முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

என்னைப் போல இளைஞன் இருக்க முடியாது! – முதல்வர் கருணாநிதி

June 4, 2010 by envazhi  
Filed under General

என்னைப் போல இளைஞன் இருக்க முடியாது! – முதல்வர் கருணாநிதி

சென்னை: என்னை 87 வயது முதியவன் என்று நீங்கள் அழைக்கலாம். ஆனால், தமிழை, தன்மானத்தை, தி.மு.க.வை காப்பதில் என்னை போன்ற இளைஞன் இருக்க முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்வர் கருணாநிதியின் 87-வது பிறந்தநாள் விழா, திருவான்மியூரில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு நிதிஅமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். அதில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய ஏற்புரை:

“ஒரு இயக்கம் ஒரு வீடு குடும்பம் போல். பெரியார் அவர்களால் வளர்க்கப்பட்ட காரணத்தால், இடையிடையே சில சலசலப்புகள், கருத்து மாறுபாடுகள் ஏற்பட்டதுண்டு. அப்படிப்பட்ட மாறுபாடுகள் கழகத்தை அழித்து விடாமல் அந்த மாறுபாடு உண்டாக்குகிறவர்கள் திருந்தும் வகையில் கழகத்தின் வலிமை பயன்படுத்தப்பட்டு அதன் காரணமாக கூரேற்றப்பட்ட ஈட்டி முனையை போல் கனையின் முனைபோல் தி.மு.க. விளங்கி வருகிறது.

ஆத்திரப்படாமல்….

அதனால்தான், இடையிடையே யார் யாரோ எத்தனையோ முயற்சிகளில் ஈடுபட்டும் கூட இந்த இயக்கத்தை அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. இந்த இயக்கம் இருக்கக்கூடாது என்று தந்திரோபாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த சட்டங்களை தாண்டி எப்படி இந்த இயக்கத்தை காப்பாற்றுவது, வீம்பு அல்லது தேவையற்ற வீரபிரதாபம் இவைகளால் இந்த இயக்கத்தை காத்து விடமுடியுமா என்ற கேள்விக்கு அண்ணா அளித்த பதில்-லட்சக்கணக்கான தம்பிமார்களை விழிப்படைய செய்து, ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு இந்த இயக்கத்தை பலி கொடுத்துவிடக்கூடாது என்று எண்ணிய காரணத்தால் இன்று தமிழகத்தை ஆளும் கட்சியாகவும், டெல்லியை ஆளும் கட்சிக்கு தோழமை கட்சியாக இருக்க முடிகிறது.

அப்படிப்பட்ட இயக்கத்தை நடத்திச்செல்லும் பெரும் பொறுப்பு தலைவர் என்னுடைய கரத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை அகம்பாவத்தோடு கர்வத்தோடும், திமிரோடும் எண்ணிப் பார்த்து பெருமிதம் கொள்பவன் அல்ல நான்.

நீங்கள் எல்லாம் என் ஒருவனுடைய சக்தி, அறிவுக் கூர்மையால், சாதுரியத்தால் கிடைத்த வலிமை என்று எண்ணும் அளவுக்கு பைத்தியக்காரன் அல்ல. என்னுடைய வலிமை இந்த இயக்கத்தை நடத்தி செல்வதற்கு எனக்கு ஏற்பட்ட நெஞ்சுரம் எல்லாம் என் எதிரே வீற்றிருக்கும் லட்சோப லட்ச உடன்பிறப்புகளாகிய நீங்கள் வழங்கியது. நானாக உருவாக்கிக் கொண்டவை அல்ல.

கடமை, கண்ணியம் இல்லாவிட்டாலும் கட்டுப்பாடுதான் முக்கியம்…

அதனால்தான் துரைமுருகன் இங்கு கண்கள் கலங்கும் வகையில் செய்தி எடுத்துச் சொன்னபோது, அதைப்போல் கழகத்தினர் இந்த இயக்க வரலாறுகளை எடுத்துரைக்கும்போது, பேராசிரியர் தனிப்பட்ட முறையில் யார் யார் எப்படியெல்லாம் இந்த இயக்கத்தின் முதுகில் குத்தினர் என்று, எங்களுக்குள் புதைந்திருந்த ரகசியங்களை வெளியிட்டபோது எனது மனதுக்குள் சொல்லிக் கொண்டேன், இவ்வளவு சோதனைகளுக்கிடையிலேயும் நாம் இன்றைக்கு இந்த அளவுக்கு வலிமை பெற்று, மக்கள் செல்வாக்கு பெற்று விளங்க காரணம். நாம் கட்டிக் காத்து வரும் கடமை உணர்வு, கட்டுப்பாட்டு உணர்வு நாம் போற்றுகின்ற கண்ணியம் இதுதான். இதை நான் என்றும் மறப்பவன் அல்ல.

அண்ணா மறைவுக்குப்பிறகு திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் பேசுகையில், அண்ணா சொன்னார் என்று கருணாநிதியும் கட்சியில் உள்ளவர்களும் சொல்கிறார்கள். கருணாநிதிக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் சொல்வேன். கடமை, கண்ணியத்தை போற்றாமல் போனால் விட்டுவிடுங்கள். ஆனால் கட்டுப்பாட்டை மாத்திரம் துறந்து விடாதீர்கள் என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார். கட்டுப்பாடு இருந்தால் கண்ணியம் தவறி கூட நடக்கலாம். கடமையை கூட தவறிவிடலாம். ஆனால் கட்டுப்பாட்டோடு இருந்தால் யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

அசைக்க முடியாத ஆலமரம் தி.மு.க

பெரியார் அவ்வளவு நிர்தாட்சண்யமாக, சொன்ன அந்த வார்த்தையை இன்றளவும் கடைபிடிக்கும் காரணத்தால்தான் யாரும் ஆட்ட அசைக்க முடியாமல் ஆலமரம் போல் தி.மு.க. இன்றைக்கு இருக்கிறது. ஆலமரம் வளர்வதற்கு சிறிய விதைதான் காரணம். அந்த விதைதான் சுயமரியாதை, கட்டுப்பாடு, பெரியாரிசம், அண்ணாயிசம் என்றெல்லாம் நாம் ஏற்றுக்கொண்டிருக்கும் விதைதான், ஆலமரமாக நிழல் பரப்பி, மன்னனுக்கே கூட நிழல் தரும் மாண்பு படைத்ததாக தி.மு.க. விளங்குகிறது.

இந்த வலிமை நான் உருவாக்கினேனா? கிடையாது. இந்த வலிவுக்கும், பொலிவுக்கும் காரணம் நான் இவைகளை உருவாக்கவில்லை. என்னை உருவாக்கிய நீங்கள்தான் இதற்கு காரணம். அதனால்தான் வலிமை உருவாக்கக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன். இந்த வாய்ப்பை, வலிவை, இந்த பொலிவை இன்றைக்கு நாம் பெற்றிருக்கிறோம் என்றால், தி.மு.க.வை இந்த மாதத்தோடு ஒழித்துவிடலாம். அடுத்த மாதம் தி.மு.க. இருக்காது என்றெல்லாம் ஆரூடம் கூறுவோர், பத்திரிகை பலத்தாலேயே திண்ணை பிரசாரத்தாலேயே ஒருவருக்கு ஒருவர் மூட்டிவிடும் கலகத்தாலேயே இந்த இயக்கத்தை ஒழித்துவிடலாம் என்று யாராவது கருதுவாரேயானால் அவர்களுக்கு நான் அளிக்கும் பதில், எத்தனையோ பேர் முட்டி முட்டி முயன்று பார்த்து தலையில் ரத்தம் வழிந்ததே தவிர, இந்த பாறையை எவரும் உடைக்க முடியவில்லை என்பதெல்லாம் நான் தருகின்ற பதிலாக அமைந்திருக்கிறது.

லட்சோப லட்ச உடன்பிறப்புகள்

நான் இப்படி பேசுவதற்கு காரணம் உங்களையெல்லாம் பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட கர்வமா அல்ல. தம்பி ஸ்டாலின் சொன்னதைப் போல் 11 இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்ற அகம்பாவமா இல்லை. எத்தனை தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம் என்று பேசுகின்ற வீரபிரதாபத்துக்கு காரணம் என்ன? நான் அல்ல. என் நாடி நரம்புகளில் ரத்த ஓட்டமாக ரத்த துளிகளாக இருந்து இயங்கிக் கொண்டிருக்கின்ற லட்சோப லட்ச தி.மு.க. உடன்பிறப்புகள் தாம் இந்த உணர்வுக்கு, பெருமிதத்துக்கு காரணம் என்பதை நான் மறந்துவிடவில்லை. மறந்தால் பிறகு கருணாநிதியே இல்லை. பிறகு கழகமே இல்லை. அதை மறந்த எவனாலும், நம்மால்தான் எல்லாம் என்று நினைக்கின்ற யாராலும் இந்த கழகத்தை காப்பாற்ற முடியாது.

சிறுகுழந்தை கை விளக்கு போல்….

எல்லோரும் சேர்ந்து இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இதை தோற்றுவித்து, நம் கையில் அண்ணா ஒப்படைத்தார். அண்ணா மறைந்தபோது நான் சொன்ன ஒரு உதாரணம். வீட்டிலேயே பெரியவர்கள் இல்லாத காலத்தில், அம்மா மறைந்துவிட்ட நேரத்தில் அகல்விளக்கு எடுத்துப் போய் அணைந்து விடாமல் இரு கைகளால் பொத்திக் கொண்டு செல்லும் சிறுமியை போல் நான் தி.மு.க. என்ற அகல்விளக்கை என் கையால் பொத்தி காற்றில் அணையாமல், கீழே விழுந்துவிடாமல் காப்பாற்றிக் கொண்டு அந்த ஒளியை என் வீட்டுக்கு வழங்குவதை போல் நாட்டுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறேன். அந்த சிறு குழந்தைக்கு, சிறுமிக்கு, தெருவில் உள்ள அனைவரும் தரும் ஆதரவு போல் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அந்த பேச்சு வீண் போகவில்லை என்பதை போலத்தான் எனக்கு தொடர்ந்து வெற்றி தந்து கொண்டிருக்கிறீர்கள்.

எங்களுக்கு நீங்கள் தரும் வெற்றி மேலும் மேலும் உற்சாகம் தருகிறதேயன்றி எங்களை உசுப்பிவிடவில்லை. எங்களுக்கு மமதையை ஏற்படுத்தவில்லை. திமிர்வாதத்துக்கு இடம்தரவில்லை. நாங்கள் என்றும் உங்களுடையவர்கள். உங்களில் சிலர்தான் நாங்கள். மேடையில் அமர்ந்திருப்பதாலேயே நாங்கள் தலைவர்கள் நீங்கள் தொண்டர்கள் என்று அர்த்தம் அல்ல. நீங்கள் இங்கே வருவதற்கு நீண்ட நேரம் ஆகாது. நிச்சயமாக வரமுடியும். நீங்கள் வரக்கூடியவர்கள் என்ற எதிர்பார்ப்போடுதான் உங்களை அணுகுகிறோம்.

நாங்கள் உங்களைவிட பெரியவர்கள் அல்ல. 87 வயது என்ற காரணத்தால் முதியவன், பெரியவன் என்று என்னை அழைக்கலாம். ஆனால், தமிழை, தன்மானத்தை, தி.மு.க.வை காப்பதில் என்னை போல் இளைஞன் இருக்க முடியாது. அந்த உறுதியை நிறைவேற்றுவேன். இந்த இனிய விழாவில் புதிய வரவாக நமது இயக்கத்துக்கு வந்திருக்கும் குஷ்புவை உங்கள் ஆதரவோடு வரவேற்கிறேன்…” என்றார்.

பாமகவுடன் கூட்டணி.. ஆனால் 2011-ல்தான் எம்பி சீட்!: திமுக அறிவிப்பு

May 31, 2010 by envazhi  
Filed under General

பாமகவுடன் கூட்டணி.. ஆனால் 2011-ல்தான் எம்பி சீட்!: திமுக அறிவிப்பு

சென்னை: திமுக கூட்டணியில் மீண்டும் பாமக இடம்பெறுவதாகவும், 2011-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு நடைபெறும் மேல்-சபை தேர்தலில் பா.ம.க.வுக்கு ஒரு எம்.பி. சீட் வழங்கப்படும் என்றும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நேற்று மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் நேற்று மாலை 5 மணி முதல் 6.45 மணி வரை நடைபெற்றது.

தி.மு.க. தலைவர் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, கவிஞர் கனிமொழி எம்.பி., மத்திய மந்திரிகள் தயாநிதிமாறன், ஆ.ராசா, துணை பொதுச் செயலாளர்கள் பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமதாஸ் எழுதிய கடிதம்

கூட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சியை மீண்டும் தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

பா.ம.க.வின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் 26-4-2010 தேதியிட்டும், அதைத் தொடர்ந்து 14-5-2010 தேதியிட்டும், முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதங்கள் இந்தக் குழுவின் பார்வைக்கும், ஆய்வுக்கும் வைக்கப்பட்டன.

அந்தக் கடிதங்களில் டாக்டர் ராமதாஸ், “2006ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று பா.ம.க. போட்டியிட்டது. அந்தத் தேர்தலுக்குப் பின்னர் தங்களது தலைமையில் தி.மு.க. தனித்து ஆட்சி அமைப்பதற்கு பா.ம.க. தனது நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்ததுடன், அதற்கான தனது ஆதரவு கடிதத்தையும் கவர்னரிடம் கொடுத்தது. அன்று முதல் இன்றுவரையில் எந்தவொரு நிலையிலும் தி.மு.க. அரசுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை பா.ம.க. மாற்றிக் கொள்ளவே இல்லை.

இடையில் நடைபெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்களை நாங்கள் மறந்து விட்டோம். நீங்களும் மறந்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். முன்பு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கலைக்கப்பட்ட சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வரும் தங்களின் இப்போதைய முயற்சிக்கு பா.ம.க. முழு ஆதரவு அளித்து, சட்டப் பேரவையில் நடைபெற்ற மேலவை அமைப்பது குறித்த வாக்கெடுப்பில் தி.மு.க.வுடன் இணைந்து வாக்களித்தது. இத்தகைய இணக்கம் மீண்டும் தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

அந்த வகையில் அடுத்த ஆண்டில் (2011ல்) நடைபெற இருக்கும் சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட விரும்புகிறோம் என்று பா.ம.க. சார்பில் உறுதி கூறுகிறோம்.

2006ம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 6 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாய்ப்பு அளித்தீர்கள். 2008ம் ஆண்டில் 9 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இப்போது நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு வாய்ப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

டாக்டர் அவரது கடிதத்திலே குறிப்பிட்டுள்ளதைப் போல; 2006 மற்றும் 2008ம் ஆண்டில் மாநிலங்களவை தேர்தலுக்குத் தேவையான எம்.எல்.ஏ.க்களைப் பெற்றிராத இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தி.மு.க. தனது வாக்குகளை வழங்கி, அடுத்தடுத்து, இரண்டு பேரை மாநிலங்களவைக்கு உறுப்பினர்களாக்கி தோழமைக் கட்சிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டுகின்ற பண்பாட்டைப் பெற்றிருந்ததை யாரும் மறப்பதற்கில்லை.

அந்தப் பண்பாட்டின் அடிப்படையில்தான், அதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக; 1997ம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில்; தி.மு.க. தோழமையை மதிக்கும் என்பதற்கு உச்சகட்டமாக, முதலில் அளித்த வாக்குறுதி மாறாமல் – தன் கட்சி வேட்பாளர்கள் யாரையும் நிறுத்தாமல் – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன், பீட்டர் அல்போன்ஸ், என்.ஆர்.அப்துல் காதர் – ஆகிய மூவருக்கும் ஆதரவளித்து, அந்த மூவரையும் வெற்றி பெறச் செய்து, தோழமைக் கட்சிக்கான நல்லுணர்வு இலக்கணத்தை நிலைநாட்டிய பெருமையும் தி.மு.க.வுக்கு உண்டு என்பதை நாடறியும்.

2004ம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.கழகத்திற்கு சட்டமன்றத்தில் 30 இடங்கள் இருந்த போதிலும், மற்ற தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடத்திற்குப் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமென்ற நிலையிருந்தும், 23-1-2004 அன்று பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் தி.மு.கழகம் பா.ம.க.விற்கு கொடுத்த உறுதி மொழிப்படி – தி.மு.க. அந்த ஒரு இடத்தில் போட்டியிடாமல், 19 உறுப்பினர்களைக் கொண்டிருந்த பா.ம.க.விற்கும், 25 உறுப்பினர்களைக் கொண்டிருந்த காங்கிரசுக்கும் தனது 30 வாக்குகளைப் பங்கிட்டு அளித்து அன்புமணியையும், சுதர்சன நாச்சியப்பனையும் அந்த மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெறச் செய்தது.

தொடர்ந்து சந்திப்பு…  வேண்டுகோள்

அது நிற்க; டாக்டர் ராமதாஸ் எழுதிய இந்த இரண்டு கடிதங்களுக்கு இடையே; தமிழக முதல்வர் கருணாநிதியையும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினையும் மற்றும் கழக முன்னணியினரையும்; பா.ம.க.வின் சட்டமன்றக் கட்சித் தலைவர் கோ.க.மணியும், அந்தக் கட்சியின் கொறடா வேல்முருகனும் பலமுறை சந்தித்து – தி.மு.க., பா.ம.க. கூட்டணி உறவு மீண்டும் தொடரவேண்டும் என்று தெரிவித்த விருப்பத்தின் அடிப்படையில் 17-6-2010 அன்று நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் பா.ம.க.வுக்கு ஒரு இடம் வழங்கி ஆதரவு தரவேண்டும் என்று வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.

2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க., பா.ம.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கிடையே உறவு முறிவு ஏற்பட வேண்டிய நிலை ஏன் உருவானது என்பதைப் பற்றியும், அதற்கு தி.மு.க. காரணம் அல்ல என்பதைப் பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கசப்பை மறந்து விடுவோம்

அண்மையில் பென்னாகரம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட நிலைமைகளைப் பற்றியும் – ‘தி.மு.க. தான் தன் முதல் எதிரி’ என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் தி.மு.க. குறித்து அறிவித்த கடுமையான பிரகடனம் குறித்தும் விரிவாக பேசப்பட்டது.

எனினும் நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்ற அடிப்படையில்; டாக்டர் ராமதாஸ் தனது கடிதத்தில் எழுதியுள்ளதைப் போல; மீண்டும் இரு இயக்கங்களும் உறவைப் புதுப்பித்துக் கொண்டு – அடுத்து வரவிருக்கும் 2011 சட்டப் பேரவை பொதுத் தேர்தல்களிலும், விரைவில் வரவிருக்கின்ற சட்டமன்ற மேலவைத் தேர்தல்களிலும், இரண்டு கட்சிகளும் உடன்பாடு கொண்டு போட்டியிடுவது என்பதை தி.மு.க.வும் ஏற்றுக் கொள்வது என்று முடிவெடுக்கப்படுகின்றது.

2011 தேர்தலுக்கு பின்னர்தான் எம்பி சீட்

அடுத்து, பா.ம.க.விற்கு மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் வழங்குவது பற்றியும் விரிவாக விவாதித்து – 2011ல் வரவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு அடுத்து நடைபெறவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் பா.ம.க.விற்கு ஒரு இடத்தை வழங்குவதென்றும் உறுதிப்பட தீர்மானிக்கின்றது.

அதற்கான இணக்கமான நிலைமைகளை இவ்விரு இயக்கங்களும் இப்போது முதலே கடைப்பிடிப்பது என்பது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக நீதி பெறுவதற்கான பாதுகாப்பு அரணாக அமையும் என்பதையும் தி.மு.க.வின் இந்த உயர்நிலை செயல்திட்டக் குழு சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளது.

எனவே, 2011 சட்டமன்றத் தேர்தலுக்கு அடுத்து வரும் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க.விற்கு ஒரு இடத்தினை தி.மு.க. அளிக்கும் என்று இந்த உயர்நிலை செயல் திட்டக்குழுவில் எடுத்துள்ள முடிவினையும், அதன் அடிப்படையில் அளித்துள்ள உறுதியினையும் வெளிப்படையாக அறிவித்து, இதனை பா.ம.க. ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறோம்…”

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.

திமுகவில் குஷ்பு!

May 14, 2010 by envazhi  
Filed under General

முதல்வர் ‘ஆசியுடன்’ திமுகவில்  சேரும் குஷ்பு!

சென்னை: காங்கிரஸ் கட்சி எனக்குப் பிடிக்கும், ராஜீவ் காந்தி படங்களை என் படுக்கையறையில் மாட்டியிருந்தேன் என்று கூறி, காங்கிரஸ் தலைவர்களை உசுப்பேத்திய நடிகை குஷ்பு, திடீரென்று திமுகவில் இன்று இணைவதாக அறிவித்துள்ளார்.

தர்மத்தின் தலைவன் படம் மூலம் அறிமுகமான குஷ்பு, அதன்பிறகு பல சர்ச்சைகள், கிசுகிசுக்களில் சிக்கினார். ஆனால் தனது அரசியல், திரையுலக செல்வாக்கால் அவற்றிலிருந்து மீண்டு வந்தார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் கற்பு பற்றி புதிய இலக்கணம் கூறினார். தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்த சந்தேகத்தையும் எழுப்பினார்.

தமிழ் அமைப்புகள் என்னதான் எதிர்ப்பு தெரிவித்தாலும், அவற்றையெல்லாம் ஓரங்கட்டும் விதமாக குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்தது உச்ச நீதிமன்றம். குஷ்பு மீதான 22 வழக்குகளைத் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், குஷ்பு காங்கிரஸில் சேரப் போவதாக கூறப்பட்டது. இதனால் மகிழ்ந்து போன காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, சுதர்ஸனம் மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் குஷ்புவை வரவேற்று மாறி மாறி அறிக்கைகள் கொடுத்தனர்.

ஆனால், திமுக அரசு குஷ்புவை எம்எல்சியாக்கத் திட்டமிட்டது.

இப்போது திமுகவில் சேரப் போவதாக அறிவித்துள்ளார் குஷ்பு. சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் இறுதிநாளான இன்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுக உறுப்பினராக சேருகிறார் குஷ்பு.

மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் செல்லும் அவர், முதல்வரிடம் ஆசி பெற்று திமுகவில் இணைகிறார்.

அடுத்த சில தினங்களில் அமையவிருக்கும் சட்ட மேலவையில், திமுக எம்எல்சியாக அவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தின் போது குஷ்புவுக்கு பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

திமுகவில் சேர்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது! – குஷ்பு

திமுகவில் சேர்வது குறித்து குஷ்பு கூறியதாவது:

“அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது இப்போது நிறைவேறுவதில் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

தமிழக் முதல்வர் டாக்டர் கலைஞர் மீது எனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு. அதனால் நான் இன்று மாலை அவர் முன்னிலையில் திமுகவில் இணைகிறேன்.

இனி முழு நேர அரசியலில் ஈடுபடுவேன். திமுகவில் இணைந்த பிறகு அதிகாரப்பூர்வமாக மேலும் இது குறித்து விரிவாகப் பேசுகிறேன். தமிழக மக்களின் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. அரசியலிலும் என்னை வரவேற்க வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்”, என்றார் குஷ்பு.

பதிபக்தி இல்லாத ஜெயலலிதா! – கருணாநிதி சாடல்

April 17, 2010 by envazhi  
Filed under election

பதிபக்தி இல்லாத ஜெயலலிதா! – கருணாநிதி சாடல்

சென்னை : ‘பதிபக்தி இல்லாதவர் ஜெயலலிதா, என, முதல்வர் கருணாநிதி கடுமையாகக் குற்றம் சாட்டிப் பேசினார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மற்றும் ஒன்றியத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., – தே.மு.தி.க., – பா.ஜ., கட்சிகளைச் சேர்ந்த மூவாயிரம் பேர் நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.,வில் சேர்ந்தனர்.

அவர்களை வரவேற்று முதல்வர் பேசியதாவது:

இங்கே ஒரு பெரிய பையில் நீங்கள் ஏற்கனவே வாங்கிய உறுப்பினர்கள் அட்டைகள் எல்லாம் ஆயிரக்கணக்கில் வைக்கப்பட்டு அவைகள் எல்லாம் எனக்கு முன்னால் உள்ள மேஜையில் கொட்டப்பட்டது.

அப்படி கொட்டப்படும்போது அந்த பையிலே அடைந்து கிடந்த உறுப்பினர் அட்டைகள் கொடகொடவென்று இங்கே கொட்டின. நான் எண்ணிக்கொண்டேன். அடைபட்டுக் கிடந்தது அந்த அட்டைகள் அல்ல. என் எதிரே அமர்ந்திருக்கின்ற மூவாயிரத்திற்கு மேற்பட்ட உயிரினும் மேலான உடன் பிறப்புகளை அடைத்து வைத்து – அவர்கள் இன்றைக்கு விழிப்புற்று – தாங்கள் இருக்க வேண்டிய இடம் எது என்பதை உணர்ந்து, அறிந்து, தெரிந்து, தெளிந்து அண்ணா அறிவாலயத்திற்கு வந்துள்ளீர்கள். அதுவே மகிழ்ச்சி.

‘எம்.ஜி.ஆரை மதிக்கத் தெரியாதவர் ஜெயலலிதா. அதனால், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைகிறேன்’ என, அன்பு பேசினார்.

ஜெயலலிதா இப்போது தான் என்று இல்லை. எம்.ஜி.ஆர்., உடல் நலம் குன்றியிருந்த போதே, அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தன்னை அந்த பதவியில் அமர்த்தும்படி கடிதம் எழுதியவர் தான் ஜெயலலிதா.இங்கு ஏராளமான பெண்கள் உள்ளனர். உங்கள் சகோதரருக்கு, தந்தைக்கு, ஏன் கணவருக்கு உடல் நலம் குன்றினால், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் காளியம்மன், மாரியம்மன் போன்ற தெய்வங்களிடம் வேண்டுவர். இது தான் கிராமங்களில் உள்ள நடைமுறை. நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் செய்யும் நடைமுறை.

ஆனால், ஜெயலலிதா, தான் கணவராக வரிந்து கொண்ட, தான் தலைவராக வருவதற்கு காரணமாக இருந்த, சர்வாதிகாரத்துடன் கட்சியை நடத்த காரணமாக இருந்த எம்.ஜி.ஆர்., உடல் நலம் குன்றி இருந்த போது அவருக்காக பிரார்த்தனை செய்யாமல் அவரை பதவியில் இருந்து நீக்கி விட்டு, தன்னை அந்தப் பதவியில் அமர்த்தும் படி சொல்லும் அளவிற்கு பதிபக்தி இல்லாமல் இருந்தவர்.

அன்பு போன்ற எம்.ஜி.ஆர்., மீது விசுவாசம் கொண்டவர்களுக்கு இப்போதாவது விழிப்புணர்வு வந்ததே என்ற வரையில் மகிழ்ச்சி. இது வரை சாலையில் போகும்போதெல்லாம் அண்ணா அறிவாலயத்தைப் பார்த்துக் கொண்டுதான் சென்றிருப்பீர்கள். இனி அதன் உள் வந்து அமரலாம். உங்கள் அனைவரையும் உள் அன்புடன் வரவேற்கிறேன்…” என்றார் கருணாநிதி.

-என்வழி

வழக்கம்போல வென்றது திமுக; வழக்கத்துக்கு மாறாக டெபாஸிட் இழந்தது அதிமுக!

March 30, 2010 by envazhi  
Filed under General

வழக்கம்போல வென்றது திமுக; வழக்கத்துக்கு மாறாக டெபாஸிட் இழந்தது அதிமுக!

தர்மபுரி : பென்னாகரம் இடைத்தேர்தலில் வழக்கம்போல அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றது திமுக. வழக்கத்துக்கு மாறாக டெபாஸிட்டை இழந்தது அதிமுக.

விஜய்காந்தின் தேமுதிக கட்சியும் டெபாஸிட்டை இழந்தது.

பென்னாகரம் தொகுதியின் திமுக எம்எல்ஏ பெரியண்ணன் சில மாதங்களுக்கு முந் மரணமடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திமுக சார்பில் பெரியண்ணன் மகன் இன்பசேகரன் போட்டியிட்டார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜிகே மணியின் மகன் தமிழ்க் குமரன் போட்டியிட்டார்.

அதிமுக சார்பில் அன்பழகனும், தேமுதிகவின் சார்பில் காவேரி வர்மனும் தேர்தலில் நின்றனர்.

கடந்த 27-ம் தேதி தேர்தல் நடந்தது. தொகுதியில் உள்ள 2,01,008 வாக்காளர்களில்,​​ 84.95 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர் குறிப்பிடத்தக்கது. இது கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பதிவானதை விட 13 சதவீதம் அதிகமாகும்.

இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில் திமுக வேட்பாளர் இன்பசேகரன் 36,354 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 77,669 வாக்குகள் பெற்றார்.

பாமக வேட்பாளர் தமிழ்க்குமரன் 41,285 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

அதிமுக வேட்பாளர் அன்பழகன் 26,787 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் காவேரி வர்மன் 11,406 வாக்குகளும் மட்டுமே பெற்று டெபாசிட்டையே இழந்தனர்.

பதிவான மொத்த ஓட்டுக்களில் 6ல் ஒரு பங்கு ஓட்டுக்களை வாங்காததால் அதிமுக, தேமுதிகவின் டெபாசிட் காலியானது.

மேலும் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட 27 சுயேச்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர்.

ஓட்டு எண்ணப்பட்ட போதே லட்டு வழங்கிய முதல்வர்!

காலையில் ஓட்டு எண்ணிக்கை துவங்கி, 6 வது சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட போதே திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டார் என்று கூறி நன்றி அறிவிப்பையும் வெளியிட்டுவிட்டார் முதல்வர் கருணாநிதி.

உடனே அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்தும் நடனமாடியும் வெற்றியைக் கொண்டாடினர் தொண்டர்கள். முதல்வர் கருணாநிதி அனைவருக்கும் லட்டு வழங்கி மகிழ்ந்தார்.

“இந்த வெற்றி தி.மு.க., அரசின் சாதனை பயணத்திற்கு தூண்டுகோலாக அமையும். வன்முறைக்கு இடம் தராமல் ஜனநாயக முறையில் பணியாற்றியதால் வெற்றி கிட்டியுள்ளது. வெற்றிக்காக உழைத்த அனைத்து பிரிவினருக்கும் தமது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும்” முதல்வர் கூறினார்.

அறிவாலயம் முன் ஆனந்தக் கூத்து

செயற்கையான வெற்றி – ஜெ

தோல்வியை ஏற்பதாகத் தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, “இந்தத் தேர்தலில் ஜனநாயக முறைப்படி செயல்பட்ட ஒரே கட்சி அதிமுகதான். தேர்தல் ஆணையம் எதையும் கண்டு கொள்ளவில்லை.

திமுக பெற்ற வெற்றி செயற்கையானதே. பணபலம், படைபலம், அதிகார துஷ்பிரயோகம் மூலம் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் அதிமுகவுக்கு வாக்களிதவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா இப்படிச் சொன்னாலும், இந்த அளவு மோசமான தோல்வியைத் தாங்க முடியாமல்  ஈரோடு அருகே அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்ததாகவும் பின் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தோல்வியே எனது வெற்றிக்குப் படிக்கல்! – விஜயகாந்த்

இந்த தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் இப்படிக் கூறியுள்ளார்:

“தேமுதிகவின் தோல்வி என்பது எதிர்பாராதது அல்ல. தோல்வி எல்லாம் தடைக்கல் அல்ல; வெற்றிக்கான படிக்கல் என்பதை உணர்ந்தவன் நான். தேமுதிக வேட்பாளருக்கு ஓட்டுப் போட்ட எல்லோருக்கும் நன்றி” என்றார்.

-என்வழி

பெண்ணாகரம் இடைத் தேர்தல்: தனித்துப் போட்டியிடும் பாமக

January 2, 2010 by envazhi  
Filed under General

பெண்ணாகரம் தொகுதி: பாமக தனித்துப் போட்டி

தைலாபுரம்: பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும் என்று தைலாபுரத்தில் அறிவித்தார் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமசாஸ்.

வேட்பாளராக பாமக தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் பெயரையும் அறிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானத்தை படித்த பின்னர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், “இந்தக் கூட்டத்தில் பா.ம.க. பொதுக்குழுவில் போடப்பட்டுள்ள 10 தீர்மானங்களில் மிக முக்கிய மானதாக முதல் தீர்மானமாக போடப்பட்டுள்ள அரசியல் தீர்மானத்தை தான் கருதுகிறேன்.

பென்னாகரம் தொகுதியில் 1991, 1996, 2001 என கடந்த 3 தேர்தல்களிலும் தி.மு.க. 3-வது இடத்தைத்தான் பிடித்தது. எனவே பென்னாகரம் தொகுதியில் பா.ம.க.வின் வெற்றி உறுதியானது. இந்த தொகுதியில் பா.ம.க. தனித்து போட்டியிடுகிறது. பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனை வேட்பாளராக அறிமுகப்படுத்துகிறேன்.

பென்னாகரம் இடைத் தேர்தலில் பா.ம.க. மகளிர் அணியினர் சிறப்பாக செயல்பட்டு பா.ம.க.விற்கு வெற்றியை தேடித்தர வேண்டும். மற்ற நிர்வாகிகள் அனைவரும் அங்கு தேர்தல் தேதி அறிவிக்கும் வரை பம்பரமாக சுழன்று பா.ம.க. வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். காரணம் இது நம்ம தொகுதி.

திருமங்கலம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர் செய்த பார்முலாவை முறியடித்து பென்னாகரம் இடைத் தேர்தலில் பா.ம.க.வின் பார்முலா பேசும்படி இருக்கும்.

கருணாநிதி பார்க்காத தோல்வியா?

ஆளும் கட்சியில் உள்ளவர்கள் பலர் பா.ம.க. ஒழிந்துவிட்டது, இனி தலைநிமிராது என்று கூறுகிறார்கள். ஆனால் முதல்வர் கருணாநிதி மட்டும் அப்படி கூறவில்லை. ஏனென்றால் தேர்தலில் இதுபோன்ற பல தோல்விகளை சந்தித்தவர்.

1991-ல் ஒரே ஒரு இடத்தில் தி.மு.க.வும் பா.ம.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. 1997-ல் அ.தி.மு.க. 2 இடங்களிலும் பா.ம.க. 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது.

மேற்கண்ட தோல்விகளி னால் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் காணாமல் போய் விட்டதா? பா.ம.க.வை ஓரம்கட்ட முடியாது என்பதை பென்னாகரம் தேர்தல் மூலமாக மற்ற கட்சிகள் புரிந்துகொள்ளும்.

கடந்த தேர்தலில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மறைமுகமாக பேசி வைத்துக் கொண்டு பா.ம.க.வை தோற்கடித்தனர்.

25 இயக்கங்களை உருவாக்கியுள்ளேன்…

காரல் மார்க்ஸ், அம்பேத் கார், தந்தை பெரியார் ஆகியோரின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் பா.ம.க. தோல்வி அடைந்து விட்டால் இந்த தலைவர்களின் கொள்கைகள் தோல்வி அடைந்ததாக அர்த்தம். மேலும் ஜனநாயகம், சமூக நீதி உள்பட அனைத்தும் தோற்று விட்டதாக அர்த்தம்.

பா.ம.க. சார்பில் 25 இயக்கங்களை மொழிக்காகவும், இசைக்காகவும், பண்பாட்டிற்காகவும் உருவாக்கி இருக்கிறேன். கடந்த 1989-ம் ஆண்டில் இருந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தி யிருக்கிறோம். என்னுடன் பல போராட்டங்களில் சிறைவாசம் அனுபவித்தவர்களை ஜெயில்மெட் என கூறுவேன்.

இந்த புத்தாண்டில் 2 காரணங்களுக்காக போராட்டம் நடத்தப்படும். ஒன்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஏற்பட வேண்டும் என பெண்கள் மற்றும் ஆண்களும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவது. மற்றொன்று சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி போராட்டம் நடத்துவது என்று பா.ம.க. முடிவு செய்துள்ளது,” என்றார் ராமதாஸ்.

ஜிகே மணி மகன் தமிழ்குமரன்

பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜி.கே.எம்.தமிழ்குமரன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி-அன்னை சுந்தரம்மாள் ஆகியோரின் மகன்.

ஜி.கே.எம்.தமிழ்குமரன் பி.இ., எம்.பி.ஏ., படித்தவர். இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

தெரிந்த முடிவு… டெபாஸிட் இழந்த தேமுதிக!

December 23, 2009 by envazhi  
Filed under election

திமுகவுக்கு வெற்றி: டெபாஸிட் இழந்த தேமுதிக!

சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் தி.மு.க., வேட்பாளர்கள் வழக்கம் போலவே, அழகிரி சொன்ன வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் 46 ஆயிரத்து 861 ஓட்டுக்கள் வித்தியாசத்திலும், வந்தவாசி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கமலக்கண்ணன் 38 ஆயிரத்து 17 ஓட்டுக்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.

இங்கு போட்டியிட்ட விஜயகாந்த் கட்சியை சேர்ந்த 2 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர்.

மத்திய அமைச்சர் அழகிரி ஏற்கெனவே சொன்னது போல் திருச்செந்தூரில் 40 ஆயிரத்திற்கும் மேலான ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்து தி.மு.க.

திருச்செந்தூர் ஓட்டு விவரம்:

தி.மு.க., வேட்பாளர் அனிதாராதாகிருஷ்ணன்: 75,223

அம்மன் நாராயணன் (அ.தி.மு.க.): 28,362

கோமதி்கணேசன் ( தே.மு.தி.க.): 4,686

ஓட்டு வித்தியாசம்: 46,861


வந்தவாசி தொகுதி ஓட்டு விவரம்:

தி.மு.க. வேட்பாளர் கமலக் கண்ணன்: 78,827

முனுசாமி ( அ.தி.மு.க.,): 40,810

ஜனார்த்னன் ( தே.மு.தி.க): 7,063

ஓட்டு வித்தியாசம்: 38,017

டெபாஸிட் இழந்தது விஜய்காந்த் கட்சி:

இந்தத் தேர்தலில் திமுகதான் வெல்லும் என்பது தெரிந்த சங்கதியாக இருந்தாலும், தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டு வரும் விஜய்காந்தின் தேமுதிகவின் பலம், வாக்கு வங்கி எப்படி உள்ளது என்பதை அறிவதில் பலரும் ஆர்வத்துடன் இருந்தனர்.

மாற்று சக்தியாக வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட விஜய்காந்தின் அணுகுமுறை, வழக்கமான அரசியல் சகதியில் மாட்டிக் கொண்டதாகவே மக்கள் கருதுவதை, இப்போது அவர் கட்சிக்கு கிடைத்துள்ள மிகக் குறைந்த வாக்குகளிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.

அவரது கட்சியின் வேட்பாளர்களால் தேர்தல் வைப்புத் தொகையை திரும்பப் பெறும் அளவுக்குக் கூட வாக்குகளைப் பெற முடியாமல் போய்விட்டது குறிப்பிடத்தக்கது.

அந்தர் பல்டி… ஆகாசப் பல்டி!

October 29, 2009 by envazhi  
Filed under கட்டுரைகள்

தமிழன் வரலாற்றில் இன்னொரு துரோக அத்தியாயமும் எழுதப்பட்டுவிட்டது!

திர்பார்த்த மாதிரியே முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அடுத்தடுத்து சூப்பர் பல்டிகளை அடித்து, தமிழக மக்களுக்கு சர்க்கஸ் வித்தை காட்டி வந்த கருணாநிதி ஒருவழியாக தனது நாடகத்தை தானே முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்… 3 மணி நேர உண்ணாவிரத சாகஸம் போல!

MK-JR

முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசுக்கு அனுமதி அளித்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷைக் கண்டித்து கூட்டம் நடத்துவதாக முதலில் அறிவித்தார் கருணாநிதி.

பின்னர் காங்கிரஸ் முதலாளியின் மனம் சங்கடப்பட்டு, அது பதவிக்கு ஆபத்தாக முடியுமே என்ற திடீர் எச்சரிக்கை உணர்வில், அந்தக் கூட்டம் கேரள அரசைக் கண்டித்து நடைபெறும் என்று மாற்றி அறிவித்துப் பார்த்தார்.

அப்படியும் காங்கிரஸ் எஜமானர்களின் கோபம் தணியாமல் ரெய்டு, விமர்சனம் என நாலு கால் பாய்ச்சலில் தண்ணி காட்டியதால், மதுரை கண்டனக் கூட்டமே ரத்து என இப்போது அறிவித்துவிட்டார்.

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக வனப்பகுதியில் ஆய்வு நடத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அனுமதி வழங்கினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துதான் முதல்வர் கருணாநிதி தலைமையில் மதுரையில் நவம்பர் 1-ந்தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க. அறிவித்திருந்தது. அதாவது, தான் அங்கம் வகிக்கும் மத்திய அமைச்சரவையில் உள்ள சக அமைச்சருக்கு எதிரான கண்டனக் கூட்டம் இது (இந்த முடிவுக்குக் காரணமான மத்திய அமைச்சரவையை எதிர்த்து ஒன்றும் செய்ய மாட்டார்களாம்… என்னே தெளிவு!!)

சரி… ஏதோ ஒரு விதத்தில் எதிர்ப்பைக் காட்டுகிறாரே… என்று அப்படியும் சிலர் ஆறுதல்பட்டுக் கொண்டு அடுத்த நகர்வு என்ன என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போதுதான் டெல்லியில் திடீரென மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவின் அலுவலகங்களில் சிபிஐயின் அதிரடி சோதனைகள் என்ற ட்ரெய்லரை ஓட்டிக் காட்டியது காங்கிரஸ் அரசு.

இனி அவ்வளவுதான்… கருணாநிதி கொதித்தெழுவார். தன்மானத் தமிழன் என்பதை நிரூபிப்பார்… ராஜா பதவி விலகுவார் என்றெல்லாம் சிலர் அல்பத்தனமாக எதிர்பார்த்துவிட்டனர்.

‘நாங்கள் எதற்கு பதவி விலக வேண்டும்… யாரும் செய்யாததையா செய்துவிட்டோம்?’ என்ற ரீதியில் கேட்டுவிட்டு, ஒன்றுமே நடக்காத மாதிரி அமைதியாகிவிட்ட உடன்பிறப்புக் கழகமும் அதன் தலைவரும், முல்லைப் பெரியாறு கண்டனக் கூட்டத்தை கேரள அரசுக்கு எதிரான கூட்டமாக மாற்றுவதாக அறிவித்தனர்.

சரி… காங்கிரஸ் சாமி கூலாகிவிட்டிருக்கும் என நினைத்து சற்றே ஆசுவாசப்பட்டிருப்பார் போல… ஆனால் விதி வலியது.

சிபிஐ இன்னொரு முறையும் ரவுண்ட் கட்டி ரெய்ட் அடித்தது. ஏது ஏது… இந்தத் துறையிலிருந்து நம்மை விரட்டாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறதே…’ என்று யோசித்தவர்கள்…. ‘எதற்கு இந்தக் கருமம் பிடித்த கண்டனக் கூட்டம்? விவசாயி எக்கேடு கெட்டால் நமக்கென்ன… முதலில் பதவியைக் காப்பாத்திக்குவோம். மக்களைச் சமாளிக்க டாஸ்மாக்கும் பிரியாணியும் கைகொடுக்கும்’ என்ற தெளிவு பெற்றவராய், முல்லைப் பெரியாறு சம்பந்தமாக இனி வாயே திறக்க மாட்டேன் சாமி என்று சரண்டர் சிக்னல் அனுப்பியுள்ளார் டெல்லிக்கு.

தீர்ந்தது கதை. காவிரி… பாலாறு வரிசையில் சேர்ந்தது முல்லைப் பெரியாறும். எந்த மாநிலம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தண்ணீர் திறந்துள்ளது… அப்படி மதிக்காமல் போனதற்குதான் ஏதாவது தண்டனை கொடுத்துவிட்டார்களா… ஒன்றும் நடக்கப் போவதில்ல.

தமிழன் வரலாற்றில் இன்னொரு துரோக அத்தியாயமும் எழுதப்பட்டுவிட்டது…இந்த துரோகத்தை தமிழன் நினைவிலிருந்து அகற்ற அடுத்தடுத்த கலை நிகழ்ச்சிகளுக்கு கருணாநிதியின் ஸ்கிரிப்ட்டும் ரெடி…!!

-விதுரன்

நேற்று… இன்று… நாளை?

Photoon: அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

ramadoss_jayalalitha1

நேற்று.... போயஸ் தோட்டம்

தைலாபுரம் தோட்டம்

இன்று.... தைலாபுரம் தோட்டம்

நாளை.... அரசினர் தோட்டம் (அல்லது கோபாலபுரம்?)

நாளை.... அரசினர் தோட்டம் (அல்லது கோபாலபுரம்?)

இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி!

August 21, 2009 by envazhi  
Filed under General

இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி!

சென்னை: தமிழகத்தில் சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 5 karuதொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதிமுக இந்த தேர்தலைப் புறக்கணித்த நிலையில், திமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட விஜய்காந்தின் தேமுதிக, பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது.

பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.ஆர்.கே.நரசிம்மன் அபார வெற்றி பெற்றார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் வி.சந்திரனை இவர் 59,103 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

இத்தொகுதியை அதிமுகவிடமிருந்து திமுக கைப்பற்றியுள்ளது.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:
கே.ஆர்.கே.நரசிம்மன் (திமுக) – 89,481
வி.சந்திரன் (தேமுதிக) – 30,378
அசோகன் (பாஜக) -1482

கம்பம்

கம்பம் தொகுதியில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் 57 ஆயிரத்து 373 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ராமகிருஷ்ணனுக்கு 81, 515 வாக்குகள் கிடைத்தன.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் அருண்குமார் 24,142 வாக்குகள் பெற்று 2வது இடத்தைப் பிடித்தார்.

இத்தொகுதியை மதிமுகவிடமிருந்து கைப்பற்றியுள்ளது திமுக. மதிமுக சார்பிலும் ராமகிருஷ்ணன்தான் முன்பு எம்.எல்.ஏவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பம் ராமகிருஷ்ணன் கடந்த முறையை வாங்கியதை விட இம்முறை கூடுதலான ஓட்டுக்களைப் பெற்றுள்ளார்.

கடந்த முறை மதிமுக சார்பில் போட்டியிட்ட அவர் 50,761 வாக்குகளைப் பெற்றார். இம்முறை கூடுதலாக 30,754 வாக்குகள் அவருக்குக் கிடைத்துள்ளன.

கடந்த பொதுத் தேர்தலில் திமுகவுக்கு இங்கு 48,803 ஓட்டுக்கள் கிடைத்தன.

கடந்த தேர்தலில் தேமுதிகவுக்கு இங்கு 12,360 ஓட்டுக்கள் கிடைத்தன. ஆனால் இந்த முறை போட்டியிட்ட அருண்குமார் 24,142 வாக்குகளைப் பெற்றுள்ளார். இங்கு அதிமுக இல்லாததால் தேமுதிகவுக்கு வாக்கு பலம் இரட்டிப்பாகியுள்ளது.

தொண்டாமுத்தூர்

தொண்டாமுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.என். கந்தசாமி 71,487 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

மதிமுகவிடமிருந்து இத்தொகுதியைக் கைப்பற்றியுள்ளது காங்கிரஸ்.

வேட்பாளர்கள் வென்ற வாக்குகள்:
கந்தசாமி (திமுக) – 1,12,350
கே.தங்கவேலு (தேமுதிக) – 40,863

இளையான்குடி தொகுதியிலும் திமுகவே வெற்றி வாகை சூடியுள்ளது. இங்கு திமுக வேட்பாளர் சுப.மதியரசன் 41,456 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இத்தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்

சுப.மதியரசன் (திமுக) – 61,084
அழகு பாலகிருஷ்ணன் (தேமுதிக) – 19,628
ராஜேந்திரன் (பாஜக) – 1487

திமுக பலம் 99 ஆக உயர்வு!

இந்த வெற்றியின் மூலம் திமுகவின் பலம் சட்ட மன்றத்தில் 99 ஆக உயர்ந்துவிட்டது.

இடைத்தேர்தலுக்கு முன் சட்டசபையில் திமுகவுக்கு 96 உறுப்பினர்கள் இருந்தனர். கம்பம், பர்கூர், இளையான்குடி தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் திமுகவின் பலம் 99 ஆக உயர்ந்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூரில் வென்றதன் மூலம் காங்கிரஸ் பலம் 36 ஆக அதிகரித்துள்ளது.

61 எம்எல்ஏக்களைக் கொண்டிருந்த அதிமுகவின் பலம் 58 ஆகக் குறைந்துள்ளது. மதிமுகவின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இரண்டு குறைந்து 3 ஆகிவிட்டது.

திமுக கூட்டணியின் பலம் 131 என்பதிலிருந்து 136 ஆக உயர்ந்துள்ளது.

இப்போது சட்டசபையில் கட்சிகளின் பலம்:

மொத்த இடங்கள் – 234
திமுக – 99
அதிமுக – 58
காங்கிரஸ் – 36
பாமக – 18
சிபிஎம் – 9
சிபிஐ – 6
மதிமுக – 3
விடுதலைச் சிறுத்தைகள் – 2 (செல்வம் ராஜினாமா செய்து விட்டார் – ஆனால் ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை)
தேமுதிக – 1
சுயேச்சை – 1
நியமனம் – 1

சன்டிவியின் வியாபார உத்தி, எந்திரனை பாதிக்குமா? – கேள்வி பதில் -6

July 31, 2009 by envazhi  
Filed under Questions

சன்டிவியின் வியாபார உத்தி, எந்திரனை பாதிக்குமா? – கேள்வி பதில்-6

ஈழத் தமிழ்ப் போராளிகளுக்குள் இப்போது மூண்டுள்ள இந்த மோதல் எந்த அளவு தமிழீழ நோக்கத்துக்கு குந்தகமாக அமையும்? ஈழத் தமிழரின் வாழ்வு மலர தாயகத் தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

ப.கலையரசன், pattukalai@yahoo.com

camp-2

குழப்பத்தில்தான் தெளிவு பிறக்கும். இப்போதைக்கு புலத்தில் உள்ள போராளிகள் பிளவுபட்டிருப்பது உண்மையே.

ஆனாலும் இவை அனைத்தும் விரைவில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை, புலம்பெயர் ஈழத் தமிழர்களிடையே நிலவுகிறது. இது ஒரு தற்காலிக நிலைமைதான். ஆனால் இதெல்லாம் இப்போது முக்கியமில்லை.

இப்போது நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம், முள்கம்பி வேலிக்குள் வாழ்க்கை முடங்கிக் கிடக்கும் மூன்று லட்சம் தமிழர்களை மீளக் குடியேற்றுவதற்கான வழிமுறைகளே. நாளும் வருகிற செய்திகள், அந்த மக்களுக்கு உரிமையுள்ள பூமி பறிபோய்க் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. தமிழரின் சொந்த நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் வெகு வேகமாக நடந்து வருகின்றன.

வெறும் பார்வையாளர்களாக அனுதாப வார்த்தை உதிர்ப்பதால் ஒன்றும் நடந்துவிடாது. எனவே ஈழ தமிழ் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான அரசியல் போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும். கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும், புலத்தில் உள்ள போராளிகள் மற்றும் உணர்வாளர்களின் இப்போதைய நோக்கம், சிந்தனை, செயல்பாடு இதுவே.

பிரியாணி, நூறு ரூபாய்த்தாள், பிரச்சார பொழுது போக்குகளில் அமிழ்ந்து கிடக்கும் தாயகத் தமிழர்கள் இதற்கு எந்த அளவு உதவுவார்கள் என்பது புரியவில்லை.

மேடைகளிலும், டிவி விவாதங்களிலும், பத்திரிகைப் பக்கங்களிலும் வாய் கிழிய, பேனா முனை மழுங்குமளவுக்கு தமிழுணர்வு என்றும் தமிழ்த் தேசியம் என்றும் முழங்கியவர்கள், ரகசியமாக ஹம்ஸாவின் விருந்தில் கூடிக் குடித்துக் களித்து, கையூட்டோடு வீடு திரும்பும் காலம் நீளும் வரையில், இந்த பிரியாணிக் கலாச்சாரமும் நீளும் என்றே தெரிகிறது.

ஈழத் தமிழரின் இன விடுதலை தாயகத் தமிழர்களால் நடக்காது. அவர்களே கையையூன்றி கரணம் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதே நிதர்சனம்!

**********

ஜெயலலிதாவின் தேர்தல் புறக்கணிப்பு திமுகவுக்கு உறைக்கும் என்கிறீர்கள்?

மலர், malaredit@gmail.com

karunanidhijayalalitha

நிச்சயம் இல்லைதான். திமுக இப்போது அதையெல்லாம் கவனிக்கிற மனநிலையில் இல்லை. காரணம், அவர்களுக்குத் தேவை வெற்றிகள் மட்டுமே…

ஈழத்தில் தமிழன் செத்தாலும், இங்குள்ளோர் எத்தனையோ பிரச்சினைகளில் தவித்தாலும், தங்கள் இலக்குகளை அடைவதில் மிகத் தெளிவாக உறுதியாக இருக்கிறார்கள். இது ஒரு வெற்றிகரமான கார்ப்பரேட் நிறுவனத் தலைமைக்கே உரிய மனநிலை.

இன்னொன்று, தார்மீகம் பற்றியெல்லாம் ஜெயலலிதா பேசக் கூடாது. கலைஞர் எதிர்வரிசையில் இருந்திருந்தால் இன்று அவரும் ஜெயலலிதா முடிவை எடுத்திருக்க வேண்டியிருந்திருக்கும். 1991-லிருந்து ஜெயலலிதாவின் அரசியலை நாமும் பார்த்து வருகிறோம்.

‘இவருக்கு அவர் பரவாயில்லை… அவருக்கு இவர் தேவலை’ என்று இந்த இருவர் நாடகத்தில் மட்டுமே தமிழர் கவனம் இருக்க வேண்டும் எனத் தெளிவாகத் திட்டமிட்டு தங்கள் காய் நகர்த்தல்களை மேற்கொள்கின்றனர் திமுக-அதிமுக ‘முதலாளிகள்’.

**********

குப்பை படங்களையெல்லாம் தூக்கி நிறுத்த சன்டிவி பயன்படுத்தும் வியாபார உத்தி, நாளை ‘தலைவர்’ படத்தை பாதிக்காதா?

மணிவண்ணன், powersstar@yahoo.co.in

endhiran-stills1

து ரஜினி – ஷங்கர் படம். அது ஒன்று போதும். சூரியனுக்கு டார்ச் அடிக்க தேவையில்லை என்ற வழக்கமான பழமொழியைத்தான் உங்களுக்கு நானும் சொல்வேன். தங்கள் வர்த்தக உத்திகளைத் தாண்டிய மாபெரும் ஈர்ப்புத் தன்மை இந்தப் படத்துக்கு உண்டு என்பது சன்னுக்கே நன்கு தெரியும்!

**********

தொடர்ந்து தோல்விப்படங்களாகவே வருகின்றனவே… தமிழ் சினிமாவில் அத்தனை கதை / கற்பனை வறட்சியா?

எஸ். சக்திகுமார், shakthi41@hotmail.com

jun06_tamil

விட்டா குடுமி… அடிச்சா மொட்ட… இதுதான் பொதுவாக தமிழ் சினிமா இயக்குநர்கள் – தயாரிப்பாளர்களுக்குத் தெரிந்ததெல்லாம்.

பெரிய கார்ப்பரேட் ரேஞ்சுக்கு திட்டமிட்டு, பெட்டிக்கடை வியாபாரம் நடத்தும் விநோதமானவர்கள் இவர்கள். முதல் படத்திலேயே இருந்த மொத்த சரக்கும் தீர்ந்துபோய், இரண்டாவது படத்துக்கே பர்மா பஜார் டிவிடி கடையின் தயவைத் தேடும் இவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்!

முதல் படத்தில் வெற்றி பெற்ற இயக்குநர் நான்கு படங்கள் வரை கூட இன்றைக்கு தாக்குப் பிடிப்பதில்லை. காரணம் படிப்பதில் நாட்டமின்னை, அனுபவ அறிவு இல்லாமை.

சொல்வதெல்லாம் பொய்… சரியான திட்டமிடல் கிடையாது. மதுவுக்கும் மாதுவுக்கும் செய்யும் செலவை படத்தின் நியாயமான விளம்பரத்துக்குச் செய்ய மாட்டார்கள்.  நாடோடிகளின் வெற்றிக்குக் காரணம் சரியான ஸ்கிரிப்ட் மட்டுமல்ல… அதை சந்தைப்படுத்திய முறையும் கூட.

சில பிஆர்ஓக்களின் தவறான வழிகாட்டுதலில் கடைசி நேரத்தில் இவர்களே தங்கள் படத்துக்கு தூக்குக் கயிறு மாட்டி விடுகிறார்கள். அப்புறம் எங்கே உருப்படும் இவர்கள் எடுக்கும் படங்கள்?

**********

வறாக நினைக்க வேண்டாம். என்னைப் போன்ற பல ரசிகர்களுக்கு உள்ள சந்தேகம் இது. சுல்தான் வெற்றிப் படமாக அமையும் என நம்புகிறீர்களா?

சிவராம், sivarajini@gmail.com

sultan

ந்தப் படம் வழக்கமான படம் அல்ல… ஆனால் ஒரு ரஜினி படத்துக்கான அத்தனை குதூகலமான அம்சங்களும் படத்தில் இருக்கும். படத்தில் வரும் ரஜினியின் உருவம் அனிமேஷன் என்றாலும், நிஜத்தில் அந்தப் பாத்திரமாக ரஜினிதான் நடித்திருக்கிறார்.

இன்னொன்று இன்றைய தலைமுறைக்கு மிகவும் பரிச்சயமான, கடந்த தலைமுறையை ஆச்சர்யப்படுத்தும் தொழில்நுட்பத்தில் இந்தப் படம் தயாராகிறது.

“இந்தியாவில் இதுவரை யாரும் மேற்கொண்டிராத ஒரு வித்தியாசமான, ஆனால் ஜனரஞ்சகமான முயற்சி இது. அப்பாவின் படங்களுக்கே உரிய வெற்றியை நிச்சயம் ஈட்டும்!” என்கிறார் சௌந்தர்யா ரஜினி.

ஒரு ரஜினி ரசிகருக்கு வேறென்ன வேண்டும்… கொண்டாடத் தயாராக வேண்டியதுதானே!

-வினோ

தமிழனை நசுக்கிய ராஜபக்சே காலுக்கு முத்தமிடச் சொல்லும் கருணாநிதி! – பழ நெடுமாறன்

July 3, 2009 by envazhi  
Filed under General

தமிழனை நசுக்கிய ராஜபக்சே காலுக்கு முத்தமிடச் சொல்லும் கருணாநிதி! – பழ நெடுமாறன்

ழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டுமேயானால் neduசிங்கள அரசின் மூலமாகதான் அதனைச் செய்ய முடியும். எனவே நம்முடையப் பேச்சால், நம்முடைய நடவடிக்கையால் சிங்களவர்களுடைய கோபத்தை அதிகரிக்கும் வகையில் எதுவும் செய்துவிடக் கூடாது” என முதல்வர் கருணாநிதி தமிழகச் சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார்.

ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை ஈவு இரக்கம் இல்லாமல் படுகொலை செய்த ராஜபக்சவுக்கும் அவருடைய கூட்டத்திற்கும் ஆத்திரமூட்டும் எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபடாமல் நடந்து கொள்ள வேண்டும் என தமிழர்களுக்கு கருணாநிதி அறிவுரை வழங்கியிருக்கிறார். அதாவது உதைக்கிற காலுக்கு முத்தமிட வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்.

கன்னடர்களுக்கு கோபமூட்டாமல் காவிரிப் பிரச்னையிலும், மலையாளிகளுக்கு கோபமூட்டாமல் முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் நீக்குப் போக்குடன் கருணாநிதி நடந்து கொண்டதினால்தான் அப்பிரச்சினைகளில் தமிழகம் மிகப்பெரிய இழப்புகளுக்கு ஆளாக நேரிட்டது.

ஈழத் தமிழர் பிரச்சினையிலும் காங்கிரஸ் கட்சிக்கு கோபமூட்டி அதன் விளைவாக தேர்தல் உறவு பாதிக்கப்பட்டு விடக்கூடாதே என்பதற்காக இவர் கையாண்ட அணுகுமுறையின் விளைவாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அது மட்டுமல்ல, “தமிழீழத் தனிநாடு இனி சாத்தியமானது அல்ல.சம உரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு வேண்டி சிங்களவரிடம் மண்டியிட வேண்டும்” என்றும் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

“கொள்கையைக் கைவிடுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும்.திராவிட நாடு கொள்கையை தி.மு..க. கைவிட்டதற்கு காரணம் கட்சியை ஒழிப்பதற்கு சட்டம் வந்தபோது திராவிட நாடா அல்லது கட்சியா என்ற கேள்வி எழுந்தது.எனவே முதலில் கட்சிதான் வேண்டும் என்று முடிவு எடுத்ததாக”வும் முற்றிலும் உண்மைக்கு மாறான தகவலை கூறியிருக்கிறார்.

பிரிவினை கேட்கும் கட்சிகள் தடை செய்யப்படும் என்ற சட்டம் கொண்டு வரப்படவில்லை.பிரிவினை கேட்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றுதான் சட்டம் கொண்டு வரப்பட்டது.தேர்தலில் போட்டியிட்டு பதவி சுகம் அனுபவிப்பதற்கு இச்சட்டம் தடையாக இருக்கும் என்று கருதியதால்தான் திராவிட நாடு கோரிக்கை குழிதோண்டி புதைக்கப்பட்டது.வரலாற்றுப் பூர்வமான இந்த உண்மையைத் திரித்து பேசுகிறார் கருணாநிதி.

30 ஆண்டு காலம் அறவழியில் சம உரிமைக் கேட்டு ஈழத் தமிழர்கள் போராடினார்கள். எதுவுமே கிடைக்காத காலகட்டத்தில் ஆயுதம் தாங்கிய போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். 15 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் அயல்நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுந்தார்கள்.

தமிழீழப் பகுதி முழுவதிலும் பாதிக்கப்படாத தமிழர் குடும்பமே இல்லை.இவ்வளவு தியாகங்களை ஈழத் தமிழர்கள் செய்த பிறகு அந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தவும் பின்னோக்கித் தள்ளவும் கருணாநிதி முயற்சி செய்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உலகத்தின் பல நாடுகள் ராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்களை மிகக் கடுமையாகக் கண்டனம் செய்யும் கட்டத்தில் அவருக்கு வெண்சாமரம் வீசும் வேளையில் தமிழக முதலமைச்சர் ஈடுபட்டிருப்பது வெட்கக் கேடானதாகும். இதன் மூலம் உலக நாடுகள் நடுவில் ஈழத் தமிழர் போராட்டம் குறித்து ஒரு தவறானக் கண்ணோட்டத்தை ஏற்படுத்த அவர் செய்யும் முயற்சி வெற்றி பெறப் போவதில்ல. ஈழத் தமிழரின் மன உறுதி ஒரு போதும் தளரப் போவதில்லை.அவர்களுக்கு ஆதரவாக உலகத் தமிழர்களின் போரட்டங்களும் ஓயப் போவதில்லை, என்று கூறியுள்ளார் நெடுமாறன்.

நடிகர் ரித்தீஷ் வெற்றியை எதிர்த்து வழக்கு!

June 25, 2009 by envazhi  
Filed under election

நடிகர் ரித்தீஷ் வெற்றியை எதிர்த்து வழக்கு!

சென்னை: ராமநாதபுரம் தொகுதியில் நடிகர் ரித்தீஷ் (தி.மு.க.) 0_2128வெற்றி பெற்றதை எதிர்த்து முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. வேட்பாளருமான வி.சத்தியமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சிவக்குமார் என்ற நடிகர் ஜே.கே.ரித்தீஷ் (தி.மு.க.), முன்னாள் அமைச்சர் வி.சத்தியமூர்த்தி (அ.தி.மு.க.), முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் (பா.ஜ.க.) உள்பட 15 பேர் போட்டியிட்டனர். இந்த கடுமையான போட்டியில் ரித்தீஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இவர் வெற்றி பெற்றதை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளர் வி.சத்தியமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ரித்தீஷ் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவித்து, தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.

மேலும் அவர் மனுவில் கூறியிருப்பதாவது:

ரித்தீஷ் ஒரு சாதாரண நடிகர். ஓரிரு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால், தேர்தலுக்காக அவரும், தி.மு.க. கட்சியினரும் ரூ.25 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளனர். பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி பேரையூர், கள்ளக்குறிச்சி, நரிக்குடி, கடலாடி போன்ற போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்துள்ளோம். அரியன்கோட்டை கிராமத்தில் அம்மன் கோவில் கட்டி தருவதாக 2.5.2009 அன்று ரித்தீஷ் தெரிவித்துள்ளார். இந்த கோவிலுக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்காக தனது 2 லாரிகளை கொடுத்துள்ளார்.

தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பிறகு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், ஆரத்தி எடுப்பவர்களுக்கு ரூ.100 வீதம் கொடுக்கப்பட்டுள்ளது.

ரித்தீஷ் இலங்கை கண்டியை சேர்ந்தவர். இவரது பெற்றோர் இலங்கையில் வசிப்பவர்கள். ஆனால் ரித்தீஷ் இந்திய குடியுரிமையை எப்படி பெற்றார் என்பது தெரியவில்லை. இந்திய பிரஜை என்று தவறான தகவலை கொடுத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இவர் எம்.பி. தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.

தேர்தல் விதிமுறையை மீறி ஊழல், அதிகார துஷ்பிரயோகம், எதிர்க் கட்சியினரை பயமுறுத்துதல், நியாயமற்ற முறையில் நடந்து கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ரித்தீஷ் மீதும், அவரது கட்சி மீதும் தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுத்துள்ளேன். விதிமுறைகளை மீறி ரித்தீஷ் செயல்பட்டிருப்பதால் அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும். நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும், என்று அந்த மனுவில் கூறியுள்ளார் சத்தியமூர்த்தி.
ராமநாதபுரம் தொகுதி – பதிவான ஒட்டுகள் விவரம்

மொத்த வாக்கு- 11,30,489

பதிவானவை- 7,7,839

சிவக்குமார் என்ற ரித்தீஷ் (தி.மு.க.)- 2,94,945

சத்தியமூர்த்தி (அ.தி.மு.க.)- 2,25,030

திருநாவுக்கரசர் (பா.ஜ.க.)- 1,28,322

கலைஞர் பிறந்த நாள்: கோலாகல கொண்டாட்டம்!

June 3, 2009 by envazhi  
Filed under General

கலைஞர் பிறந்த நாள்: கோலாகல கொண்டாட்டம்!

சென்னை: மாநில சுயாட்சியை நிலைநாட்ட தொடர்ந்து பாடுபடுவோம் என்பதே என்னுடைய 86வது பிறந்த நாளுக்கான செய்தி என முதல்வர் கருணாநிதி கூறினார்.

maalaimalarsid9d516f9c-c5cf-4cbc-88e5-d92305b39d02gif

இன்று தமிழக முதல்வர் கருணாநிதிக்கு 86-வது பிறந்த நாள்.

வழக்கம் போல் தனது பெற்றோர், அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்குச் சென்று மரியைதை செலுத்திய கலைஞர், பின்னர் தனது மனைவி, மகன்கள் – மகள்கள் மற்றும் உறவினர்களின் வாழ்த்துக்களை ஏற்றார்.

பின்னர் அண்ணா அறிவாலயம் வந்த அவரை, நீண்ட வரிசையில் காத்திருந்து வாழ்த்தினர் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள்.

பின்னர் முதல்வரை நிருபர்கள் சந்தித்தனர்.

அப்போது அவரிடம், உங்கள் பிறந்தநாள் செய்தி என்ன என்று கேட்டனர்.

அதற்கு முதல்வர் அளித்த பதில்:

என்னுடைய இந்த பிறந்த நாளை திமுக தொண்டர்கள் எழுச்சியோடு கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் எங்களுடைய கொள்கை மேலும் வலுப்படுத்தப்படவும், மக்கள் மத்தியில் பதிய வைக்கவும் பாடுபடுவோம்.

மேலும் இந்திய ஒருமைப்பாடு, தமிழ் இன உணர்வு, மத நல்லிணக்கம், மதச்சார்பற்ற அரசு முறை இவற்றோடு எங்களின் நீண்டநாள் முழக்கமான மாநில சுயாட்சி உரிமை ஆகியவற்றுக்காகவும் பாடுபடுவோம்.

அண்ணா மற்றும் இந்திய பேரறிஞர்கள் கண்ட கனவை நனவாக்க திமுக சூளுரை மேற்கொள்ளும். திமுகவின் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றான மாநில சுயாட்சி பல்வேறு நிலைகளில், பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது.

இன்று என் பிறந்தநாளில் மாநில சுயாட்சி முழுமை பெறுவதற்கான பணியை நிச்சயம் தொடருவேன் என்று உறுதியளிக்கிறேன் என்பது தான் எனது செய்தி என்றார்.

போனமுறை பிறந்த நாளின் போது சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினீர்கள். இந்த பிறந்தநாளில் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு, சேது சமுத்திர திட்டமே இன்னும் நிறைவேறவில்லை. முதலில் அந்தத் திட்டம் நிறைவேற பாடுபடுவேன் என்றார்.

அதிமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் தலைவர்கள் உங்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்களே என்று கேட்டதற்கு,

தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் மத்தியில் நீண்ட காலமாக இத்தகைய பண்பாடு இருந்து வருகிறது. அந்த பண்பாடு இருப்பவர்கள் மற்றும் அரசியல் பக்குவம் பெற்றவர்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து இது போன்ற நாட்களில் தோழமை உணர்வோடு வந்து வாழ்த்துவதை வரவேற்கிறேன் என்றார்.

சோனியா காந்தி வாழ்த்தியது குறித்தும் கேட்டனர் நிருபர்கள். அதற்கு, “நான நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என வாழ்த்தினார் சோனியா அம்மையார்” என்றார்.

கொளுத்தும் வெயிலில் அண்ணாசாலை திணறியது!

முதலவர் கருணாநிதிக்கு வாழ்த்து சொல்ல வந்த கூட்டத்தால் அண்ணா சாலையில் பிற்பகல் 12 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடுமையான வெயிலில் நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் காத்திருந்தனர். விஷயம் கேள்விப்பட்ட பிறகு போலீசார் உடனடியாக வாகனங்களை க்ளியர் செய்தனர்.

மருந்துகளின் விலையைக் குறைத்துக் காட்டுவேன்! – இது அழகிரி சபதம்!!

June 2, 2009 by envazhi  
Filed under General


மருந்துகளின் விலையைக் குறைத்துக் காட்டுவேன்! – இது அழகிரி சபதம்!!

டெல்லி: ஏழை நோயாளிகள் பயன்பெறும் வகையில் மருந்து மாத்திரை பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படும். எப்படி குறைப்பேன் என்பது ரகசியம். ஆனால் நிச்சயம் குறைத்துக் காட்டுவேன், பொறுத்திருந்து பாருங்கள் என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் முக அழகிரி தெரிவித்துள்ளார்.azhagiri

மதுரை தொகுதியில் இருந்து முதன் முதலாக நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக தென் மண்டல அமைப்பாளர் அழகிரி நேற்று தனது துறையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

தனது அதிகாரிகள் அனைவரையும் அழைத்த அழகிரி துறை சம்பந்தமான அனை்தது விவரங்களையும் கேட்டறிந்தார். தனது பார்வையின் கீழ் வரும் விவகாரங்களையும், பொறுப்புகளையும் அறிந்து கொண்டார்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அழகிரி. மத்திய அமைச்சராக பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பது இதுவே முதல்முறை என்பதால், கிட்டத்தட்ட தமிழக நிருபர்கள் அனைவருமே அவரது அலுவலகத்தில் குவிந்துவிட்டனர். டெல்லி பத்திரிகையாளர்களும் திரண்டு வந்திருந்தனர்.

அவர் கூறியதாவது:

விவசாயிகளுக்கு மானிய விலையில் தேவையான உரங்கள் கிடைக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும்.

உர உற்பத்தியை நவீனப்படுத்தி, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். மூடப்பட்டுள்ள பல உர ஆலைகள் திறக்கப்படும். அவை சீரமைக்கப்பட்டு உற்பத்தி பெருக்கப்படும். நிறைய பேருக்கு இந்தத் துறையில் வேலைவாய்ப்பு தரவேண்டும் என திட்டமிட்டுள்ளோம்.

இன்றைக்கு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவது கிராம அளவில் சரியான உர விநியோகம் இல்லாமை மற்றும் அவற்றின் அதிகபட்ச விலைதான்.

குறிப்பாக பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்கள் தயாரிக்க தேவையான மூலப்பொருள்கள் விநியோகம் சீராக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்

இனி குறைந்த விலையில் மருந்துகள்!

மருந்து பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் ஏழை நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களின் குறைகளைப் போக்கும் வகையில் மருந்து, மாத்திரை போன்றவை நியாயமான விலையில் எந்த தட்டுப்பாடும் இல்லாமல் கிடைக்கும். இது தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மருந்து மற்றும் மாத்திரை உற்பத்தியில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். புதிய உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். மேலும் இந்த துறையிலும் மனித ஆற்றலை விரிவுபடுத்தி, வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். புதியவர்கள், இளைஞர்களை பெரிய அளவில் உள்ளே கொண்டு வந்தால்தான் வேலை சீக்கிரம் நடக்கும்…,” என்றார் அழகிரி.

உடனே, சில நிருபர்கள், “கடந்த முறை இப்பதவியில் இருந்த ராம் விலாஸ் பஸ்வான் பல முறை முயன்றும் அவரால் முடியவில்லை. உங்களால் எப்படி முடியும்?, என கேட்டார்கள்.

“நான் எப்படி குறைப்பேன் என்பது ரகசியம். ஆனால் நிச்சயம் விலையைக் குறைத்துக் காட்டுவேன். நம்மால் முடிகிற விஷயம்தான்… பொறுத்திருந்து பாருங்கள்”, என்றார் தனக்கே உரிய பாணியில் அழகிரி.

Related Posts with Thumbnails