்லோருக்காகவும் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்பதால் இதை இப்போது எழுதுகிறேன்.
மூன்று பத்திரிகையாளர் அமைப்புகளின் செயற்குழுக்களில் உறுப்பினராக இருந்து கொண்டு என்னால் முடிந்த பல விஷயங்களைச் செய்து வருகிறேன். அதில் முக்கியமானது, நான் பணியாற்றும் நிறுவன வெளியீடுகளில் ஈழப் போராட்டத்துக்கு எதிரான விஷயங்கள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்வது. அதில் முழுமையாக வெற்றி பெற்றுள்ளதாக நம்புகிறேன்.
பத்திரிகையாளர்கள் அனைவரையும் ஒருமித்து குரல் எழுப்ப வைப்பதில் பெரும் சவால் உள்ளது. காரணம் என்னைப் போன்றவர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க முடியும். பணியில் சேரும்போதே அதற்கான உறுதியைப் பெற்றுக் கொள்கிறோம். ‘நான் இப்படித்தான். என் எழுத்தும் இப்படித்தான் இருக்கும்’ என்பதைச் சொல்லிவிடுகிறோம். (அதாவது நியாயத்தை முன்னிறுத்தும் விஷயங்களுக்காக. ஆனால் எனக்கு ரஜினியைப் பிடிக்கும் என்பதால், நான் பணியாற்றும் நிறுவனத்துக்கான செய்திகளில், கட்டுரைகளில் அவரைத் திணித்ததில்லை. நடுநிலை, நியாயம் என்னவோ அதையே முன்னிறுத்துகிறேன்..)
ஆனால் எல்லா நிறுவனங்களும் இந்த நிபந்தனைகளை ஏற்பதில்லை. ஏன்.. இன்னும் ஆண்டான்-அடிமை முறையில் நடத்தப்படும் பெரும் பத்திரிகைகளும்கூட இங்கு உள்ளன. இந்தப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் யாரும் எந்த பத்திரிகை அமைப்புகளிலும் உறுப்பினராகக் கூட இல்லை. மீறிச் சேர்ந்தால் வேலை போய்விடும். பத்திரிகைக்கு சுதந்திரம் உண்டு… பத்திரிகையாளருக்கு கிடையாது!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி தினத்தன்று, ஒரு சினிமா நிருபரை, அவர் ஒரு பத்திரிகையாளர் அமைப்பில் உறுப்பினராக சேர்ந்தார் என்பதற்காகவே பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்து, அதை விளம்பரமாகவும் வெளியிட்டது ஒரு பிரபல மாலைப் பத்திரிகை. இதுதான் இங்குள்ள நிலைமை. இதில் இவர்களை ஒன்று திரட்டிப் போராடுவது எத்தனை பெரிய சவால்…?
முன்னணியில் உள்ள நாளிதழ்களில் தினமணி குழுமம் மட்டுமே, தனது பத்திரிகையாளர்களை அவர்களுக்குரிய அனைத்து அமைப்புகளிலும் சேர உற்சாகப்படுத்துகிறது. ஆங்கிலப் பத்திரிகைகளிலும் நிலைமை பரவாயில்லை. பெரும்பாலான வார, மாதப் பத்திரிகைகள் ஆட்சேபிப்பதில்லை. என்றாலும், இன்றுவரை பத்திரிகைகள் என்றாலே நாளிதழ்கள்தான் என்ற தோற்றத்தை மாற்ற முடியவில்லையே. இந்த அடிப்படை சிக்கல் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. அதனால்தான் ஈழப் பிரச்சினை போன்ற உணர்வுப் பூர்வமான விஷயங்களில் பத்திரிகையாளர் அமைப்புகளின் முயற்சிகள் ஒரு சிறு குழு முயற்சியாக மட்டுமே நிற்கிறது.
இதில் முன்னணி நாளிதழ்களின் நிருபர்கள் சிலரை ஹம்சா போன்ற இலங்கையின் தூதர்கள் விலைக்கு வாங்குவதும் தொடர்கிறது. விலைபோகும் இவர்களைத் திருத்த முடிவதில்லை. சுட்டிக் காட்டத்தான் முடிகிறது!
இவர்களிடம் போய், குறிப்பிட்ட நடிகரைப் பற்றி எழுத வேண்டாம் என்றால் கேட்பார்களா… ஒரு உதாரணம்: ஈனப்பிறவிகள் என்று எல்லோரைாயும் சேர்த்துத் திட்டிய சூர்யாவையும், பத்திரிகையாளர் குடும்பப் பெண்களுக்கு பிரா – ஜட்டி பரிந்துரைத்த விவேக்கையும், சின்ன பிரா சின்ன ஜட்டிக்கு பரிந்துரைத்த ‘வாழும் பெரியார்’ சத்யராஜையும் பற்றி, நல்லதோ கெட்டதோ எந்த செய்தியும் எழுதக் கூடாது என்று பத்திரிகையாளர் அமைப்புகள் வலியுறுத்தின. யார் கேட்டார்கள்…?
‘படிக்கிறவங்க கேப்பாங்களே… எழுதியே தீரணும்’ என்று முடிவெடுத்தவர்கள்தான், தங்களையும் பத்திரிகையாளர் என்றே கூறிக் கொள்ளும் பத்திரிகை முதலாளிகள். இவ்வளவு மோசமான, வக்கிர எண்ணம் கொண்ட திரைக் கலைஞர்கள் பற்றி மக்களுக்கு என்ன சொல்ல வேண்டியிருக்கிறது? என்று குறைந்தபட்சம் யோசிக்கக் கூடத் தயாராக இல்லை. வெறும் வியாபாரிகள் பத்திரிகை நடத்துவதில் உள்ள ஆபத்து இது.
எனவே, இவர்களைப் போன்றவர்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருப்பதை விட, ஒரு கருத்தை உருவாக்கி, அதை எரியும் பிரச்சினையாக விஸ்வரூபமெடுக்க வைத்து, இதுவரை ஒதுங்கி நின்றவர்களையும் அதற்குள் இழுப்பதுதான் சரியான உத்தி என்பது என்னைப் போன்றவர்களின் நிலைப்பாடு.
ஐஃபா போராட்டமே செத்துப் போன ஒன்று என சூர்யா கூறியதைப் பற்றி சீமான் அவர்களிடம் நேற்று இரண்டு மணிநேரம் விவாதித்துள்ளோம். இப்போது சீமான் தனது நிலைப்பாட்டிலிருந்து மாறியுள்ளார். (அதை விரைவில் விவரமாகத் தருகிறேன்.)
தடையை மீறி அசின் இலங்கை போனால் என்ன செய்வீர்கள்? என்று நடிகர் சங்க செயலர் ராதாரவி, பெப்சி தலைவர் விசி குகநாதன் மற்றும் நாம் தமிழர் தலைவர் சீமானிடம் நேரடியாகக் கருத்துக்கள் பெற்று முதலில் வெளியிட்டது நான்தான் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. இன்னொன்று அதை என்வழியில் எழுதக்கூட நமக்கு நேரம் கிடைக்கவில்லை என்பதாலேயே இங்கே சொல்கிறோம். இதுபோன்ற விஷயங்களில் என்னை முன்னிறுத்துவதும் தவறு. பிரச்சினைதான் முக்கியம்.
இதையெல்லாம் விட ஒரு முக்கிய விஷயம்… ஐஃபா விழா… அதற்கான அழைப்பிதழை ரஜினி வாங்கவில்லை என்ற சிறு நெருப்பை முதலில் பற்ற வைத்தது நான் எழுதிய செய்திதான். அதன் பிறகுதான் இந்த விவகாரமே போராட்டக் களத்துக்கு முன்னெடுத்துச் செல்லப்பட்டது. அதை சீமான் உள்ளிட்டோர் அறிவார்கள்.
இந்தத் துறையில் ஜாம்பவான்கள் என்று பீற்றிக் கொள்பவர்கள், ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு, லேப்டாப்பிலேயே ஈழப் பிரச்சினையை அலசுவார்கள்.. எங்காவது ஒஸ்தியான ஸ்பா சென்டரில், யாராவது ஒரு புள்ளியின் ஸ்பான்ஸர்ஷிப்பில் படுத்துக் கொண்டு, நெஞ்சில் ரத்தம் வடிவதாகக் கட்டுரை புனைவார்கள். இங்கிருக்கும் சில நடுநிலைப் பத்திரிகையாளர்களையும் இலங்கையின் ஆளும் வர்க்கத்துக்கு கூட்டிக் கொடுக்கும் பெரிய வேலையைப் பார்ப்பார்கள். ராஜபக்சேக்களுடன் கூடிக் குலவி பயணம் போகும் இவர்கள், மக்களை மக்களாகப் பார்த்தே பல காலமாகியிருக்கும். ஆனால் கொடுமை பாருங்கள்… இவர்களின் பத்திரிகைகளையே மக்கள் ஆர்வத்துடன் காசு கொடுத்து வாங்குகிறார்கள்.
என்னைப் போன்றவர்கள் அப்படி இல்லை. இவர்களோடு சமரசம் செய்து கொள்ளும் மனநிலையும் நமக்கில்லை!
என் எழுத்தை எனக்கான ஊடகத்தில்தான் தரமுடிகிறது… அதை முடிந்த வரை வெளியில் கொண்டு சொல்லுங்கள். அதன் தொடர்ச்சியாக ஒரு கருத்து உருவாக்கம் பெற வாய்ப்பிருக்கிறது!
உங்களுக்கு தேவையான பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். நன்றி.
-ஆசிரியர்
ஞாநியின் கோணல் சிந்தனைகள்!
June 12, 2010 by envazhi
Filed under இன்றைய சூடான அலசல்
ஞாநியின் கோணல் சிந்தனைகள்! – விளாசும் தாமரை
பல விஷயங்களில் கருத்து வேறுபட்டு நின்ற தமிழனும் கூட, கைகோர்த்து செயல்பட்டு வெற்றி கண்ட விஷயம், இலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவைத் (ஐஃபா) தோற்கடித்ததுதான்.
சர்வதேச அளவில் போர்க்குற்றவாளியாக நிற்கும் இலங்கையின் ரத்தக் கறையைத் துடைக்கும் மன்மோகன் சிங் அரசின் முயற்சிதான் இந்த ஐஃபா விழா.
இந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத இந்திய ஆட்சியாளர்கள், அடுத்த கணமே டெல்லியில் ராஜபக்சேவுக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு கொடுத்து ‘குளிப்பாட்டி’ அனுப்பியுள்ளனர். ஆனால் என்ன செய்தாலும் கழுவ முடியாத பாவக் கறை அது என்பது குற்றவாளி ராஜபக்சேவுக்கும் அவரது உற்றதுணையான இந்திய ஆட்சியாளர்களுக்கும் போகப் போக புரிந்துவிடும்.
ஐஃபா விழாவை அனைத்துத் தமிழரும் (ஒப்புக்காகவாவது) எதிர்த்து நிற்க, தமிழர்களுள் ஒருவராக, பெரியாரிஸ்டாக, மார்க்சியம் போசுபவராக அவ்வப்போது வேஷம் போடும் ஞாநி ஆதரித்து எழுதியுள்ளார். சினிமாக்காரர்கள் இலங்கைக்குப் போய், தமிழனைக் கொன்று களைத்துப் போயிருக்கிற சிங்களர்களுக்கு களிப்பூட்டியிருக்க வேண்டும் என்பது அவரது (சொத்தை) வாதம்.
எப்போதுமே, பெரும்பான்மை மக்கள் ஒரு விஷயத்தை ஒன்றுபட்டு செய்தால் அதனை எதிர்த்து கருத்து சொல்வது ஞாநி போன்றவர்களின் மனப்போக்கு. அப்போதுதான் நாம் கவனிக்கப்படுவோம் என்கிற எண்ணத்தின் வெளிப்பாடே இது!
சினிமாக்கார்களும், சீமான், வைகோ, நெடுமாறன் போன்றவர்களும் ஐஃபா எதிர்ப்புணர்வை போராட்டங்களாக வெளிப்படுத்திய நேரத்தில், ‘இதெல்லாம் வேலைக்காகாது’ என்று கமெண்ட் அடித்தவர்கள்தான் ஞாநி போன்றவர்கள். இந்த அளவு அந்தப் போராட்டம் வெற்றியடையும், இலங்கையின் முகத்தில் இவ்வளவு பலமாக சாணியடிக்கும் என்றெல்லாம் இவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை. அதன் விளைவுதான், ஐஃபா விழாவுக்கு எல்லோரும் போயிருக்க வேண்டும் என்று ஞாநியை சொல்ல வைத்திருக்கிறது. சீமான் போன்றவர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீச வைத்துள்ளது.
ஞாநியின் இந்த கோணல் சிந்தனைகள் பற்றி கவிஞர் தாமரை இப்படிக் கூறுகிறார்:
“சர்வதேச இந்தியத் திரைப்பட விழா பெருத்த தோல்வியில் முடிந்துள்ளது தமிழகத்திலுள்ள சில அறிவு ஜீவிகளுக்கு மாறாத ஜீரணத்தை ஏற்படுத்தியுள்ளது. கலை, காருண்யம், மனசாட்சி என்று அவர்கள் புளித்த கொட்டாவிகளை பத்தரிகைகளிலும் செய்தி ஊடகங்களிலும் உருவாக்கி வருகிறார்கள்.
தன்னை விமர்சகர் என்று சொல்லிக் கொள்ளும் ஞாநி வார இதழ் ஒன்றில் திரைத் துறையினரின் புறக்கணிப்பை கண்டித்து எழுதியிருக்கிறார். போர் மனிதர்களை பிரிக்குமாம், கலைதான் ஒன்றிணைக்குமாம். தமிழ் திரைத் துறையினர் இலங்கை போய் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்க வேண்டுமாம். ஆனால் அப்படிச் செய்யாமல் மனசாட்சி இல்லாமல் நடந்து கொண்டார்களாம்.
மனசாட்சியை முன்னிறுத்தி இதேபோல் காருண்யத்தின் மடையை ஞாநி அந்தக் கட்டுரையில் எக்கச்சக்கமாக திறந்திருக்கிறார்.
அவை பற்றி மேலும் குறிப்பிடுவதற்குமுன் ஞாநியின் விமர்சன முறை பற்றியும் ஈழப் பிரச்சனையில் அவரது மனநிலை எத்தகையது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இசை விமர்சகர்கள், சினிமா விமர்சகர்கள், அரசியல் விமர்கர்கள் என்று தனித்தனியே இருக்கிறார்கள். இவர்கள் அந்ததந்தத் துறையில் வல்லுனர்களாக இருப்பார்கள்.
ஆனால் ஞாநி ஆகாயத்துக்கு கீழ் உள்ள அனைத்தையும் விமர்சிப்பவர். இதன் காரணமாக அவரது விமர்சனத்தில் தனி மனித விருப்பு , வெறுப்பு எப்போதும் துலக்கமாகவே வெளிப்படும். ஈழப் பிரச்சனையே அதற்கு சரியான உதாரணம். இதே வார இதழில் சென்னையில் சில குடியிருப்புகளை அரசு அகற்றியதைப் பற்றியும் அதன் காரணமாக பள்ளிச் சிறுவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டதையும் ஞாநி விரிவாக எழுதியிருந்தார். கட்டுரை அத்துடன் முடிந்திருந்தால் பரவாயில்லை. ஈழப் பிரச்சனை பற்றி பேசும் எந்த அரசியல்வாதியும் இது குறித்து கவலைப்படவில்லை என்று முத்தாய்ப்பாக முடித்திருந்தார்.
சென்னைக் குழந்தைகளின் படிப்பு விஷயத்தை பேசும் போது எதற்குத் தேவையில்லாமல் ஈழம் குறித்துப் பேசுகிறவர்களை இழுக்க வேண்டும்? உள்ளூர் பிரச்சனைகளை முடித்தப் பிறகுதான் வெளியூர் பிரச்சனைப் பற்றி ஒருவர் கவலைப்பட வேண்டும் என்று அவர் கூற விரும்புகிறாரா? அப்படியானால் இங்குள்ள குடிநீர்ப் பிரச்சனையை முன்னிறுத்தி குஜராத் படுகொலைகள் பற்றி பேசுகிறவர்களை முடக்க முடியும். கொசுப் பிரச்சனையை முன்னிறுத்தி காசா பிரச்சனைப் பற்றி பேசுகிற வாய்களை அடைக்க முடியும்.
ஏன்… ஞாநி கூட உள்ளூர் பிரச்சனைகள் எத்தனையோ முடிக்கப்படாமல் இருக்கும் போது வெளிநாட்டு பிரச்சனைக்கு கண்ணீர் சிந்தியிருக்கிறார். ஆக, அவரது நோக்கம் உள்ளூரா வெளியூரா என்பதல்ல. ஈழம், ஞாநிக்கு அலர்ஜி. அது குறித்துப் பேசுகிறவர்களை எப்படியேனும் மட்டம் தட்ட வேண்டும். மேலே குறிப்பிட்ட அவரது கட்டுரையில் வெளிப்பட்டது இந்த மனநிலைதான்.
ஈழம் குறித்து பேசுகிறவர்கள் உள்ளூர் பிரச்சனைகளைக் கண்டு கொள்வதில்லை என்பதானத் தோற்றத்தை மக்களிடையே உருவாக்கி, அவர்கள் மீது மக்களுக்கு அதிருப்தியை உண்டாக்க வேண்டும் என்பதே ஞாநியின் நோக்கம்.
காரணம், ஈழப் பிரச்சனையில் அவர் தமிழர்கள் சார்பாக நிற்க ஒருபோதும் விரும்பியதில்லை. ஈழப் போராளிகளை முன்னிறுத்தி ராஜபக்சேயின் படுகொலைகளை மறைக்கும் ஒரு படுதாவாகவே அவரது பேச்சும், எழுத்தும் இன்று வரை இருந்து வந்திருக்கிறது.
இதற்காக அவர் தனது உயரிய கொள்கைகள் எனக் கருதுகிறவற்றையே காலில் போட்டு மிதிக்கவும் தயங்கியதில்லை. உதாரணமாக, சோனியாவும், அத்வானியும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைப் பாராட்டி எழுதிய ஞாநி, அரசியல் கருத்து வேற்றுமை உள்ள இருவர் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும், பரஸ்பரம் நலம் விசரிப்பதும் ஆரோக்கியமான செயல் என்று கூறி, அப்படியில்லாத திராவிட கட்சி தலைவர்களைக் குட்டவும் செய்தார்.
இதற்குப் பெயர்தான் நவீன தீண்டாமை!
அதே ஞாநி, ஜெகத் கஸ்பர் பாதரியாரும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் ஒரே மேடையில் தோன்றிய போது தனது கட்டுரையில் இப்படி எழுதினார். ஜெகத் கஸ்பர் புலி ஆதரவாளர். காங்கிரஸ்காரரான கார்த்தி சிதம்பரம் எப்படி அவருடன் ஒரே மேடையில் இருக்கலாம்? அப்படியானால் கார்த்தி சிதம்பரம் ஜெகத் கஸ்பரின் புலி ஆதரவு கொள்கையை ஆதரிக்கிறாரா?
சோனியாவும், அத்வானியும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அத்வானியின் பாபர் மசூதி இடிப்பு கொள்கை காங்கிரஸுக்கு உடன்பாடானதா என்று கேள்வி எழுப்பாமல், அவர்கள் இருவரும் பரஸ்பரம் நலம் விசரித்ததை கொண்டாடிய ஞாநி, ஜெகத்கஸ்பர் விஷயத்தில் மட்டும் ‘நீ யார் பக்கம்?’ என்று வம்படியாக கேள்வி கேட்பது ஏன்?
ஏனென்றால் ஈழமும், ஈழப் போராளிகளும் ஞாநியால் சகித்துக் கொள்ள முடியாதவை. எத்தனை முரண்பட்ட கருத்து கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் பரஸ்பரம் பேசிக் கொள்ளலாம், நலம் விசாரிக்கலாம். ஆனால் ஈழத்தை ஆதரிப்பவன் என்றால் மட்டும் அவனுடன் யாரும் பேசக்கூடாது, பழகக் கூடாது, ஒரே மேடையில் தோன்றக் கூடாது. இதற்கு பெயர்தான் நவீனத் தீண்டாமை.
மேலே உள்ள ஞாநியின் இரு கருத்துகளுமே ஈழம் எத்தனை தூரம் அவருக்கு அலர்ஜி என்பதை உணர்த்திவிடுகின்றன. இதன் எதிரொலிதான் திரைப்பட விழாவைப் புறக்கணித்த திரையுலகினரை மனசாட்சியில்லாதவர்கள் என்று ஞாநி சாடியிருப்பதும்.
மனித மனங்களைப் பிரிப்பது அரசியல், ஒன்றிணைப்பது கலை என்று தனது கட்டுரையில் உருகியிருக்கிறார் ஞாநி. இதில் வேடிக்கை என்னவென்றால் ஞாநி வக்காலத்து வாங்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட அகாடமி கலையையே பிரித்து ஒரு அசிங்கத்தை பல வருடங்களாக அரங்கேற்றி வருகிறது. ஞ
சர்வதேச இந்தியத் திரைப்பட அகாடமி என்று பெயர். இருந்தாலும் இந்தித் திரைப்படங்களுக்கு மட்டும்தான் அவர்கள் விருது வழங்குவார்கள். இந்தியாவில் இருக்கும் தமிழ், மலையாளம், தெலுங்கு, மராட்டி, கன்னடம், வங்கம் என பிற மொழிகளை அவர்கள் கணக்கிலேயே எடுப்பதில்லை. இந்தியா என்றால் அவர்களுக்கு இந்தி மட்டும்தான்.
இந்திய மொழிகளையே மதிக்கவும், இணைக்கவும் தெரியாத ஒரு திமிர் பிடித்த அகாடமியின் முதுகில் ஏறி சிங்களவனையும், தமிழனையும் ஒன்றிணைக்க வேண்டுமாம். உளறலுக்கு ஒரு அளவில்லையா?
இறுதிக் கட்டப் போரில் ஐம்பதாயிரத்துக்கும மேற்பட்ட ஈழத் தமிழர்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்ததற்கு என்ன காரணம்? ராஜபக்சே அரசு மற்றும் புலிகளின் தவறான அரசியலே காரணம் என்று எழுதுகிறார் ஞாநி.
புலிகளை முன்னிறுத்தி கொலைகாரன் ராஜபக்சேவை எப்படி காப்பாற்றுகிறார் பாருங்கள்!
திரைப்பட விழாவுக்கு செல்லாதவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் என்று இரண்டு பக்கம் கண்டிப்பவர், ஆயிரக்கணக்கில் மக்களை படுகொலை செய்தவனை ஒரே வரியில் தாண்டிச் செல்கிறார். இதுதான் அறிவு ஜீவி ஞாநியின் மனசாட்சி. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் வந்தபோதும் நாம் கிரிக்கெட் விளையாடினோம், இப்போது மட்டும் ஏன் இலங்கையை புறக்கணிக்க வேண்டும் என்று இன்னொரு வக்காலத்து.
ஐயா, நாம் இப்போதும் இலங்கையுடன் கிரிக்கெட் ஆடிக் கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் சொல்வது போல் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் வந்தபோது அமிதாப்பச்சன் பாகிஸ்தானில் டான்ஸ் ஆடினாரா என்பதுதான் எங்கள் கேள்வி? இல்லை, மும்பையில் கசாப் தாக்குதல் நடத்திய ஓராண்டு நிறைவு விழாவை பாகிஸ்தானில் விருது விழா நடத்தி கொண்டாடுவார்களா? அதில் கலந்து கொள்ளாத நடிகர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் என்று எந்த விமர்சகனாவது எழுதுவானா?
எத்தனைப் பெரிய யுத்தம் நடந்தாலும் கலைஞர்களும், விளையாட்டு வீரர்களும் கலாச்சார பரிவர்த்தனை நடத்திக் கொண்டிருப்பார்கள் என்றும் எழுதுகிறார் ஞாநி.
நிறவெறி காரணமாக பதக்கத்தை ஆற்றில் எறிந்த முகமது அலியும், அதே நிறவெறி காரணமாக விளையாட்டுத் துறையிலிருந்தே விலக்கி வைக்கப்பட்ட தென் ஆப்பரிக்காவும் இந்த அறிவு ஜீவியின் நினைவுகளிலிருந்து மறந்து போனது துரதிர்ஷ்டம்.
சிங்களவனுக்கும், தமிழனுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட வேண்டும் என்று மாய்ந்து போய் எழுதுகிறார் ஞாநி. இந்த நல்லுறவு கோஷம் ஒரு கொலைகாரனையும், பல்லாயிரம் மக்களின் உயிரை குடித்த ஒரு படுபாதக நிகழ்வையும் சாமர்த்தியமாக மறைக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.
போலீஸ்காரர் ஒருவனிடம் நீ பணத்தைத் திருடினாயா என்று கேட்பதற்கும் திருடிய பணத்தை எங்கு வைத்திருக்கிறாய் என்று கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முதலாவது கேள்வியில் அவன் திருடன் என்பது உறுதி செய்யப்படவில்லை. இரண்டாவது கேள்வியில் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதாவது பணத்தை எங்கு வைத்திருக்கிறாய் என்று கேட்பதன் மூலம் குற்றம் சாற்றப்பட்டவன் நான் திருடனில்லை என்று மறுப்பதற்கான சாத்தியத்தைப் போலீஸ்காரர் நிராகரித்துவிடுகிறார்.
ஞாநி போன்றவர்களின் சிங்கள, தமிழர் நல்லுறவு கோஷமும் இத்தகையதே. நல்லுறவைப் பற்றி கூக்குரல் இடுவதன் மூலம் , நடத்தப்பட்ட படுகொலைகளுக்கெதிரான நீதி எங்கே என்று கேட்கும் குரல்களைத் தாண்டிச் செல்லப் பார்க்கிறார்கள். கொலைகளைப் பற்றியும், கொலைகாரனைப் பற்றியும் பேச முன்வராதவர்கள் கலை பற்றியும், நல்லுறவு பற்றியும் பேச தகுதியில்லாதவர்கள்.
ஞாநி தனது கட்டுரையில் ஈழத் தமிழர்கள் நல்ல திரைப்படங்களை உருவாக்கவில்லை, அதேநேரம் சிங்களவர்கள் உலகத் தரமான படங்களை இயக்கியிருக்கிறார்கள், கண் தானம் செய்வதில் முதலாவதாக இருக்கிறார்கள் என்று எழுதுகிறார். சமீபத்தில் இலங்கைச் சென்று வந்த விமர்சகர் அ.மார்க்ஸ் இதே வார இதழில் எழுதியிருந்த கட்டுரையில், சோழர்களால் இடிக்கப்பட்ட புத்தவிகாரை பார்க்க முடியவில்லை என்று அங்கலாய்த்திருந்தார்.
பிள்ளைக்கறி சாப்பிடுகிற ஒரு கொலைகாரனைப் பற்றி பேசும் போது, இல்லையில்லை அவன் நன்றாகப் பாடக் கூடியவன் என்று சொன்னால் எப்படியிருக்கும்? அதையேதான் இந்த அறிவு ஜீவிகளும் செய்கிறார்கள்.
பல்லாயிரம் உயிர்களைப் பலி வாங்கியதற்கு நாம் நீதி கேட்கிறோம். குற்றவாளிகள் சர்வதேச சமூகத்தின் முன்பாக நிறுத்தக் கூடிய சந்தர்ப்பம் தகைந்து வருகிறது. இந்த நேரத்தில் பிள்ளைக்கறி தின்பவனின் குரல்வளத்தை மெச்சுவதும், உன் முப்பாட்டனுக்கு முப்பாட்டன் அவனது கோயிலை இடித்தான் என்பதும் எத்தகைய சந்தர்ப்பவாதம்?
ஹிட்லரின் படையால் யூதர்கள் கொன்று குவிக்கப்பட்ட வரலாறைப் பற்றி பல நூறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் குறிப்பிடத்தகுந்த படங்களில் ஒன்று ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘சிண்ட்லர்ஸ் லிஸ்ட்’. இந்தப் படத்தில் யூதர்களின் படுகொலைகள் கச்சிதமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. வரலாறை ஸ்பீல்பெர்க் மறு உருவாக்கம் செய்திருந்தார் என்றே சொல்லலாம். ஆனால் இந்தப் படம் வெளிவந்த போது பல அறிவு ஜீவிகள் படத்தை எதிர்த்தனர்.
யூதர்கள் அன்று படுகொலை செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் இந்தப் படம் வெளிவரும் போது நிலைமை மாறிவிட்டது. யூதர்கள்தான் இன்று பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்தி கொடூரமான ஆக்கிரமிப்பை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் யூதர்கள்பால் கருணை ஏற்படுத்தும் சிண்ட்லர்ஸ் லிஸ்டை ஸ்பீல்பெர்க் உருவாக்கியிருக்கக் கூடாது என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுருக்கமாக ஆக்கிரமிப்பு யூதர்களுக்கு ஆன்ம பலம் தராதீர்கள்.
இந்த அறிவு வெளிச்சம் நமது அறிவு ஜீவிகளுக்கு இல்லாது போனது நமது துரதிர்ஷ்டம்தான். எதிரியின் கருணையை நம் மீது பீய்ச்சியடிப்பதன் மூலம், நடந்த படுகொலைக்கான நீதியை இவர்கள் தாமதப்படுத்துகிறார்கள். எதிரியின் நல்ல அம்சங்களைப் பட்டியலிடுவதன் மூலம், பார் நான் எவ்வளவு நடுநிலையான விமர்சகன் என்று மார்த் தட்டிக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் மார்த் தட்ட கொடுக்கப்படும் விலை எத்தகையது என்பதை அறிவு ஜீவிகள் உணர வேண்டும்.
தமிழ் அமைப்புகளும், தமிழ்த் திரையுலகமும் மேற்கொண்ட முயற்சிகளும் அதன் பலன்களும் காலத்தின் கட்டாயம். அதற்கு ஒத்துழைத்ததன் மூலம் ஒவ்வொரு கலைஞனும், தமிழனும் படுகொலைச் செய்யப்பட்ட அப்பாவி ஈழத் தமிழனுக்கு நேர்மையான அஞ்சலியை செலுத்தியிருக்கிறான். இந்த அஞ்சலிதான் ஒவ்வொரு தமிழனின் சாலச் சிறந்த மனசாட்சியாக இருக்க முடியும்!
மாபலி விருந்துக்கு அழைப்பிதழ்!
மாபலி விருந்துக்கு அழைப்பிதழ்!
சில தினங்களுக்கு முன் விகடனில் வெளிவந்த மாலதி மைத்ரியின் கவிதை இது. கட்டுப்படுத்த முடியாத ஆற்றாமையில் வந்து விழுந்துள்ள வரிகள். சமகால இனத் துரோகிகளுக்கு இதெல்லாம் உரைக்குமா தெரியவில்லை…
ஆன்றோரே சான்றோரே
பேரரறிஞர்களே மூதறிஞர்களே
கவிஞர்களே கலைஞர்களே
அரசு ஊழியர்களே
என் உயிரினும் உயிரான தமிழர்களே
நாம் சுவாசித்தது ஒரே காற்று
நாம் பேசியது ஒரே மொழி
நாம் நடத்தியது ஒரே பேரம்
நாம் விதித்தது ஒரே விலை
நாம் விற்றது ஒரே இனம்
காட்டிக்கொடுக்க நீண்டதும்
நம் ஒரே விரல்
நாம் செய்ததும் ஒரே துரோகம்
இம்மாபெரும் வரலாற்றை
நாம் சாதித்த ஓராண்டின் நிறைவைக்
கொண்டாடும்
விருந்துக்கு அழைக்கிறேன்
உலகே தமிழ் மண்ணில் திரளட்டும்
விரோதி வருடம்
சித்திரை ஐந்தாம் நாள்
வங்கக் கடல் தீவில்
சிங்கப் படைகள்
சில லட்சம் மக்களைக் கொன்றொழித்து
சீர்மிகு வரலாறு படைத்த
மாபலி நாளின்
மாண்பினைப் போற்றும் வகையில்
இச்சித்திரை மாதம்
பௌர்ணமி தினத்தில்
மனிதகுலமே கண்டிராத வகையில்
மாபெரும் விருந்து நடக்கிறது
அனைவரும் கலந்துகொண்டு
விருந்தினைச் சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்
அறுக்கப்பட்ட மென்முலைகள்போன்ற
இட்லியுடன் பிள்ளைக்கறி பிசைந்த
செவ்வரிசிச் சோறு
மதுவருந்தும் கவிஞர்களுக்கு மட்டும்
நுரை பொங்கும் செங்குருதியுடன்
மூளை வறுவல் வழங்கப்படும்
இதிலுள்ளவை தவிர்த்து
சிறப்புணவு தேவையெனில்
மூன்று தினங்களுக்கு முன்
எங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தால்
தீவிலிருந்து
தனி விமானத்தில்
தருவித்துத் தர ஏதுவாக இருக்கும்
உலகச் சமூகமே வியந்து நிற்க
உலகத் தமிழர்கள் ஒன்றாய் நின்று
இப்பலி விருந்தைச் சிறப்பிக்கும்படி
கேட்டுக்கொள்கிறேன்.
இவ்விருந்தை வழங்குபவர்கள்
ஹைடு அண்ட் சீக் வேர்ல்டு விஷன்
ஹனி டியூ அண்ட் ஸ்பிரிங் பிரிவரிஸ்,
ஆன்ட்டி வார் அண்ட் பீஸ் ஹன்டர்ஸ்,
வேர்ல்டு நைட்ரோ கெமிக்கல்ஸ்,
இன்டர்நேஷனல் வார் கிரிமினல்ஸ் அசோஸியேஷன்.
குறிப்பு: தவிர்க்க இயலாத காரணத்தால் ஆங்கிலத்திலேயே அயல் நாட்டு நிறுவனங்களின் பெயர்கள் அச்சிடப்பட்டு உள்ளன. இதைப் பிழையாகக் கருதி தமிழ்ப் பற்றாளர்கள் விருந்துக்கு வராமல் இருந்துவிடக் கூடாது. இது எங்கள் அன்புக் கட்டளை!
நன்றி: ஆனந்த விகடன்
மும்பையில் குண்டு வைத்த பாகிஸ்தானியர்களுடன் உல்லாச நடனம் ஆடுவார்களா? – சீமான்
மும்பையில் குண்டு வைத்த பாகிஸ்தானியர்களுடன் உல்லாச நடனம் ஆடுவார்களா? – சீமான்
சென்னை: தமிழ் உணர்வாளர்களும், தென்னகத் திரைத் துறையினரும் எவ்வளவோ எடுத்துக் கூறியும், தமிழர் வேதனையைச் சொல்லியும் கேளாமல் கொழும்பு விழாவில் கூத்தடித்த இந்தி நடிகர்கள், மும்பையில் குண்டுவைத்த பாகிஸ்தானியர்கள் அழைத்தாலும் இதே மாதிரி போய் கூத்தடிப்பார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
ஈழத்தில் 1 லட்சததுக்கும் மேல் கடந்த ஆண்டு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இன்று அனைத்துலக நாடுகள் ராஜபக்சே மீதும், சிங்கள ராணுவத்தின் மீதும் போர்க்குற்றங்களைச் சுமத்தி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளன.
தமிழினத்தை கொலை செய்த பெரும் குற்றத்தை சர்வதேசத்தின் கண்களில் இருந்து மறைக்க கொழும்புவில் சர்வதேச திரைப்பட விழாவை நட்த்துகின்றது. இதில் பங்கேற்க இருந்த அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நாம் தமிழர் இயக்கத்தின் எதிர்ப்பு காரணமாக கலந்து கொள்ள மறுத்து விட்டனர். அதைப்போல தென்னிந்தியாவைச் சேர்ந்த எந்த நடிகர் நடிகைகளும் கல்ந்து கொள்ளக்கூடாது என்று தென்னிந்திய திரையுலகம் தடை விதித்தது.
ஆனால் அதனை மீறி இந்தி நடிகர்கள் ஹிரித்திக் ரோஷன்,விவேக் ஓபராய், கத்ரினா கைப், கரீனா கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு எதிராக நாம் தமிழர் இயக்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இவர்கள் நடித்த படங்களை திரையிட எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் ஹிருத்திக் ரோஷன் நடித்த கைட்ஸ் படம் ஈகா,சத்யம்,ஐநாக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்பட்டிருந்த்து. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றுமுன்தினம் நாம் தமிழர் இயக்கம் சார்பில் திரையரங்க உரிமையாளர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து திரையிட்டால் திரையரங்கு முன் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. நாம் தமிழர் இயக்கத்தின் வேண்டுகோளை ஏற்று அனைத்து திரையரங்குகளில் இருந்தும் படம் தூக்கப்பட்டது.
அதைப்போல மதுரையில் உள்ள பிக் பி திரையரங்குகளில் கத்ரினா கைப் நடித்த ‘ராஜி சீட்டி’ எனும் படம் திரையிடப்பட்டிருந்த்து. மதுரை நாம் த்மிழர் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று அந்த திரையரங்கில் இருந்து இன்றிலிருந்து படம் தூக்கப்பட்டது.
எம் தமிழினம் அங்கு செத்துக் கொண்டிருக்கையில் இவர்கள் அவர்களின் கல்லறை மீது நின்று கொண்டு உல்லாச நடனம் நிகழ்த்துகின்றார்கள். எங்களின் ஒப்பாரியை மறைக்க கும்மாளம் ஆடுகின்றார்கள்.
இது எங்களைக் காயப்படுத்துகின்றது. ஆகவே நாங்கள் இவர்களுக்கு எதிராய் அனைத்து போராட்டங்களையும் நடத்துவோம்.
மும்பை குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்படும் பாகிஸ்தானில் போய் இவர்கள், எதிர்ப்பை மீறி உல்லாச நடனம் நிகழ்த்தமுடியுமா? அப்படி நட்த்தி விட்டு இவர்கள் தாயகம் திரும்பி வர முடியுமா?
தமிழன் என்றால் இளிச்சவாயன் என்று நினைப்பா? ஆகவே கொழும்பு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அனைவரின் படங்களும் திரையிடப்படுவதை கடுமையாக எதிர்ப்போம். அவர்களின் திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் இயக்கம் போராட்டம் நடத்தும்.
அறிவித்தபடி, இந்திப் படங்களுக்கு தென்னகத்தின் 5 மாநிலங்களிலும் இந்த நடிகர்களின் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
தனி ஈழமே தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு! – லீ க்வான் யு
June 5, 2010 by envazhi
Filed under கட்டுரைகள்
ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி: அவரைத் திருத்தவே முடியாது! – சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ க்வான் யு
இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது. தனி ஈழம் ஒன்றே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்று கூறியுள்ளார் சிங்கப்பூரின் முதல் பிரதமரான் லீ க்வான் யு.
சர்வதேச அளவில் மிகவும் மதிக்கப்படும் தலைவர்களில் லீ க்வான் யுவும் ஒருவர். இவரது மகன்தான் தற்போதைய சிங்கப்பூரின் பிரதமர். மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்த பிறகு, எந்த இயற்கை வளமும், குடிநீர் வசதியும் கூட இல்லாமல் தவித்த சிங்கப்பூரை பெரும் வர்த்தக மையமாக மாற்றியவர். வல்லரசுகளுக்கு இணையாக உருவாக்கியவர் என புகழப்படுபவர்.
இன்றும் சிங்கப்பூர் அரசில், அமைச்சர்களின் வழிகாட்டி (Ministers Mentor) என மூத்த அமைச்சர் பொறுப்பை வகிக்கிறார் லீ.
லீ குவான் யுடனான உரையாடல்கள் என்ற தலைப்பில் சமீபத்தில் ‘Citizen Singapore: How To Build A Nation – Conversations with ’ என்றக நூல் வடிவில் வெளியாகியுள்ளது.
அந்த நூலில் இலங்கை இனப் பிரச்சினை குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் லீ குவான் யு விரிவாக விளக்கியுள்ளார்.
இலங்கைப் பிரச்சினை குறித்து அவர் இப்படி கூறியுள்ளார்:
இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர்.
ஆனால் தொடர்ச்சியான சிங்களர் மேலாதிக்கம் இரு இனங்களுக்குள்ளும் மோதலை ஏற்படுத்திவிட்டது. தமிழரின் உரிமைகளை தெரிந்தே மறுக்கிறது சிங்களம். அரசியல் அதிகாரத்துக்காக சிங்களர்களை தமிழர்களுக்கு எதிராகத் தூண்டி வருகிறார்கள் சிங்கள அரசியல்வாதிகள்.
இலங்கை மகிழ்ச்சியான நாடாக இனியும் இருக்க முடியாது. தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இனி உருவாகவும் முடியாது.
இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை அங்கு நிலைமை இப்படித்தான் இருக்கும்.
இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டு விட்டனர். இதன் மூலம் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் அடங்கிக் கிடக்க மாட்டார்கள், சிங்களர்களுக்குப் பயந்து ஓடிவிடவும் மாட்டார்கள். ஏதாவது ஒரு வடிவில் தொடர்ந்து போராடுவார்கள். சர்வதேசம் இதனை மெதுவாகப் புரிந்து கொண்டுள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்ற முடியும் என்று நான் நம்பவில்லை. அவரைத் திருத்தவே முடியாது” என்று கூறியுள்ளார்.
தமிழருக்குதான் அதிக மரியாதை தர வேண்டும்!
அவரிடம் இந்த நூலின் ஆசிரியர் டாம் பிளேட் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.
“இலங்கை இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. மெஜாரிட்டியான சிங்களர்கள், விடுதலைப் புலிகளை அழித்து விட்டனர். உண்மைதான். ஆனால், சிறுபான்மையினரான தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை. யாழ்ப்பாணம் தமிழர்களை அவர்களால் நிச்சயம்வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முயலுகிறார்கள்.
முன்பும் இப்படித்தான்செய்தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முயலுகிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்த விட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன்.
இலங்கையில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்பத்தான் சிங்கள அரசு இப்போது நடந்துகொண்டிருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை, சிங்களர்களை விட தமிழர்களுக்குத்தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள்தான்.
மலேசியா, சிங்கப்பூரில் போய்ப் பார்த்தால் மலாய் இனத்தவரை விட சீனர்களும், தமிழர்கள் உள்ளிட்டோரும்தான் கடுமையாக உழைக்கிறார்கள். அதேபோல இஸ்ரேலியர்களும், ஜப்பானியர்களும் மிகக் கடுமையான உழைப்பாளிகள். எதிர்கால உலகம் சீனர்கள் மற்றும் ஆசியர்களிடம்தான் இருக்கப் போகிறது,” என்று கூறியுள்ளார் லீ.
இந்த நூலை முன்னணி பத்திரிக்கையாளரும், லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்தவருமான பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு எழுதியுள்ளார். இதை வெளியிட்ட நிறுவனம் டைம்ஸ் குழுமத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழவே முடியாது, தமிழ் ஈழம் மலர்ந்தால்தான் இலங்கையில் அமைதி திரும்பும் என்பதை தனது கருத்தின் மூலம் அழுத்தம் திருத்தமாக லீ வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீ க்வான் யு பற்றி…
1923-ல் பிறந்த லீ க்வான் யுவுக்கு இப்போது 86 வயது. 1959-ல் சிங்கப்பூரின் பிரதமரானார். 1990-ம் ஆண்டு வரை 31 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமாராக இருந்தவர். உலகில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர்.
1990 நவம்பரில், தானே முன்வந்து பதவி விலகினார். ஆனால் அவரது நிர்வாகத் திறன் சிங்கப்பூருக்கு முழுவதுமாக பயன்பட வேண்டும் என்பதற்காக 1990-ம் ஆண்டு மூத்த அமைச்சர் என்ற பதவியை உருவாக்கினர். அவரை வழிகாட்டியாகக் கொண்டு ஆட்சியைத் தொடர்ந்தார் புதிய பிரதமர் கோ சோ டோங்.
2004-ம் ஆண்டு லீயின் மூத்த மகன் லீ ஸெய்ன் லூங் சிங்கப்பூர் பிரதமராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து அமைச்சர் வழிகாட்டி என்ற புதி்ய அமைச்சு உருவாக்கப்பட்டு அதில் லீ க்வான் யு அமர வைக்கப்பட்டார். உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அமைச்சகம் இது. லீயின் வழிகாட்டுதல்களுடன் அமைச்சரவையை நடத்த உருவாக்கப்பட்டது இந்தப் பதவி. ஆக 1959லி-ருந்து பதவிகளின் பெயர் மாறினாலும், சிங்கப்பூர் அரசின் பிரிக்க முடியாத அங்கமாகத் திகழ்பவர் லீ.
உலகில் தனக்கு மிகப் பிடித்த அரசியல் தலைவர் மற்றும் நிர்வாகி லீ க்வான் யுதான் என பல முறை தனது பேட்டிகளில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளது நினைவிருக்கலாம்.
-என்வழி
‘போர்க் குற்றவாளி ராஜபக்சே’வுக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்! – பழ நெடுமாறன்
‘போர்க் குற்றவாளி ராஜபக்சே’வுக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்! – பழ நெடுமாறன் அறிவிப்பு
சென்னை: வரும் ஜூன் 8ம் தேதி இந்தியாவுக்கு வரும் ராஜபக்சவுக்கு எதிராக சென்னையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளிட்ட அறிக்கை:
இலங்கையில் கடந்த ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே ஜூன் 8ஆம் நாள் இந்திய அரசின் அழைப்பின் பேரில் வர இருக்கிறார்.
அயர்லாந்தின் தலைநகரமான டப்ளினில் கூடிய சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என முடிவு செய்து, சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் அவர் நிறுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது.
ஐ.நா. பேரவையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கையில் நடந்த போர் அத்துமீறல்கள் குறித்து ஐ.நா. விசாரணை மன்றம் ஒன்றை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். பல்வேறு நாடுகளும் ராஜபக்சேவின் போர்க்குற்றம் குறித்து விசாரனை நடத்தப்பட வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன.
உலக சமுதாயத்தினால் போர்க் குற்றம் புரிந்தவர் என சுட்டிக் காட்டப்பட்டுள்ள ராஜபக்சேவுக்கு இரத்தினக் கம்பள வரவேற்பை இந்திய அரசு அளிக்க இருப்பதை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்திய அரசின் இந்த செயல் தமிழக மக்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை ராஜபக்சேவுக்கு தெரிவிக்கும் வகையில் ஜூன் 8ஆம் நாள் காலை 10மணிக்கு சென்னையில் இலங்கைத் தூதுவர் அலுவலகம் முன்பாக மாபெரும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அதே நாளில் அதே நேரத்தில் தமிழகமெங்கும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகள், அனைத்துத் தமிழ் அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளாகக் கலந்துகொண்டு நமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்த வேண்டும்” என்று அந்த அறிக்கையில் பழ நெடுமாறன் கூறியுள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசு… தேர்தல் முடிவுகள்!
May 3, 2010 by envazhi
Filed under உலகம் & இலங்கை
நாடு கடந்த தமிழீழ அரசு… நியூஸி., சுவிஸ், நார்வே தேர்தல் முடிவுகள்
பெர்ன்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் பற்றிய விபரங்களை பொறுப்பாளர்கள் அறிவித்து வருகின்றனர்.
நாடுகடந்த தமிழீழ அரசுக்காக 135 பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல்கள் உலகின் பல்வேறு நாடுகளில் நேற்று நடந்தது. இப்போது பல நாடுகளிலும் வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது.
முதல் முடிவு நியூஸிலாந்து நாட்டிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டிலிருந்து இரண்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரம் உள்ளிட்ட வடக்குப் பகுதியின் பிரதிநிதியாக தேவராஜன் ஆறுமுகம் வெற்றி பெற்றுள்ளார்.
வெலிங்டன் நகரம் உள்ளடங்கலான நியுசிலாந்தின் மற்ற பகுதிகளுக்கான பி்ரதிநிதியாக கலாநிதி சிவபாதம் நகுலேஸ்வரன் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதன்மை தேர்தல் அதிகாரி ஜான் மின்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
நார்வே
நார்வே நாட்டிலிருந்து 3 பிரதிநிதிகள் தேர்வாகியுள்ளனர்.
அவர்கள் விவரம்:
நார்வேயின் கிழக்குப் பிராந்தியத்துக்காக, ஜெயசிறி பாலசுப்ரமணியம், முரளி சிவானந்தன் ஆகியோரும், மற்ற பிராந்தியத்துக்காக சிவகணேசன் தில்லையம்பலமும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சுவிட்ஸர்லாந்து
சுவிட்ஸர்லாந்து பிரதிநிதிகளின் விபரங்களை சுவிஸ் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
சுவிஸின் ஏழு தேர்தல் தொகுதிகளின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பிரதிநிதிகள் விபரம் வருமாறு:
தேர்தல் தொகுதி 1 Bern, Solothurn
செல்வி. புத்திரசிகாமணி சுகன்யா
வீரகத்தி சுந்தரலிங்கம்
தேர்தல் தொகுதி 2 Zürich, Schaffhausen, Thurgau
செல்வராசா ஜெயம்
ஆழ்வாப்பிள்ளை தயானந்
மகாலிங்கம் பாஸ்கரலிங்கம்
தேர்தல் தொகுதி 4 Luzern, Zug, Nidwalden, Obwalden, Schwyz, Uri
பாலன் சிவபாதம்
தேர்தல் தொகுதி 5 Vaud, Valais, Genève, Fribourg, Neuchâtel
சின்னதம்பி இரஜனிதேவி
முருகையா சுகிந்தன்
தேர்தல் தொகுதி 6 – Graubünden, Glarus, St.-Gallen, Apenzeller
சிவராஜா சிறிசயீதா
தேர்தல் தொகுதி 7 – Tessin / Ticino
செல்லத்துரை மகேந்திரம்பிள்ளை
மேலும் தேர்தல் தொகுதிகள் 3, 5 ல் பிரதிநிதிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதிநிதிகள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
இதே போல உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் தேர்தல் முடிந்து, வெற்றி பெற்றோர் விபரங்கள் வரத் துவங்கியுள்ளன.
இனி ஆயுதப் போராட்டமே எங்கள் அகராதியில் இல்லை! – ருத்ரகுமாரன்
April 20, 2010 by envazhi
Filed under உலகம் & இலங்கை
நாடுகடந்த தமிழீழ அரசு என்ன சாதிக்கும்? – ருத்ரகுமாரன் பதில்
எங்கள் அகராதியில் இனி ஆயுதப் போராட்டம் என்பதே இல்லை என்று கூறியுள்ளார் நாடுகடந்த தமிழீழ அரசின் ஒருங்கிணைப்பாளரான விசுவநாதன் ருத்திரகுமாரன்.
ஜூனியர் விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டி:
தேர்தல் பணி எப்படிப் போகிறது?
இந்தத் தேர்தலில் உலகெங்கும் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும், பல்வேறு இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் போட்டி போடலாம். அனைவருமே ஜனநாயக முறைப்படி தேர்ந் தெடுக்கப்படுவார்கள். அதற்கேற்ற முறையில் தேர்தல் விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
யார் நிஜமான வாக்காளர்கள் என்பது எப்படித் தெரியும்… இந்தத் தேர்தலிலும் கள்ள ஓட்டுக்கு வாய்ப்பிருக்கிறதே?
ஈழத் தமிழர்கள் அனைவருமே வாக்காளர்கள்தான். இதில் ஈழத் தலைவர்கள் அனைவருமே போட்டியிடப் போவதில்லை. ஆகவே, போட்டியிடாத தலைவர்கள் இந்த தேர்தலை முறைப்படி நடத்த உதவுவார்கள். அடையாள அட்டை காண்பித்தே வாக்கு களைப் போடமுடியும். எலெக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு அல்ல. அந்தந்த ஊரில் நாங்கள் நியமிக்கும் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்படும். அனைத்துமே நியாய மான முறையில் நடத்தப்படும்!
நாடு கடந்த தமிழீழ அரசால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்ற விமர்சனங்களும் கிளம்புகிறதே?
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளே எம்மக்களை வழிநடத்திச் செல்லத் தகுதியானவர்கள். சர்வதேச நாடுகளுடனும், இன்னொரு அரசிடமும் பேச அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரும் நாடுகள், இந்த புதிய அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேச ஏன் முன்வராது?
ஆனால், ஆயுதப் போராட்டம் என்பதோ… வன்முறை வழியோ இனி எங்கள் அகராதியில் கிடையாது. ஈழத் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளின் சட்ட திட்டத்தை மதித்து செயல்படுவோம். சட்டவிரோதமாக எதையும் செய்ய மாட்டோம்.
நாடு கடந்த தமிழீழ அரசு எத்தகையதாக அமையும்?
நடக்கிற தேர்தலில் இளைஞர்களையும், பெண்களையும் அதிக அளவு போட்டியிடக் கோரி வலியுறுத்துவோம். ஆக்கபூர்வ மான முன்னெடுப்புகளை எடுக்கிற அரசாகவும், மதச்சார்பு அற்றதாகவும் நாடு கடந்த தமிழீழ அரசு அமையும்.
ருத்ரகுமாரனின் மறுப்பு
ஆனால் இந்தப் பேட்டியை மறுத்துள்ளார் ருத்ரகுமாரன். ஆயுதம் போராட்டம் பற்றி என்னிடம் எதுவும் பேசப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து தமிழகத்தின் சஞ்சிகையொன்றில் இவ் வாரம் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ள ஆயுதப்போராட்டம் குறித்த கருத்துக்கள் எவையும் என்னால் தெரிவிக்கப்படாதவை.
ஆயுதப்போரட்டம் பற்றி எதுவுமே என்னுடன் பேசப்படவில்லை. இவை தவிர அதில் உள்ள ஏனைய சில விடயங்களும் எனது கருத்துக்கள் அல்லாதவை. உண்மையில் நான் அச் சஞ்சிகைக்கு பேட்டி எதனையும் வழங்கியிருக்கவுமில்லை. அச் சஞ்சிகையின் கட்டுரையாளருடன் நான் மேற்கொண்டிருந்தது தேர்தல் நடைமுறை தொடர்பான ஒரு சிறு உரையாடல் மட்டுமே. நான் குறிப்பிடாத, எனது கருத்துக்கள் அல்லாத விடயங்கள் எனது பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தமையால் இம் மறுப்பை இவ்விடத்தில் பதிவு செய்கிறேன்.
தமிழக மக்களும் ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலையை தமது நெஞ்சிருத்திச் செயற்படும் தலைவர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலை மீதும் தாங்கள் கொண்டிருக்கும் பற்றுறுதியினையும் அதற்காக வழங்கி வரும் பேருழைப்பையும் நாம் என்றும் பெரும் மதிப்புடன் நினைவிற் கொள்கிறோம்…” என்று கூறியுள்ளார் ருத்ரகுமாரன்.
தனி ஈழக் கோரிக்கையை கைவிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு!
தனி ஈழக் கோரிக்கையை கைவிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு!
கொழும்பு: எந்தக் கோரிக்கைக்காக
பல்லாயிரம் ஈழத் தமிழர்களும், போராளிகளும் மடிந்தார்களோ, அந்த தனி ஈழக் கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்துவிட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
மேலும், இனிவரும் காலங்களில் காந்திய வழியில் போராட்டம் நடத்தப் போவதாகவும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
எத்தனையோ இழப்புகள், துயரங்கள் தாக்கிய பின்னும், தமிழ் மக்களின் ஒரே கோரிக்கையாக பார்க்கப்பட்டது, தனி தமிழ் ஈழம்.
இந்தக் கோரிக்கைக்காகத்தான் பல்லாயிரம் போராளிகள் களத்தில் மாண்டனர். அப்பாவித் தமிழ் மக்கள் துடிக்க துடிக்க கொல்லப்பட்டனர். போரின் கடைசி தினங்களில் 20 நாள்களில் 27 ஆயிரம் உயிர்கள் பறிக்க்கப்பட்டதாக டைம்ஸ் இதழ் தெரிவித்தது. ஆனால் இன்று ஒன்றுபட்ட இலங்கையே வேண்டும், பிராந்திய சுயாட்சி இருந்தால் போதும் என்று ததேகூ அறிவித்துள்ளது.
இலங்கையில் வரும் ஏப்ரல் 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தனது தேர்தல் அறிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கிழக்கு மற்றும் வடக்குப் பகுதி இணைந்த ஒன்றுபட்ட இலங்கை என்ற கருத்தையே வலியுறுத்துகிறோம்.
1987-ல் ஏற்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் அப்பகுதிகளுக்கு பிராந்திய சுய ஆட்சி வழங்க வேண்டும்.
இலங்கையில் தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளுக்காகவும் கட்சி போராடும். இது தொடர்பாக நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அரசுடன் பேச்சு நடத்தப்படும்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியை பிரித்ததன் மூலம் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை அரசு மீறிவிட்டது. இலங்கையில் இதுவரை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளும் தமிழர்களின் நியாயமான உரிமைகளை மறுத்து வந்துள்ளன.
தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து இந்தியாவும் மற்ற உலக நாடுகளும் பலமுறை கவலை தெரிவித்தும் இலங்கை அரசு அதனை பொருட்படுத்தவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்று கூறி தமிழர்களுக்கு எதிராக பலமுறை மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன.
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போதைய காலகட்டத்தில் இலங்கையில் தமிழர்களும்- முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் செயல்படுவது அவசியம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமைதி வழியில் ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட காந்திய வழிகளில் இனி நடை போடப் போவதாகவும் அது கூறியுள்ளது.
உலகம் முழுக்க உள்ள புலம்பெயர் தமிழர்கள் வட்டுக்கோட்டை தீர்மானம் (தனி ஈழம்) வாக்கெடுப்பு நடத்தி வரும் இந்த நேரத்தில் ததேகூ ஒன்றுபட்ட இலங்கை போதும் எனக் கேட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனும் இயக்கத்தை உருவாக்கியதே விடுதலைப் புலிகள் அமைப்புதான். இன்று அந்த அமைப்பு, புலிகளின் பிரதானக் கோரிக்கையான தமிழ் ஈழ கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்துள்ளது ஈழப்போராட்ட வரலாற்றில் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
முத்துக்குமார் நினைவு நாள்… வைகோ, நல்லகண்ணு, நெடுமாறன் அஞ்சலி
முத்துக்குமார் நினைவு நாள்… வைகோ, நல்லகண்ணு, நெடுமாறன் அஞ்சலி
ஈழத்தில் நடந்த தமிழர் படுகொலையை உலகமே கைகட்டி வேடிக்கைப் பார்த்த போது, தன் கையறு நிலையை எண்ணிக் கலங்கி, தன்னையை தீக்கிரையாக்கிக் கொண்ட இளைஞர் முத்துக்குமார்.
சரியாக ஒரு வருடத்துக்கு முன் இதே நாளில் அந்த துயர சம்பவம் சென்னை சாஸ்திரி பவன் எதிரே நடந்தது.
அந்த இளைஞருக்கு நினைவஞ்சலி செலுத்த தமிழகம் முழுக்க பல்வேறு அமைப்புகள் கூட்டங்களையும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றன.
அவர் வாழ்ந்த கொளத்தூரில் இன்று – வெள்ளிக்கிழமை-நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. குமரன் நகரில் உள்ள முத்துக்குமார் வீட்டின் முன்பு 19 அடி உயரத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. அதில் முத்துக்குமார் உள்பட ஈழத் தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த 19 பேரின் உருவப் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த நினைவுத் தூணுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நல்லக்கண்ணு, மகேந்திரன், இயக்குநர் சீமான், புலவர் புலமைபித்தன், கவிஞர் தமிழருவி மணியன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
முன்னதாக முத்துக்குமாரின் தந்தை குமரேசன், தங்கை தமிழரசி, மற்றும் குடும்பத்தினர் மலர் தூவினர்.
நாகர்கோவிலில் இருந்து முத்துக்குமார் நினைவு ஜோதி கொளத்தூருக்கு கொண்டுவரப்பட்டது. நினைவு நாளையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முத்துக்குமார் பெயர்…
முத்துக்குமார் தீக்குளித்து இறந்த சாஸ்திரி பவனில் தடையை மீறி தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் வேலு மணி தலைமையில் உள்ளே நுழைந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சாஸ்திரி பவன் முன் உள்ள ரோட்டுக்கு முத்துக்குமார் பெயர் சூட்ட வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.
முத்துக்குமார் நினைவு நாளையொட்டி மாலை 6 மணிக்கு பெரவள்ளூர் சதுக்கத்தில் அஞ்சலி கூட்டம் நடக்கிறது. பழ.நெடுமாறன் இக்கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் பேசுகிறார்கள். தென்சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் கூட்ட ஏற்பாடுகளை செய்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் சார்பில் தங்கசாலையில் இன்று இரவு பொதுக்கூட்டம் நடக்கிறது. விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் இதில் பேசுகிறார்.
தஞ்சையில் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் முத்துக்குமாரின் முதலாமாண்டு நினைவாக, தெருமுனைக் கூட்டம் சுடரோட்டம் கருத்தரங்கம் ஆகியவை இன்று (29.01.2010) நடத்தப்படுகின்றது.
கருத்தரங்கை ஒட்டி இன்று காலை தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில், தெருமுனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5 மணியளவில், பள்ளியக்கிரகாரத்திலிருந்து, முத்துக்குமார் நினைவுச் சுடரோட்டம நடத்தப்படுகின்றது. மாலை 6 மணியளவில் ஆப்ரகாம் சாலையில், கருத்தரங்கம் நடைபெறுகின்றது. கருத்தரங்கிற்கு, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை தலைமை தாங்குகிறார்.
காசி ஆனந்தன்…
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நகர அமைப்பாளர் புலவர் கோ.நாகேந்திரன் பாவீச்சு நிகழ்த்துகிறார். ஈழத்தின் எதிர்காலம் என்ற தலைப்பில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும், முத்துக்குமாரின் இறுதி அறிக்கையும் தமிழ்த்தேசியமும் என்ற தலைப்பில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் அவர்களும் கருத்துரை வழங்குகின்றனர்.
பரமக்குடியில் இன்று கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
முத்துக்குமார் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூரில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் நினைவேந்தல் கருத்தரங்கம் நடத்தப்படுகின்றது.
01.02.2010 அன்று மாலை ஆத்தூர் கடைத்தெருவில் நடக்கும் கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினது ச.தமிழ்மணி தலைமை தாங்குகிறார். கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.
சென்னை தாம்பரத்தில் 13.02.2010 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழக இளைஞர் முன்னணி அமைப்புகள் சார்பில் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்படுகின்றது.
லண்டன் உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களிலும் முத்துக்குமாருக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.
ஓரணியில் திரள்வோம்! – விடுதலைப் புலிகள்
ஓரணியில் திரள்வோம்! – விடுதலைப் புலிகள்
தனி நபர் விமர்சனங்களைத் தவிர்த்துவிட்டு, தமிழர் அனைவரும் ஓரணியில் திரண்டு தமிழீழம் காணும் முயர்சியில் இறங்குவோம், என அழைப்பு விடுத்துள்ளது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு.
இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மகிந்த ராஜபக்சே மீண்டும் அந்நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்கும் இந்த்த தருணத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் ஒரு அறிக்கை விடுத்துள்ளது. அந்த அறிக்கை புலிகளின் இணையதளத்திலும் வெளியாகியுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“கடந்த காலத்தில் ஏற்பட்ட கடும் நெருக்கடிகளையும் இடர்களையும் கடந்து நாம் இன்று புதிய வடிவில் விடுதலைப்பயணத்தில் பயணிக்கும் வகையில் எமது மக்களை ஓர் நெறியில் அணிதிரட்டும் சவாலான இந்த நேரத்தில் எமது மவுனத்தின் பின் வெளிவந்துள்ளோம்.
இந்த நேரத்தில் எமது மக்கள் எம்முடன் இணைந்து அடுத்த கட்ட நகர்வினை முன்னெடுக்க விடாது பல தீய சக்திகள் எமது மக்களை எம்மிடம் இருந்து அந்நியப்படுத்தும் நோக்கில் விசமத்தனமான பிரச்சாரங்களையும் கருத்து என்ற பெயரில் பெரும் உளவியற் போரையும் நடத்தி வருகின்றன.
இவ் உளவியற் போரை பின்நின்று நடத்தும் இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கு துணைபோய் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் செயற்படும் எமது இயக்க உறுப்பினர்கள் என்று கூறிக்கொண்டு இன்றும் செயற்படுவோர் எம்மால் இனங்காணப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசின் துணையோடு வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கேபி…
இந்நிலையில் இலங்கை அரசின் துணையோடு வெளிநாடுகள் சிலவற்றிக்கு அழைத்துச் செல்லப்பட்ட குமரன் பத்மநாதன் (கேபி) என்பவரை எமக்கு ஆதரவாக செயற்பட்ட சிலரும் சில இயக்க உறுப்பினர்களும் ரகசியமான முறையில் சந்தித்துள்ளமை எம்மால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சர்வதேச நாடுகளில் கடந்த காலங்களில் எமது அமைப்பு சார்ந்து இயங்கி வந்த அணைத்துலக தொடர்பகத்தில் பணியாற்றிய சிலரும் இலங்கை அரசின் துரோகச் செயல்களுக்குள் அகப்பட்டு எமது விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதும் எம்மால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த வடிவில் எமது இயக்கம் வெளிப்பட்டாலும் அதை இல்லாதொளிப்பதற்கான அனைத்து பிரயத்தனங்களிலும் இவர்கள் ஈடுபடுவதும், தேசியத் தலைவர் சம்மந்தமான அவதூறுகளை பரப்புவதும், பிரதேச வேறுபாடுகளை தூண்டி விடுவதும், எமது இயக்க சம்பந்தமான தகவல்களை வெளியிடுவதும் போன்ற துரோகச் செயல்களை இவர்கள் செய்வதும் எம்மால் கண்டறியப்பட்டுள்ளது.
அனைத்துலக தொடர்பகத்தில் பணியாற்றிய பலர் உண்மையாக இன்றும் தமிழீழ விடுதலைப்போருக்கு முண்டு கொடுத்துக் கொண்டு இருக்கும் வேளையில், இவ்வாறான இனத்துரோகம் புரிபவர்களை மண்ணின் மைந்தர்களான எமது மக்கள் முன் இனங்காட்டுவது அவசியம் என கருதி அவர்களின் விபரங்களை இன்று வெளியிடக் கூடிய ஆதாரங்கள் இருந்தும், அவ்வாறானவர்கள் தடம் மாறியுள்ள தங்கள் தடத்தை விட்டு மனம் திருந்தி வருவதோடு தமிழீழ தேசியத் தலைவர் பாதையில் விடுதலைப் பயணத்தில் எமது மாவீரர்களின் குருதியில் உருவான எமது ஒரே கொடியான தேசியக்கொடியின் கீழ் எம்மோடு அணி வகுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேம்.
ஒருவருக்கொருவர் கருத்துவேறுபாடுகளில் ஈடுபடுவதும் தனித்தனியே செயற்படுவதும் நம் பிரதான எதிரிக்கு வழியமைத்துக் கொடுத்துவிடும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
எமது தீராத இலட்சியம் தமிழீழ விடுதலையின் தமிழ்த்தேசியம் என்பதை மனதிற் கொண்டு செயற்படுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்ளும் இவ்வேளையில் அனைவரும் ஒன்றுபட்டு நாம் யாரென்பதை சிங்கள பேரினவாதத்திற்கு தெரியப்படுத்துவதோடு, தமிழீழம் என்ற ஒரே இலட்சியத்தை மனதில் நிறுத்தி தனிநபர் விமர்சனங்களை தவிர்த்து ஈழத் தமிழர் அனைவரையும் ஒரே அணியில் அணிதிரட்டுமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியத் தலைவரின் தந்தைக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி!
January 9, 2010 by envazhi
Filed under உலகம் & இலங்கை
தேசியத் தலைவரின் தந்தைக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி!
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர்
பிரபாகரனின் தந்தை, திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் உடல், சிவாஜிலிங்கம் எம்பியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவர் உடலை எடுத்துக் கொண்டு வல்வெட்டித்துறை சென்றார். தேசியத் தலைவரது தந்தையின் உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அங்கு நாளை உடல் தகனம் நடைபெறுகிறது.
அதேபோல பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளும் ராணுவக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அமரர் வேலுப் பிள்ளையின் உடல் வல்வெட்டித்துறை, தீருவில் பகுதியில், பூச்சிவிட்டான் என்னும் இடத்தில் அமைந்துள்ள அவரது உறவினர் ஒருவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் மீது சிங்கள ராணுவம் கடந்த ஆண்டு மே மாதம் உச்சக்கட்ட தாக்குதல் நடத்திய போது லட்சக்கணக்கான மக்களுடன் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை, பார்வதி ஆகியோரும் இடம் பெயர்ந்தனர். தடுப்பு முகாம் ஒன்றில் இருந்த அவர்களை சிங்கள ராணுவம் அடையாளம் கண்டு தனியாகப் பிரித்தது. பிறகு வேலுப்பிள்ளை, பார்வதி இருவரும் கொழும்பு அழைத்துச் செல்லப்பட்டு பனகொட ராணுவ விசாரணை அலுவலகத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
ராணுவத்தின் பிடியில் வேலுப்பிள்ளை-பார்வதி இருந்த போது, அவர்களைப் பற்றிய எந்த தகவலும், யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவு ஏற்பட்டு இயற்கையான முறையில் அவர் மரணம் அடைந்ததாக சிங்கள ராணுவம் தகவல் வெளியிட்டது.
இதற்கிடையே வேலுப்பிள்ளை உடலை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்.பி.யும், ஜனாதிபதி வேட்பாளருமான சிவாஜிலிங்கத்திடம் சிங்கள ராணுவம் ஒப்படைத்தது.
அவர் வேலுப்பிள்ளை உடலை நேற்று மாலை வவுனியாவுக்கு கொண்டு சென்றார்.
பிரபாகரனை ஈழத் தமிழ் மக்கள் தேசியத் தலைவர் என்றே அழைத்து மரியாதை காட்டி வருகிறார்கள். அதன் அடிப்படையில் தேசியத்தலைவரின் தந்தை உடலுக்கு உரிய வகையில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
மக்கள் கண்ணீர் அஞ்சலி!
பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் உள்ள நீருவில் சதுக்கத்தில் வேலுப்பிள்ளை உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று பிற்பகல் வைக்கப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து வேலுப்பிள்ளை உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
வேலுப்பிள்ளை உடலுக்கு நாளை (ஞாயிறு) காலை இறுதிச் சடங்குகள் நடத்தப்படுகிறது. அதன் பிறகு அவர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 11 மணி அளவில் ஊரணி மயானத்தில் தகனம் செய்யப்படும். இதற்கான ஏற்பாடுகளை சிவாஜிலிங்கம் எம்.பி. செய்துள்ளார்.
தாய் விடுவிப்பு
வேலுப்பிள்ளையின் மனைவி பார்வதியும் பணா கொட ராணுவ முகாமில் தான் வைக்கப்பட்டிருந்தார். அவரை நேற்று சிங்கள ராணுவம் விடுவித்தது. அவர் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
தனது தந்தையாரின் உடலை சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கனடாவில் உள்ள வேலுப்பிள்ளையின் மகளும் தேசியத் தலைவரின் மூத்த சகோதரியுமான வினோதினி ராஜேந்திரன் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
தமிழகம் முழுக்க பிரபாகரன் படங்களை அகற்றிவரும் போலீசார்!
தமிழகம் முழுக்க பிரபாகரன் படங்களை அகற்றிவரும் போலீசார்!
சென்னை: சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் உருவப் படங்களை அகற்றி வருகின்றனர் தமிழக க்யூ பிரிவு போலீசார்.
குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனின் கவிதை நூல் வெளியீட்டையொட்டி வைக்கப்பட்டுள்ள மூன்று டிஜிட்டல் பேனர்களில் பிரபாகரன் படமும் திருமா படமும் உள்ளன. இவற்றை உடனடியாக போலீசார் அகற்றிவிட்டனர். ஜிகே மூப்பனார் பேரவை என்ற அமைப்பின் தலைவர் தந்த புகாரின் பேரில் இந்த பேனர்கள் அகற்றப்பட்டதாக சென்னை கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மற்ற பகுதிகளிலும் இந்த நடிவடிக்கை தீவிரமடைந்துள்ளது.
தமிழகம் முழுக்க…
சமீபத்தில் கொண்டாடப்பட்ட பிரபாகரன் பிறந்த நாள் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த மாவீரர் நாளையொட்டி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரபாகரன் படங்களை டிஜிட்டல் பேனர்கள் மற்றும் கட் அவுட்டுகளாக வைத்திருந்தனர் தமிழ் உணர்வாளர்கள்.
தமிழகம் முழுக்க பல இடங்களில் பிரமாண்ட போஸ்டர்கள் அடித்தும் தங்கள் உணர்வை காட்டியிருந்தனர். இது பொறுக்காமல் ஈரோட்டில் பிரபாகரன் பேனரை ஈவிகேஎஸ் இளங்கோவன் கிழித்ததும் அதனைத் தொடர்ந்து எழுந்த பிரச்சினைகளும் நினைவிருக்கும்.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் 24-ம் தேதி புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டபோதும் எம்ஜிஆர் – பிரபாகரன் படங்கள் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் மக்களை திரும்பிப் பார்க்க வைத்தன.
மேலும் வருகிற ஜனவரி 17-ம் தேதி கொண்டாடப்படவிருக்கும் எம்ஜிஆர் பிறந்த நாளின் போதும் இதுபோன்ற போஸ்டர்கள், பேனர்கள் ஏராளம் வைக்கப்படும் நிலை உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்களான தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் தமிழீழத்துக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து பேசி வருகின்றனர். தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பிரபாகரனுக்கு போஸ்டர், பேனர் இருக்கக் கூடாது என்றெல்லாம் அவர்கள் கருத்து தெரிவித்து, தமிழக அரசை நெருக்கி வருகின்றனர்.
இந்த நிலையில்தான், மூப்பனார் பேரவை புகாரை காரணம் காட்டி தமிழக க்யூ பிரிவு போலீஸார், பிரபாகரன் படங்களை அகற்றும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது.
-என்வழி
தோல்வி தற்காலிகமானதே.. வருவார் பிரபாகரன்! – வைகோ
அழியும் எம் இனத்தைக் காக்க குரல் கொடுப்பது தேச துரோகமா? – வைகோ ஆதங்கம்
தஞ்சை: விடுதலைப்புலிகளின் இந்தத் தோல்வி தற்காலிகமானதே.. பிரபாகரன் மீண்டும் வருவார். தமிழ் ஈழம் நம் காலத்திலேயே மலரும், என்றார் வைகோ.
தஞ்சாவூரில் உலகத் தமிழ் பேரமைப்பு சார்பில், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பொது அரங்கம் நடந்தது.
இதில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கலந்து கொண்டு பேசுகையில்,
ஈழத்தில் பல ஆயிரம் குழந்தைகள், பெண்கள், தமிழர்களைக் கொன்று குவித்த அதிபர் ராஜபக்சே திருப்பதிக்கு வந்து செல்கிறார். பிரதமர், ஜனாதிபதி போன்றோர் செல்லும் பிரதான வாயில் வழியாக அவர் வந்து செல்கிறார்.
ஆனால், இந்த மாநாட்டில் பங்கேற்க இலங்கையில் இருந்து வந்த அந்நாட்டின் எம்.பி., சிவாஜிலிங்கத்தை மாநாட்டுக்கு வரக் கூடாது என்று கூறி, தமிழக அரசு திருப்பி அனுப்புகிறது. என்ன கொடுமை பாருங்கள். இதையெல்லாம் எதிர்த்துக் கேட்கக் கூட நாதியில்லாமல் போனதே.. இந்த நிலையை உருவாக்கி வைத்திருப்பவர்கள் யார் என்று பார்க்க வேண்டும் தாயகத் தமிழர்கள்.
இத்தனை துயரத்துக்கும் காரணம், இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள், போர் கருவிகள், ரேடார்களை வழங்கியது. விமானப் படையை சீரமைத்துக் கொடுத்தது. தமிழர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் இந்திய ஆட்சியாளர்கள் பதில் கூறி ஆக வேண்டும்.
நான் பேசிய பேச்சுக்காக ஏழு மாதத்துக்குப் பின் என் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்கிறது தமிழக அரசு. யார் துரோகி என சிந்திக்க வேண்டும்?
அழியும் எம் இனத்தைக் காப்பாற்றுங்கள் எனக் குரல் கொடுப்பது ஒரு இந்தியக் குடிமகனாக, தமிழனாக எனது முதல் கடமை. எமக்கான உரிமை இது.
இது ஒரு பின்னடைவு தான். அடுத்த கட்டத்துக்கு நாம் தயாராக வேண்டி உள்ளதால், நமக்கு அதிக வேலை உள்ளது. உலகம் எங்கும் ஆதரவு திரட்ட வேண்டும். ஏழு கோடி தமிழர்கள் உள்ளனர். விடுதலைப்புலிகள் தோற்கவில்லை. பிரபாகரன் மீண்டும் வருவார்.
இலங்கையில் கருணா போல, இந்திய அரசும், தமிழக அரசும் தமிழர்களுக்கு துரோகம் செய்வதைத்தான் நான் தொடர்ந்து எச்சரிக்கிறேன். சோவியத் சுக்கு நூறாகியது போல, இந்திய வரைபடம் கிழித்தெறியப்பட்டு விடக்கூடாது என்ற நிஜமான அக்கறையுடன் எச்சரிக்கிறேன். நம் வாழ்நாளிலேயே சுதந்திர தமிழீழத்தை உருவாக்கும் நாள் வரும்” என்றார்.
‘பிரபாகரன் நலமாக உள்ளார்… வெற்றிப் புராணம் பாடியவர்கள் வெட்கப்பட்டு நிற்பார்கள்!’
December 23, 2009 by envazhi
Filed under கட்டுரைகள்
பிரபாகரன் இருக்கிறார் என ஆதாரம் இல்லாமல் சொல்வேனா..! – பழ நெடுமாறன் உறுதி
வன்னிப் போரில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மகள் துவாரகா கொல்லப்பட்டதாகக் கூறி, சில படங்கள் இணையத்தில் பிரசுரமாகியிருந்தன.
அவை சகோதரி துவாரகாவின் படம் அல்ல, இசைப்பிரியா என்ற பெண் போராளியின் படம் என்று சீமான் உறுதிப்படுத்தியிருந்ததை செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
சீமான் சொன்னதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன், சமீபத்திய தனது ஜூவி பேட்டியில்.
இதைவிட முக்கியம், தலைவர் பிரபாகரன் பற்றி அவர் ஆணித்தரமாக கூறியுள்ள சில விஷயங்கள்.
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை அடித்துச் சொல்லும் நெடுமாறன், அதுபற்றி விவரங்களை நேரம் வரும்போது சொல்வதாகக் கூறியுள்ளார். ரா, சிங்கள உளவு அமைப்புகள் அறிந்து கொள்ள துடிக்கும் அந்த பேருண்மையை நிச்சயம் தன்னால் இப்போது சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பழ நெடுமாறன் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டி:
விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனின் மகள் துவாரகா கொல்லப்பட்டதாக சில இணையதளங்கள் மூலம் பரவிய செய்தியும், அதையட்டி வெளியான புகைப் படமும் லேசாக ஆறிக்கொண்டிருந்த ஈழ ஆர்வலர்களின் இதயக் காயத்தை மறுபடி கிளறி விட்டன!
‘துவாரகாவின் உயிரோட்டமான புகைப்படத்துடன் ஒப்பிடும்போது அந்த நிறமும் சாயலும் அப்படித்தானே இருக்கிறது!’ என்று புலம்பியவர்கள், ‘பிரபாகரன் குடும்பத்தில், போருக்குத் துளியும் தொடர்பில்லாத அவருடைய மகளையும் இப்படி பலியாக்கியதா சிங்கள ராணுவம்’ என்று கொதிப்போடு பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
இந்நிலையில்தான், ‘பிரபாகரன் எந்த பங்கமும் இன்றி உயிரோடுதான் இருக்கிறார்’ என்று சொல்லும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரான பழ.நெடுமாறன், துவாரகா விவகாரம் இத்தனை நாள் கழித்து திடீரென்று இணைய தளங்கள் மூலம் பரவுவதன் பின்னால் இந்தியா மற்றும் இலங்கையின் உளவு அமைப்புகள் இருப்பதாகக் கூறுகிறார்.
வருகிற 26, 27 தேதிகளில் தஞ்சாவூரில் நடத்தவிருக்கும் உலகத் தமிழர் மாநாட்டில் இதன் பின்னே உள்ள சதி குறித்து விவரமாக முழங்கும் முடிவில் இருக்கும் நெடுமாறனை நாம் நேரில் சந்தித்தபோது, ‘வருடா வருடம் ஏதாவதொரு தலைப்பில் உலகத் தமிழர் மாநாட்டை நடத்துவோம். இந்த வருடம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடாக நடத்துகிறோம். தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொள்ளும் அந்த மாநாட்டில் ஈழத்தின் விடிவுக்கான கோரிக்கைகளை வலியுறுத்துவோம்!’ என்ற நெடுமாறனிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்.
‘பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கிளம்பிய பரபரப்புகளே முடிவுக்கு வராத நிலையில், திடீரென அவர் மகள் துவாரகா இறந்ததாக படத்தோடு திகீர் கிளம்பியிருக்கிறதே?’
‘பிரபாகரனை கொன்று விட்டதாக மார்தட்டிய ராஜபக்ஷே அதை வைத்தே ஜெயித்துவிடலாம் என எண்ணி அதிபர் தேர்தலை அறிவித்தார். ஆனாலும், போரை முன்னின்று நடத்திய ஃபொன்சேகாவே இப்போது ராஜபக்ஷேக்கு எதிராக நிற்கிறார். அதனால், ‘வெற்றி பெறுவோமோ… மாட்டோமோ…’ என்கிற பதற்றம் ராஜபக்சேக்கு உண்டாகிவிட்டது. உடனே தங்களது உளவு அமைப்புகளின் மூலமாகவே துவாரகா விவகாரத்தை திடீரெனக் கிளப்பத் தொடங்கி விட்டார்கள். இப்படிச் செய்வதன் மூலமாக போர் வெற்றியை சிங்கள மக்கள் மத்தியில் பதிய வைத்துக் கொண்டே இருக்க ராஜபக்சே திட்டமிடுகிறார். முதலில் பிரபாகரன், பிறகு மதிவதனி, பாலச்சந்திரன் பற்றி திட்டமிட்டு பரபரப்புக் கிளப்பியவர்கள், இப்போது துவாரகா குறித்தும் பரபரப்பு கிளப்புகிறார்கள்.
எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் சொல்கிறேன்… துவாரகாவின் படமாகக் காட்டப்படுவது அவர் கிடையாது. இப்போதைக்கு அதைத் தான் சொல்ல முடியுமே தவிர, மேற்கொண்டு இதுபற்றி சொல்ல முடியாது.’
‘அப்படியென்றால் துவாரகாவின் படமாகக் காட்டப்படுவது யார்?’
‘அது இசைபிரியா என்கிற பெண் போராளியின் சடலம். ‘நிதர்சனம்’ புகைப்படப் பிரிவில் பணியாற்றிய இசைபிரியா, புலி களின் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றியவர். ஆண், பெண் என்றெல்லாம் பாராமல்… களத்தில் ஆயுதமேந்தி இருப்பவர்கள் – நிராயுதபாணியாக நிற்பவர்கள் என்றும் பாராமல்… இரக்கமற்று ராஜபக்ஷே ராணுவம் வீழ்த்தித் தள்ளிய பட்டியலில் அடங்குவார் இசைப்பிரியா!’
‘பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று எதை வைத்து உறுதியாகச் சொல்கிறீர்கள்?’
‘சிங்கள உளவுத் துறையும், இந்தியாவின் ‘ரா’வும் எந்த விஷயத்தை அறிய போராடிக் கொண்டிருக்கின்றனவே… அதனை எப்படி நான் விளக்கிவிட முடியும்? அவர் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக இரு நாட்டு உளவுத் துறையும் எந்தளவுக்கு போராடிக் கொண்டிருக்கின்றன என்று உள் வட்டத்தில் விவரமறிந்தவர்களுக்குத் தெரியும்.
சிங்கள ராணுவத்தின் கையில் தன் உடல் சிக்கும் அளவுக்கு விடக் கூடியவரா பிரபாகரன்? அவருடைய சாமர்த்தியங்களைப் பற்றி நம்மைவிட சிங்கள ராணுவத்துக்கு நன்றாகத் தெரியும்! பிரபாகரன் என் உடன்பிறவா தம்பி. அவரைப் பற்றி சிங்கள ராணுவம் அறியாததும் எனக்குத் தெரியும். சிங்கள ராணுவம் காட்டிய சடலத்தைப் போல்தான் அவர் இருப்பார் என நினைப்பவர்கள் வேண்டுமானால், அந்த விஷமப் பிரசாரத்தை நம்பலாம். ஆனால், பிரபாகரன் அப்படியான உருவத்தில் இருக்க மாட்டார் என்பது அவரை அருகிலிருந்து அறிந்தவர்களுக்குத்தான் தெரியும்.
பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் புலிகளை அடியோடு அழித்து விட்டதாகவும் கொக்கரிக்கும் சிங்கள ராணுவம், கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கோடிக்கணக்கில் ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பது ஏன்? எந்த பயத்தில்? இதிலிருந்தே தெரியவில்லையா?’
‘பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை இந்திய அரசிடம் இலங்கை அரசு கொடுத்துவிட்டதாகச் சொல்லப் படுகிறதே?’
‘இந்தக் கேலிக்கூத்துக்கு என்னுடைய பதிலாக, ஜூ.வி. வாசகர்கள் நன்கு நினைவில் வைத்திருக்கும் ஒரு சம்பவத்தை மட்டும் சொல்கிறேன். மதுரை அருகே உள்ள பொதும்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். அவருடைய கணவரே அந்தம்மாவைக் கொலை செய்துவிட்டதாக ஒரு வழக்கு நடந்தது. பாண்டியம்மாளின் சடலம் காட்டப்பட்டது. ‘நான்தான் கொன்றேன்!’ என கணவரே வாக்குமூலம் கொடுத்தார். தகுந்த சாட்சியங்களோடு விசாரித்து, கோர்ட்டில் அவருக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், திடீரென ஒரு நாள் பாண்டியம்மாள் கோர்ட்டில் வந்து நின்றார். அதன் பிறகுதான் போலீஸ் செய்த அத்தனை ஜோடிப்புகளும் வெட்டவெளிச்சமானது. உடனே நீதிபதி பாண்டியம்மாளின் கணவரிடம், ‘நீயே உன் மனைவியைக் கொலை செய்ததாக முதலில் ஒப்புக் கொண்டது ஏன்?’ எனக் கேட்டார். ‘என்னை அடிச்சே அப்படியொரு வாக்குமூலத்தை போலீஸ் வாங்கிட்டாங்க…’ எனச் சொன்னார் பாண்டியம்மாளின் கணவர்.
தமிழ்நாடு போலீஸ் செய்த ஜோடிப்பு இந்தளவு என்றால், ஒரு நாட்டின் ராணுவம் எத்தகைய ஜோடிப்புகளை செய்யும் என்பதை எண்ணிப் பாருங்கள். பாண்டியம்மாளின் கதைதான் பிரபாகரன் விவகாரத் திலும் நடக்கிறது. உண்மை வெளிச்சத்துக்கு வரும் நாளில், சில அவசர லாபங்களுக்காக வெற்றிப் புராணம் பாடியவர்கள் வெட்கப்பட்டு நிற்கப் போகிறார்கள்.’
‘பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அவர் மூலமாகவோ, புலிகளின் தரப்பிலிருந்தோ உங்களுக்கு என்ன விதமான தகவல் வந்தது?’
‘அப்படியொரு தகவல் வராமல் எப்படி அவர் உயிரோடு இருப்பதாக நான் சொல்வேன்? நம்பத் தகுந்த செய்தி யாரிடமிருந்து வரவேண்டுமோ… அங்கிருந்தே வந்தது. ஆனாலும், எனக்கு வந்த தகவல்கள் குறித்து இப்போதைக்கு நான் ஏதும் சொல்லக் கூடாது. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக பரப்புவதன் மூலமாக தமிழின எழுச்சியை அடியோடு அடக்கிவிட இந்திய அரசு நினைக்கிறது.
ஆனால், எப்போதுமே தமிழகத்தில் கொண்டாடப்பட்டிராத மாவீரர் தினம் இந்த வருடம் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. எதை வீழ்த்தத் துடிக்கிறார்களோ… அது வீறுகொண்டு விரிந்து கொண்டிருப்பதால், அடுத்தடுத்து இன்னும் பல கதைகளைக்கூட இரு நாட்டு உளவு அமைப்புகளும் பரப்பக் கூடும்!’
‘பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவரான கே.பி-யே அவர் கொல்லப்பட்டதாக அறிக்கை விட்டாரே?”
‘அப்படியொரு அறிக்கையை வெளியிட வைத்ததே இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ தான். ஈழப் போர் முடிவுக்குப் பின்னர் இலங்கையின் இணக்கம் சீனா பக்கம் திரும்பியது. அதனால் இலங்கையை எச்சரிக்கும் விதமாக கே.பி-யை வளைத்தது ரா. ‘கே.பி. மூலமாக புலிகள் படையை நாங்கள் மறுபடியும் உருவாக்கத் தயங்க மாட்டோம்’ என இலங்கையை ரா எச்சரித்தது. கூடவே கே.பி. மூலமாக பிரபாகரன் இறந்து விட்டதாகவும், அடுத்த தலைமை தான்தான் என்றும் அறிவிக்க வைத்தது.
‘ரா’வின் இந்த செயல்பாடு சிங்கள அரசுக்கு பெரிய தலைவலியாக அமைய… அவர்கள் சில நாடுகளின் துணையோடு கே.பி-யை தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். இந்த விஷயத்தில் சிங்கள அரசிடம் ரா. தோற்றுப் போனதுதான் உண்மை!’
‘பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக இருந்ததாக செய்திகள் கசிகிறதே?’
‘ராஜீவ் காந்தி கொலைக்கு புலிகள்தான் காரணம் என விசாரணை அதிகாரிகள் பரப்பிக் கொண்டிருந்த நேரத்தில், அதில் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த ரெங்கநாத் என்கிற வீடு புரோக்கர் மிக முக்கிய விஷயம் ஒன்றை நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்தார். அதுபற்றி மீடியாக்களிடமும் சொன்னார். அதைப் பார்த்த சோனியா காந்தி, உடனடியாக அந்த ரெங்கநாத்தை சந்திக்க விரும்புவதாக சொல்லி இருக்கிறார். அப்போது ரெங்கநாத் என் அலுவலகத்தில் இருந்தார்.
உடனே என்னிடம் ஓடோடிவந்த தங்கபாலு, கௌரிசங்கர் இருவரும் அந்த விஷயத்தைச் சொன்னார்கள். ரெங்கநாத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக நான் சொன்னவுடன், உரிய பாதுகாப்புக்கு வழி செய்யப்படும் என அர்ஜுன் சிங் டெல்லியிலிருந்து அறிக்கை வெளியிட்டார். இதற்கிடையில் நான் ரெங்கநாத் ஸ்டேட்மென்ட்டை வீடியோ பதிவு செய்து டெல்லிக்கு அனுப்பினேன். அதைக் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்த்த சோனியா, உடனடியாக ரெங்கநாத்தை சந்தித்தே ஆகவேண்டுமென விரும்பினார்.
தக்க பாதுகாப்புடன் சோனியாவை சந்தித்த ரெங்கநாத் இப்போது சந்திராசாமி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் தொடர்பான சில விஷயங்களை ஆதாரபூர்வமாகப் போட்டுடைத்தார். அன்றிலிருந்து சி.பி.ஐ-யின் முக்கிய அதிகாரி ஒருவரை தன் வீட்டுப் பக்கம் வரவே கூடாது என சோனியா எச்சரித்த சம்பவமும் நடந்தது.
இதெல்லாம் தெரிந்துகொண்ட பின்பும், ஈழத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சாவின் விளிம்பில் நின்று கதறியபோது, போரை நிறுத்த சோனியா எந்த முனைப்பும் காட்டவில்லை. அவர் நினைத்திருந்தால்… ஒரே நிமிடத்தில் போரை நிறுத்தி இருக்க முடியும். ஆனாலும் காங்கிரஸ் அரசு அதற்கு முயலாதது சில சந்தேகங்களை விதைக்கத்தான் செய்கிறது.
சோனியாவை இயக்கிக் கொண்டிருக்கும் சில இந்திய அதிகாரிகள் இலங்கை விவகாரத்தில் திட்டமிட்டு நிறைய மோசடிகளைச் செய்தார்கள். இலங்கைக்கு பக்க பலமாக இருக்கவும், தமிழர்கள் கொன்றழிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கவும் செய்த அந்த அதிகாரிகள், அதற்காக எக்கச்சக்கமான பணத்தை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான தமிழ் உயிர்களை பாழாய்ப்போன பணம்தான் காவு வாங்கிவிட்டது!
ஈழத்தைச் சுடுகாடாக்க இந்தளவுக்கு முனைப்புக் காட்டிய இந்திய அதிகாரிகள், அதற்கு விலையாக இந்தியாவின் பாதுகாப்பை பலி கொடுத்துவிட்டார்கள். இலங்கையில் கால் பதித்துவிட்ட சீனா… தமிழகத்தில் இருக்கும் அணுமின் நிலையங்கள் பக்கம் ஆயுதத்தைத் திருப்ப எவ்வளவு நேரமாகிவிடப் போகிறது?!’ என்று பட்டென முடித்துக் கொண்டார் பழ.நெடுமாறன்.
அடுத்து நாம் சீமானிடமும் பேசினோம்.
‘இசை பிரியாவின் உடலைக் காட்டி துவாரகா இறந்ததாகச் செய்தி பரப்புவதன் மூலமாக தமிழர்கள் மீது உளவியல் போரை சிங்கள அரசு தொடுக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழீழத்துக்கு நான் போயிருந்தபோது புலிகளின் தொலைக்காட்சிக்காக என்னை பேட்டி கண்டவர் இசைபிரியா.
தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மூன்று மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தவர். புலிகளின் வெற்றிச் செய்திகளை மிகுந்த உற்சாகத்தோடு சொல்லி, புலித் தளபதிகளின் பாராட்டுகளைப் பெற்றவர் இசைபிரியா. அவருடைய படத்தை அலங்கோலமாக வெளியிட்டு ஒட்டுமொத்த தமிழினத்தையும் கூனிக்குறுக வைத்திருக்கிறது சிங்கள அரசு’ என்றார் வேதனையோடு.
நன்றி: ஜூனியர் விகடன்





















