முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

இந்தியாவின் ‘அவதார்’!

September 10, 2010 by envazhi  
Filed under Cinema

இந்தியாவின் ‘அவதார்’!


மீபத்தில் ஒரு தெலுங்கு சேனல் எந்திரன் (ரோபோ) பற்றி ஒளிபரப்பிய ஒரு சி்றப்பு நிகழ்ச்சிக்கு இதுதான் தலைப்பு.

சமீபத்தில் வெளியாகியுள்ள எந்திரனின் இந்திப் பதிப்பான ரோபோ-வின் ட்ரைலர் காட்சிகளைப் பார்த்த பிறகுதான், அந்தத் தலைப்பு எத்தனை அர்த்தமுள்ளது என்பது புரிந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினி முன்பே கூறியது போல, எந்திரன் – தி ரோபோ, ஹாலிவுட்டுக்கு இந்தியா தரும் பதிலாக அமையப் போவது உறுதி!

ரோபோ இந்தி ட்ரைலர்:

எந்திரன் பிரமாண்ட வெற்றி பெறும்! – ரஜினி பேட்டி!

September 10, 2010 by envazhi  
Filed under Rajini

எந்திரன் பிரமாண்ட வெற்றி பெறும்! – ரஜினி பேட்டி!

திருமலை: எந்திரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா மற்றும் மகள் சௌந்தர்யா, மருமகன் அஸ்வின் ஆகியோருடன் கார் மூலம் நேற்று இரவு திருப்பதிக்கு வந்தார்.

திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி, சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் ஏழுமலையான் கோவிலுக்குள் சென்ற அவரை, கோவில் நிர்வாகம் சார்பில் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் ஆகியோர் வரவேற்றனர்.

வரவேற்பு முடிந்ததும், வி.ஐ.பி. தரிசனம் வழியாக சென்று இரவு சுமார் 9 மணியளவில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருடன் மனைவி, மகள், மருமகன் ஆகியோரும் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் ரஜினிகாந்த்துக்கு லட்டு மற்றும் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.

தரிசனம் முடிந்து வெளியில் வந்த ரஜினியை சூழ்ந்து கொண்ட நிருபர்கள், வரவிருக்கும் எந்திரன், அரசியல் பிரவேசம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவர்களிடம் ரஜினி கூறியதாவது:

எனது மகளின் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது. அதற்காக ஏழுமலையானுக்கு நன்றி செலுத்த குடும்பத்துடன் வந்தேன்.

இம்மாதம் வெளிவர உள்ள ‘எந்திரன்’ படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இத் திரைப்படம் குழந்தைகள் முதல் இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் அமைந்துள்ளது.

‘எந்திரன்’ மிகப் பெரிய வெற்றியை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. ‘எந்திரன்’ படம் மாபெரும் வெற்றி பெறவும் ஏழுமலையானை நான் வேண்டிக்கொண்டேன்.

அரசியல் பற்றியெல்லாம் இப்போது எதுவும் பேசும் சூழ்நிலை இல்லை. இப்போதைக்கு அரசியல் மற்றும் எனது அடுத்த படம் பற்றிச் சொல்ல எதுவுமில்லை.

நண்பர் சிரஞ்சீவி மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வெற்றி மேல் வெற்றி கிட்ட வாழ்த்துக்கள்,” என்றார் ரஜினி.

ரஜினியைக் கண்டதும், ‘சூப்பர் ஸ்டார் வாழ்க’, ‘ரோபோ, ரோபோ’, ‘இனிய எந்திரா’ என ரசிகர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். அவரை சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்க முயன்றனர். அவரும் முடிந்தவரை சிலருக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். கூட்டம் அலைமோதியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு காரில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

சென்னைில் 30 திரையரங்குகளில் எந்திரன்.. செப் 11 முதல் திரையரங்குகளில் ட்ரைலர்!

September 9, 2010 by envazhi  
Filed under Featured

சென்னைில் 30 திரையரங்குகளில் ‘எந்திரன்’ அமர்க்கள ரிலீஸ்.. செப் 11 முதல் திரையரங்குகளில் ட்ரைலர்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படத்தின் வெளியீட்டு நாள் நெருங்க நெருங்க எதிர்ப்பார்ப்பு உச்சகட்டத்தை நோக்கிச் செல்கிறது.

உலகம் முழுக்க 3000 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகவிருக்கும் இந்தப் படம், சென்னையில் மட்டும் 30 திரையரங்குகளில் வெளியாகிறது.

இன்று-வியாழக்கிழமை-எந்திரன் படம் சென்னையில் வெளியாகும் திரையரங்குகள் உள்ளிட்ட விவரங்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

சத்யம் (3), தேவி (2), எஸ்கேப் சினிமாஸ் (3), ஐநாக்ஸ் (2), அபிராமி (4), சங்கம் (2), ஆல்பட் (2), உதயம் (3), கமலா (2), பிவிஆர் (5), ஐட்ரீம், மகாராணி ஆகிய திரையரங்குகளில் எந்திரன் வெளியாகி்றது. இவை அனைத்தும் சென்னை நகர எல்லைக்குட்பட்ட திரையரங்குகள்.

எந்திரனின் தெலுங்கு மற்றும் இந்திப் பதிப்பான ‘ரோபோ’, காஸினோ, ஈகா, சத்யம், எஸ்கேப் உள்ளிட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

காசி, பிருந்தா, தியாகராஜா, மாயாஜால், பிரார்த்தனா, ராக்கி போன்ற திரையரங்குகள் சென்னை நகர எல்லைக்குள் வராதவை. புறநகர்ப் பகுதியில் மட்டும் 40க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் எந்திரனைக் காணலாம். 10 ஸ்கிரீன்கள் கொண்ட மாயாஜாலில் நாளொன்றுக்கு 60 காட்சிகளுக்கும் மேல் எந்திரன் திரையிடப்படுகிறது.

நாளை மறுதினம் (செப் 11) படத்தின் அதிரடியான முன்னோட்டக் காட்சிகள் வெளியிடப்படுகிறது. இதனை சத்யம் திரையரங்கில் வைத்து ஒரு தனி விழாவாகவே நடத்துகிறார்கள். அதே நேரம் அம்பத்தூர் ராக்கி, கேகே நகர் காசி திரையரங்குகளிலும் ட்ரைலர் வெளியாகிறது.

அடுத்த இரு வாரங்களுக்கு உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் எந்திரன் ட்ரைலரைக் காணலாம்.

எந்திரன் வெளியாகும் சென்னை திரையரங்குகள் மற்றும் ட்ரைலர் வெளியீடு குறித்த இன்றைய விளம்பரம்:

-என்வழி ஸ்பெஷல்

எந்திரன்… புத்தம் புதிய வால்பேப்பர்கள்!

September 8, 2010 by envazhi  
Filed under Featured

எந்திரன்… புத்தம் புதிய வால்பேப்பர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படத்தின் புத்தம் புதிய வால்பேப்பர்கள் வெளியாகியுள்ளன. இதில் மேலும் சில புதிய ஸ்டில்கள் இடம் பெற்றுள்ளன.

இதற்கிடையே, எந்திரன் ரிலீஸ் தேதி குறித்து இதுவரை அமைதி காத்த சன் பிக்சர்ஸ், தற்போது செப்டம்பர் மாதமே படம் வெளியாகும்  என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களாக எந்திரன் ரிலீஸ் குறித்த விளம்பரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இந்த வாரமே எந்திரனின் வியாபார விஷயங்கள் முடிந்துவிடும் என்றும், தியேட்டர்கள் விவரம், ஓவர்ஸீஸ் ரிலீஸ் போன்ற பிற விஷயங்களும் முடிவாகிவிடும் என்றும் சன் பிக்சர்ஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

எந்திரன் வால்பேப்பர்கள் மற்றும் விளம்பரங்கள்:

-என்வழி ஸ்பெஷல்

ரசிகர்களுக்கு திருமண விருந்து… ரஜினி அறிவிப்பு!

September 6, 2010 by envazhi  
Filed under Rajini

ரசிகர்களுக்கு திருமண விருந்து… ரஜினி அறிவிப்பு!

சென்னை: மகள் சௌந்தர்யாவின் திருமணத்தையொட்டி, ரசிகர்களுக்கு தனி விருந்து வைப்பதாக அறிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாவின் திருமணம், கடந்த 3-ந்தேதி சென்னையில் நடைபெற்றது.

இதையொட்டி ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகளின் திருமண விழா மற்றும் மாலையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள், மத்திய மந்திரிகள், பல்வேறு கட்சி தலைவர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், திரையுலக பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், பரிசு பொருட்கள் அனுப்பி வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் நன்றி.

எனது மகளின் திருமண வைபவத்தை முன்னிட்டு, என்னுடைய ரசிகர்கள் அனைவரையும் குடும்பத்தினருடன் அழைத்து, மணமக்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி விருந்து வைக்க நான் ஆசைப்படுகிறேன். அது முடியுமானால், அதை நிறைவேற்ற நான் கண்டிப்பாக முயற்சி செய்வேன்,” என்று கூறியுள்ளார்.

கல்யாணத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது! – ரஜினி

September 6, 2010 by envazhi  
Filed under Featured

கல்யாணத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியும் என்று நினைப்பவன் முட்டாள் : ரஜினி

ரு திருமணத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்திவிட முடியும் என்று நினைப்பது முட்டாள்தனம், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

கவிஞர் வைரமுத்து மகன் கபிலன் திருமணம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தலைமயில் நடந்தது.

அரசியல், இலக்கிய, திரையுலகைச் சேர்ந்த பலரும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.

இத்திருமண நிகழ்ச்சியில் ரஜினி பேசியதாவது:

“செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு இந்த நிகழ்ச்சிக்குத்தான் தமிழர்கள் அதிகம் பேர் வந்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் மணமக்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்வேன். இந்த நேரத்தில் மணமக்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்வேன். வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தால்தான், உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். எனவே, மணமக்கள் இருவரும் முதலில் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

திருமணத்தில் அனைவரையும் திருப்திபடுத்தவேண்டும் என்பது முடியாத காரியம். அவ்வாறு அனைவரையும் திருப்திபடுத்த வேண்டும் என்று நினைப்பவன் மிகப் பெரிய முட்டாள். இரண்டு திருமணத்தை நடத்தியதன் மூலம் நான் தெரிந்து கொண்டது இதுதான்.

இது தெரிந்திருந்தும் அனைவரையும் திருப்திபடுத்த வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து இங்கு எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுக்கு உரியது.

என் துணைவியாரிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத பல விஷயங்களை வைரமுத்துவிடம் பகிர்ந்து கொள்வேன். அரசியல், குடும்பம், வங்கி கணக்கு வரை கூட அவரிடம் பேசிக் கொள்வேன். ஏனென்றால் எதை வெளியில் சொல்லக் கூடாது என்பது அவருக்கு தெரியும்.

வைரமுத்துவிடமிருந்து நான் பலவற்றை கற்றுக்கொண்டிருக்கிறேன். கோபம் என்பது என்னுடைய பலம் என நீண்ட நாள் நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, அது பலம் அல்ல, பலவீனம் என புரிய வைத்தவர் வைரமுத்து. ஏனெனில் அவர் என்னை விட அதிக கோபக்காரர்…,” என்றார்.

ரஜினி பற்றி வைரமுத்து சொன்னது என்ன?

பின்னர் பேசிய முதல்வர் கருணாநிதி, “எந்த என்னிடமும் வைரமுத்து ரகசியங்களை பகிர்ந்து கொள்வார். அதற்காக ரஜினி பயப்படத் தேவையில்லை. இப்படிச் சொல்வதால் வைரமுத்து ரஜினி பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை என்றும் சொல்லமாட்டேன்,” என்று கூற, ரஜினி தனக்கே உரிய ஸ்டைலில் சிரித்தார்!

-என்வழி

புதுமணத் தம்பதி சௌந்தர்யா – அஸ்வினுக்கு முதல்வர் வாழ்த்து! – ஸ்பெஷல் படங்கள்

September 4, 2010 by envazhi  
Filed under Featured

புதுமணத் தம்பதி சௌந்தர்யா – அஸ்வினுக்கு முதல்வர் வாழ்த்து! – ஸ்பெஷல் படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள்  சௌந்தர்யா – அஸ்வின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை ராஜா முத்தையா – ராணி மெய்யம்மை அரங்குகளில் நடந்தது.

காலையில் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போனதால், வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தார் முதல்வர் கருணாநிதி. அவரை ரஜினி, லதா ரஜினி உள்ளிட்டோர் வரவேற்றனர். மணமக்கள் அவரிடம் ஆசி பெற்றனர்.

துணை முதல்வர் ஸ்டாலினும் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

நிதியமைச்சர் அன்பழகன், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி, மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், நெப்போலியன், திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, பாமகவின் டாக்டர் அன்புமணி ராமதாஸ்,  முன்னாள் மத்திய அமைச்சர் சு திருநாவுக்கரசர், சன் டிவி தலைவர் கலாநிதி மாறன், தொழிலதிபர் எம்ஏஎம் ராமசாமி செட்டியார், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர்கள் ஏ ஆர் ரஹ்மான், தேவா, இயக்குநர் பீ வாசு, ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த சத்தியநாராயணா, நடிகர் மோகன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் திரையுலக விஐபிக்கள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்து வாழ்த்தினர்.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

-என்வழி ஸ்பெஷல்

சௌந்தர்யா – அஸ்வின் திருமணம்… தலைவர்கள் வாழ்த்து… எஸ்க்ளூசிவ் படங்கள்!

September 3, 2010 by envazhi  
Filed under Featured

சௌந்தர்யா – அஸ்வின் திருமணம்… தலைவர்கள் வாழ்த்து!

ஜினியின் இளையமகள் சௌந்தர்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராம்குமார்- ஹேமாராம் குமார் தம்பதிகளின் மகன் அஸ்வினுக்கும் இன்று காலை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் திருமணம் இனிதே நடந்தது.

காலை 6 மணிக்கு திருமண நிகழ்ச்சி தொடங்கியது. சௌந்தர்யா அரக்கு கலரில் பட்டு புடவையும் பச்சை நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். மணமகன் அஸ்வின் வேட்டி அங்கவஸ்திரம் அணிந்து இருந்தார்.

மண மேடையில் அக்னி வளர்த்து புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓதினர். அருகில் உள்ள இருக்கையில் ரஜினி அமர்ந்திருந்தார். தனது மடியில் சௌந்தர்யாவை உட்கார வைத்திருந்தார். மங்கள வாத்தியங்கள் முழங்க சரியாக 8 மணிக்கு மணமகள் சௌந்தர்யா கழுத்தில் அஸ்வின் தாலி கட்டினார்.

திருமணத்துக்கு வந்தவர்கள் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர்.

தாலி கட்டும் நிகழ்ச்சி முடிந்ததும் முகூர்த்த மந்திரம் ஓதப்பட்டது. ரஜினி- லதா காலில் விழுந்து மணமக்கள் ஆசி பெற்றனர். அக்னியைச் சுற்றியும் வலம் வந்தனர். பின்னர் மணமக்களை ரஜினி மேடையில் இருந்து இறக்கி பார்வையாளர் வரிசைக்கு அழைத்து வந்தார்.

அங்கு உட்கார்ந்திருந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இயக்குநர் பாலசந்தர், தெலுங்கு இயக்குநர் ராகவேந்திரராவ் ஆகியோர் காலில் விழுந்து ஆசி பெறச்செய்தார்.

திருமணத்தில் சம்பிரதாய முறைப்படி ரஜினி சிறிது நேரம் தலைப்பாகை அணிந்திருந்தார். அம்மிமிதித்து அருந்ததி பார்த்தல், மெட்டி அணிவித்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தன.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ம.தி. மு.க. பொதுச்செயலாளர் வைகோ, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பாரதீய ஜனதா தலைவர் இல.கணேசன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு தா.பாண்டியன், நல்ல கண்ணு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர்கள் சிவகுமார், பிரபு, பாக்யராஜ் – பூர்ணிமா பாக்யராஜ், பாண்டியராஜன், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, மோகன்பாபு, சுமன், வெங்கடேஷ் ஆகியோரும் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

நடிகை ஸ்ரீதேவி கணவர் போனிகபூருடனும், நடிகை மீனா கணவர் வித்யா சாகருடனும் வந்து வாழ்த்தினார்கள்.

திருமணத்துக்கு வந்தவர்கள் விவரம்:

கார்த்தி சிதம்பரம், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், திருநாவுக்கரசர், இயக்குநர் மணிரத்னம், கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர்கள் புஷ்பா கந்தசாமி, சத்யஜோதி தியாகராஜன், கலைப்புலி தாணு, ராம்குமார், நடிகர்கள் சுமன், சின்னிஜெயந்த், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், நடிகை சுஹாசினி, இயக்குநர் பி.வாசு, ரஜினி ரசிகர் மன்ற பிரமுகர்கள் சத்ய நாராயணா, பினோரா அசோக் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்தினார்கள்.

ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

திருமணப் பரிசு

மணமக்களுக்கு திருமணப் பரிசாக சென்னை சேத்பட்டில் ஒரு சொகுசு ப்ளாட்டை பரிசளித்துள்ளார் ரஜினி. திருமணத்துக்குப் பிறகு இங்குதான் புதுமணத் தம்பதிகள் குடியிருக்கப் போகிறார்களாம்.

முதல்வர் கருணாநிதி

இன்று மாலை இதே மண்டபத்தில் நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார். மாலை 8 மணிக்கு அவர் நிகழ்ச்சிக்கு வருகிறார்.

திருமண சிறப்புப் படங்கள்:





மேலும் படங்கள் தனிப் பதிவாக…

-என்வழி ஸ்பெஷல்

சௌந்தர்யா – அஸ்வின் திருமணம்… மாப்பிள்ளை அழைப்பு சிறப்புப் படங்கள்!

September 3, 2010 by envazhi  
Filed under Featured

சௌந்தர்யா – அஸ்வின் திருமணம்… மாப்பிள்ளை அழைப்பு சிறப்புப் படங்கள்!


சூப்பர் ஸ்டார் ரஜினி மகள் சௌந்தர்யா – அஸ்வின் திருமணத்தின் முக்கிய நிகழ்ச்சியான மாப்பிள்ளை அழைப்பு நேற்று மாலை ராஜா முத்தையா – ராணி மெய்யம்மை மண்டபங்களில் நடந்தது.

மணமகள் சவுந்தர்யாவும், மணமகன் அஸ்வினும் மாலை 6-30 மணிக்கு திருமண மண்டபத்துக்கு வந்தார்கள். சவுந்தர்யா பச்சை நிறத்தில் பட்டுச்சேலை அணிந்திருந்தார். அஸ்வின், சந்தன நிறத்தில் ஷெர்வானி அணிந்திருந்தார். இருவருக்கும் மங்கள வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருமண நிச்சயதார்த்தம் மற்றும் முகூர்த்த பத்திரிகையை புரோகிதர்கள் படித்தார்கள். அதன்பிறகு ரஜினிகாந்த்-லதா ரஜினிகாந்த் தம்பதிகளும், ராம்குமார்-ஹேமா ராம்குமார் தம்பதிகளும் நிச்சயதார்த்தத்துக்கான தட்டுகளை மாற்றிக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பல்துறைப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நடிகை ஸ்ரீதேவி தனது கணவருடனும், வைஜெயந்தி மாலா, மோகன்பாபு உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

-என்வழி ஸ்பெஷல்

ரசிகர்களை வர வேண்டாம் என்று ரஜினி கூறியது சரியா?: கேள்வி – பதில்

September 2, 2010 by envazhi  
Filed under Questions

ரசிகர்களை வர வேண்டாம் என்று ரஜினி கூறியது சரியா? – கேள்வி பதில் 14

கேள்வி: ரசிகர்களை வர வேண்டாம் என்று ரஜினி கூறியது சரியா? ரசிகர்களை தனியாகக் கூட்டியாவது ஒரு வரவேற்பு வைத்திருக்கலாமே ரஜினி?

(நிறைய நண்பர்கள் போனிலும் நேரிலும் இந்தக் கேள்வியைக் கேட்டதால், இதற்கான விளக்கத்தைத் தருகிறோம்.)

பதில்: ரஜினி என்ற நடிகருக்கு இருக்கும் ரசிகர்களை விட, ரஜினி என மனிதருக்கு உள்ள ரசிகர்களின் எண்ணிக்கை பல லட்சங்கள் அதிகம்!

ரஜினி தன் ரசிகர்களையெல்லாம் அழைத்து விருந்து கொடுத்து அவரது மகள் திருமணத்தை நடத்த வேண்டுமென்றால், சென்னையில் எத்தனை மண்டபத்தை வாடகைக்கு எடுப்பது… தீவுத்திடலோ, மெரீனாவோ கூட போதாது.

உண்மையிலேயே இவ்வளவு பேரும் வருவார்களா? என்று கூட சிலர் கேட்கக் கூடும். ரஜினி மட்டும் ‘வாங்க’ என்று ஒரு வார்த்தை சொன்னால், சென்னை திகைத்து ஸ்தம்பித்துப் போகும் என்பது அவரை விமர்சிப்பவர்களுக்கும் நன்கு தெரியும்.

இதையெல்லாம் உணர்ந்துதான், ‘எதற்கு சிரமம்… வந்து சிரமப்படுவதை விட, இருந்த இடத்திலிருந்தே வாழ்த்துங்கள்’ என்ற நல்ல மனதோடு அந்த அறிக்கையை ரஜினி விடுத்துள்ளார். அதிலும் குறை காண முயற்சிப்பதை என்னவென்பது!

வெறும் நிர்வாகிகளை அழைத்திருக்கலாமே என்று சிலர் கேட்கக் கூடும். தனது உத்தரவுகளைச் சொல்லும் ரசிகர் மன்ற கூட்டத்துக்கு நிர்வாகிகள் போதும்… இது ஒரு மங்கல விழா… இதில் நிர்வாகிகள் என்ன, ரசிகர்கள் என்ன… எல்லாருக்கும் ஒரே மரியாதைதான் என்பது ரஜினியின் எண்ணம்.

இந்தக் கடிதத்தைக் கூட தன் கைப்பட எழுதி பத்திரிகைகளுக்குக் கொடுத்திருந்தார் ரஜினி.

அதில் ரசிகர்களைத் தவிர்க்க வேண்டும் என்ற தொனி தெரியவில்லை… ரசிகர்கள் வந்து சிரமப்பட வேண்டாமே என்ற அக்கறையே தெரிந்தது. ரசிகர்களை அழைப்பது, அவர்களுக்கு விருந்து படைப்பதெல்லாம் அவருக்கு ஒரு விஷயமில்லை… வந்தவர்கள் பத்திரமாக இருக்க வேண்டும், அவர்களால் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கவேண்டும்… திருமணத்துக்குக் குவியும் விவிஐபிகளுக்கான பாதுகாப்புக் கெடுபிடிகளில் ரசிகர்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்… இப்படி எத்தனை நடைமுறைச் சிக்கல்கள் இதில் இருக்கின்றன!

இப்படி ஒரு அறிக்கையை அவர் தராமலேயே கூட இருந்திருக்கலாம். ஆனால், ரசிகர்கள் ஆர்வமிகுதியில் சென்னை வந்து, பாதுகாப்புக் கெடுபிடிகளில் சிக்கி அவஸ்தைப்பட்டு கசந்த மனதோடு செல்வதோ, அதை வைத்து மீடியாவும் வேறு சிலரும் தேவையற்ற பரபரப்பைக் கிளப்புவதோ நேர்ந்துவிடக் கூடாது என்பதும் கூட இந்த அறிக்கைக்கு ஒரு காரணம்.

தமிழகம் மட்டுமல்ல, தமிழர் வாழும் இடமெல்லாம் அவரது ரசிகர்கள்தான் நிறைந்திருக்கிறார்கள்… அந்த வகையில் இந்தத் திருமணம், சென்னை என்ற எல்லை தாண்டி நடப்பதாகவே கருதிக் கொண்டு, இனிய இல்லறம் காணப் போகும் நம்ம வீட்டுப் பெண் சௌந்தர்யா ரஜினி – அஸ்வின் ராம் குமாரை வாழ்த்தி மகிழ்வோம்!

-என்வழி

அழைக்க முடியவில்லையே…! – ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த ரஜினி

September 1, 2010 by envazhi  
Filed under Rajini

அழைக்க முடியவில்லையே…! – ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த ரஜினி

சென்னை: மகளின் திருமணத்துக்கு ரசிகர்களை அழைக்க முடியாமைக்காக அவர்களிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா – அஸ்வின் திருமணம் செப்டம்பர் 3-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அரசியல், சமூகம், பத்திரிகைத் துறை என தமிழகத்தின் சகல தரப்பு முக்கிய வி.ஐ.பி.களுக்கு ரஜினியே நேரில் சென்று பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்தார்.

நேற்று புதன்கிழமை மாலை பத்திரிகையாளர்களுக்கும் அழைப்பிதழ்களை பிஆர்ஓக்கள் மூலம் வழங்கினார். உடன் அவரது அறிக்கையும் வழங்கப்பட்டது.

அதில், தனது பல லட்சம் ரசிகர்களை இந்த மங்கல நிகழ்வுக்கு அழைக்க முடியவில்லையே என வருத்தம் தெரிவித்திருந்தார் ரஜினி. பத்திரிகைகளின் வழியாக ரசிகர்களுக்கு அவர் தனது கைப்பட எழுதி அனுப்பியுள்ள இந்த செய்தியின் விவரம்:

“எனது மகளின் திருமணத்தை ரசிகர்கள் நேரடியாக வந்து பார்க்க வேண்டும். வாழ்த்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தொலைபேசி மூலமாகவும், தபால் மூலமாகவும் எனக்கு தகவல் வந்து கொண்டு இருக்கிறது.

இதற்காக ரசிகர்களை அழைப்பதற்கு ஆசையாக இருந்தாலும் சென்னை நகரின் இட நெருக்கடி காரணமாகவும், போக்குவரத்து இடையூறுகள் கருதியும் ரசிகர்களை அழைக்க முடியவில்லை என மிக வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். மணமக்களுக்கு உங்களின் நல்லாசிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்…”

-இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

மீண்டும் அந்த எண்பதுகளுக்கு… – ரஜினியுடன் ஒரு ப்ளாஷ்பேக்!

August 30, 2010 by envazhi  
Filed under Featured

மீண்டும் அந்த எண்பதுகளுக்கு… – ரஜினியுடன் ஒரு ப்ளாஷ்பேக்!

டிகர்களுக்கு மட்டுமல்ல.. இளமையின் விளிம்பில் நிற்கிற எல்லா ரசிகர்களுக்கும் மிகப் பிடித்தமான காலகட்டம் அந்த ‘இனிய எண்பதுகள்’!

எம்ஜிஆர் – சிவாஜி என்ற சிகரங்களின் சகாப்தத்துக்குப் பிறகு, அந்த எண்பதுகளில்தான் இசை இசையாய் இருந்தது… படைப்பிலும் நடிப்பிலும் புதிதாய் சாதனைகள் பிறந்தன…

இன்றைக்கு சாதனை மன்னர்களாக உள்ள கலைஞர்கள் பலரும் அறிமுகத் தடம் பதித்து பின் அசத்த ஆரம்பித்தது அந்த எண்பதுகள்தான்.

தலைவர் ரஜினி எழுபதுகளிலேயே தென்னகத் திரையை கலக்க ஆரம்பித்துவிட்டிருந்தாலும், எண்பதுகளின் ஆரம்ப வருடத்திலேயே அவர் மாபெரும் சூப்பர் ஸ்டாராகத் திகழ ஆரம்பித்தார். பாக்ஸ் ஆபீஸ் ஆபத்பாந்தவன், விநியோகஸ்தர்களின் ரட்சகன் என்றால் எண்பதுகள் முதல் இன்றுவரை அது ரஜினிதான்.

ரஜினிக்குப் பின் எண்பதுகளில் நடிக்க வந்த மோகன், பிரபு, கார்த்திக், அம்பிகா, ராதா, சுமலதா, ஜெயசுதா, பூர்ணிமா, சிரஞ்சீவி, மோகன்லால்… அடடா… தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டியும் ரசிக்க வைத்தன இவர்களின் படங்கள். அந்த காலகட்டத்துப் படைப்பாளிகளுக்கும், குறிப்பாக இசைஞானி இளையராஜாவுக்கும் இதில் பெரும் பங்குண்டு என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்த (ரஜினியின் கொடி இன்றைக்கும் சினிமா சிகரத்தின் உச்சியிலே!) இந்த நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்று கூடி தங்களின் அந்த நாள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நினைவுகூர்தல் நிகழ்ச்சியை கடந்த ஆண்டு சுகாசினியும் லிஸி ப்ரியதர்ஷனும் ஏற்பாடு செய்திருந்ததனர் (அதன் புகைப்படங்களை முதலில் இணையத்தில் நாம்தான் தந்திருந்தோம்). இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்று கேக் வெட்டி, தனது சகாக்களுக்கும் ஊட்டி விட்டு அந்த நிகழ்ச்சியையே கலகலப்பாக்கியது நினைவிருக்கலாம்.

இந்த ஆண்டும், அந்த மலரும் நினைவுகள் நிகழ்வின் தொடர்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர் சுகாசினியும் லிஸியும். சூப்பர் ஸ்டாருக்கும் மறக்காமல் அழைப்பு விடுத்தனர். மகள் திருமணம், எந்திரன் வெளியீடு என பம்பரமாய் ஓடிக்கொண்டிருக்கும் அவர் இந்த முறை வருவாரோ மாட்டாரோ… என்ற சந்தேகம் இருவருக்கும்.

ஆனால் கடந்த ஆண்டே சொல்லிவிட்டார், ‘வருஷா வருஷம் ஏற்பாடு பண்ணுங்க… நான் வருவேன்’ என்று. கொடுத்த வாக்கை மீறாத சூப்பர் ஸ்டார், இந்த ஆண்டும் தவறாமல் வந்தார்.

இந்த முறை ஆகஸ்ட் 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை லிஸியின் பங்களாவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இன்னும் 5 சாதனை நடிகர்களும் பங்கேற்றனர் கூடுதலாக. மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ், சரத்குமார் மற்றும் அர்ஜூன் ஆகியோர்தான் அந்த ஐவர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 29 கலைஞர்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஆஜராகினர்.

நடிகைகளில், எண்பதுகளைக் கலக்கிய எல்லோருமே வந்துவிட்டனர். அம்பிகா, ராதா, லிஸி, சுகாசினி, ராதிகா, பூர்ணிமா, ஷோபனா, சுமலதா, ரேவதி, நதியா, ரம்யா கிருஷ்ணன்… என எல்லோரும் சந்தோஷத்துடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் ‘டிரஸ் கோட்’ கறுப்பு என்பதால், பெரும்பாலானோர் அந்தக் கருப்பு நிறத்திலேயே உடையணிந்து வந்தனர், சுமலதா, அம்பிகா தவிர!

பழைய நினைவுகள், செய்த கலாட்டாக்கள், தெரிந்த இசை, தெரியாத பாட்டு, பிடித்த காட்சி என பரிமாறிக் கொண்டனர்.

இந்த ஆண்டும் கேக் வெட்டி அனைவருக்கும் தந்தார் ரஜினி.  அவரது ஒரே வருத்தம் கடந்த ஆண்டு இந்த நிகழ்வுக்கு வந்திருந்த அவரது நண்பர் விஷ்ணுவர்தன் இந்த ஆண்டு இல்லாமல் போய்விட்டதுதான்!

பொதுவாக நடிகர்-நடிகைகள் இந்த மாதிரி பழைய மாணவர்கள் போல க்ளப் எல்லாம் அமைத்து சந்தித்துக் கொள்வது ரொம்ப அரிதுதான்.

இதுபற்றி லிஸி ப்ரியதர்ஷன் கூறுகையில், “உலகிலேயே இந்த மாதிரி ‘என்றும் இனிய எண்பது’ (‘எவர்கிரீன் எய்ட்டி’) என்ற க்ளப் அமைத்திருப்பது நம்ம தென்னிந்திய நடிகர்களாகத்தான் இருக்கும். வேறு யாரும் இதுபோல செய்திருக்கிறார்களா தெரியவில்லை. தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா என தென் மாநிலங்களின் சாதனைக் கலைஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றதுதான் இதன் சிறப்பு. இதற்காக யாருக்கும் நன்றி சொல்ல மாட்டோம். நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வரும் அவர்களுக்கு இது ஒரு இளைப்பாறல். இது தொடரும்” என்றார்.

-வினோ

என்வழி ஸ்பெஷல்

மீண்டும் மாறுகிறது எந்திரன் ரிலீஸ் தேதி?

August 26, 2010 by envazhi  
Filed under Rajini

மீண்டும் மாறுகிறது எந்திரன் ரிலீஸ் தேதி?

ந்திரன் இசை வெளியீட்டு விழாவில், ‘அடுத்த மாதம் எந்திரன் வெளியாகும்’ என்று சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.

இந்தி ரோபோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர், செப்டம்பரில் படம் வெளியாகும் என்று கூறினார். ரஜினியும் அவ்வாறே தெரிவித்தார்.

ஆனால் இப்போது, படத்தின் ரிலீஸ் தேதி மேலும் இரு வாரங்களுக்கு தள்ளிப் போகக் கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

“செப்டம்பர் 24-ம் தேதி படம் வெளியாகும் என்று முதலில் எங்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அக்டோபர் 8-ம் தேதி என்று சொல்லியிருக்கிறார்கள்…,” என்றார் ஒரு விநியோகஸ்தர்.

ஒரு பக்கம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் நடந்து கொண்டுள்ளன. இன்னொரு பக்கம் எந்திரனின் தமிழக, உலக உரிமைக்கான விலையைப் பேசி முடிக்காமல் உள்ளது சன் பிக்சர்ஸ். எனவே இந்த இரண்டு முக்கிய வேலைகளும் நிறைவுக் கட்டத்துக்கு வரும்போதுதான் உறுதியான தேதியைச் சொல்ல முடியும் என்கிறது எந்திரன் யூனிட்.

இயக்குநர் ஷங்கருக்கு ராசியான தேதி 8 என்பதால் அக்டோபர் 8- அன்றே ரிலீஸை வைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக சிலர் செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால் சாதனைகள் படைத்த ‘சிவாஜி” 8-ம் தேதி வெளியிடப்படவில்லை. ஜூன் 15-ம் தேதிதான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது!

ஆனால் இதுகுறித்து இன்னமும் அதிகாரப்பூர்வமாக எதையும் வெளியிடவில்லை சன் பிக்சர்ஸ் மற்றும் அதன் ஊடகங்கள்  என்பதும் கவனிக்கத்தக்கது!

ரஜினியைப் பொறுத்தவரை அவரது பணிகள் முழுமையாக முடிந்துவிட்டன. மூன்று மொழிகளுக்கும் அவரே டப்பிங் பேசியுள்ளார். இப்போது மகளின் திருமண வேலைகளில் பரபரப்பாக உள்ளார். அடுத்து சத்யா மூவீஸ் படத்துக்கான கதை விவாதத்திலும் கலந்து கொள்ளவிருக்கிறார்.

-என்வழி

அன்புமணிக்கும் அழைப்பு வைத்த ரஜினி!

August 26, 2010 by envazhi  
Filed under Rajini

அன்புமணிக்கும் அழைப்பு வைத்த ரஜினி!

சென்னை: மகள் சௌந்தர்யாவின் திருமணத்துக்கு வருமாறு பாட்டாளி மக்கள் கட்சியின் டாக்டர் அன்புமணிக்கும் நேரில் போய் அழைப்பு வைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

செப்டம்பர் 3-ம் தேதி சென்னையில் நடக்கும் சௌந்தர்யா ரஜினி – அஸ்வின் ராம்குமார் திருமணத்தையொட்டி, முக்கியப் பிரமுகர்களுக்கு நேரில் போய் அழைப்பிதழ் வைக்கும் பணியில் மும்முரமாக உள்ளார் ரஜினி.

இரு தினங்களுக்கு முன் முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரில் அழைப்பு வைத்தார் ரஜினி.

பின்னர் மத்திய அமைச்சர் முக அழகிரி, துணை முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோருக்கும் அழைப்பிதழ் வழங்கினார்.

இன்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை அவரது வேளச்சேரி இலத்தில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தார் ரஜினி.

பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார் ரஜினி. அவரிடம் திருமண அழைப்பிதழை வழங்கினார். அன்புமணியும் அவர் மனைவி சௌம்யா அன்புமணியும் அழைப்பிதழைப் பெற்றுக் கொண்டனர்.

சௌந்தர்யா திருமணம்: கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு ரஜினி நேரில் அழைப்பு!

August 23, 2010 by envazhi  
Filed under Rajini

சௌந்தர்யா திருமணம்: கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு ரஜினி நேரில் அழைப்பு!

சென்னை: தனது இளைய மகள் சௌந்தர்யா ரஜினி-அஸ்வின் திருமணத்துக்கு இன்று முதல்வரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் நடிகர் ரஜினிகாந்த்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா. இவர் தனது ஆக்கர் ஸ்டூடியோ மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். இவரும் தொழிலதிபர் மகன் அஸ்வினும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காதலை ஏற்றுக் கொண்டார் ரஜினி. மணமகன் வீட்டாருக்கும் இதில் முழு சம்மதம். சில மாதங்களுக்கு முன் சௌந்தர்யா ரஜினி-அஸ்வின் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில், முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு வாழ்த்தினார்.

இப்போது வரும் செப்டம்பர் மாதம் 3ம் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

இந்தத் திருமணத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மற்றும் மத்திய அமைச்சர், பாஜக தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் வைத்துள்ளார் ரஜினி.

இந்த நிலையில், தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார் ரஜினி. சௌந்தர்யாவின் திருமண அழைப்பிதழை ரஜினிகாந்த் முதல்வரிடம் கொடுத்தார்.

அரசியல் மற்றும் இதர திரையுலகப் பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ்களை தானே முன்னின்று கொடுத்துவருகிறார் ரஜினி.

நடிகர் அமிதாப்பச்சன், அவரது மனைவி ஜெயா, மகன் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். ரஜினிக்கு நெருக்கமான ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரேவும் திருமணத்துக்கு வருகிறார்.

ஜெயலலிதாவுக்கும் அழைப்பு!


அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையும் இன்று நேரில் சந்தித்த ரஜினி, சௌந்தர்யாவின் திருமண அழைப்பிதழை வழங்கினார். அவருடன் மனைவி அவரது மனைவி லதாவும் சென்றிருந்தார்.

Related Posts with Thumbnails