முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

காவல்காரன் தலைப்பு… சத்யா மூவீஸ் எதிர்ப்பு!

July 8, 2010 by envazhi  
Filed under Cinema

காவல்காரன் தலைப்பு… சத்யா மூவீஸ் எதிர்ப்பு!

சென்னை: புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடிப்பில், சத்யா மூவீஸ் தயாரிப்பில் பெரும் வெற்றி பெற்ற காவல்காரன் தலைப்பைச் சூட்ட விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தலைப்புக்கு சத்யா மூவீஸ் எதிர்ப்பு தெரிவித்ததால், விஜய் நடித்து வெளிவரவிருக்கும் படத்துக்கு ‘காவல் காதல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நயன்தாரா-திலீப் நடித்து சித்திக் இயக்கிய மலையாளப்படம், ‘பாடிகார்ட்’. இந்த படத்தை விஜய்-அசின் ஜோடியை வைத்து தமிழில் ரீமேக்குகிறார்கள். முக்கிய வேடத்தில் ராஜ்கிரண் நடிக்கிறார். தமிழ் படத்தையும் சித்திக்கே இயக்குகிறார்.

இந்த படத்துக்கு ‘காவல்காரன்’ என்ற எம்.ஜி.ஆர். படத்தின் பெயரை வைத்திருந்தனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை (பழைய படங்களின் தலைப்பைப் பயன்படுத்தும்போது அதற்குரிய அனுமதியை அதன் தயாரிப்பாளரிடமிருந்து பெற வேண்டும்).

எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடித்து சத்யா மூவிஸ் தயாரித்து 1967-ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி கண்ட படம் ‘காவல்காரன்’. இந்த தலைப்பை விஜய் படத்துக்கு வைக்கக் கூடாது என்று சத்யா மூவிஸ் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு சத்யா மூவிஸ் நிறுவனம் ஒரு கடிதம் அனுப்பியது.

அதில், “விஜய் இப்போது நடித்து வரும் புதிய படத்துக்கு ‘காவல்காரன்’ என்று பெயர் வைத்துள்ளதாக தகவல் வருகிறது. இந்த தலைப்பின் உரிமையை யாருக்கும் நாங்கள் கொடுக்கவில்லை. எனவே அந்த படத்துக்கு காவல்காரன் என்று பெயர் வைப்பதற்கு அனுமதிக்க கூடாது” என்று குறிப்பிட்டிருந்தது.

இதை தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விஜய் படத்தின் தயாரிப்பாளருக்கு, “பழைய பட தலைப்பை வைக்கும்போது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் இருந்து அனுமதி பெறுவதுடன், மறுப்பு இல்லாத சான்றிதழும் வாங்க வேண்டும். அது கிடைக்காத பட்சத்தில் அந்த தலைப்பை வைக்கக் கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்தில் விதி இருக்கிறது. எனவே உங்கள் படத்துக்கு வேறு தலைப்பை வைத்துக்கொள்ளுங்கள்’ என்று கடிதம் அனுப்பியது.

இதை தொடர்ந்து விஜய் படத்தின் பெயர் ‘காவல் காதல்’ என்று மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னால் லாபமடைந்தோர் பலர்; நஷ்டம் வெகு சிலருக்குத்தான்! – ரஜினி பேச்சு

May 27, 2010 by envazhi  
Filed under Rajini

என்னால் நிறைய பேர் லாபமடைந்துள்ளனர்… சிலருக்குதான் நஷ்டம்! – ரஜினி

சென்னை: என்னால் லாபமடைந்தவர்கள் நிறைய பேர். நஷ்டமடைந்தவர்கள் வெகு சிலர்தான். அதில் ஆர்எம் வீரப்பனும் ஒருவர், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ரஜினி நடித்து 1995-ல் ரிலீசான பாட்ஷா படம் தமிழக அரசியலில் பெரும் திருப்பங்கள் ஏற்பட காரணமாக அமைந்தது. அப்போது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசில் அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன் இப்படத்தை தயாரித்தார். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்று வெள்ளி விழாவைத் தாண்டி ஓடியது. பாக்ஸ் ஆபீஸ் வசூலில் இன்றுவரை அசைக்க முடியாத சாதனைகளைச் செய்துள்ள படம் பாட்ஷா.

பாட்ஷா வெற்றி விழாவில் ரஜினி பங்கேற்று பேசினார். அது தமிழக அரசியல் சரித்திரத்தையே புரட்டிப் போட்டது. தமிழகத்தில் நடந்த வெடி குண்டு சம்பவங்களை கண்டித்து பேசி அதிமுக அரசை மறைமுகமாக விமர்சித்தார். இதையடுத்து ஆர்.எம். வீரப்பன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன் பிறகு நடந்ததெல்லாம் தமிழக அரசியல் சரித்திரத்தில் மறக்க முடியாத நிகழ்வுகள்.

ஆர்.எம். வீரப்பன் மகன் தங்கராஜ் திருமணம் இன்று வியாழக்கிழமை சென்னை ராஜா முத்தையா மகாலில் நடந்தது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்ட இந்த விழாவில் ரஜினியும் பங்கேற்றுப் பேசினார்.

தனது பேச்சின்போது பாட்ஷா பட பிரச்சினைகள் பற்றிக் குறிப்பிட்டார்.

அவர் பேசியதாவது:

சற்று இடைவெளிக்குப் பிறகு இன்று கலைஞரை ஒரே மேடையில் சந்திக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆர்.எம். வீரப்பன் எனது நீண்ட கால நண்பர். அவருக்கும் எனக்கும் உள்ள நட்பு ஆழமானது. அன்பானது.

என்னால் நிறைய பேர் லாபம் அடைந்து இருக்கிறார்கள். சிலர் நஷ்டம் அடைந்துள்ளனர். அவர்களில் ஆர்.எம். வீரப்பனும் ஒருவர் (அரசியல் ரீதியாக).

பாட்ஷா படத்தால் உங்களுக்கு இப்படியொரு நிலைமை ஆகிவிட்டதே என்று கேட்டேன். அதற்கு அவர் இது காலத்தின் கட்டாயம் என்றார். ஆத்திகவாதி என்றால் கடவுள் செய்தது என்பார்கள். இவர் நாத்திக வாதியாக இருந்ததால் காலத்தின் கட்டாயம் என்றார்.

ஆர்.எம். வீரப்பன் நண்பராக மட்டுமின்றி வழி காட்டியாகவும் இருக்கிறார். என் மேல் மிகுந்த அன்பு வைத்துள்ளார்.

பாட்ஷா படம் எனக்கு ரொம்ப பெரிய பேர் வாங்கி கொடுத்தது. அதற்கு முக்கிய காரணம் ஆர்.எம். வீரப்பன். அந்த படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதில் அக்கறையும் ஈடுபாடும் காட்டினார். அவரது தயாரிப்பில் வந்த மூன்று முகம் படமும் அபாரமாக வெற்றி பெற்றது. சத்யா மூவீசில் நான் நடித்த அத்தனை படங்களுமே சிறப்பானவை.

பாட்ஷா படம் மாதிரி மீண்டும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். அப்படி எடுத்தால் ஆர்.எம். வீரப்பன்தான் அந்தப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்றேன். அவரால்தான் அப்படி ஒரு படத்தை எடுக்க முடியும்.

எம்.ஜி. ஆருடன் எப்படி நட்புடன் இருந்தாரோ அதே போல் கலைஞருடனும் நட்பு பாராட்டுகிறார் ஆர்எம்வீ…” என்றார் ரஜினி.

-என்வழி

என்னை முதல்வர் ஆக்கியவர் எம்ஜிஆர்தான்! – கருணாநிதி

May 13, 2010 by envazhi  
Filed under General

என்னை முதல்வர் ஆக்கியவர் எம்ஜிஆர்தான்! – கருணாநிதி

சென்னை: என்னை முதல்வர் பதவியில் உட்காரவைத்தே தீருவேன் என்று உறுதியுடன் நின்று, அதை நிறைவேற்றியவர் எம்ஜிஆர்தான், என்றார் முதல்வர் கருணாநிதி.

தி.மு.க. அரசு பதவியேற்று ஐந்தாம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, சட்டப்பேரவையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பாராட்டுரை வழங்கினர்.

அதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் பேசியது:

வடநாட்டில் – டெல்லி பட்டணத்தில் சோனியா காந்தியும், அத்வானியும் ஒரு திருமண விழாவிலே இருவரும் கலந்து கொண்டு, அருகருகே அமர்ந்து, ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்துக் கொண்டு, அன்போடு பழகுவதைக் காணுகிறோம். காணும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுவதை விட, – என்னைப் பொறுத்தவரையில் சொல்ல வேண்டுமானால் பொறாமைதான் ஏற்படுகிறது. ‘அத்வானியோடு சோனியா காந்தி பேசுகிறாரே என்று பொறாமை அல்ல; இந்த நிலை தமிழ்நாட்டிலே இல்லையே’ என்ற காரணத்தால் எழுகின்ற பொறாமை.

ஒரு காலத்திலே இதைவிட வேகமாக மோதிக் கொண்ட கட்சிகள் என்று சொன்னால், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் -பெருந்தலைவர் காமராஜரை நான் சாடாத கூட்டங்கள் இல்லை. எழுதாத கட்டுரைகள் இல்லை.

ஆனால், அவர் பெருந்தலைவர் என்பதற்கேற்ப, எப்படி நடந்து கொண்டார் என்பதை அவருடைய வரலாறு விளக்கும். என்னுடைய வாழ்க்கை வரலாற்றிலேயே அதைக் காணலாம்.

அண்ணாவால் தமிழ் மாநாடு சென்னையிலே நடத்தப்பட்டபோது, அந்த மாநாட்டினுடைய முதல் விழாவைத் தொடங்கி வைக்க வந்தவரே – பெருந்தலைவர் காமராஜர்தான் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

ஆனால், அடுத்து தமிழகத்தில் நடந்த தமிழ் மாநாடுகளில் நான் கலந்து கொள்ளவில்லை. அது என் குற்றமா? அல்லது மாநாடு நடத்தியவர்களின் குற்றமா என்கிற ஆராய்ச்சிக்கெல்லாம் சென்று, அதை நான் விவாதப்பொருளாக ஆக்க விரும்பவில்லை.

என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர் அவர்கள் வாழ்ந்தபோது, அவருக்கும், எனக்கும் எத்தனையோ பூசல்கள்; எத்தனையோ கடுமையான வாக்குவாதங்கள் இந்த அவையிலேயே நடந்ததுண்டு. நான் சாட்டிய குற்றச்சாட்டுகள் -அடுக்கடுக்காக எடுத்து வைத்த குற்றச்சாட்டுகள் இவற்றுக்கெல்லாம் அவர் வேகமாக அளித்த பதில்கள் எல்லாம் இன்றைக்கும் எனக்கு நினைவிலே இருக்கின்றன.

அதற்கெல்லாம் முன்பு, அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது, அடுத்து யார் முதலமைச்சராக வரவேண்டும் என்ற கேள்வி எழுந்த நேரத்தில், என்னுடைய வீட்டிற்கே வந்து -என்னுடைய வீட்டிலே உள்ள அனைவரும் நான் முதலமைச்சராக ஆக வேண்டாம் என்று தடுத்தும்கூட, அவர்களையெல்லாம் சமாதானப்படுத்தி, “இவர்தான் முதலமைச்சராக ஆகவேண்டும்; நீங்கள் யாரும் தடுக்கக் கூடாது” என்று என்னுடைய வீட்டிலே உள்ளவர்களையெல்லாம் சமாதானப்படுத்த இரண்டு, மூன்று நாட்கள் என்னுடைய வீட்டிற்கு வந்தார். என் துணைவியாரைச் சமாதானப்படுத்தினார். என் சகோதரிகளைச் சமாதானப்படுத்தினார்.

குறிப்பாக, முரசொலி மாறன் – ‘நீ வரவேண்டாம்; முதலமைச்சராக ஆகவேண்டாம்; அடுத்து, மூத்தவரான நாவலர்தான் அதற்கு ஏற்றவர்’ என்று சொல்லியும்கூட, நானும், மாறன் வழியிலே நின்று கழகத் தோழர்களுக்கு எடுத்துச் சொல்லியும்கூட, அதையெல்லாம் கேட்காமல், ‘உங்களை கொண்டுபோய் முதலமைச்சர் நாற்காலியிலே உட்கார வைத்துத்தான் தீருவேன்’ என்று என்னைக் கொண்டுவந்து, முதலமைச்சர் பதவியிலே உட்கார வைக்கும் பெரும் பொறுப்பையேற்றவர், அருமை நண்பர் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களாவார்.

நான் இதை ஏதோ இன்றைக்கு வாழ்த்துரை அரங்கம் என்பதால் சொல்வதாகக் கருதிக் கொள்ளக் கூடாது.

எத்தனையோ நிகழ்ச்சிகளில் இதைச்சொல்லியிருக்கிறேன். நானும் அவரும் வேகமாக ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக்கொண்டதுண்டு. ஆனால், அவரும் நானும் வாழ்ந்த, பழகிய நாற்பதாண்டு கால நட்பை நான் என்றைக்கும் மறந்ததில்லை.

அப்படி மறக்காத காரணத்தினால்தான், அவர் மறைந்தார் என்ற செய்தி கேட்டதும், புகைவண்டியில் வந்து நான் இறங்கி நின்றபோது -ரயிலடியில் அந்தச் செய்தி கிடைத்ததும் -உடனடியாக ராமாவரம் தோட்டத்திற்குச் சென்று முதல் மாலையை அணிவித்தேன். இது மாதவன், ஜேப்பியார் போன்றவர்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.

அதைப்போலவே, பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்தபோது அவருக்கும் எனக்கும் இருந்த அரசியல் காழ்ப்புணர்வு எல்லோருக்கும் தெரியும். அவர் மறைந்த போது -ஆட்சிப் பொறுப்பிலே இருந்த நான் -அவருக்கு சகலவிதமான அரசு மரியாதைகளோடும் -அவரைத் தகனம் செய்கின்ற அந்தப் பணியை மேற்கொண்டதும் உங்களுக்கெல்லாம் மறந்து போய் விடக்கூடிய விஷயமல்ல.

அதைப்போலவே நானும் எம்.ஜி.ஆர். அவர்களும் வாழ்ந்த அந்தக் காலத்தில் – ஒன்றாகவே இருந்த அந்தக் காலத்தில் -சட்டசபையில் அவர் சொன்ன ஒரு கருத்து இன்னமும் என்னுடைய காதுகளிலே ஒலித்துக் கொண்டிருக்கின்றது. “மொழிப் பிரச்சினையில் இந்தி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவது என்ற பிரச்சினையில் – நானும் கருணாநிதியும் -நானும் திராவிட முன்னேற்றக் கழகமும் – இரட்டைக்குழல் துப்பாக்கிகள்” – என்று எம்.ஜி.ஆர். அவையிலே சொன்னது இன்னமும் எனக்கு நினைவிலே இருக்கின்றது.

இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம், ஏதோ அரசியல் விகற்பங்கள் – அரசியலிலே ஒருவருக்கொருவரிடையே ஏற்பட்ட காழ்ப்புகள் – இவைகள் எல்லாம் தனிப்பட்ட வாழ்க்கையில் – அதைக்கெடுத்து விடக்கூடிய அளவிற்கு -தோழமைக்கு விரோதமாக ஆகிவிடக்கூடாது…,” என்றார் முதல்வர்.

பதிபக்தி இல்லாத ஜெயலலிதா! – கருணாநிதி சாடல்

April 17, 2010 by envazhi  
Filed under election

பதிபக்தி இல்லாத ஜெயலலிதா! – கருணாநிதி சாடல்

சென்னை : ‘பதிபக்தி இல்லாதவர் ஜெயலலிதா, என, முதல்வர் கருணாநிதி கடுமையாகக் குற்றம் சாட்டிப் பேசினார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மற்றும் ஒன்றியத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., – தே.மு.தி.க., – பா.ஜ., கட்சிகளைச் சேர்ந்த மூவாயிரம் பேர் நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.,வில் சேர்ந்தனர்.

அவர்களை வரவேற்று முதல்வர் பேசியதாவது:

இங்கே ஒரு பெரிய பையில் நீங்கள் ஏற்கனவே வாங்கிய உறுப்பினர்கள் அட்டைகள் எல்லாம் ஆயிரக்கணக்கில் வைக்கப்பட்டு அவைகள் எல்லாம் எனக்கு முன்னால் உள்ள மேஜையில் கொட்டப்பட்டது.

அப்படி கொட்டப்படும்போது அந்த பையிலே அடைந்து கிடந்த உறுப்பினர் அட்டைகள் கொடகொடவென்று இங்கே கொட்டின. நான் எண்ணிக்கொண்டேன். அடைபட்டுக் கிடந்தது அந்த அட்டைகள் அல்ல. என் எதிரே அமர்ந்திருக்கின்ற மூவாயிரத்திற்கு மேற்பட்ட உயிரினும் மேலான உடன் பிறப்புகளை அடைத்து வைத்து – அவர்கள் இன்றைக்கு விழிப்புற்று – தாங்கள் இருக்க வேண்டிய இடம் எது என்பதை உணர்ந்து, அறிந்து, தெரிந்து, தெளிந்து அண்ணா அறிவாலயத்திற்கு வந்துள்ளீர்கள். அதுவே மகிழ்ச்சி.

‘எம்.ஜி.ஆரை மதிக்கத் தெரியாதவர் ஜெயலலிதா. அதனால், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைகிறேன்’ என, அன்பு பேசினார்.

ஜெயலலிதா இப்போது தான் என்று இல்லை. எம்.ஜி.ஆர்., உடல் நலம் குன்றியிருந்த போதே, அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தன்னை அந்த பதவியில் அமர்த்தும்படி கடிதம் எழுதியவர் தான் ஜெயலலிதா.இங்கு ஏராளமான பெண்கள் உள்ளனர். உங்கள் சகோதரருக்கு, தந்தைக்கு, ஏன் கணவருக்கு உடல் நலம் குன்றினால், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் காளியம்மன், மாரியம்மன் போன்ற தெய்வங்களிடம் வேண்டுவர். இது தான் கிராமங்களில் உள்ள நடைமுறை. நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் செய்யும் நடைமுறை.

ஆனால், ஜெயலலிதா, தான் கணவராக வரிந்து கொண்ட, தான் தலைவராக வருவதற்கு காரணமாக இருந்த, சர்வாதிகாரத்துடன் கட்சியை நடத்த காரணமாக இருந்த எம்.ஜி.ஆர்., உடல் நலம் குன்றி இருந்த போது அவருக்காக பிரார்த்தனை செய்யாமல் அவரை பதவியில் இருந்து நீக்கி விட்டு, தன்னை அந்தப் பதவியில் அமர்த்தும் படி சொல்லும் அளவிற்கு பதிபக்தி இல்லாமல் இருந்தவர்.

அன்பு போன்ற எம்.ஜி.ஆர்., மீது விசுவாசம் கொண்டவர்களுக்கு இப்போதாவது விழிப்புணர்வு வந்ததே என்ற வரையில் மகிழ்ச்சி. இது வரை சாலையில் போகும்போதெல்லாம் அண்ணா அறிவாலயத்தைப் பார்த்துக் கொண்டுதான் சென்றிருப்பீர்கள். இனி அதன் உள் வந்து அமரலாம். உங்கள் அனைவரையும் உள் அன்புடன் வரவேற்கிறேன்…” என்றார் கருணாநிதி.

-என்வழி

எம்ஜிஆர், ரஜினி, விஜய்… அமீரின் இந்த வரிசை சரியா?

April 1, 2010 by envazhi  
Filed under Popcorn

எல்லா பெரிய படங்களும் சன் வசம்!

பெரிய பட்ஜெட், முக்கிய நடிகர்கள் நடித்தது என பார்த்துப் பார்த்துப் படங்களைப் பிடித்துப் போட்டுவிடுகிறது சன் பிக்ஸர்ஸ் நிறுவனம்.

இந்த ஆண்டின் முக்கியப் படங்கள் அனைத்துமே சன் பிக்சர்ஸ் பேனரில்தான் வருகின்றன. இந்த கோடையில் வரும் விஜய் நடித்த சுறா, சூர்யா நடித்த சிங்கம், ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கிடி… இந்தப் பட்டியல் பெரிது.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது மாதிரி வருகிறது சூப்பர் ஸ்டாரின் எந்திரன் – தி ரோபோ. சொல்லப் போனால் இதுதான் சன் பிக்சர்ஸின் முதல் நேரடித் தயாரிப்பு! கமல் படம் ஒன்றும் பேச்சு வார்த்தையில் உள்ளது.

அதே நேரம், சன் பிக்சர்ஸின் இந்த ஆதிக்கத்துக்கெதிரான முணுமுணுப்புகளும் பலமாகக் கேட்கத் தொடங்கிவிட்டன. தங்கள் படங்கள் தவிர்த்த வேறு படங்களுக்கு சன் தரப்பில் முற்றிலும் ஆதரவில்லாத நிலை இருப்பதாகப் புலம்புகிறார்கள் சிலர்.

விரைவில் இந்த விவகாரம் தயாரிப்பாளர் கவுன்சில் பஞ்சாயத்தில் வந்து நிற்கும் வாய்ப்பிருக்கிறது!

எம்ஜிஆர், ரஜினி, விஜய்… அமீரின் இந்த வரிசை சரியா?

திரையுலகில் ஒரு எம்ஜிஆர், அவருக்குப் பிறகு ரஜினி என்பதுதான் இப்போதைய நிலவரம். அந்த வரிசையில் விஜய்யையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த இடத்தை அவர் அடைய 50 படங்களில் நடித்துள்ளார். பெரும் போராட்டங்களைச் சந்தித்துள்ளார்…”

-சுறா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இதைச் சொன்னவர் இயக்குநர் அமீர். ஆனால் அவர் இப்படிச் சொன்னதை விழாவுக்கு வந்திருந்த விஐபிக்கள் சிலரே மறுத்தனர். ஒரு முன்னணி இயக்குநர், அதுவும் கமல்ஹாஸனுக்கு நெருக்கமானவர் தன்னைச் சுற்றி நின்ற மூன்று பத்திரிகையாளர்களிடம் இப்படிச் சொன்னார்:

“விஜய் அப்படி என்ன கஷ்டப்பட்டார் சினிமாவுக்கு வர? அவர் தந்தையும் சில பத்திரிகைக்காரர்களும் திட்டமிட்டு விஜய்க்கு இப்படியொரு இடத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். எம்ஜிஆர் – ரஜினி… அவ்வளவுதான் அந்த வரிசை. இவர்களுக்குப் பிறகு இன்னும் சூப்பர் ஸ்டார்களே உருவாகவில்லை.

இன்னொன்று ரஜினி இப்போதும் உச்சத்திலிருக்கிறார். அவர் யாரிடமாவது சொன்னாரா, ‘நான் ரிட்டயராகப் போகிறேன்… என் நாற்காலியை எடுத்துக் கொள்ளுங்கள் என்று!’ எனவே மேடையில் பேசுவதற்காக இப்படிச் சொல்லிவிடக் கூடாது! தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஒரு இடம் உள்ளது உண்மை. அது என்னவென்பதை இன்னுமொரு 20 படங்கள் வந்த பிறகு தெரிந்து கொள்ளலாம்…” என்றார்.

-என்வழி

வராத ரஜினி – கமல்… வந்திருந்த அஜீத் – விஜய்!

March 14, 2010 by envazhi  
Filed under Popcorn

வராத ரஜினி – கமல்…  வந்திருந்த அஜீத் – விஜய்!

மிழகத்தின் புதிய சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலக திறப்பு விழாவுக்கு வருமாறு ரஜினிக்கு நேரில் போய் அழைப்பு விடுத்திருந்தார் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி. கமலுக்கும் அழைப்பிதழ் கொடுத்திருந்தார்.

இருவரும் நிச்சயம் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில், ரஜினி – கமல் இருவரும் நிகழ்ச்சிக்கு வரவில்லை.

அஜீத் தன் மனைவி ஷாலினியுடன் வந்திருந்தார். விஜய்யும் பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்தார்.

பெரும்பாலும் தமிழ் திரையுலகமே திரண்டு வந்திருந்தது. பார்வையாளர் பகுதியில் திரைத்துறையினருக்கு பிரதான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

‘டல்’ ஸ்டாலின்!

புதிய சட்டப்பேரவை திறப்பு விழாவில் பெரும்பாலானோரின் கண்கள் துணை முதல்வர் முக ஸ்டாலின் மீதே பதிந்திருந்தது. விழாவுக்கு வந்த சிறிது நேரத்தில் அமைதியாக முன் வரிசையில் உட்கார்ந்துவிட்டார் அவர்.

பிரதமர் மற்றும் சோனியா காந்தி வந்தபோதும் அவர்களை வரவேற்கும் பகுதிக்கு ஸ்டாலின் செல்லவில்லை. வளாகத்தை ரிப்பன் வெட்டி பிரதமர் திறந்தபோதும் அவர் அமைதியாக பார்வையாளர் பகுதியிலேயே இருந்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர், சோனியா, பிரதமர் பேசும்போதும் சுவாரஸ்யமற்று பார்த்துக் கொண்டிருந்தார்.

அவருக்கு என்ன வெறுப்போ!

பாதுகாப்புக்கு மட்டும் ரூ 24 கோடி செலவு!

புதிய சட்டப்பேரவை வளாகத்தைத் திறக்க வந்த பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பாதுகாப்புச் செலவுக்கு மட்டும் செலவிடப்பட்ட தொகை ரூ 24 கோடிகள்.

நான்கு கட்டமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த பாதுகாப்பு ஏற்பாட்டின் ஒரு பகுதியாக எலக்ட்ரானிக்ஸ் சந்தை எனப்படும் ரிச்சி மற்றும் வாலர்ஸ் தெருக்கள் கிட்டத்தட்ட மூடப்பட்டன.

சக்கர நாற்காலிக்க தற்காலிக ஓய்வு தந்த முதல்வர்!

ன்றைய நாட்களில் முதல்வர் கருணாநிதி பெரும்பாலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தவண்ணம்தான் காணப்படுகிறார்.

விழா மேடைகளிலும் கூட சக்கர நாற்காலியிலேயே வந்தமர்ந்து பேசிவிட்டு புறப்படுவதைப் பார்த்தவர்களுக்கு ஒரு மாறுதலாக, அவர் நிற்பதையும் நடப்பதையும் பேட்டரி காரில் ஏறி தலைமைச் செயலகத்தை பிரதமர் மற்றும் சோனியாவுக்கு சுற்றிக் காட்டியதையும் பார்க்க முடிந்தது.

மேடைக்கும் நடந்து வந்த முதல்வர், தமிழ்த்தாய் வாழ்த்து – தேசிய கீதம் ஒலித்த போது தன்னிச்சையாக எழ முயற்சிக்க, ஓடிவந்து உதவினார் சண்முகநாதன்.

எம்ஜிஆருக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் – சோனியா!

புதிய சட்டப் பேரவையைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது இருமுறை அமரர் எம்ஜிஆர் பெயரைக் குறிப்பிட்டார்.

ராஜகோபாலாச்சாரியார், காமராஜர், சி சுப்ரமணியம், அண்ணாதுரை, எம்ஜி ராமச்சந்திரன் ஆகிய தலைவர்கள் இந்த தேசத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டவர்கள். அவர்களை எண்ணி தலைவணங்குகிறேன் என்ற பிரதமர், சத்துணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தவர் அமரர் எம்ஜிஆர். அவரது அந்த சிறப்பான திட்டத்தை இன்று இந்தியா முழுவதும் மேம்படுத்தி செயல்படுத்திவருகிறோம், என்றார்.

அவருக்கு முன் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தலைவர் காமராஜர், அமரர் எம்ஜிஆர், கலைஞர் நாட்டுப் பற்று மிக்க தலைவர்களால் சிறப்பு பெற்றது தமிழக சட்டப் பேரவை என்றார்.

எம்ஜிஆர் எனும் நேர்மையாளர்..!

February 6, 2010 by envazhi  
Filed under Videos


எம்ஜிஆர் எனும் நேர்மையாளர்..!

க்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் எத்தனை நேர்மையான தலைவராக, உள்ளத்தால் பொய்யாதொழுகிய நல்ல மனிதராகத் திகழ்ந்தார் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் 1974-ல் பிபிசி வானொலிக்கு அவர் அளித்த பேட்டி.

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடந்த திரைப்பட விழாவுக்கு போய்விட்டு, பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்குச் சென்ற புரட்சித் தலைவரிடம் பிபிசி தமிழ் நிருபர் எடுத்த பேட்டி இது.

எம்ஜிஆர் அப்போது அதிமுகவை தொடங்கி அரசியல் களத்தில் வெற்றிப் படிகளை நோக்கிச் சென்று கொண்டிருந்த நேரம். அப்போது அவரது தமிழ் அடையாளம் குறித்த பல்வேறு விமர்சனங்களை திமுகவினர் கடுமையான பாணியில் முன்வைத்துக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் உலகமே கேட்கப் போகும் ஒரு வானொலிப் பேட்டியில் தன் வாழ்க்கை வரலாற்றை ஐந்தே நிமிடங்களில் அவர் சொல்லியிருக்கும் விதம், அவர் நேர்மைக்குச் சான்று.

தான் அரசியலுக்கு உந்தப்பட்டதன் காரணம், உள்ளத்தாலும் உணர்வாலும் ஒரு தமிழனாக தனக்கிருந்த கடைமையை அவர் சொல்லும் விதம், கேட்கும் யாரையும் சிலிர்க்க வைக்கும்.

இந்த பேட்டியின் போது நேர்காணல் செய்த நபரின் குறுக்கீடுகளும் அதிகப்பிரசங்கித்தனங்களும் எரிச்சலூட்டினாலும், எம்ஜிஆர் அவர்கள், அதையெல்லாம் சற்றும் வெளிக்காட்டாமல் பொறுமையுடன் நிதானமாக எளிய தமிழில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அழகு… ஒரு தலைவராக உருவெடுக்கத் துடிக்கும் யாருக்கும் ஒரு பாடம்!

அமரர் எம்ஜிஆர் குரலை மீண்டும் கேட்ட போது மனம் 25 ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது. இந்த அனாசாரங்களிலிருந்து ஒதுங்கிப் போய் மீண்டும் அந்த நாட்களுக்கே திரும்பிவிட மாட்டோமா என்ற ஏக்கம் கூட தோன்றிவிட்டது…

குறிப்பு: எம்ஜிஆர் குரல் என்ற கூறிக்கொண்டு உளறிக் கொட்டும் மிமிக்ரி கலைஞர்கள் இந்த வீடியோவில் உள்ள அவரது அசலான அழகான குரலையும் கொஞ்சம் கேட்டுப் பார்க்கட்டும்!

குறிப்பு 2: சின்னக்குட்டி-யின் வலைப்பூவில்தான் இந்த வீடியோ சுட்டியைப் பெற்றோம்.  இதனை ஒரிஜினலாக யுட்யூபில் ஏற்றிய ஸ்ரீஎம்ஜிஆர்.காம் தளத்துக்கு நன்றி.

எம்ஜிஆர் தேடிய – பாடிய தலைவி நானே! – ஜெ

January 28, 2010 by envazhi  
Filed under General

எம்ஜிஆர் தேடிய தலைவி நானே! – ஜெ

சென்னை: அதிமுகவுக்கு தலைமை தாங்க எம்.ஜி.ஆர். தேடிய தலைவி நானே. அதனால் ராமன் தேடிய சீதை படத்தில், என்னைப் பார்த்து “திருவளர்ச் செல்வியோ! நான் தேடிய தலைவியோ!” என்று மிகத் தெளிவாக, என்னைப் பற்றி எம்.ஜி.ஆர். பாடியிருக்கிறார் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.

அதிமுக நிர்வாகிகள் 6 பேரின் இல்லத் திருமண விழா சென்னை அருகேயுள்ள வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடந்து. திருமணங்களை நடத்தி வைத்து ஜெயலலிதா பேசுகையில்,

மகிழ்ச்சிக்குரியது மண வாழ்க்கை. இது கடவுள் அளித்த வெகுமதி. மனிதர்கள் தனித்து வாழ முடியாது. எனவேதான், குடும்பம், நட்பு, உறவு என்ற பாசக் கயிற்றால் பிணைப்பட்டு வாழ்கிறோம்.

மணமக்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரிடத்திலும் ஒற்றுமையை கடைப்பிடித்து, விட்டுக் கொடுத்து, உறுதியுடன் வாழவேண்டும். இன்பமும், துன்பமும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. துன்பங்களை எதிர்கொள்வதும், வெல்வதும்தான் வாழ்வின் சுவை. அதுதான் வாழ்க்கையை வளப்படுத்தும்.

அண்மையில் சட்டப் பேரவையில் பேசிய நான், “ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே” என்று ‘பணத்தோட்டம்’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடிய பாடல் வரிகளை நினைவுகூர்ந்து பேசினேன்.

பேரறிஞர் அண்ணாவை மனதில் வைத்துதான் எம்.ஜி.ஆர். அவ்வாறு பாடினார். ஆனால் “தலைவன் இருக்கிறான்” என்று பாடியது தன்னைப் பற்றிதான் என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.

மேலும் “ஒரு தலைவி இருக்கிறார்” என்று எம்.ஜி.ஆர். பாடவில்லை என்றும் கருணநிதி குறிப்பிட்டுள்ளார். 1963ம் ஆண்டு நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எம்.ஜி.ஆர். என்னைப் பற்றி எவ்வாறு பாடியிருக்க முடியும்?

எனினும், என்னையே தலைவி என்று தெளிவாகக் குறிப்பிட்டு எம்.ஜி.ஆர். பின்னர் பாடினார். நானும், எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ‘ராமன் தேடிய சீதை’ என்ற படத்தில், என்னைப் பார்த்து “திருவளர்ச் செல்வியோ! நான் தேடிய தலைவியோ!” என்று மிகத் தெளிவாக, என்னைப் பற்றி எம்.ஜி.ஆர். பாடியிருக்கிறார்.

அதிமுகவுக்கு தலைமையேற்று, அவரது பணியை நான் தொடர வேண்டும் என்பதற்காகவே எம்.ஜி.ஆர். அந்த பாடலை பாடியுள்ளார்.

அதிமுக என்றும் பதினாறு!!

2011ல் அதிமுக இருக்காது என்று திமுகவினர் பேசி வருகின்றனர். 2011 வரட்டும். யார் வெல்லப் போகிறார்கள்? யார் இருக்கும் இடம் தெரியாமல் ஓடப் போகிறார்கள்? என்பதைப் பார்க்கத்தான் போகிறோம்.

அதிமுகவை அழிக்கக்கூடிய சக்தி, இன்னும் இந்த உலகில் தோன்றவில்லை. அதிமுக என்றும் பதினாறு. அதிமுகவை எந்தக்காலத்திலும், யாராலும் அழிக்க முடியாது.

தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சி அமைய அதிமுகவினர் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். அதிமுக ஆட்சி அமையும் நன்னாளை தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஆவல் விரைவில் நிறைவேறும்” என்றார் ஜெயலலிதா.

வள்ளலின் கையால் விருது… நிறைவேறாமல் போன ரஜினி ஆசை!

January 20, 2010 by envazhi  
Filed under ஃபிளாஷ்பேக்

ஊர்க்காவலன் வெற்றிவிழாவும் ரஜினியின் நிறைவேறாத ஆசையும்!

எம்ஜிஆரின் அன்னை சத்யபாமாவின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட சத்யா மூவீஸ் பேனரில் ரஜினி நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் ஊர்க்காவலன்.

இந்தப் படத்தின் வெற்றி விழாவில் ரஜினி விரும்பிய, ஆசைப்பட்ட ஒரு விஷயம் நடக்காமல் போனது… அது வள்ளல் எம்ஜிஆர் கையால் விருது பெறவேண்டும் என்பது.

பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவரும், மணிரத்னம், கதிர், பழ கருப்பையா போன்ற பிரபல டைரக்டர்களை தமிழில் அறிமுகப்படுத்தியவருமான டி.ஜி.தியாகராஜன், எம்.ஜி.ஆரைப் பற்றி அவரது 92வது பிறந்த நாளில், சில பசுமையான, சுவாரஸ்யமான விஷயங்களை நினைவு கூர்ந்திருந்தார், தினமலர் வாரமலரில். அதில், ரஜினி தொடர்பான இந்த செய்தியையும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கட்டுரை:

முன்னாள் தமிழக அமைச்சரும், எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக பணிபுரிந்தவருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகள் செல்வி தான் என் மனைவி.

என் தந்தை வீனஸ் கோவிந்தராஜ் மற்றும் ஆர்.எம்.வீ., இருவரும் நல்ல நண்பர்கள்.

எம்.ஜி.ஆர். 1974ல் அமெரிக்காவிற்கு வந்தார்.

“எம்.ஜி.ஆர்., அமெரிக்காவிற்கு வராரு, அவரை நல்லா கவனிச்சுக்கோ!’ என்று என்னிடம் டெலிபோனில் கூறினார் என் தந்தை. அப்போது, கலிபோர்னியா ஸ்டேட் பல்கலையில் நான் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருந்தேன்.

பெவர்லி ஹில்ஸ் பகுதியில், பெரிய ஓட்டலில் எம்.ஜி.ஆர். தங்கினார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மகள் கஸ்தூரி கிருஷ்ணன், அவர் கணவர் டாக்டர் கிருஷ்ணன் இருவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்தனர் (இந்த இருவருக்கும் படிப்பு தொடங்கி பல விஷயங்களில் சத்தமில்லாமல் பல உதவிகள் செய்தவர் எம்ஜிஆர்).

எம்.ஜி.ஆருக்குப் பிடித்த நான்- வெஜ் அயிட்டங்களை, மகிழ்ச்சியாக, சுவையாக செய்து கொடுப்பார் கஸ்தூரி. எல்லா உணவு வகைகளையும், ஓட்டலுக்கு எடுத்துச் சென்று எம்.ஜி.ஆருக்கு பரிமாறுவேன்.

எம்.ஜி.ஆர்., அவற்றை ரசித்து சாப்பிட்டதுடன், நாளைக்கு என்ன உணவு வேண்டும் என்று சொல்லி விடுவார். சாப்பாடு விஷயத்தில் ரொம்ப அக்கறை எடுத்துக் கொள்வார் எம்.ஜி.ஆர்.,

எம்.ஜி.ஆரையும், அவரது நண்பர்களையும் நான், டிஸ்னி லேண்ட், யுனிவர்செல் ஸ்டுடியோ போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். ஒரு சிறுவனின் உற்சாகத்தோடு, ஒவ்வொரு இடத்தையும், ரசித்துப் பார்த்து மகிழ்ந்தார்.

பிரபல ஹாலிவுட் படங்களில், முக்கியமான காட்சிகள், ‘டென் கமான்ட் மெண்ட்ஸ்’ படத்தில் மோசஸ் நடக்கும் போது கடல் இரண்டாக

பிரிவது போன்ற சூப்பர் ஹிட் காட்சிகள், எப்படி படமாக்கப்பட்டன என்பதை, அங்கு சுவையாக, விளக்கி, காண்பித்தனர். ஹாலிவுட் டில் தயாரிக்கப்படும் படங்களில், டெக்னிகல் முன்னேற்றத்தை, வளர்ச்சியை, ரசித்து வியந்தார் எம்.ஜிஆர்., எம்.ஜி.ஆரை அமெரிக்காவில் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றது எனக்கு பெரிய பாக்கியம், அரிய வாய்ப்பு, மறக்க முடியாத அனுபவம்.

தியாகராஜன் திருமணத்தில் புரட்சித்தலைவர்… உடன் அன்றைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி

பல ஆண்டுகள் கழித்து, எம்.ஜி.ஆரை மீண்டும் ஒருமுறை அமெரிக்காவில் என் மனைவியும், நானும் சந்தித்தோம். உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அமெரிக்கா வந்திருந்தார் எம்.ஜி.ஆர்., அவருக்கு ஆபரேஷன் நடந்து, பால்டிமோரில், ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார்.

ஜானகி அம்மாளுக்கும் இதய அறுவை சிகிச்சை முடிந்து இருந்தது. என் மனைவியும், நானும் அப்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தோம். எம்.ஜி.ஆருடன் பேச முயற்சித்தோம்; தொடர்பு கிடைக்கவில்லை. எங்களது நெருக்கமான உறவு, அங்கு தகவல் பெற்றவர்களுக்கு தெரியவில்லை.

ஆனால் அன்று மாலை, எம்.ஜி.ஆருடன் இருந்த தொழிலதிபர் பழனி பெரியசாமி, டெலிபோனில் அழைத்து, எங்களை உடனே எம்.ஜி.ஆர்., சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார்.

மறுநாள் விடியற்காலை நியூஜெர்சியிலிருந்து கிளம்பி, ஐந்து மணி நேரம் ரயிலில் பயணம் செய்து, வாஷிங்டன் நகரம் வந்து, பால்டிமோர் ஓட்டலுக்கு சென்றோம். அவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்ததால், அடுத்த அறையில் இருந்த ஜானகி அம்மாளுடன் பேசிக் கொண்டிருந்தோம்.

சிறிது நேரம் கழித்து,எங்களை உள்ளே அழைத்தார் எம்.ஜி.ஆர்., செல்வியும், நானும் அவர் காலில் விழுந்து கும்பிட்டோம். எங்களைப் பார்த்ததும் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு விட்டார். சில வார்த்தைகள் அவர் பேசியது, புரியாவிட்டாலும், ஜானகி அம்மா, விளக்கிச் சொன்னார்கள், நான், ‘1974ம் ஆண்டு இங்கு வந்த போது, என்னை நன்றாக கவனிச்சு, நிறைய ஹெல்ப் பண்ணினே, ரொம்ப சந்தோஷம்…’ என்று பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.

செல்வியிடம், ‘உங்க அப்பா (ஆர்எம்வீ) எப்போதும் என் நெஞ்சிலேயே இருக்காரு!’ என்று நெஞ்சைத் தொட்டுக் காண்பித்து, சொன்ன போது, எம்.ஜி.ஆரது கண்கள் பனித்தன. அதைப் பார்த்து செல்வியும் அழுதுவிட்டார். அந்த சமயம், எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் என் மாமனார் ஆர்.எம்.வீ., இடம் பெறவில்லை.

உள்ளே இருந்த செக்யூரிட்டியை வெளியே போகச் சொல்லிவிட்டு, கை நிறைய டாலர் நோட்டுகள் எடுத்து, ‘எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கோ!’ என்றார். நாங்கள்,’வேண்டாம்’ என்று எவ்வளவோ சொல்லியும், கேட்காமல், நிறைய டாலர்களை எங்களுக்குக் கொடுத்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில், அமெரிக்கா வந்து, அறுவை சிகிச்சை செய்து குணமாகிக் கொண்டிருக்கும் போதும் கூட, நாங்கள் கேட்காமல், பணம் கொடுத்தார் என்றால், இந்த வள்ளல் தன்மை, எம்.ஜி.ஆரை தவிர வேறு யாருக்கு வரும்… உணர்ச்சி மிகுந்தவராக, செல்வியை அருகே அழைத்து தலையில் முத்தமிட்டார். என்னை தோளில் தட்டிக் கொடுத்தார்.

இரு நாட்களில், நன்றாகக் குணமாகி சென்னைக்கு திரும்பினார் எம்.ஜி.ஆர்.

விமான நிலையத்திற்கு அருகே அவருக்கு பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை முடித்துக் கொண்டு தன் வீட்டுக்கு கூட போகாமல், கவர்னர் மாளிகை சென்று, கவர்னரிடம், ஆர்.எம்.வீ.,யை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப் பரிந்துரை செய்தார்.

லாஸ்ஏஞ்சலஸ் நகரில் கஸ்தூரி கிருஷ்ணன் வீட்டிற்கு நாங்கள் சென்றுவிட்டோம். அங்கு மாமா (ஆர்.எம்.வீ.,) போன் செய்து, தன்னை மீண்டும் அமைச்சரவையில் எம்.ஜி.ஆர்., சேர்த்திருப்பதைச் சொன்னார்; எங்களுக்கு மகிழ்ச்சி.

மூன்றாம் பிறை..

நான் தயாரித்த, ‘மூன்றாம் பிறை’ படத்திற்கு மத்திய, மாநில அரசு விருதுகள் பல கிடைத்தன. இயக்கம் பாலுமகேந்திரா. அதற்கான தமிழக அரசின் விருதை எனக்கு கொடுத்து, என் கைகளை குலுக்கி, பாராட்டுகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.

ரஜினியின் விருப்பம்…

சத்யா மூவீஸ் தயாரித்து, ரஜினி நடித்து 100 நாட்கள் ஒடிய, ‘ஊர்க்காவலன்’ வெற்றி விழாவிற்கு எம்.ஜி.ஆர்., தலைமை வகிக்க வேண்டும், அவர் வர வேண்டும் என்று மிகவும் விரும்பினார் ரஜினி.

எம்.ஜி.ஆரை சந்தித்து இது பற்றி பேசி ஒப்புதல் வாங்க ஆர்.எம்.வீ.,யின் மகன் தமிழழகனும், நானும் சென்றிருந்தோம். எம்.ஜி.ஆரும் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டு தேதியும் கொடுத்தார்.

ஆனால்-

அந்த தேதியில் அவர் இந்த உலகிலேயே இல்லை. 1987, டிசம்பர் 24ம் தேதி அவர் அமரராகிவிட்டார். அவருக்குப் பிறகு தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட ஜானகி அம்மாள், ஊர்க்காவலன், 100வது நாள் விழாவில் கலந்து கொண்டு,நினைவுப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார்.

தோற்றாலும் பரிசு தந்த வள்ளல்

எம்.ஜி.ஆருக்கு எப்போதாவது எதிர்பாராமல் நேரம் கிடைத்தால், என் தந்தை டி.கோவிந்தராஜ், சடையப்பச் செட்டியார் (இருவரும் திரைப்படத் தயாரிப்பாளர்கள்) நடிகர் எம்.என்.நம்பியார் ஆகிய நெருக்கமான நண்பர்களோடு, ராமாவரம் தோட்டத்து வீட்டில் சீட்டு ஆடுவார்.

சீட்டு ஆட்டத்தில் மற்றவர்கள் தோற்று, பணம் கட்டினால், ஆட்டம் முடிந்து கிளம்பும் போது, அவர்கள் கொடுத்த தொகையை விட அதிக பணத்தை, காரில் ஏறும் போது, திருப்பிக் கொடுத்து விடுவார். நண்பர்களை வயிறார, சாப்பிட வைத்து மகிழ்வார் எம்.ஜி.ஆர்.

எங்கள் சத்ய ஜோதி பிலிம்சின் பெயரை வைத்தவரே எம்.ஜி.ஆர்., தான். ‘உனக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். ஒரு படம் நானே பண்ணித் தருகிறேன், புதிய பேனரில் பண்ணு!’ என்று என் தந்தைக்கு எம்.ஜி.ஆர்., கடிதம் எழுதி, தன் தாயாரின் பேரில் சத்ய ஜோதி என்று கம்பெனிக்கு பெயரும் சூட்டினார்.

அரசியலில் ரொம்ப பிசியாகிவிட்டதால், படத்தில் அவர் நடிக்க முடியவில்லை. சத்ய ஜோதி பிலிம்ஸ், இதுவரை 14 படங்கள் தயாரித்து, நிறைய வெற்றிகளையும் கண்டுவிட்டது. என்னுடைய ஒவ்வொரு படமும் வெற்றி அடையும் போது, எங்கள் நிறுவனத்திற்கு பெயர் வைத்து, ஆசி வழங்கிய, மக்கள் திலகத்தை மனதில் நினைத்து நன்றி சொல்லி வணங்குகிறேன்…”

‘இதுபோல் ஒரு மனிதரை இனி தமிழகம் காணப் போவதில்லை!’

January 17, 2010 by envazhi  
Filed under நட்புடன்



‘இதுபோல் ஒரு மனிதரை இனி தமிழகம் காணப் போவதில்லை!’

எம்.ஜி.ஆர். – ‘புரிவது போல் இருக்கும் புதிர்’! இலங்கையில் பிறந்தவர். ஆனால், இந்த நாட்டைச் சுமார் 11 காலம் ஆண்டவர். அவ ரது நெருங்கிய உறவினர் என்போர் ஒரு கை விரல்களின் எண்ணிக்கைக்குள் அடங்கிவிடுவர்; ஆனால், இன்றைக்கும் கோடிக்கணக்கான இல்லங்களில் படமாய் இருந்து சிரிக்கிறவர்.

அவரைப்போல் ஆட்சிப் பீடம் ஏற திரைப் பட ஏணியைப் பிடித்தார்கள் சிலர்; திரைப் படத்தில் நல்லவர் வேடம் தாங்கினர் இன்னும் சிலர். ஆனாலும், அவரைப்போல் வெற்றி பெறவில்லை.

அந்தப் புதிர் மனிதரை நான் சந்தித்தது, திருப்பூருக்கு அவர் சரோஜாதேவியுடன் வந்தி ருந்தபோதுதான். கஜலட்சுமி திரைப்படக் கொட்டகையில் நடந்த கூட்டத்தில் பேசினார். கட்சியைக் கடந்த பேச்சு!

முரசொலி ஏட்டில் நான் பணியாற்றியபோது அவரது நெருக்கம், பெருக்கம் பெற்றது. ஆனால், 1971-ம் ஆண்டிலிருந்து அந்தப் பெருக்கம் சுருக்கம் ஆனது. தி.மு.க. ஆட்சி கவிழ்ந்து ‘மிசா’ சிறைச்சாலையிலிருந்து நான் வெளிவந்து அ.தி.மு.க-வில் சேர்ந்த பின்புதான் எம்.ஜி.ஆரை முழுமையாக உணரும் சூழ்நிலை தோன்றியது.

கலைஞர் தன்னைக் கட்சியிலிருந்து விலக்கியவர் என்ப தால் பிறவிப் பகை கொண்டவர்தான் எம்.ஜி.ஆர். ஆனால், அதே கலைஞரைப் பாராட்டவேண்டிய நேரத்தில் பாராட்டத் தவறியதில்லை அவர்.

திரளாக மக்கள் வெள்ளம்... மனுவாங்க சலிக்காத உள்ளம்!

தமிழகத்தில் ‘எங்கும் தமிழ்… எல்லாம் தமிழ்’ என்ற நிலையைக் கொண்டு வந்தவர் கலைஞர்தான் என்று ஒரு கூட்டத்தில் கூறினார்.

சென்னைக் கோட்டையில் முதலமைச்சராகக் கொடி ஏற்றியபோது, அந்தப் பெருமையை வாங்கித் தந்தவர் கலைஞர் என்று குறிப்பிட்டார்.

தனக்கு எதிரான கருத்து, தனது முடிவுக்கு எதிரான எண்ணங்கள் இவற்றைச் சந்திக்கிறபோது ‘தொட்டாற் சுருங்கி’க் குணம் அவரிடம் இல்லை. ஒரு போர் வீரனைப் போல் அவற்றைச் சந்திப்பார்.

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நேரம் அது. ”மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கோவை நகர் கோடீஸ்வரருக்குக் கொடுப்பதா? கொடி தூக்கிப் பாடுபட்ட கட்சிக்காரனுக்கல்லவா கொடுக்க வேண்டும்?” என்று நான் போர்க்கொடி தூக்கி, கட்சியை விட்டே விலகினேன். தமிழகம் முழுவதும் கடுமையாக அவரை விமர்சித்தேன்.

அப்போது கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சார்பில் ஒரு அறிக்கை விட்டார். ‘அடியாரைப் பற்றி யாரும் அ.தி.மு.க. மேடையில் தாக்கிப் பேசக்கூடாது’ என்று அந்த அறிக்கை கூறியது.

மக்களை தேடிப் போய் குறை தீர்த்த ஒரே தலைவன்!

அரசியல் சூறாவளி செய்துவிட்டுச் சில மாதங்களுக்குப் பிறகு அரசியலிலிலிருந்து ஒதுங்கி வாழ்ந்தேன். என் முகவரி எனக்கே மறந்துவிட்ட நிலை. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பி வரப் போகிறார் எம்.ஜி.ஆர். என்ற செய்தி வந்தது. அதோடு, அந்த வரவேற்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள எனது முகவரிக்கு அரசாங்க அழைப்பு வந்தது.

இதுபோல் ஒரு மனிதரை இனி தமிழகம் காணப் போவதில்லை – ஆயிரம் ஆண்டு அருந்தவம் இருந்தாலும், பல்லாயிரம் ஆண்டு பலகோடி நோன்பு நோற்றாலும்!

-அடியார்

நன்றி: விகடன் பொக்கிஷம்

ஜனவரி 17, புரட்சித் தலைவர் அவதரித்த திருநாள்

நான் முதல்வராக எம்ஜிஆர் முக்கிய காரணம்! – கருணாநிதி

January 11, 2010 by envazhi  
Filed under General

நான் கட்சித் தலைவராகவும் முதல்வராகவும் எம்ஜிஆர் காரணம் என்பதை மறக்க மாட்டேன் – கருணாநிதி

சென்னை: நான் திமுக தலைவர் ஆனதற்கும், முதல்வர் ஆனதற்கும் எம்ஜிஆர் ஒரு முக்கிய காரணம். அந்த நன்றிக்காக அவரை நான் கடைசிவரை மறக்க மாட்டேன் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடர் புதிய சட்டமன்ற வளாகத்தில் நடைபெறும், அங்கு தான் பட்ஜெட்டும் தாக்கலாகும் என்றும் கருணாநிதி தெரிவித்தார்.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு இறுதியாக முதல்வர் கருணாநிதி பதிலளித்துப் பேசினார்.

அவர் கூறுகையில், இந்த சட்டமன்றத்தில் கடைசியாக நடைபெறும் கூட்டத்தொடர் இது. ஒரு இடத்திலிருந்து வெளியேறி புதிய இடத்தில் குடியேறும்போது கடந்த கால வரலாறுகளை திரும்பிப் பார்ப்பதுபோல இந்த சட்டமன்றத்தின் நிகழ்வுகளை திரும்பிப் பார்த்து நல்லவற்றை எடுத்துக்கொண்டு விரும்பத்தகாத நிகழ்வுகளை மறந்து புதிய இடத்தில் மக்கள் நலனுக்காக பாடுபட வேண்டும்.

புதிய சட்டமன்ற வளாகப் பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருவதை அறிவீர்கள். எதிர்க்கட்சித் தலைவர் இங்கே பேசிவிட்டு சென்றபோது கடைசியாக எம்ஜிஆர் பாடிய ஒரு பாட்டை பாடிவிட்டுச் சென்றார்.

அவர் பேசியதற்கெல்லாம் நான் பதில் அளிக்க விரும்பவில்லை. ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ என்ற பாட்டை எம்ஜிஆர் என்னை மனதில் வைத்துத்தான் பாடினார்.

‘ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’ என்றுதான் கூறினாரே தவிர தலைவி என்று எம்ஜிஆர் கூறவில்லை. எனவே தலைவன் என்று அவர் என்னை கூறியதாகவே நான் எடுத்துக்கொள்கிறேன்.

எம்ஜிஆர் என்னுடைய 40 ஆண்டு கால நண்பர். என்னை திமுக தலைவர் ஆக்கியதற்கும் முதல்வர் ஆக்கியதற்கும் அவர் ஒரு முக்கிய காரணம். அந்த நன்றிக்காக எம்ஜிஆரை நான் கடைசிவரை மறக்க மாட்டேன், என்றார் கருணாநிதி.

புதிய சட்டமன்ற வளாகம் கட்டும் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் நடப்பு சட்டமன்றத்தில் நடந்த கடைசிக் கூட்டத் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

புரட்சித் தலைவர்… நெஞ்சில் அழியாத நினைவுகள்!

December 24, 2009 by envazhi  
Filed under Popcorn

புரட்சித் தலைவர்… நெஞ்சில் அழியாத நினைவுகள்!

புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு மக்கள் சூட்டிய பட்டங்கள் ஒன்றல்ல இரண்டல்ல… நாடறியும் இந்த உண்மையை. இன்றைய தலைமுறையினர் ரொம்பப் பேருக்கு தெரியாத ஒரு விஷயம்.. மத்திய அரசு கொடுக்க விரும்பிய ஒரு உயர்ந்த விருதை மக்கள் திலகம் மறுத்துவிட்டது.

1960-ம் ஆண்டு எம்ஜிஆருக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்க முடிவு செய்து, அவரிடம் தெரிவித்தது மத்திய அரசு.

ஆனால் பொன்மனச் செம்மல் அதை மறுத்துவிட்டார்.

காரணம் கேட்டபோது அவர் இப்படிச் சொன்னார்:

‘நான் ஒரு தமிழன். தமிழ் மொழியின் உரிமைக்காக குரல் கொடுப்பவன். ஆனால் இந்தி மொழியில் தரப்படும் பத்மஸ்ரீ என்ற விருது எனக்கு வேண்டாம்’ என்றார். மீண்டும் மத்திய அரசு அதிகாரிகள் எம்ஜிஆரிடம் தொடர்பு கொண்டபோதும், தன் நிலையிலிருந்து பின்வாங்கவில்லை அவர்.

திரைப்படத் துறையில் தான் இருந்த காலம் வரை பிறமொழிப் படங்களில் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தார் எம்ஜிஆர். எத்தனையோ பிற மொழிப் பட வாய்ப்புகள் வந்தும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

இன்னொரு பக்கம், அவர் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக ஆதிக்கம் செலுத்தி வந்த நேரத்தில், இந்தி மொழிக்கு எதிரான போராட்டங்களில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

அதே நேரம் அவரது படங்களுக்கு அண்டை மாநிலங்களிலும், ஜப்பான், மலேஷியா, சிங்கப்பூர், முக்கியமாக இலங்கையில் ஏகப்பட்ட வரவேற்பு  இருந்தது.  தமிழகத்துக்கு இணையாக, இலங்கையிலும் அவரது படங்கள் 100வது நாள் விழா கொண்டாடின.

னக்கு அறிமுகமில்லாத மனிதர்களிடம் பழக நேரும் போதெல்லாம், சட்டென்று கையை நீட்டி, “நான் எம்ஜி ராமச்சந்திரன், சினிமா நடிகர்” என்று ஆரம்ப காலங்களில் அறிமுகம் செய்து கொள்வாராம்.

ஆனால் அதன் பிறகு நடந்தது வரலாறு. அவர் பெயரைக் கூட சொல்ல வேண்டிய அவசியமில்லாமல் போயிற்று.

புரட்சித் தலைவர் என்றால் தெரியாதவர்களே இல்லை என்ற நிலை உருவானது.

தாய் சொல்லைத் தட்டாதவர் என்ற வார்த்தைக்கு சரியான இலக்கணம் மக்கள் திலகம்தான். தன் தாய் சொன்ன ஒரே காரணத்துக்காக சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளவில்லை அவர். அம்மா சொன்னால் அர்த்தமிருக்கும் என்ற அதீத அன்பு அவருக்கு.

அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே என்பதை அன்றே தனது செயலால் காட்டியவர் பொன்மனச் செம்மல். தாய்க்காக கோயில் கட்டி, தினமும் கோட்டைக்கு கிளம்புமுன் அம்மாவின் கோயிலில் விளக்கேற்றி வழிபட்டுவிட்டுத்தான் கிளம்புவார்.

ன்னிடம் உதவி கேட்டு வருபவர்களில் மாணவர்களுக்கும், முதியோர் – தாய்மார்களுக்கும் எப்போதும் முதலிடம் தருவார் மக்கள் திலகம். கோட்டையில் அவர் இருந்தாரென்றால் எந்த நேரத்திலும் தாமதமின்றி அவரைப் பார்த்து உதவி பெற முடியும். பாதுகாப்பு கெடுபிடி எதுவும் இருக்காது. நமக்கும் அப்படி இரண்டு நேரடி அனுபவங்கள்  உண்டு!

தினமும் காலையில் எட்டு மணிக்கெல்லாம் ராமாவரம் தோட்டத்துக்குப் போய் அவரைப் பார்ப்பதற்கென்றே எப்போதும் பெரும் கூட்டம் காத்திருக்கும். இவர்களுக்கு தினமும் காலை சிற்றுண்டி கட்டாயம் உண்டு, தோட்டத்தில்.

சைஞானி இளையராஜா பொதுவாக யார் காலிலும் விழுந்து ஆசி பெற்றதில்லை. “என் அம்மாவுக்குப் பிறகு நான் காலில் விழுந்து ஆசி பெற்றது மக்கள் திலகம் எம்ஜிஆரிடம்தான். அதுவும் இரண்டு முறை” என்கிறார் இளையராஜா.

தான் போகிற இடமெல்லாம் மக்களுக்கு தன் சொந்த பணத்தை கணக்கு பார்க்காமல் அள்ளித் தருவது எம்ஜிஆர் வழக்கம். இதற்கு எம்ஜிஆர் அளித்துள்ள விளக்கம்: “என்னை தங்கள் சொந்தக்காரனாக இந்த மக்கள் பார்க்கிறார்கள். சொந்தக்காரன் வீட்டுக்கு வரும்போது வெறுங்கையோடு வருவது நன்றாக இருக்குமா… இருக்காதே..!” என்று பதில் கூறியுள்ளார் ஒரு பேட்டியில்.

இன்று ‘எட்டாவது வள்ளல்’ நினைவு தினம்!

December 24, 2009 by envazhi  
Filed under Featured

இவர் போல இனி யாரு?

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு.”

இந்த நிலவுலகில் தனது நற்செயல்களால் நிலைத்த புகழ்பெற்ற ஒருவரை ஈரேழு உலகமும் போற்றும். தேவர்களுக்கும் ஞானியருக்கும் கூட அந்த மரியாதை கிடைக்காது.

-இது வள்ளுவர் வாக்கு.

ழுபதுகளின் இறுதி அது. அன்றைய தர்மபுரி மாவட்டத்தின் ஊத்தங்கரைப் பகுதியில் ஒரு கிராமம்.

திடீரென சுழல் விளக்கு பொருத்திய கார்கள் வர அந்தப் பகுதியே பரபரத்துப் போனது. பஸ்ஸைத் தவிர வேறு வாகனங்களை வெகு அரிதாகவே பார்த்திருந்த மக்கள். காரில் வந்தவர் முதல்வர் எம்ஜிஆர்!

சில நிமிடங்களுக்குள் மக்கள் திமுதிமுவென குவிந்துவிட்டனர். அவர்களுக்கெல்லாம் கையாட்டி, சிரிப்புடன் வணக்கம் தெரிவித்துக் கொண்டு வருகிறார் எம்ஜிஆர்.

இப்போது போல,  ஊருக்குள் வருகிற தலைவர்களை வேண்டா வெறுப்பாகப் பார்க்கும் காலமல்ல அது.

எம்ஜிஆர் என்பவர், ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினர் மாதிரிதான். மூதாட்டிகளுக்கு மகன், ஏழைக் குடும்பங்களின் தலைவன், பாசமிகு அண்ணன், வீட்டுக் கஷ்டத்தை ராமாவரம் தோட்டத்தில் போய் தயக்கமின்றி சொன்னால் அடுத்த நொடி தீர்வு தரும் ஆபத்பாந்தவனாக அவர் இருந்தார்… அதனால் கிராமத்து மூதாட்டிகள், ‘என் மகன் வர்றான்… வழிவிடுங்க’ என்று கூவிக் கொண்டே எம்ஜிஆருக்கு ஆரத்தி எடுத்த காலம்.

அந்த அன்பு வெள்ளத்தை விருப்பத்தோடே நிதானமாகக் கடந்து போனார் எம்ஜிஆர்.

ஊர் எல்லை தாண்டியதும், வயல்கள்… நடவு நடும் பெண்கள் கைகளிலிருந்த நாற்றுக் கட்டுகளை அப்படியே போட்டுவிட்டு தங்கள் அன்புக்குரிய தலைவரைப் பார்க்க ஓடி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் கார்களை நிறுத்தச் சொல்லிவிட்டார் பொன்மனச் செம்மல்.

சட்டென்று இறங்கியவர், வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வயல் வரப்பில் நடக்கத் துவங்கினார். எதிரே வந்த பெண்கள், விவசாயிகளைப் பார்த்து, “நான்தான் உங்களைப் பார்க்க வர்றேனே… போங்க உங்க இடத்துக்கு” என்று கூறியபடி நடந்தார்.

உடன் வந்த பாதுகாவலர்கள், அமைச்சர்கள் அவர் பின்னால் ஓடினர். சிலரால் வரப்பில் நடக்க முடியவில்லை. இவரோ வேகமாகப் போய், “நல்லா இருக்கீங்களா எல்லாரும்? உங்களுக்கு என்ன கஷ்டம்?” என்று பேசத் துவங்க, அடுத்த நொடி தங்கள் பிரச்சினைகளையெல்லாம் கொட்டித் தீரத்தனர். அவர்களின் முக்கியப் பிரச்சினை, குறைவான கூலி. ஒரு நாள் முழுக்க நடவுக்கு ரூ 3 மட்டும்தான் அன்றைக்கு கூலி. 8 மணிநேரம் கழுத்து நோக மண் சுமந்தால் 2 ரூபாய் 50 பைசா மட்டும்தான் தருவார்கள்.

அமைதியாக கேட்டுக் கொண்ட மக்கள் திலகம், உடன் வந்தவர்களிடம், பணம் எடுத்துவரச் சொல்லி ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ 100 கொடுத்தார். அன்று அது மிகப்பெரிய தொகை. திக்குமுக்காடிப் போனார்கள் மக்கள். “தைரியமா இருங்க.. நான் பார்த்துக்கிறேன்” எ்ன்று சொல்லிவிட்டுப் போனார்.

அடுத்த சில தினங்களில் குறைந்தபட்சக் கூலியாக ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியாக தினக்கூலி நிர்ணயிக்கப்பட்டது, முதல்வர் எம்ஜிஆர் உத்தரவின்பேரில்!

-என்வழி

டிசம்பர் 24, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நினைவு நாள்

எம்ஜிஆர் போஸ்டரை அகற்றச் சொன்ன ரஜினி!

November 6, 2009 by envazhi  
Filed under ஃபிளாஷ்பேக்

ப்ளாஷ்பேக்: எம்ஜிஆர் போஸ்டரை அகற்றச் சொன்ன ரஜினி!

பொதுவாக இன்றைக்கும் சரி, அன்றைக்கும் சரி… பெரும்பாலான நடிகர்கள் எம்ஜிஆர் அல்லது ரஜினியின் பட போஸ்டர்கள் அல்லது வீடியோ காட்சிகள் தங்கள் படங்களில் இடம்பெறும்படி பார்த்துக் கொள்வார்கள்.

MGR Rajini

மக்கள் மனங்களை வென்ற இந்த மகத்தான கலைஞர்களுக்கு தாங்களும் ரசிகர்கள்தான் என்று காட்டிக் கொள்வதன் மூலம் மக்களிடம் எளிதாகச் சென்றடையும் உத்தி இது. மேலும் படத்தில் காட்டப்படும் பெரிய நடிகர்களின் ரசிகர்களும் ஒரு சாஃப்ட் கார்னரோடு இந்தப் படத்துக்கும் ஆதரவு கொடுப்பார்கள் என்ற எண்ணத்தின் விளைவு இது.

அஜீத், விஜய், சூர்யா என எல்லோருமே எம்ஜிஆர் / ரஜினி முகத்தை தங்கள் படங்களில் காட்டாமல் இருந்ததில்லை.

ஆனால் ரஜினியோ தனது படம் ஒன்றில் எம்ஜிஆர் போஸ்டர் இடம்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகற்றச் சொல்லிவிட்டாராம். அந்த போஸ்டர் அகற்றப்பட்ட பிறகே குறிப்பிட்ட காட்சியில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அந்தப் படத்தின் தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் இப்படிக் கூறியுள்ளார், தான் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில்:

“ரஜினியுடன் படம் செய்வது ஒவ்வொரு முறை புதிய அனுபவமாகவே அமையும் எங்களுக்கு.

சகலகலா வல்லவன் படத்தில் சண்டைக் காட்சி ஒன்றில் சுவரில் ஒட்டப்பட்ட எம்ஜிஆர் படப் போஸ்டர் வரும். அந்தக் குறிப்பிட்ட காட்சியின்போது தியேட்டர்களில் ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாக இருக்கும்.

அந்த அதிகப்படியான வரவேற்பைப் பார்த்துவிட்டு, ரஜினியை வைத்து நாங்கள் எடுத்த பாயும் புலி படத்திலும் எம்ஜிஆர் போஸ்டர் வரும்படி காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

ஆனால், இந்தப் போஸ்டரை எடுத்துவிடுங்கள் என ரஜினி சொல்லிவிட்டார். அதை ஏன் வைத்தோம் என்று நாங்கள் விளக்கியபோது, அவரது கண்டிப்பு அதிகமானது.

“பாருங்க சரவணன்… என்னைப் பார்க்க விரும்புபவர்கள் என் படத்துக்கு வர வேண்டும். எம்ஜிஆர் என்ற பெரிய மனிதரின் புகழைப் பயன்படுத்தி எனக்குப் பாராட்டு கிடைக்கும்படி செய்வது நியாயமில்லை…” என்று கூறிவிட்டார். அந்த போஸ்டர் எடுக்கப்பட்ட பிறகே காட்சி படமானது…” என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தனைக்கும் அன்றைக்கு முதல்வராக இருந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்தான்!

குறிப்பு:  ‘சிவாஜி’ படத்தில் எம்ஜிஆர் – சிவாஜி வேடங்களில் சில நிமிடங்கள் தோன்றுவார் ரஜினி.

எம்ஜிஆர், சிவாஜி போன்ற சாதனையாளர்கள் மீதான தனது மரியாதையைக் காட்டும் விதத்தில்  அந்த வேடங்களை சிறப்பாக செய்திருப்பார்!

-என்வழி

‘மிக நெருக்கமானவர்களை ஆண்டவனே என அழைப்பார் எம்ஜிஆர்!’

October 16, 2009 by envazhi  
Filed under நட்புடன்

‘மிக நெருக்கமானவர்களை ஆண்டவனே என அழைப்பார் எம்ஜிஆர்!’

மீபத்தில் எம்ஜிஆரின் சிறப்புகளாக 25 விஷயங்களைப் பட்டியல் போட்டிருந்தது ஆனந்த விகடன் வார இதழ். இவற்றில் பல எல்லோருக்கும் தெரிந்த சிறப்புதான். என்றாலும் மனதுக்குப் பிடித்த மக்கள் தலைவரைப் பற்றி எத்தனை முறை, எத்தனை பேர் வாயால் கேட்டாலும் இனிமைதானே!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து விடுதலைப் போரை ஊக்கப்படுத்தியவர் எம்.ஜி.ஆர்., என்ற தகவலை இங்கே மீண்டும் பதிவு செய்கிறோம்.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு பெரிய தொகையை அவர் கொடுத்திருக்கிறாரென்றால் ஈழத் தமிழர்கள் மீது அவர் காட்டிய அக்கறையின் அளவைப் புரிந்து கொள்ளலாம்.

ஆயுத உதவி, ராணுவப் பயிற்சிக்கு உதவி, முகாம்கள் அமைத்துக் கொள்ள இடம் கொடுத்தது என பகிரங்கமாக அவர் செய்த உதவிகள் கொஞ்சமல்ல.

இப்படியெல்லாம் வளர்த்தெடுத்த விடுதலை இயக்கத்தை அழித்தொழித்த ராஜபக்சேவுக்கே பொன்னாடை போர்த்தி,  தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் பரிசில் பெறும் அவலத்தை என்னவென்று சொல்வது…

mgrvp

எம்ஜிஆர்-25:

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்… 25 மட்டும் இங்கே!

எம்.ஜி.ஆர். நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம்சதிலீலா வதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).

பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்த தாகவே இருக்கும். ‘உரிமைக் குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வரராவ் நடித்த தெலுங்குப் படம்!

எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி!

30ph1

எம்.ஜி.ஆர். நடித்த 50படங் களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும்!

விடுதலைப் புலிகளின்தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன்!

சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில்’ஹுக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம்!

mgr-devar

முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷூட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப் போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத் தார்!

‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்!

நம்பியாரும் அசோகனும்தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப் பார்!

எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா!

எம்.ஜி.ஆர் – கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது!

காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ் தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி, பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது!

797px-1mgr0011

நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் – மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷன் செய்த படங்கள்!

சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க. கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார்!

எம்.ஜி.ஆர். எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா!

தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான்… ‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்!’

‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை!

அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் – சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார்!

ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார்!31mgr1

ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே!’ என்றுதான் அழைப்பார்!

அடிமைப் பெண் பட ஷூட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர். குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்!

எம்.ஜி.ஆர். பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர்!

முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரி யலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம்!

அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார்!

‘நான் ஏன் பிறந்தேன்?’ – ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.

அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர்வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள்!

Related Posts with Thumbnails