முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

கோவா பட விவகாரம்: சௌந்தர்யாவுக்கு எதிரான வழக்கில் சமரசம்!

April 7, 2010 by envazhi  
Filed under Cinema

கோவா பட விவகாரம்: சௌந்தர்யாவுக்கு எதிரான வழக்கில் சமரசம்!

கோவா படத்துக்காக கடன் வாங்கிய வழக்கில், சௌந்தர்யா ரஜினியும் வருண் மணியனும் சமரசமாகிவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்று வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி.

கோவா படம் தயாரிப்பதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த என்.ஏ.பி.சி. பிராப்பர்ட்டீஸ் நிறுவன உரிமையாளர் வருண் மணியனிடம் ரூ.2 கோடியே 33 லட்சம் கடன் வாங்கினார் ஆக்கர் ஸ்டுடியோ உரிமையாளர் சௌந்தர்யா ரஜினி.

அந்த தொகைக்கான உறுதிமொழிப் பத்திரமும் (பிராமிசரி நோட்) எழுதிக் கொடுத்தார். கோவா படம் வெளியாவதற்கு முன்பே கடனை வட்டியுடன் திருப்பி தருவதாகவும் அதில் சௌந்தர்யா குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அந்த உறுதிமொழியை மீறும் வகையில் படத்தை வெளியிட முயற்சி செய்ததால், கோவா படம் வெளியிட தடை விதிக்கக் கோரியும், கடனை வட்டியுடன் திருப்பி செலுத்த உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வருண் மணியன் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து கோவா படத்தை வெளியிடுவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை நீக்கக் கோரி சௌந்தர்யா பதில் மனு தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து படம் வெளியிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீக்கப்பட்டது.

இதற்கிடையே, சௌந்தர்யா தரப்பில், ரூ.1 கோடியே 60 லட்சத்தை இந்தியன் வங்கி எல்டாம்ஸ் கிளை மூலமாகவும், ரூ.15 லட்சத்திற்கு காசோலை கொடுக்கவும், மீதமுள்ள ரூ.58 லட்சத்தை வரும் மே மாதம் 21 ந் தேதிக்குள் கொடுப்பதாகவும் ஒப்புதல் அளித்தனர். இதனை என்.ஏ.பி.சி. நிறுவனமும் ஏற்றுக் கொண்டது.

அதே நேரத்தில் இதுதொடர்பாக எந்த வழக்கும் தொடர்வதில்லை என்றும், சௌந்தர்யா பற்றி பேட்டி கொடுப்பதில்லை என்றும் என்.ஏ.பி.சி. நிறுவனம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து இருதரப்பினர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஆஜராகி, இருதரப்பு சமரசத்தையும் ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி பெரிய கருப்பையா வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

கோவா டீமை வாழ்த்திய ரஜினி.. முழு வீடியோ!

January 21, 2010 by envazhi  
Filed under Videos

கோவா டீமை வாழ்த்திய ரஜினி.. முழு வீடியோ!

களின் முதல் தயாரிப்பு என்றாலும் பிரமாண்ட விழா எதையும் எடுக்கவில்லை ரஜினி.

எளிமையான  நிகழ்வு ஒன்றின் மூலமே அந்தப் படத்தை படு பரபரப்பான விளம்பரமாக மாற்றும் சக்தி ரஜினியைத் தவிர வேறு யாருக்கு இருக்கும்…

கோவா படம் குறித்து இதுவரை வந்த செய்திகள் அனைத்தையும் ஒரு ஓரமாக நகர்த்திவிட்டது,  சூப்பர் ஸ்டார் ஆடியோ வெளியிட்ட செய்தி…

கோவா ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின் வீடியோ…

ரஜினியின் வாழ்த்து…

நன்றி: கலாட்டா.காம்

கோவா ஆடியோ வெளியீடு சிறப்புப் படங்கள்


பிப்ரவரி 14-ல் சௌந்தர்யா ரஜினிக்கு நிச்சயதார்த்தம்!

January 7, 2010 by envazhi  
Filed under Rajini

பிப்ரவரி 14-ல் சௌந்தர்யா ரஜினிக்கு நிச்சயதார்த்தம்!

நாம் ஏற்கெனவே சொன்னது போல, ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவுக்கு விரைவில் திருமணம் நடப்பது உறுதியாகிவிட்டது.

வருகிற பிப்ரவரி 14-ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கிறது. மணமகன் பெயர் அஸ்வின் குமார். சென்னையில் பெரிய கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது தந்தை ராம்குமார் ரஜினியின் குடும்பத்துக்கு நெருக்கமானவராம்.

இது பெற்றோர்கள் சம்மதித்து நடத்தும் காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மணமகன் அஸ்வின், அமெரிக்காவில் எம்.எஸ் படித்தவர். தற்போது சென்னையில் பெரிய அளவில் கட்டுமான தொழிலை நடத்தி வருகிறார்.

சௌந்தர்யாவுடன் நீண்டகாலமாகப் பழகி வரும் நெருங்கிய நண்பராக இருந்தார் அஸ்வின்.

மணமகன் புகைப்படம் (டெக்கான் கிரானிக்கிள்)

சமீபத்தில் நிறுவன ரீதியாக சௌந்தர்யா சில சவால்களைச் சந்தித்தபோது, அவரை அழைத்த ரஜினி, ‘சோதனை வந்தா உடனே சந்தோஷமான விஷயத்துக்கு மாற முயற்சிக்கணும். தொடர்ந்து அந்த கஷ்டத்துலயே இருக்கக் கூடாது. எனவே திருமணம் செய்து கொண்டு சில நாட்கள் நிம்மதியாக இருந்துவிட்டு பின் விருப்பபம் போல பிடித்த வேலையைச் செய்’ என்று கூறினாராம்.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை நன்குணர்ந்த சௌந்தர்யா, அஸ்வினை தந்தை முன்பு கொண்டு போய் நிறுத்தினாராம். முதல் பார்வையிலேயே மாப்பிள்ளையை ஓகே பண்ணிவிட்ட ரஜினி, அடுத்து விறுவிறுவென வேலைகளில் இறங்கினார். பையனின் பெற்றோரிடமும் பேசி, எல்லோருக்கும் நிறைவாய் இந்த திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளாராம்.

வருகிற பிப்ரவரியில் கோலாகலமாக நடக்கிறது ‘ரஜினி வீட்டு இளவரசி’யின் நிச்சயதார்த்தம்.

சௌந்தர்யாவுக்கு மறக்கமுடியாத காதலர் தினப் பரிசு இதைவிட வேறென்ன இருந்துவிட முடியும்!

-என்வழி

கோவா ஆடியோ வெளியீடு… ரஜினி ஸ்பெஷல் படங்கள்!

ரஜினியின் அமைதி ஆயிரம் மடங்கு வலிமையானது!

து எத்தனை சாதாரண நிகழ்வாக இருந்தாலும் சரி… சூப்பர் ஸ்டார் கால்பட்டால் போதும், பிரமாண்ட நிகழ்வாகிவிடும். அதன் பிறகு அந்த சம்பவத்துக்கே ஒரு தனி முக்கியத்துவம் கிடைத்துவிடும்.

ஊரில் எத்தனையோ வீட்டு விசேஷங்களுக்கும், திரைப்பட நிகழ்ச்சிக்கும் நேரில் போய் பங்கேற்று சிறப்பித்த ரஜினி, தன் மகள் சௌந்தர்யா தயாரிக்கும் முதல் படத்தின் ஆடியோவை எப்படி வெளியிடுவார்… எந்த அளவு அந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக இருக்கும் என்று பலரும் பல விதமாகக் கூறி வந்த நிலையில், ‘யார் சொல்வதும் உண்மையில்லை… என் உள்ளத்திலிருப்பதைத் தவிர’ என்று சொல்லாமல் சொல்லும் விதமாக சத்தமின்றி அந்த விழாவை நடத்தியுள்ளார் ரஜினி.

மிக மிக எளிமையான நிகழ்வு. கோவா குழுவினரை மட்டும் அழைத்து, தன் வீட்டிலேயே ஆடியோவை வெளியிட்டு விட்டார். அவர் நினைத்திருந்தால் இதை பிரமாண்டமாக செய்து தர எத்தனையோ பேர் காத்திருக்கின்றனர்.

ஆடியோ ரிலீஸ் என்ற பெயரில் பிரமாண்டம் காட்டுவதால் பல லட்சங்கள் பட்ஜெட்டில் கூடுவதுதான் மிச்சம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

அதேநேரம் அவரது இந்த மவுனமான, ஆர்ப்பாட்டமில்லாத செயலே, இன்று அனைத்து மீடியாவையும் ஆக்கிரமிக்கும் சக்திமிக்கதாக உள்ளதை என்னவென்று சொல்வது!

கோவா ஆடியோ ரிலீஸ்… முழுமையான ஒரிஜினல் படங்கள்!

-என்வழி ஸ்பெஷல்

கோவா ஆடியோ… ரஜினி வெளியிட்டார்!

January 5, 2010 by envazhi  
Filed under Cinema

கோவா பாடல்கள்… எளிமையாக வெளியிட்ட ரஜினி!

கள் சௌந்தர்யா ரஜினி தயாரித்துள்ள முதல் படமான கோவா பாடல்களை தனது வீட்டில் வைத்து மிக எளிமையாக வெளியிட்டார் ரஜினி.

டிசம்பர் மாதத்திலேயே இந்த ஆடியோ விழாவை மிக பிரமாண்டமாக கொண்டாட முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் பைனான்ஸியர் பிரச்சினை உள்ளிட்ட சில விரும்பத்தகாத நிகழ்வுகளால்  ஆடியோ ரிலீஸ் தள்ளிப் போனது.

ஜனவரி 4-ந் தேதி சன் மியூசிக்கில் முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் ரஜினி வெளியிடுவார் என்று பின்னர் கூறப்பட்டது. ஆனால் அன்று காலையில் எந்த விளம்பரங்களும் செய்திதாள்களில் வரவில்லை.

ஆனால் சொன்ன மாதிரியே ஜனவரி 4-ம் தேதி கோவா படக் குழுவினரை வீட்டுக்கு வரச் சொல்லி விட்டாராம் ரஜினி. மாலை ஆறு மணிக்கு கூடிய கோவா டீம், ரஜினி கையால் ஆடியோவை வெளியிட வைத்து சந்தோஷப்பட்டிருக்கிறது.

கோவா படத்தின் சில காட்சிகளைப் பார்த்து பாராட்டிய ரஜினி, முழுப் படத்தையும் பார்க்க ஆவலாக இருப்பதாக தெரிவித்தாராம் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம்.

இதைத் தொடர்ந்து ரஜினிக்கென்று ஃபோர் பிரேம்ஸில் பிரத்தியேகக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவா படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். சினேகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சென்னை 28 படத்தில் நடித்த பல முகங்கள் இதிலும் உண்டு.

-என்வழி

‘இந்த சிக்கனைத்தான் விட முடியல..!’

December 30, 2009 by envazhi  
Filed under Popcorn

கமல் ஷோ!

னக்குப் பொன்விழா எடுத்துப் பெருமை சேர்த்த விஜய் டிவிக்கு கைமாறாக குரோர்பதி போன்றதொரு வித்தியாசமான நிகழ்ச்சியை நடத்தித் தர சம்மதித்துள்ளாராம் கமல் ஹாசன்.

இதற்கு கமல்ஹாசனே எதிர்பார்க்காத பெரும் தொகையை சம்பளமாகத் தரவும் ஒப்புக் கொண்டுள்ளது விஜய் டிவி.

‘பொங்கலுக்கு வரல!’

பொங்கலுக்கு வர்றோம்ல என்கற அறிவிப்போடு களமிறங்கக் காத்திருந்த கோவா, இப்போது தள்ளிப் போகிறது. ஜனவரி 29-ம் தேதி வெளியாகும் என ஆக்கர் ஸ்டுடியோவிலிருந்தே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள்.

இதற்கு இரு காரணங்களைச் சொல்கிறார்கள். ஒன்று செல்வராகவன் வேண்டுகோளாம்… அடுத்து பின்னணி இசைச் சேர்ப்பில் யுவன் செய்யும் தாமதாமாம்.

ஆனால் ஆடியோ ரிலீஸ் தேதி மட்டும் மாறவில்லை. அதே ஜனவரி 4-ம்தேதி ரஜினி வெளியிடுகிறார்.

‘இந்த சிக்கனைத்தான் விட முடியல..!’

ந்த நியூ இயர்ல நான் எடுக்கும் முதல் உறுதி, இனி எந்த விருந்துக்கும் போவதில்லை என்பதுதான்.

புத்தாண்டு முதல் யோகாவில் அதிகமாய் ஈடுபட்டு உடம்பை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன்.

சைவ உணவுக்கு மாறவேண்டும் என்பதும் என் விருப்பமாக உள்ளது. இந்த சிக்கனை விடுவதுதான் பெரும் சவாலாக உள்ளது. ஆனாலும் முயற்சிக்கப் போகிறேன்.

நிறைய நேரங்களை குடும்பத்தினருடன் செலவிடப் போகிறேன்…!!”

-இது நமீதாவின் புத்தாண்டு சபதமாம்… அவரே சொன்னது!


இருந்தும் இல்லாத உடை…

ந்தசாமி நூறாவது நாள் விழா. கந்தசாமி குழுவால் தத்தெடுக்கப்பட்ட கிராம மக்கள்தான் விழாவுக்கு சிறப்பு விருந்தினர்கள்.

தூங்கிவழிந்து கொண்டிருந்த நடிகர் சங்க அரங்கம் படத்தின் நாயகி ஸ்ரேயா வந்ததும் பளிச்சென்று விழித்துக் கொண்டு அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்தது. அவர் உடுத்தியிருந்த உடை அப்படி. உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி சேலையும், கழண்டு விழ நேரம் பார்க்கும் ரவிக்கையுமாக அவர் அமர்ந்தார்.

இதை ரொம்ப நேரம் பார்க்க முடியாத கிராமத்துப் பெரிசுகள் வரிசையாக ஸ்ரேயாவுக்கு பொன்னாடை என்ற பெயரில் முழுசாகப் போர்த்திவிட்டனர். சிறிது நேரம் அவரும் போர்த்திக் கொண்டிருந்தார். ஆனால் போட்டோகிராபர்கள் விடவில்லை…

‘மேடம் போர்த்தாதீங்க… போர்த்தாதீங்க’ என கூக்குரல் எழுப்ப ‘அது’ என்று அஜீத் பாணியில் கூறியபடி பொன்னாடையை நழுவவிட்டார்!

சௌந்தர்யா பட செய்தியை வெளியிடாமல் தடுத்தாரா ரஜினி?

December 4, 2009 by envazhi  
Filed under Rajini

அடடா… புருடா விட ஒரு அளவே இல்லையா!

rajini-latha

நேற்று ஒரே பொய்யை திரும்பத் திரும்ப முதல் செய்தியாக போட்டுக் கொண்டிருந்தது ஒரு இணையதளம்.

தன் மகள் சௌந்தர்யா தயாரிக்கும் கோவா பற்றிய செய்தியை வெளியிட வேண்டாம் என ரஜினி கேட்டுக் கொண்டதாகவும், அதனால் முன்னணி பத்திரிகைகள் எல்லாம் அதை வெளியிடாமல் நிறுத்திவிட்டதாகவும் உளறியிருந்தார்கள்.

ரஜினி என்றைக்காவது யாருக்காவது போன் செய்து ‘செய்தியை போட வேண்டாம், அந்தச் செய்தியைப் போடுங்க’ என்று சொல்லியிருக்கிறாரா?

இந்தத் துறையில், எனக்குத் தெரிந்து இப்படியொரு விஷயத்தைக் கேள்விப்பட்டதே இல்லை.

ஏதேனும் ஒரு விவகாரம் குறித்து ரஜினியிடம் கருத்து / விளக்கம் கேட்கப் போனால், அவசியமிருந்தால் கருத்து சொல்வார், இல்லாவிட்டால் ‘எதற்கு? வேண்டாமே..!’ என்று நாசூக்காக மறுப்பார். இத்தனை ஆண்டுகளில் ஒரு பத்திரிகையாளராக நாம் பார்த்த ரஜினியின் இயல்பு இதுதான்.

யாருக்கும் போன்போட்டு ‘இதை இப்படி வெளியிடுங்கள்’ என்று சூப்பர் எடிட்டர் வேலையெல்லாம் அவர் செய்தது கிடையாது.

அட குசேலன் விவகாரத்தை விடவா… அவர் விளக்கம்தான் சொன்னார். வருந்துகிறேன் என்றார். அதுகூட இருமாநில மக்களுக்கும் ஒரு சுமூக நிலை வரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துக்காக. வருத்தத்துக்கும் மன்னிப்புக்கும் அந்த தருணத்தில் மட்டும் தமிழகத்திலிருந்த சிலருக்கு வித்தியாசமே தெரியாமல் போய்விட்டது.

இன்று ரஜினியை வைத்து ஆதாயம் பார்க்கும், அதே நேரம் அவரது பெயரை இன்றும் டேமேஜ் செய்யப் பார்க்கும் ஒரு குழுமத்தின் பத்திரிகை, அன்றைக்கு அதன் செய்தி ஆசியரை, ‘அவர் வருத்தம் தெரிவித்ததாகச் சொன்னது எங்களுக்கும் தெரியும்… ஆனால் மன்னிப்புக் கேட்டார்னு நியூஸ்ல படிங்க. ஜெயமாலா லெட்டர்லயும் அப்படி இருப்பதாகவே (கன்னடத்தில் ரஜினி எழுதியது) சொல்லுங்க’ என வற்புறுத்தி சொல்லச் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும் நாடறியும்.

அப்போது கூட எந்தப் பத்திரிகைக்கும், சேனலுக்கும் போன் செய்து, ‘ஏங்க இப்படி தப்பா சொல்றீங்க… நான் லெட்டர்ல இப்படியா எழுதியிருக்கேன்’ என்று கேட்காத மனிதர்தான் ரஜினி.

இன்னொன்று, சௌந்தர்யா ரஜினியின் கோவா பட விவகாரத்தை எந்தப் பத்திரிகைதான் வெளியிடாமல் இருந்தது?

எல்லோருமே வெளியிட்டார்கள், முன்னணி நாளிதழ்கள், இணைய தளங்கள், தொலைக்காட்சிகள்.. நேற்றுதான் வலையுலகுக்கு அறிமுகமானோர் வரை ஒருத்தரும் பாக்கி வைக்காமல் திரும்பத் திரும்ப எழுதினார்கள் / செய்தி சொன்னார்கள். அதில் ஒரு தவறும் இல்லை. நீதிமன்ற செய்தி. தாராளமாக உள்ளதை உள்ளவாறு யாரும் எழுதலாம்.

இதில் ரஜினி எங்கே வந்தார்!

வெளியுலகம் தெரியாமல் அல்லது வெளியில் என்ன நடக்கிறதென்ற உணர்வே இல்லாமல் டெஸ்க் ஒர்க்கில் தீவிரம் காட்டினால் செய்திகள் இப்படித்தான் பல்லிளிக்கும்!

-விதுரன்

ரஜினி பிறந்த நாளில் வெளி வருமா கோவா?

December 2, 2009 by envazhi  
Filed under Cinema

ரஜினி பிறந்த நாளில் வெளி வருமா கோவா?

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் முதல்படம் சுல்தான் – தி வாரியர் என்று கூறப்பட்டாலும், உண்மையில் முதலில் வெளியாகவிருந்த படம் Sultan_003 copyகோவா. ‘ரஜினியின் மகள்தானே… அப்பா காசில்தான் படமெடுப்பார்’ என்று பலரும் கூறி வந்த நிலையில், வெளியில் கடன் வாங்கித்தான் படம் எடுப்பதாக சௌந்தர்யா கூறியிருந்தார்.

படப்பிடிப்பு முடிந்து ஆடியோ ரிலீஸூக்கு சௌந்தர்யா தயாராகிக் கொண்டிருந்த தருணத்தில், சௌந்தர்யாவுக்கு பைனான்ஸ் செய்தவர் கோர்ட்டுக்குப் போய்விட, இப்போது படத்துக்கு டிசம்பர் 11 வரை இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். ரூ.1.6 கோடிக்காக இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார் அந்த பைனான்ஸியர்.

டிசம்பர் 12 ரஜினி பிறந்த நாள். அதற்கு முன் ஆடியோ வெளியாகி, பின்னர் படம் வெளியாக வேண்டும். சாத்தியமா என்பது ரசிகர்களின் கேள்வி.

என்ன சொல்கிறார் சௌந்தர்யா?

அவர் தரப்பில் ஆக்கர் ஸ்டுடியோவிலிருந்து இன்று சொல்லப்பட்ட பதில்:

“இது ஒரு சீரியஸ் மேட்டர் இல்லை. ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். நிச்சயம் திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும். சினிமா உலகில் சாதாரணமாக நடக்கும் ஒரு விஷயம் இது.

ரஜினி மகள் என்பதால் இதற்கு தேவையற்ற அழுத்தம், பப்ளிசிட்டி தருகிறார்கள். படத்தின் ஆடியோ வெளியீடு குறித்தும், படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும். படம் சிறப்பாக வந்துள்ளது… அதுதான் முக்கியம்!”

-என்வழி

பழஸிராஜா… ‘பழசா ராஜா’?!

November 24, 2009 by envazhi  
Filed under Popcorn

பழஸிராஜா… ‘பழசா ராஜா’?!

imagesல்ல படம் என்ற பெயரைச் சம்பாதித்தாலும் பழஸிராஜாவின் வசூல் தமிழில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை (மலையாளத்தில் அள்ளிவிட்டது!).

பூக்கடைக்கே விளம்பரம் தேவைப்படும் இந்தக் காலத்தில், பழஸிராஜா போன்ற கொஞ்சம் ‘வறட்சியான’ படத்துக்கு எந்த அளவு மெனக்கெட்டிருக்க வேண்டும் பப்ளிசிட்டியில்?

ஆனால் இந்தப் படம் வந்ததே பலருக்குத் தெரியவில்லை.. ஆடியோ விழாவில் மட்டும் இளையராஜா புண்ணியத்தில் கொஞ்சம் பரபரப்பேற்பட்டது. வெளியூர்களில் போஸ்டரைப் பார்ப்பவர்கள், ‘ஏதோ மம்முட்டியோட பழைய படம் போல’ என்று கூறிவிட்டுப் போகிறார்களாம். தியேட்டர்காரர்கள் பெட்டியை திருப்பி அனுப்பத் தயாராகி வருகின்றனர்.

பப்ளிசிட்டி பத்தாது சேட்டா!

சென்னையில் 57 புதிய திரையரங்குகள்!

imagesக்ஸ்பிரஸ் அவென்யூவில் 11 திரையரங்குகளை சத்யம் சினிமாஸ் துவங்கவிருப்பது தெரிந்த செய்தி. அதே வளாகத்தில் ஆட்லேப்ஸ்காரர்கள் 10 திரையரங்குகளைத் துவங்கவிருக்கிறார்களாம்.

இவை தவிர வட பழனி ஏரியாவில் 14 திரையரங்குகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் நான்கு நடிகர் விஜய்க்கு சொந்தம். மேலும் 22 திரையரங்குகள் திறப்பு விழாவுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

நகருக்குள் இந்த மாதிரி மல்டிபிளெக்ஸுகளுக்கு கிடைத்த வெற்றியைப் பார்த்து இப்போது புறநகர்ப் பகுதிகளிலும் இதே மாதிரி மல்டிப்ளெக்ஸ்கள் தயாராகி வருகின்றன.

கோவா ஆடியோ ரிலீஸ் !

imagesசௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் முதல் படமான கோவா ஆடியோ வெளியீடு விரைவில் சென்னையில் நடக்கவிருக்கிறது.

சத்யம் வளாகம் அல்லது சென்னை டிரேடு சென்டரில் விழா நடக்கக் கூடும்.

பாடல்களை வெளியிடுபவர்… ‘தலைவர்’தான்!


கமல் தொடங்கி வைத்த கௌதமியின் மெகா சீரியல்!

imagesபிராமி என்ற பெயரில் புதிய மெகா சீரியல் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது (எத்தனை வருடங்களுக்கோ!). தயாரிப்பாளர் – அபிராமி ராமநாதன். சீரியலுக்குப் பெயர் ‘அபிராமி’.

இந்த சீரியலின் நாயகி கௌதமி… திங்கள்கிழமை இந்த சீரியலைத் துவக்கி வைத்தவர், கமல் ஹாஸன்!

7 படம் வேண்டும் என நான் கேட்கவில்லை! – கமல்ஹாஸன்

November 18, 2009 by envazhi  
Filed under Cinema

7 படம் வேண்டும் என நான் கேட்கவில்லை! – கமல்ஹாஸன்

சென்னை: கோவா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் (இஃபி) kamalநான் நடித்த 7 படங்களைத் திரையிட வேண்டும் என கேட்கவில்லை. 3 படங்களில் என்னைப் பற்றித் தெரிவித்து விட முடியாதே, குறைந்தபட்சம் 7 படங்களாவது இருக்கட்டுமே என்று என் நண்பர்கள்தான் வலியுறுத்தினர். அது தவறாக நான் சொன்னதாக இஃபி தரப்பில் கூறப்பட்டுள்ளது என கமல்ஹாஸன் விளக்கமளித்துள்ளார்.

பனாஜியில் நவம்பர் 23ம் தேதி சர்வதேச இந்திய திரைப்பட விழா தொடங்குகிறது. இதில் திரையுலகில் 50 ஆண்டுகள் சாதனை படைத்த கமல்ஹாசன், ஆஷா பரேக், ஷர்மிளா தாகூர், செளமித்ரா சாட்டர்ஜி ஆகியோரைக் கெளரவிக்கும் வகையில் இவர்கள் நடித்த படங்கள் தலா மூன்றைத் தனியாக திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது இந்தப் பட்டியலில் கமல்ஹாசன் இடம் பெறவில்லை. கமல்ஹாசன் தரப்பில் 7 படங்களைத் திரையிட வேண்டும் என கோரியதாகவும், ஆனால் அப்படி செய்ய முடியாத நிலை இருப்பதாகவும், விழாவுக்கான இயக்குநர் எஸ்.எம். கான் கூறியிருந்தார். இதனால் கமல் படம் இல்லாமலேயே கோவா திரைப்பட விழா நடக்கிறது. இது திரைப்பட ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கமல்ஹாசன் நேற்று பிடிஐ நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில்,

“நான் அப்படி எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. எனது டெல்லி நண்பர்கள்தான், 3 படங்களில் 50 ஆண்டு திரைப் பயணத்தை அடக்கி விட முடியாதே, 7 படங்களாவது இருக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

மேலும் இந்த ஏழு படங்களையும் டெல்லி நிகழ்ச்சியில் தனியாக திரையிட வேண்டும் என்பதும் அவர்களின் விருப்பம்.

வடக்கு தெற்கு பேதம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதற்கு அவர்களைக் குறை சொல்ல முடியாது. நம்மை பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்ள அடிக்கடி தவறிவிடுகிறோம் (‘North-south bias is there but we too are to be blamed, fault is ours, we don’t represent ourselves in meetings’)… மற்றபடி எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை” என்றார்.

-என்வழி

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கமல்ஹாசனுக்கு இடமில்லை?!

November 18, 2009 by envazhi  
Filed under Cinema

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கமல்ஹாசனுக்கு இடமில்லை!

திரையுலகில் பொன்விழா காணும் நடிகர் கமல்ஹாசனின் சாதனைகளை நினைவுகூறும் வண்ணம், இந்த ஆண்டு கோவாவில் நடக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (Iffi) கெளரவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.iffi2009

ஆனால் இப்போது அவரது படங்கள் இந்தவிழாவில் காட்டப்படாது என்றும் அடுத்த ஆண்டு தனி விழா ஒன்றில் காட்டப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த விழாவின் ‘ரெட்ரோஸ்பெக்டிவ்’ பிரிவில், இந்திய திரையுலக சாதனையாளர்களுள் ஒருவரான கமல் ஹாசனின் மூன்று திரைப்படங்களை மட்டுமே காட்டப் போவதாகக் கூறியுள்ளனர் அமைப்பாளர்கள். ஆனால் கமல் தனது சிறந்த ஏழு படங்கள் இடம் பெற வேண்டும். அதுதான் தனது பங்களிப்பை ஓரளவு சரியாக பிரதிபலிக்கும் என கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு தங்களது 50 ஆண்டு சினிமா வாழ்க்கையை பூர்த்தி செய்துள்ள முன்னாள் கலைஞர்களான ஷர்மிளா தாகூர், ஆஷா பரேக் மற்றும் சவுமித்ரா சாட்டர்ஜி ஆகியோரின் படங்களுடன் சேர்த்து கமல் படத்தையும் காட்டப் போவதாக கூறியுள்ளனர். இல்லாவிட்டால் தனி விழாவொன்றில் அவர் படங்களை போட்டுக் காட்டலாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.

“இந்த ஆண்டு சர்வதேச பட விழாவில் கமல்ஹாசனின் ஏழு படங்களை திரையிடும் அளவுக்கு இடமில்லை. எனவே, அவரது படங்கள் டெல்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பிரத்யேகமாக கெளரவிக்கப்படும்,” என ஐ.எஃப்.எஃப்.ஐ ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவா மாநிலம் பனாஜியில் இம்மாதம் 23-ம் தேதியில் இருந்து டிசம்பர் 3 வரை 10 நாட்களுக்கு நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் உலக அளவில் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 படங்கள் திரையிடப்படுகின்றன. பென் கிங்ஸ்லி இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். சர்வதேச திரையுலகப் பிரபலங்கள் பலரும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில், கமல்ஹாஸனை திட்டமிட்டே தவிர்த்துவிட்டதாக குமுறுகிறார்கள் ரசிகர்கள்.

-என்வழி

அப்பா பாராட்டினார்… மகள் வாய்ப்பு தந்தார்!

May 21, 2009 by envazhi  
Filed under Cinema


அப்பா பாராட்டினார்… மகள் வாய்ப்பு தந்தார்!

நான் கடவுள் படத்தின் சிறப்புக் காட்சி பார்த்து முடித்து வெளியில் வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி இப்படிக் கேட்டாராம்:pooja-rajini

‘ரொம்ப அருமையா பண்ணியிருக்காங்க பூஜா. அவங்களை உடனே பாராட்டணுமே… பெண்டாஸ்டிக் பர்மான்ஸ்… அவங்களை வரச் சொல்லுங்க நிகில்’ என்று மனம் திறந்து ரஜினி பாராட்ட, அடுத்த இரு தினங்களில் அடித்துப் பிடித்துக் கொண்டு ரஜினி வீட்டுக்குப் போய், அவரது பாராட்டு மழையி்ல் நனைந்தார் பூஜா.

ரஜினியின் பாராட்டுக்களைப் பெற்ற கையோடு, அவருக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது… அதுதான் ரஜினி மகள் சௌந்தர்யா தந்துள்ள பெரிய வாய்ப்பு.

ஆக்கர் ஸ்டுடியோ தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் கோவா படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் ஏஞ்சலினா ஜூலி போன்ற வெளிநாட்டு நடிகை ஒருவர் தோன்ற வேண்டும் என வெங்கட் பிரபு விருப்பப்பட்டார்.

ஆனால் அதற்கு ஹாலிவுட் நடிகைகள் கேட்ட சம்பளம் படத்தின் மொத்த பட்ஜெட்டை விட அதிகமாக இருக்கவே, வேண்டாம் ஹாலிவுட் என முடிவு செய்து உள்ளூரிலேயே நடிகைகளைத் தேடினார்கள். அதில் நல்ல நடிகை என தந்தையால் பாராட்டப்பட்ட பூஜாதான் உடனே நினைவுக்கு வந்தாராம் சௌந்தர்யாவுக்கு.

அடுத்த நிமிடம் ஒரு போன் செய்து வரவழைத்து ஒப்பந்தம் போட்டுவிட்டார்கள். இதே ஷூட்டிங்குக்கும் கிளம்பிவிட்டார் பூஜா.

ஜெய், வைபவ், பிரேம்ஜி நடிக்கும் ‘கோவா’வில் சினேகா இன்னொரு நாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசைக்கிறார்.

பொள்ளாச்சியில் படுவேகமாக நடந்துவருகிறது படப்பிடிப்பு. விரைவில் ‘கோவா’ யூனிட், கோவாவுக்கு பறக்கிறது!

Related Posts with Thumbnails