வணக்கம்!
வணக்கம்…!
ஒரு ரசிகனின் உலகம் சம்பந்தப்பட்ட ஹீரோவுடன் நின்றுவிடுவதில்லை. அதைத் தாண்டி அவர்கள் பல மட்டங்களிலும் இயங்க வேண்டியுள்ளது. இந்த உலக நிகழ்வுகளுடன் உறவாட வேண்டியுள்ளது.
எனவே நாம் அதிகம் நேசிக்கும் ரஜினி குறித்த பதிவுகளுடன், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மைத் தொடர்ந்தே வரும் சில முக்கிய நிகழ்வுகளையும் இந்த தளத்தில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினோம். அவை குறித்த அவர்களது கருத்துக்களை தனிப் பதிவுகளாகவே தரவேண்டும் என்பது நம் விருப்பம்.
அதன் விளைவுதான் இந்த தளம்.
தளத்தின் புதிய வடிவமைப்பு உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறோம். இன்னும்கூட சில மாறுதல்கள் வரவிருக்கின்றன. அவற்றுக்கு ஒரு முன்னோட்டம்தான் இப்போது நீங்கள் பார்ப்பவை. ‘நாம் பெற்ற அறிவின் பலன் நான்கு பேரைச் சென்று அடையும்போதுதான் அதற்கு மரியாதையே கிடைக்கிறது’, என்ற ரஜினியின் வார்த்தைகளை மனதில் கொண்டு பிற செய்திகளையும் படியுங்கள். கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள்.
கூடவே, நாம் பிறந்த இந்த மண்ணுக்காக, நம்மைச் சார்ந்துள்ள அல்லது நாம் சார்ந்துள்ள இனத்துக்காகவும் முடிந்த வரை குரல் கொடுப்போம். இல்லையேல் மனிதனாய் பிறந்ததன் அர்த்தம் இழந்தவர்களாவோம்.
மற்றபடி நமக்கு எந்த வணிக நோக்கமும் இல்லை.
வாருங்கள்… நட்பையும் அறிவையும் உணர்வையும் பகிர்ந்து கொள்வோம். அவ்வளவுதான்!
ஆசிரியர்
www.envazhi.com
envazhi@gmail.com










