முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

‘என்வழியில் எழுதினால் மட்டும் போதுமா?’ – கேள்வி பதில் -14

June 27, 2010 by envazhi  
Filed under Uncategorized

ஒரு வாசகர் கருத்தும் சில விளக்கங்களும்… – கேள்வி பதில் -14

ழம் தமிழ் எனும் பெயரில் கருத்தெழுதும் ஒரு நண்பர் தனது சமீபத்திய கருத்துரையில் இப்படிக் கூறியிருந்தார்:

//One small challenge to Vino (not sure whether you will publish this comment)

You are good on expose these news on seeman, suriya, vivek and asin.. it great… we understand your concerns and support for tamils and voice for them… It is all just in your site… why you can not go above that?

I found that you are one of the tamil cinema news reporter organization (some thing like) active member.. Why you could make move from tamil cinema media to show red card on their media to these people who gone SL and support Mahinda’s actions…If you can really do this small thing, then i really salute you…

And some more thing you could do on this.. such as you could get comments on south india tamil cinema union or who ever made statements earlier and now silent for these recent things which make every to go on track and keep up the words…

What i try to say is rather than just write in your site and expose to your readers and get just comments and fight with them.. you could show some thing above that… Looking forward to seeing your constructive actions which are really needed at this moment.. Pls//

திரு ஈழம் தமிழ்,

என்னைப் பற்றிய தனிப்பட்ட அல்லது துறை சார்ந்த விஷயங்களைக்கூட பொதுவாக பகிர்ந்து கொள்வதில்லை. பத்திரிகையாளனின் நதிமூலம், ரிஷி மூலம் வாசகர்களுக்குத் தேவையில்லாதது என்பதால்.

ஆனால் எல்லோருக்காகவும் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்பதால் இதை இப்போது எழுதுகிறேன்.

மூன்று பத்திரிகையாளர் அமைப்புகளின் செயற்குழுக்களில் உறுப்பினராக இருந்து கொண்டு என்னால் முடிந்த பல விஷயங்களைச் செய்து வருகிறேன். அதில் முக்கியமானது, நான் பணியாற்றும் நிறுவன வெளியீடுகளில் ஈழப் போராட்டத்துக்கு எதிரான விஷயங்கள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்வது. அதில் முழுமையாக வெற்றி பெற்றுள்ளதாக நம்புகிறேன்.

பத்திரிகையாளர்கள் அனைவரையும் ஒருமித்து குரல் எழுப்ப வைப்பதில் பெரும் சவால் உள்ளது. காரணம் என்னைப் போன்றவர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க முடியும். பணியில் சேரும்போதே அதற்கான உறுதியைப் பெற்றுக் கொள்கிறோம். ‘நான் இப்படித்தான். என் எழுத்தும் இப்படித்தான் இருக்கும்’ என்பதைச் சொல்லிவிடுகிறோம். (அதாவது நியாயத்தை முன்னிறுத்தும் விஷயங்களுக்காக. ஆனால் எனக்கு ரஜினியைப் பிடிக்கும் என்பதால், நான் பணியாற்றும் நிறுவனத்துக்கான செய்திகளில், கட்டுரைகளில் அவரைத் திணித்ததில்லை. நடுநிலை, நியாயம் என்னவோ அதையே முன்னிறுத்துகிறேன்..)

ஆனால் எல்லா நிறுவனங்களும் இந்த நிபந்தனைகளை ஏற்பதில்லை. ஏன்.. இன்னும் ஆண்டான்-அடிமை முறையில் நடத்தப்படும் பெரும் பத்திரிகைகளும்கூட இங்கு உள்ளன. இந்தப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் யாரும் எந்த பத்திரிகை அமைப்புகளிலும் உறுப்பினராகக் கூட இல்லை. மீறிச் சேர்ந்தால் வேலை போய்விடும். பத்திரிகைக்கு சுதந்திரம் உண்டு… பத்திரிகையாளருக்கு கிடையாது!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி தினத்தன்று, ஒரு சினிமா நிருபரை, அவர் ஒரு பத்திரிகையாளர் அமைப்பில் உறுப்பினராக சேர்ந்தார் என்பதற்காகவே பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்து, அதை விளம்பரமாகவும் வெளியிட்டது ஒரு பிரபல மாலைப் பத்திரிகை. இதுதான் இங்குள்ள நிலைமை. இதில் இவர்களை ஒன்று திரட்டிப் போராடுவது எத்தனை பெரிய சவால்…?

முன்னணியில் உள்ள நாளிதழ்களில் தினமணி குழுமம் மட்டுமே, தனது பத்திரிகையாளர்களை அவர்களுக்குரிய அனைத்து அமைப்புகளிலும் சேர உற்சாகப்படுத்துகிறது. ஆங்கிலப் பத்திரிகைகளிலும் நிலைமை பரவாயில்லை. பெரும்பாலான வார, மாதப் பத்திரிகைகள் ஆட்சேபிப்பதில்லை. என்றாலும், இன்றுவரை பத்திரிகைகள் என்றாலே நாளிதழ்கள்தான் என்ற தோற்றத்தை மாற்ற முடியவில்லையே. இந்த அடிப்படை சிக்கல் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. அதனால்தான் ஈழப் பிரச்சினை போன்ற உணர்வுப் பூர்வமான விஷயங்களில் பத்திரிகையாளர் அமைப்புகளின் முயற்சிகள் ஒரு சிறு குழு முயற்சியாக மட்டுமே நிற்கிறது.

இதில் முன்னணி நாளிதழ்களின் நிருபர்கள் சிலரை ஹம்சா போன்ற இலங்கையின் தூதர்கள் விலைக்கு வாங்குவதும் தொடர்கிறது. விலைபோகும் இவர்களைத் திருத்த முடிவதில்லை. சுட்டிக் காட்டத்தான் முடிகிறது!

இவர்களிடம் போய், குறிப்பிட்ட நடிகரைப் பற்றி எழுத வேண்டாம் என்றால் கேட்பார்களா… ஒரு உதாரணம்: ஈனப்பிறவிகள் என்று எல்லோரைாயும் சேர்த்துத் திட்டிய சூர்யாவையும், பத்திரிகையாளர் குடும்பப் பெண்களுக்கு பிரா – ஜட்டி பரிந்துரைத்த விவேக்கையும், சின்ன பிரா சின்ன ஜட்டிக்கு பரிந்துரைத்த ‘வாழும் பெரியார்’ சத்யராஜையும் பற்றி, நல்லதோ கெட்டதோ எந்த செய்தியும் எழுதக் கூடாது என்று பத்திரிகையாளர் அமைப்புகள் வலியுறுத்தின. யார் கேட்டார்கள்…?

‘படிக்கிறவங்க கேப்பாங்களே… எழுதியே தீரணும்’  என்று முடிவெடுத்தவர்கள்தான், தங்களையும் பத்திரிகையாளர் என்றே கூறிக் கொள்ளும் பத்திரிகை முதலாளிகள். இவ்வளவு மோசமான, வக்கிர எண்ணம் கொண்ட திரைக் கலைஞர்கள் பற்றி மக்களுக்கு என்ன சொல்ல வேண்டியிருக்கிறது? என்று குறைந்தபட்சம் யோசிக்கக் கூடத் தயாராக இல்லை.  வெறும் வியாபாரிகள் பத்திரிகை நடத்துவதில் உள்ள ஆபத்து இது.

எனவே, இவர்களைப் போன்றவர்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருப்பதை விட, ஒரு கருத்தை உருவாக்கி, அதை எரியும் பிரச்சினையாக விஸ்வரூபமெடுக்க வைத்து, இதுவரை ஒதுங்கி நின்றவர்களையும் அதற்குள் இழுப்பதுதான் சரியான உத்தி என்பது என்னைப் போன்றவர்களின் நிலைப்பாடு.

ஐஃபா போராட்டமே செத்துப் போன ஒன்று என சூர்யா கூறியதைப் பற்றி சீமான் அவர்களிடம் நேற்று இரண்டு மணிநேரம் விவாதித்துள்ளோம். இப்போது சீமான் தனது நிலைப்பாட்டிலிருந்து மாறியுள்ளார். (அதை விரைவில் விவரமாகத் தருகிறேன்.)

தடையை மீறி அசின் இலங்கை போனால் என்ன செய்வீர்கள்? என்று நடிகர் சங்க செயலர் ராதாரவி, பெப்சி தலைவர் விசி குகநாதன் மற்றும் நாம் தமிழர் தலைவர் சீமானிடம் நேரடியாகக் கருத்துக்கள் பெற்று முதலில் வெளியிட்டது நான்தான் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. இன்னொன்று அதை என்வழியில் எழுதக்கூட நமக்கு நேரம் கிடைக்கவில்லை என்பதாலேயே இங்கே சொல்கிறோம். இதுபோன்ற விஷயங்களில் என்னை முன்னிறுத்துவதும் தவறு. பிரச்சினைதான் முக்கியம்.

இதையெல்லாம் விட ஒரு முக்கிய விஷயம்… ஐஃபா விழா… அதற்கான அழைப்பிதழை ரஜினி வாங்கவில்லை என்ற சிறு நெருப்பை முதலில் பற்ற வைத்தது நான் எழுதிய செய்திதான். அதன் பிறகுதான் இந்த விவகாரமே போராட்டக் களத்துக்கு முன்னெடுத்துச் செல்லப்பட்டது. அதை சீமான் உள்ளிட்டோர் அறிவார்கள்.

இந்தத் துறையில் ஜாம்பவான்கள் என்று பீற்றிக் கொள்பவர்கள், ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு, லேப்டாப்பிலேயே ஈழப் பிரச்சினையை அலசுவார்கள்.. எங்காவது ஒஸ்தியான ஸ்பா சென்டரில், யாராவது ஒரு புள்ளியின் ஸ்பான்ஸர்ஷிப்பில் படுத்துக் கொண்டு, நெஞ்சில் ரத்தம் வடிவதாகக் கட்டுரை புனைவார்கள். இங்கிருக்கும் சில நடுநிலைப் பத்திரிகையாளர்களையும் இலங்கையின் ஆளும் வர்க்கத்துக்கு கூட்டிக் கொடுக்கும் பெரிய வேலையைப் பார்ப்பார்கள். ராஜபக்சேக்களுடன் கூடிக் குலவி பயணம் போகும் இவர்கள், மக்களை மக்களாகப் பார்த்தே பல காலமாகியிருக்கும். ஆனால் கொடுமை பாருங்கள்… இவர்களின் பத்திரிகைகளையே மக்கள் ஆர்வத்துடன் காசு கொடுத்து வாங்குகிறார்கள்.

என்னைப் போன்றவர்கள் அப்படி இல்லை. இவர்களோடு சமரசம் செய்து கொள்ளும் மனநிலையும் நமக்கில்லை!

என் எழுத்தை எனக்கான ஊடகத்தில்தான் தரமுடிகிறது… அதை முடிந்த வரை வெளியில் கொண்டு சொல்லுங்கள். அதன் தொடர்ச்சியாக ஒரு கருத்து உருவாக்கம் பெற வாய்ப்பிருக்கிறது!

உங்களுக்கு தேவையான பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். நன்றி.

-ஆசிரியர்

ஜெகத் கஸ்பர் நல்லவரா கெட்டவரா?- கேள்வி பதில்-8

October 23, 2009 by envazhi  
Filed under Questions

ஜெகத் கஸ்பர் நல்லவரா கெட்டவரா?– கேள்வி பதில்-8

ஜெகத் கஸ்பர் நல்லவரா கெட்டவரா? அதிர்வு இணையதளம் ஏன் அவரைக் காய்ச்சி எடுக்கிறது?

(பால் பழனி)

முதல் கேள்விக்கு ‘நாயகன்’ பாணி ‘தெரியலியே…’தான் பதில்!

kasperஎனவே அடுத்த கேள்விக்குப் போய்விடலாம்…

ஜெகத் கஸ்பர் ராஜ் நக்கீரனில் மறக்க முடியுமா? தொடரை ஆரம்பித்த புதிதில் தமிழீழம், விடுதலைப் புலிகள் பற்றிய எழுத்துக்களோடு, பிற அனுபவங்களையும் அவர் எழுதி வந்தார். பின்னர் இறுதிப் போரின் இறுதிக் கட்டமான மே 17-ம் தேதிக்குப் பிறகுதான் தொடர்ந்து பிரபாகரன் குறித்த கட்டுரைகளை அவர் தீவிரமாக எழுதத் துவங்கினார்.

பிரபாகரன் பேட்டி என ஆரம்பித்தவர், 80 அத்தியாயங்களுக்கு இந்தத் தொடரை இழுப்பதற்காக இலக்கில்லாமல் பல விஷயங்களைச் சுற்றி வளைத்து எழுதுவதாகவே தமிழுணர்வாளர்கள் நினைக்கத் தொடங்கினார்கள். இது மேலோட்டமான அவதானிப்புதான்.

ஆனால் ஜெகத் கஸ்பரின் உண்மையான முகம் என்ன என்பது இன்னும் பலருக்கு புலப்படவில்லை. பிரபாகரனை தேசியத் தலைவர் என்று உயர்த்திப் பிடிக்கும் இந்த மனிதருக்கு, இறுதி நாளில் நிகழ்ந்த துயரத்தில் ஏதோ ஒரு பங்கிருப்பதை புலம்பெயர் தமிழர்கள் உரக்கச் சொல்ல ஆரம்பித்துள்ளனர். இவரைப் போன்றவர்கள் பேச்சை நம்பித்தான் நடேசன், புலித்தேவன் போன்றோர் வெள்ளைக் கொடிகளோடு போய் சிங்களவனின் துப்பாக்கி குண்டுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள் என்ற உண்மையை கஸ்பரே சுற்றி வளைத்து ஒப்புக் கொள்கிறார்.

அந்த நாளில் சிங்களத்துக்கு உதவிய இந்திய அரசுக்காக, அல்லது இந்திய அரசின் சார்பில் இயங்கியவர்களுக்காக கனிமொழியுடன் இணைந்து சில வேலைகளைச் செய்துள்ளார் கஸ்பர் என்றும் கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் பிரபாகரனை இவர் தமிழீழத்தில் சந்தித்தது வெறும் 6 நிமிடங்கள் மட்டுமே என்றும், இவருக்கு பிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார் என்பதைத் தவிர வேறு தொடர்புகள் இல்லை என்றும் அதிர்வு கூறுகிறது. இந்த 6 நிமிடச் சந்திப்பை வைத்துக் கொண்டு, புலிகள் இயக்கத்துக்கே தான்தான் காட்பாதர் என்ற ரேஞ்சுக்கு கஸ்பர் பேசி, எழுதி வருவது ஏமாற்று வேலை என்பது அதிர்வின் வாதம்.

ஈழத் தமிழர்களுக்காக உண்மையான உணர்வோடு போராடி சிறைவாசம் அனுபவித்த நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்டவர்களை விமர்சிக்கையில் ‘விபச்சாரம்’ போன்ற வார்த்தைகளை கஸ்பர் பயன்படுத்தியதோடு, ஈழப் போராட்டத்தையும் பிரபாகரனையும் தவறாக வழிநடத்தியவர்கள் என அவர்களைக் குறிப்பிட்டுள்ளார். ‘ஈழப் போராட்டத்தை இந்தியாவின் காலடியில் வைக்கும் கஸ்பரின் முயற்சி பலிக்காததால் வந்த ஆத்திரத்தின் விளைவு இது’ என்கிறது அதிர்வு.

ஆனால் ஜெகத் கஸ்பரோ, அந்த அதிர்வு தளமே இலங்கை அரசின் ஏஜென்ட் என்று ஒரே போடாகப் போடுகிறார். அதற்கு பல விளக்கங்களை இந்த வார நக்கீரனில் ‘இணைய தளப் புல்லுருவிகள்’ என்ற தலைப்பில் தந்துள்ளார். பிரபாகரன் தன்னுடன் எவ்வளவு நேரம் பேசினார் என்பதற்கு வீடியோவுடன் விரைவில் ஆதாரம் தருவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் இது முறையான பதிலல்ல. லாவணி மாதிரிதான் தெரிகிறது. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘ உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா… எடுத்து விடட்டுமா?’ என்று மிரட்டுவது அருட்தந்தைக்கு அழகல்ல.

தன்னைச் சுற்றிய பல சந்தேகக் கேள்விகளுக்கு கஸ்பர் பதில் சொல்லித்தானாக வேண்டும்.

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது வேறு நடவடிக்கைகளில் சரியாக வரலாம். ஆனால் ஒரு இனத்தின் விடுதலைப் போரில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் தோழன், அவர்களை நசுக்கத் துடிக்கும் இந்திய அரசின் ஏஜென்ட்களான கனிமொழி, கார்த்தி சிதம்பரத்துக்கும் நண்பன் என்ற தனது நிலைப்பாட்டின் வெளிப்படைத் தன்மையை அவர் தெளிவாகச் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் இவருக்கும் ராஜபக்சேவுக்கு பொன்னாடை போர்த்திய திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது?

‘இந்தியாவின் உதவியோடு போர்நிறுத்தம் செய்து கொண்டிருக்க வேண்டும் புலிகள்’ என்று இப்போது சொல்கிறார் கஸ்பர்.

2008 மாவீரர் தின உரை தொடங்கி, போரின் இறுதிக் கணம் வரை ‘இந்தியாவே எமது நண்பன். இந்தியாவின் மூலம் போர் நிறுத்தம் வேண்டும்’ என்றுதானே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனும் கூறிவந்தார்கள். அதை இந்தியா குறைந்தபட்சம் செவிமடுக்கக் கூட தயாராக இல்லையே… மாறாக புலிகளை பயங்கரவாத இயக்கம் என்றுதானே கடுமையாகப் பேசினார்கள் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள்?

இறுதிநாளில், கஸ்பரும் சம்பந்தப்பட்ட அந்த சரணடைவு நிகழ்வில், அளிக்கப்பட்ட உறுதியை மீறி தமிழர் தலைவர்கள் கொல்லப்பட்டதற்கான பொறுப்பை யார் ஏற்பார்கள்?

கஸ்பர் கருத்து சொல்வது தவறல்ல… ஆனால் இங்கே அதோடு நிற்கவில்லை. அந்தக் கருத்து சொல்லலின் நீட்சி களப்பலியில் அல்லவா முடிந்திருக்கிறது!

இதற்கு மேல் எழுதினால் நம்மையும் ‘லிஸ்டில்’ சேர்த்துவிடுவாரோ என்னமோ!!

புதினம் இணையதளத்துக்கு என்னாச்சு?

(பால் பழனி)

னடாவை மையமாகக் கொண்டு இயங்கி வந்த தமிழ் இணையதளம் புதினம். தமிழீழத்தில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிய தமிழ் puthinam_com-200உணர்வாளர்கள் உடனடியாக நாடுவது ஆங்கிலத்தில் தமிழ்நெட், தமிழில் புதினம். இன்னும் பல தளங்கள் இயங்கினாலும், புதினத்துக்கு முதன்மையான இடமளித்து வந்தார்கள் பார்வையாளர்கள்.

இறுதிப் போர் நடந்த நாட்களில் புதினம் மற்றும் சகோதர தளங்கள் அளித்த செய்திகளே, ஈழத் தமிழர்களின் அவலங்களை உலகுக்குக் காட்டும் வாசலாக இருந்தன.

ஆனால் மே 17-ம் தேதிக்குப் பின் பெரும் நெருக்கடிக்குள்ளான புதினம் சில தினங்கள் மௌனித்தது. பிரபாகரன் பற்றிய செய்திகளை கவனமாக முதலில் தவிர்த்தவர்கள், பின்னர் அவர் ‘வீரமரணம்’ அடைந்ததாக செய்தி வெளியிட்டு தமிழ் மக்களின் அதிருப்திக்குள்ளாயினர். தொடர்ந்து புலிகள் இயக்கம் குறித்த சுயவிமர்சனம் தொனியிலமைந்த கட்டுரைகளும் கூட வெளிவந்தன. ஆனாலும் அக்டோபர் 16-ம் தேதி வரை புதினம் தனது பணியைத் தொடர்ந்தது.

இப்போது தனிப்பட்ட காரணங்களுக்காக புதினம் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஈழ ஆதரவு இணையமான தமிழ்நாதமும் நிறுத்தப்பட்டுவிட்டது. புதினம் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தையே இதற்கும் தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர் விடுதலைப் போராட்ட அமைப்புகளுக்கிடையிலான உரசல்கள், இலங்கை அரசு கொடுத்து வரும் நெருக்கடி, புலிகள் இயக்கத்தின் உறங்கு நிலை என பல்வேறு காரணங்கள் இதற்குப் பின்னணியாக சொல்லப்படுகின்றன.

ஆனாலும் முழு உண்மை என்னவென்பது இன்னும் தெரியவில்லை.

சரீ… என்வழிக்கு நான்கு நாட்களாக என்னாச்சு?

(மின்னஞ்சல், தொலைபேசியில் தொடர்ந்து கேட்ட நண்பர்களுக்காக…)

தைச் சொல்ல வேண்டும் என்று நாம் கருதவில்லை. காரணம், நமது வேலையில் அடிக்கடி இதுபோல நிகழும் கஷ்டங்களை பலரும் அறியும்படி logoசொல்லி சுயபச்சாதாபம் தேடிக் கொள்வதோ, அதை வைத்தே பிழைப்பை ஓட்டுவதோ நமக்கு இன்னும் கைவராத கலையாக இருக்கிறது. கடைசி வரை இது தொடர வேண்டும் என்பதே நம் நினைப்பு. அதனால்தான் சும்மா இருந்துவிட்டோம்.

நண்பர்கள் தொடர்ந்து கேட்பதால் சொல்ல வேண்டியதாகிவிட்டது.

என்வழி உள்ளிட்ட 20 தளங்களில் தொடர்ந்து வைரஸைப் பரப்பி வருகின்றனர் சிலர். உடனுக்குடன் அதைச் சரிசெய்து வந்தோம். தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு நமது தளம் உள்ளிட்ட 22 தளங்களை முடக்கிவிட்டிருந்தனர் அந்த நபர்கள். இவை அனைத்தும் ஒர் வழங்கியில் செயல்படுபவை.

இவற்றைத் திரும்பப் பெற முழுமையாக இரு தினங்கள் போராட வேண்டியதாகிவிட்டது. தளத்தை மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டுவர பலமணி நேரங்கள் ஆனது. தொல்லை இன்னும் தொடர்கிறது…

இந்தச் செயலில் ஈடுபட்டு வரும் நபரைக் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவரங்கள் பின்னர்…

-வினோ

‘ஒன்இந்தியா’வுடன் என்வழி…!

June 22, 2009 by envazhi  
Filed under Editorial, General


ஒன்இந்தியாவுடன் என்வழி…!

ணக்கம் நண்பர்களே…

ஒரு நிஜமான அங்கீகாரம் நமது தளத்துக்குக் கிடைத்துள்ளது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

www.oneindia.in இந்திய அளவில் 40 வது இடத்தில் உள்ள ஒரு மிகப் பெரிய செய்தி தளம் (உலக அளவில் இதன் அலெக்ஸா ரேங்க் 649). சர்வதேச அளவில் இதன் ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகளில் ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் புதுப்புது செய்திகளுடன் அப்டேட் ஆகும் முன்னணி இணைய தளம்.oneindia-logo

நாளொன்றுக்கு ஏறத்தாழ 1 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்ட இந்தத் தளம், தனது நடுநிலை செய்திகளுக்காக சர்வதேச அளவில் இணைய வாசகர்கள் மத்தியில் இந்தியாவின் குரலாகத் திகழ்கிறது.

ஒன்இந்தியா தளத்தின் ‘தட்ஸ்தமிழ்’ தான் உலகின் நெம்பர் ஒன் தமிழ் செய்தித் தளம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

தட்ஸ்தெலுங்கு, தட்ஸ் மலையாளம், தட்ஸ்கன்னடா மற்றும் தட்ஸ்இந்தி என இந்தியாவின் பிற மொழிகளிலும் முத்திரை பதித்து கடந்த 10 ஆண்டுகளாக இயங்கும் ஒரே இணைய தளம் ஒன்இந்தியா மட்டுமே. கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மிகச் சிறந்த மின்னஞ்சல் சேவைகளையும் வழங்குகிறது.

புதிய இணைய தளங்கள், ஒத்த கருத்துடைய தளங்களை கைதூக்கி விடுவதிலும் ஒன்இந்தியா மிகச் சிறந்த பணியாற்றுகிறது. வலைப் பதிவர்களையும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது.

இப்போது இந்த சிறப்புமிக்க தளத்தின் மொழிகள் பிரிவில் என்வழி.காம்-ஐயும் இணைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்துள்ளது.

மிகுந்த பரிசீலனைக்குப் பிறகே இந்த அறிவிப்பை அவர்கள் செய்துள்ளார்கள். சிபி, வெப்துனியா போன்ற தளங்களும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஒன்இந்தியா நிர்வாகம் நமக்கு அனுப்பியுள்ள இமெயில்…

Dear Sir…

Your link http://www.envazhi.com/ [ Envazhi ] can be found in the following categories:

Category Specific:

Internet > Portals > Language > Tamil

About Explore.Oneindia.in

Explore is the only directory in India that is actively being updated on a daily basis and has grown exponentially in numbers since it started in April 2006. The Explore directory is designed to maximize your website visibility across the World Wide Web by attracting visitors from various sources who are looking for a repository of useful websites.

Create the buzz – Mention your website inclusion in http://explore.oneindia.in either in your news article or on your blog. We are sure your readers will be equally excited to learn about it.

We aim to strengthen http://www.envazhi.com/ presence through the Explore OneIndia.in directory.

Regards:
Explore.Oneindia.in Team

இது தொடர்பாக ஒன்இந்தியா நிறுவனத்தின் சிஇஓ அவர்களும் நமக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இனி தட்ஸ்தமிழ் செய்திகளையும் என்வழியில் பெறலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது வாசகர்கள் அனைவருமே ஒன்இந்தியா அல்லது தட்ஸ்தமிழ் நியூஸ்லெட்டர்களை பெற்றுக் கொள்ளலாம். thatstamil-request@lists.oneindia -   என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி நியூஸ்லெட்டர்களைப் பெறலாம் (மறக்காமல் Ref. envazhi.com -ஐ குறிப்பிடவும்).

என்வழிக்கு இன்று கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்துக்கு நமது வாசகர்கள் மற்றும் நண்பர்களாகிய நீங்களே காரணம் என்பதால் இதனை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

தொடரும் உங்கள் ஆதரவுக்கு நன்றி.

அன்புடன்

-வினோ

ஆசிரியர்

என்வழி.காம்

கேள்வி உங்கள் வழியில்… பதில் ‘என்வழி’யில்! – பகுதி 1

April 25, 2009 by envazhi  
Filed under Questions


கேள்வி உங்கள் வழியில்… பதில் ‘என்வழி’யில்! – பகுதி 1

வணக்கம் நண்பர்களே…

இடையறாத பணிகள், தேர்தல், ஈழப் போர்ச் செய்திகளை தொகுக்க வேண்டிய வேலை என பல பணிகள் குறுக்கிட்டதால் சிறிய தாமதம்.

இந்தப் பகுதிகுறித்து அறிவிப்பு வெளியிட்டதும் கேள்விகள் உற்சாகமாய்  வந்தன. ஆனால் ஒரு வார தாமதம் ஏற்பட்டுவிட்டது.

இதுவரை 56 கேள்விகள் நமக்கு வந்துள்ளன. நிச்சயம் அனைவரது கேள்விகளுக்கும் பதில் உண்டு என்ற உறுதியை மட்டும் இப்போதைக்குத் தருகிறோம். இந்த வாரத்துக்கான கேள்விகளில் 2 கேள்விகளுக்கான பதில்களை மட்டும் ஒரு அறிமுகமாக இன்று தருகிறோம்.

மற்றவை நிச்சயம் நாளை…

எத்தனை கேள்வி-பதில்கள் வெள்ளிக்கிழமை இடம் பெறும்?

ஒருவரே எத்தனை கேள்வி வேண்டும் என்றாலும் கேட்கலாமா!

எது பற்றி வேண்டும் என்றாலும் கேட்கலாமா! (நாகரீகமாக)

(கிரி, __________)

அடடா… கெளம்பிட்டீங்களா… எப்படிப் பார்த்தாலும் இந்தக் கேள்வியைத்தான் முதலில் வைத்தாக வேண்டும் என்று திட்டமிட்டுக் கேட்டீங்களோ…

வாரம் 10 கேள்விகள். எதைப் பற்றியும் கேட்கலாம்… நாகரீகமாகக் கேட்கவில்லையென்றால் சிங்கப்பூருக்கும் ஆட்டோ வரும்!!

ஒரு பத்திரிகையாளராக சூப்பர் ஸ்டாரை பலமுறை, தனிப்பட்ட முறையிலும்கூட சந்தித்திருப்பீர்கள். அவற்றில் மறக்க முடியாததைக் கூறுங்கள்…

(கல்யாண், kals75@yahoo.com)

ஒரு முக்கியமான அனுபவத்தைச் சொல்வதற்காக உங்களது இந்தக் கேள்வியைப் பயன்படுத்திக் கொள்கிறேன். ரஜினியை வெறும் பார்வையாளனாக, ரசிகனாக, பத்திரிகையாளனாக மட்டும் நான் பார்க்கவில்லை.

1995-ம் ஆண்டு மாலை முரசு நாளிதழில் செய்தியாளராக- அதுவும் ரஜினி பீட் – பார்க்கிற நிருபராக என் பணி மாறியதிலிருந்து அவரை அடிக்கடி நிகழ்ச்சிகளில், பத்திரிகையாளர் சந்திப்புகளில் சந்திக்கும், பேசும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

அருணாச்சலம் படப்பிடிப்பிலும், பின்னர் பாபா படப்பிடிப்பிலும் நிறைய நேரம் இருந்து அவரது நடிப்பை நேரடியாகப் பார்த்து வியந்திருக்கிறேன்.

ஆனால் அப்போதெல்லாம் ஏற்படாத ஒரு நெகிழ்ச்சியான அனுபவம் இது.img016

பாபா படத் தோல்விக்குப் பிறகு, காவிரி விஷயத்தில் திரையுலகம் இரண்டாகப் பிளவுற்றிருந்த நேரம்.

‘இங்க வந்தா என்னை கன்னடக்காரன்னு சொல்றீங்க, பெங்களூர் போனா மகாராஷ்ட்ராக்காரன்னு சொல்றாங்க. நான் எங்கே போகட்டும், என்னை எங்கே போகச் சொல்றீங்க?’ என்று அதற்கு முந்தைய நாள் போட்கிளப் ப்ரஸ் மீட்டில் ரஜினி கேட்ட போது பல நிருபர்களே கண்கலங்கி விட்டதை, அவர்களில் ஒருவனாக இருந்து பார்த்ததால், அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் அவரை நேரில் பார்க்க தீவிர விருப்பம் கொண்டிருந்தேன்.

அடுத்த நாள் ரஜினி தன்னந்தனியாக உண்ணாவிரதம் அறிவிக்க, அவருக்கு பல்வேறு அமைப்புகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தன. அப்போது எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கப் போன குழுவில் நானும் இருந்தேன். அந்தக் குழுவுக்கு தலைவர் மூத்த எழுத்தாளர் விக்ரமன்.

அருணாச்சலா இன்னில் ஐந்து நிமிட காத்திருப்புக்குப் பின் ரஜினி அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அவரைப் பார்த்ததும், முந்தைய நாள் பிரஸ் மீட்டில் அவர் வேதனைப்பட்டதைக்  குறிப்பிட்டோம்.

‘நீங்க இந்த ஸ்டேட்டுக்கே ராஜா சார்… நீங்க ஏன் கலங்கறீங்க. யாரோ நாலுபேர் சொல்றதால நீங்க அந்நியப்பட்டுட மாட்டீங்க. எப்பவும் நீங்க எங்க ரஜினிதான்’ என்றார் விக்ரமன்.

அதற்கு ‘ஆண்டவன் இருக்கிறான்… ‘ என்றார் ரஜினி.

பின்னர் ஒவ்வொருவரிடமும் அவர்களைப் பற்றி விசாரித்த ரஜினி, என்னைப் பார்த்து, ‘நீங்க எப்போ ரைட்டரானீங்க?’ என்றார்.

‘பத்திரிகை எடிட்டர் சார் இப்போ!’ என்றார் உடன் வந்திருந்த நண்பர்.

‘ஓ.. ரிப்போர்ட்டராயிருந்து இப்போ எடிட்டராயிட்டீங்களா…குட்.. நல்ல ப்ரமோஷன்!’ என்றவரிடம் நான் பொறுப்பேற்றிருந்த பத்திரிகையைக் கொடுத்தேன். வாங்கிப் பார்த்தார். அதில்தான் பாபா விமர்சனமும் வெளியாகியிருந்தது.

பின்னர் ‘நீங்கள்லாம் முழு ஆதரவு தெரிவிச்சா போதும்!’ என்றவரிடம், ‘நாங்கள் நாளை முழுவதும் உங்கள் போராட்ட வேலைகளில் பங்கெடுத்துக் கொள்கிறோம். எங்களுக்கும் பொறுப்பு கொடுங்கள்’ என்றோம்.

ரஜினி அவர்கள், அடுத்த நாள் காலையில் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்துவிடச் சொன்னார். சரியாக 7.30 மணிக்கு அங்கே ஆஜராகிவிட்டோம். சிறிது நேரத்துக்குள் தமிழகமே திரண்டு வந்ததைப் போல அப்படியொரு கூட்டம்.

உண்ணாவிரதம் முடியும்வரை ஏற்பாட்டாளர் குழுவில் நாங்களும் இருந்தோம். கவர்னர் மாளிகையில் மனு கொடுத்துவிட்டு வெளியில் வந்த ரஜினி அவர்கள், மறக்காமல் அழைத்து, “இந்த சப்போர்ட்டை என்னிக்கும் மறக்க மாட்டேன். ரொம்ப தாங்க்ஸ்”, என்றார். ஒரு நெருக்கடியான நேரத்தில் அவருடனே இருக்கும் வாய்ப்பு கிடைத்ததில் உள்ளபடியே திருப்தியாக உண்ர்ந்தோம்.

உடனிருந்த நடிகர் சரத்குமார்,  ‘சரி…, இனிமே உங்க ஆபீஸ் ராகவேந்திரா மண்டபமா? பத்திரிகை அலுவலகமா?’ என்றார் ஜாலியாக.

குறிப்பு: ‘ஆஹா…நான் சூப்பர் ஸ்டாருக்கு நெருக்கமானவனாக்கும்’ என காட்டிக் கொள்ளவோ, ரஜினியை எனக்கும் தெரியும் என்று கூறி சுய விளம்பரம் தேடும் நோக்கத்திலோ இதை எழுதவில்லை.

அதற்காகத்தான், ரஜினியைச் சந்தித்தபோது எடுத்த ஒரு படத்தை இங்கே தந்திருக்கிறேன். இயல்பாகவே அதில் எனது முகம் மறைக்கப்பட்டிருந்தது ஒரு வசதி. மற்ற படங்களை பிறிதொரு சந்தர்ப்பத்தில் தருகிறேன்… காரணம், சொல்ல இன்னும் நிறைய உள்ளது!

* கவுண்டமணி என்னதான் பண்றார்?

* கருணாநிதி நல்லவரா கெட்டவரா?

* ஈழத்தமிழர்களி்ன் துண்பங்களுக்கு காரணம் விடுதலைப் புலிகளா?

* உங்களை மாதிரி ரஜினி வெறியர்கள் எப்போதான் திருந்துவீங்க…?

- இன்னும் இன்னும் பரபர கேள்விகளுக்கு பதில்… நாளை!

‘தலைவர் மனம் புண்படாமல் நடந்து கொள்ளுங்கள்!’

April 15, 2009 by envazhi  
Filed under Fans Activities

தேர்தல்: ரசிகர்களுக்கு ரஜினி தலைமை மன்றம் உத்தரவு!

க்களவைத் தேர்தல் 2009-ல் தனது நிலை என்ன என்பதைத் தெளிவாக ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினி தெரிவித்துவிட்டார்.

எந்த ரசிகருடைய தனிப்பட்ட விருப்பம் மற்றும் அரசியல் முடிவுகளிலும் தான் குறுக்கிட விரும்பவில்லை என்றும் ஒரு ரசிகர் என்ற முறையில் எங்கிருந்தாலும் தனது அன்பு உண்டு என்றும் ரசிகர்கள் சந்திப்பின்போதே ரஜினி தெளிவுபடுத்தியிருந்தார்.

தான் நேரடியாக அரசியலுக்கு வரும்போது, தனது ரசிகர்கள் எங்கிருந்தாலும் அழைத்துக் கொள்வேன் என்றும் அவர் குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.

இருந்தாலும் சில பத்திரிகைகள் தொடர்ந்து ‘ரஜினியின் வாய்ஸ்’ யாருக்கு என்று தொடர்ந்து எழுதி வந்தன. தினமலர் ஒரு சர்வே கூட எடுத்தது. அதில் 75 சதவிகித ரசிகர்களும் பொதுமக்களும், ரஜினி யாருக்கும் ஆதரவு தரக்கூடாது என்றே கருத்து கூறியிருந்தனர்.

இந்நிலையில், ரஜினி ரசிகர்களுக்கு தலைமை மன்றம் மூலம் வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

தலைவர் ரஜியின் உத்தரவின் பேரில் தலைமை மன்றப் பொறுப்பாளர் சுதாகர், இந்த உத்தரவை வழங்கியுள்ளார். இது உத்தரவுகூட அல்ல, ஒரு வழிகாட்டுதல் என்றுதான் பார்க்க வேண்டும்.

“தலைவர் ரஜினிகாந்த் தற்போது ‘எந்திரன்’ படப்பிடிப்பில் முழு ஈடுபாட்டுடன் உள்ளார். அவரது மனம் புண்படாதபடி செயல்படும்படி ரசிகர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தலைவர் ரஜினிகாந்தின் படத்தையோ, கொடியையோ யாரும் பயன்படுத்தக் கூடாது. ரசிகர்கள் தங்கள் விருப்படி வாக்களிக்கலாம், ஆனால் தலைவர் மனம் புண்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்” என ரசிகர்களுக்கு தலைமை மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமை மன்ற பொறுப்பாளர் சுதாகரே போன் மூலம் இந்தத் தகவலை ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுக்கும் அறிவித்துள்ளார்.

எனவே, நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ரசிகர்கள் அவரவர் விருப்பப்படி விரும்பும் கட்சிகளுக்கு வாக்களிக்கலாம். ஆனால் ரஜினியின் படத்தையோ, கொடியையோ யாரும் தேர்தலில் பயன்படுத்தக்கூடாது.

மன்றத்தின் பெயரை குறிப்பிட்ட எந்த கட்சிக்கும் சாதகமாகப் பயன்படுத்தவும் வேண்டாம்.

இந்த உத்தரவு குறித்து நாம் என்வழி.காம் சார்பில் தலைமை மன்றத்திடம் தொடர்பு கொண்டு விசாரித்தோம்:

நமக்கு தலைமை மன்றம் அளித்த பதில்:

இது பொதுவான உத்தரவுதான். தலைவர் இதனை உடனடியாக செய்யச் சொன்னதால் கடந்த சில நாட்களாக அனைவருக்கும் போன் மூலம் சொல்லி வருகிறோம். சிலர் நேரில் நம்மிடம் வந்தும் விசாரித்துவிட்டு ஆலோசனை பெற்றுச் சென்றுள்ளனர்.

இந்த உத்தரவின் பின்னணி, ரசிகர்கள் தேவையில்லாமல் எந்த சிக்கலிலும் மாட்டிக் கொள்ளக் கூடாது, தலைவருக்கு தேவையற்ற சங்கடத்தை உண்டு பண்ணிவிடக் கூடாது என்பதே. நம் ரசிகர்கள் இதைப் புரிந்து கொள்ளும் அளவுக்குப் பக்குவமானவர்கள் என்பதாலேயே, ஜஸ்ட் வாய்மொழியாகச் சொன்னால் போதும் என்று தலைவர் கூறிவிட்டார், என்று பதில் கிடைத்தது.

குறிப்பு: தங்கள் பெயரை தேவையின்றி பயன்படுத்துவதைக் கூட தவிர்க்குமாறு சுதாகர் உள்ளிட்ட மன்றப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொண்டதாலேயே, தலைமை மன்றம் எனக் குறிப்பிடுகிறோம்.

கவனிக்க… மன்றத்தின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி!

-வினோ

கேள்வி உங்க வழியில்… பதில் ‘என்வழி’யில்!

April 13, 2009 by envazhi  
Filed under Questions

வணக்கம் நண்பர்களே…

ரு நல்ல வலைதளத்துக்குரிய அனைத்து அம்சங்களுடன் என்வழி.காம் வரவேண்டும் என்பது நமது ஆவல். அதன் விளைவாக இந்த தளத்தில் மேலும் ஒரு புதிய பகுதியாக கேள்வி – பதில்களை அறிமுகப்படுத்துகிறோம்.

இந்தப் பக்கத்தில் ரஜினி தொடங்கி ராகவேந்திரர் வரை, சாதாரண செய்திகளிலிருந்து சரித்திர நிகழ்வுகள் வரை, சுனாமியிலிருந்து சும்மா தமாசு வரை அனைத்து விஷயங்கள் குறித்தும் அலசலாம்…

கேள்விகளை நீங்கள் envazhi@gmail.com மின்னஞ்சலுக்கோ அல்லது இதே பக்கத்தில் உள்ள கமெண்ட் பகுதியிலோ அனுப்பலாம்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று இந்தக் கேள்விகள் அதற்கான பதில்களுடன் வெளியாகும்.

இந்த கேள்வி பதில்கள் நமது மேதைமையைக் காட்ட அல்ல. எல்லா விஷயங்கள் குறித்தும் எழுதிவிடுவது சாத்தியமல்ல. ‘தெரிஞ்சது கையளவு; தெரியாதது உலகளவு’ என்ற உலக நியதிக்கு உட்படாதவர்களே கிடையாது.

ஒரு செய்தியை அல்லது கட்டுரையை வெளியிடும் போது, நாம் கவனிக்கத் தவறிய அல்லது எழுதுபவருக்கு எழாத சந்தேகங்கள் உங்களுக்குள் எழலாம். அவற்றுக்கான பதில்களை முடிந்த வரை பெற்றுத் தர முயற்சிக்கிறோம். அந்த வகையில் இது ஒரு பரஸ்பர கற்றல் முயற்சியே.

ஒரு எழுத்தாளரைவிட பத்திரிகையாளனுக்கு உள்ள கூடுதல் சிறப்பு, தகவல்களைப் பெறுவதில் உள்ள சுதந்திரம்தான். அந்த சுதந்திரத்தை அனைவருக்கும் பயன்படும் விதத்தில் உபயோகிக்கலாமே!

இனி உங்கள் கேள்விக் கணைகளைத் தொடுக்கலாம்!

குறிப்பு: உங்கள் புகைப்படங்களையும் இணைத்து அனுப்புங்கள். வலையுலக நண்பர்களும் உங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுமல்லவா!

குறிப்பு 2: கேள்வி – பதிலின் முதல் பகுதி வரும் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகும்.

நன்றி

ஆசிரியர்
என்வழி.காம்
envazhi@gmail.com

நாசா மறைத்த ‘பெரும் உண்மை’!!

March 28, 2009 by envazhi  
Filed under சும்மா தமாசு

‘நாசா மறைத்த உண்மை’!

“நிலவில் அமெரிக்கர்கள் காலடி வைத்ததைப் புகைப்படமாக

எடுத்து அனுப்பிய நாசா ஒரு பெரும் உண்மையை மறைத்து விட்டது…”

“என்ன உண்மை?”

“அந்த உண்மை மட்டும் தெரிஞ்சா இப்போ மாதவன் நாயர்

இஸ்ரோ மூலம் செயல்படுத்தவிருக்கும் சந்திராயன்

திட்டத்தையே கைவிட்டுட்டு சந்தோஷமா சிரிப்பாருன்னா பாத்துக்கங்க…”

“அட… அது என்ன அவ்வளவு பெரிய உண்மை… சீக்கிரம் சொல்லித் தொலைய்யா…”

“அட… அந்த உண்மையை என் வாயால எப்படிங்ணா சொல்லுவேன்…

நீங்களே பாருங்க!”

“இது நாசா அனுப்பிய படங்ணா…”

“இது நாசா ‘மறைத்த‘ அந்த மாபெரும் உண்மையைச் சொல்லும் படங்ணா…

சரிதானுங்ளா…!!”

கருத்து: என்வழி

படம்: ப்ரவீண்

Related Posts with Thumbnails