முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

உலகம் இதுவரை காணாத துரோகத்துக்கு துணைபோன ஐநா!!

Saturday, June 6, 2009 at 10:23 am | 256 views

உலகம் இதுவரை காணாத துரோகத்துக்கு துணைபோன ஐநா!!

நியூயார்க்: நாம் வசிப்பது நாகரிக உலகில்தானா என்ற சந்தேகம் வருமளவுக்கு இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டது  ஐக்கிய நாடுகள் சபை.

un-security-council-meets-on-gaza

இனி இலங்கைப் பிரச்சினை மற்றும் இனப்படுகொலை குறித்து ஏதும் பேசுவதாக இல்லை என்ற அறிவிப்புடன் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான தனது கடைசிக் கூட்டத்தை முடித்துக் கொண்டுள்ளதுது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்.

அகதிகள் முகாமிலிருந்து 13 ஆயிரம் பேர் காணாமல் போனது தொடர்பாகவும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது தொடர்பாகவும் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், அப்படி எந்த விளக்கமும் தரவே இல்

லை.

ஈழத்தில் நடந்த இறுதிப் போரின்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று விவாதித்தது.

இலங்கையில் இடம்பெற்ற போரின் கடைசி நாட்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது குறித்தும் 13 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் அகதிகள் முகாமில் இருந்து காணாமல் போய் இருப்பது குறித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நேற்று கூட்டம் நடந்தது.

‘வில்லன்’களுடன் வந்த பான்!

இக்கூட்டத்தில் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தனது ஆலோசகர்களான விஜய் நம்பியார் மற்றும் கிம் வோன் சூ ஆகியோருடன் கலந்து கொண்டார். பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் மிஷல் மோன்டாஸும் அவருடன் சென்றார். ஈழத் தமிழர் படுகொலையில் அனைத்தையும் திசைமாற்றி விட்டவர்கள் இந்த விஜய், சதீஷ் நம்பியார்கள் என்பது நினைவிருக்கலாம். (இந்தியாவின் இன்னும் இரு மலையாள அதிகாரிகள் நாராயணன் மற்றும் மேனனும் தங்கள் பங்குக்கு இந்த விவகாரத்தில் தமிழர்களுக்கு குழி பறித்தனர்.)

கண்துடைப்புக் கூட்டம்!

நேற்றைய கூட்டத்தில் கூறப்பட்டபடி பான் கி மூன் இலங்கை இனப் படுகொலை தொடர்பாக விளக்கம் ஏதும் தரவில்லை.

‘இது ஒரு மிக சாதாரண கூட்டம் என்றும், அதிகாரப்பூர்வமாக இதில் எதுவும் விவாதிக்கப்பட மாட்டாது’ என்று ஏற்கெனவே கூறப்பட்டது நினைவிருக்கலாம்.

கூட்டத்திற்கு வந்த அமெரிக்க தூதர் ரோஸ்மேரி டிகார்லோவும் இதை உறுதி செய்தார். ‘இது சாதாரண கூட்டம்தான். இந்தக் கூட்டத்தின் முடிவில் எந்தவிதமான அறிக்கையும் வெளியிடப்பட மாட்டாது.

இலங்கை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எங்களுக்கு தெரிவிக்கவுள்ளனர், அவ்வளவுதான்’, என்றார்.

இக்கூட்டத்தில் இலங்கை தவிர வட கொரியா நிலைமை குறித்தும் உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதாம்.

பிற்பகல் 3.15 மணிக்கு கூட்ட அரங்குக்குள் போன பான் கி மூன், ஜப்பான் தூதர் டகாஷு, இலங்கை தூதர் ஆகியோருடன் மாலை 5 மணியளவில் கூட்டம் முடிந்து வெளியில் வந்தார்.

‘ராஜபக்சேவுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்!’

பான் கி மூனிடம் செய்தியாளர்கள் அகதிகள்முகாமிலிருந்து காணாமல் போனவர்கள் குறித்து கேட்டபோது,  “போர் பாதித்த பகுதியில் சிகிச்சை அளித்து வந்த டாக்டர்கள் பிடித்து வைத்திருப்பது குறித்து நான் அதிபர் ராஜபக்சேவுடன் பேசியுள்ளேன். இலங்கை வெளியுறவு அமைச்சரிடமும் பேசியுள்ளேன்” என்றார்.

அப்போது உடன் இருந்த இலங்கை தூதர், சம்பந்தப்பட்ட டாக்டர்களை சந்திக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு, இலங்கை சட்ட திட்டத்தின்படி அனுமதி தரப்படுகிறது என்றார்.

அகதிகள் முகாம்களிலிருந்து காணாமல் போன தமிழர்கள் குறித்தோ, கடைசி நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறித்தோ பான் கி மூன் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

நேற்றைய கூட்டத்தோடு இனிமேல் இலங்கை தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு விட்டது.

ஆக, மனித குலத்தில் நடந்த பேரவலம் என்று கூறப்பட்ட ஒரு துயரத்தை, வெறும் கண்துடைப்பு வார்த்தைகளோடு முடித்துக் கொண்டுள்ளது ஐநா.

‘சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பிடிவாதம் காரணமாக ஒரு இனப்படுகொலையே முழுமையாக மூடி மறைக்கப்பட்டுள்ளது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் மவுன சாட்சியாக நிற்கின்றன. இந்தியா உண்மையில் வல்லரசானால் அந்தப் பிராந்தியம் எந்த அளவு அதன் ஆதிக்க காலனியாக மாறும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு!’ என பிரிட்டிஷ் பத்திரிகைகள் கருத்து தெரிவித்துள்ளன.

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

8 Responses to “உலகம் இதுவரை காணாத துரோகத்துக்கு துணைபோன ஐநா!!”
  1. harisivaji says:

    makkale illamal vallarasu aakatum india

  2. palPalani says:

    இந்தியாவின் 2020 கனவில் எனக்கு மகிழ்ச்சி இல்லை, முடிந்தால் அது நிறைவேறாது என்பதில் மிக மகிழ்ச்சியடைவேன்!

  3. mahi says:

    oru inaththaiye kuzhi thondi pudhaithu vittu atharkku vetri vizhavaiyum kondaadum intha manitha arakkargalai dhandippathu yaar ????? raavana desaththavanai niyaayam ketpathu vendumaanaal thavaraaga irukkalam aanal intha raamar desaththil koodavaa oruvar kooda illai ????? soniaavin pazhi theerkkum padalathirkkaaga en inathaiye azhiththavargal oru naal bathil solliye aaga vendum. itharukku thunai pona anaivarukkum vegu seekkirame maranam vara ellam valla iraivanai piraarthikkiren.

  4. ஈ ரா says:

    வினோ சார்,

    என் ஆதங்கத்தை சில வரிகளில் வெளிப்படுத்தி இருக்கிறேன்…பாருங்கள்

    நன்றி

    அன்புடன்

    ஈ ரா

    http://padikkathavan.blogspot.com/2009/06/blog-post_3621.html

  5. ஈ ரா says:

    “குழல் கொடுமை யாழ் கொடுமை”

    குழல் கொடுமை யாழ் கொடுமை என்பர்
    தம்மக்கள் குரல் மறையக் காண்கின்றவர்!

    ஆண்மை இருந்தால் இறையே -
    இனியாவது நாங்கள்
    இறையாண்மைக்கு இரையாகாமல் காப்பாய்!

    அன்றோ ஒரு காலம் உண்டு!
    வனம் எல்லாம் வனப்புடனே நின்று!
    இன்றும் ஒரு ஞாலம் உண்டு
    இனம் மரிக்கக் காணாமல் கண்டு!

    ஒன்பதுதான் கிடைத்தது – இனி
    ஓய்வெடுக்கப் போகலாம்!
    இருபத்தெட்டு கிடைத்தது – இனி
    இலாக்காக்கள் கேட்கலாம்!
    ஒன்றுமே கிடைக்கவில்லை – இனி
    ஒப்பாரி வைக்க வேண்டாம்!
    தனியாகவே வந்துவிட்டோம்- இனி
    தமிழாவது மண்ணாவது?

    பாவிகளா -
    ஆதிமனிதனைப் போல்
    அர்த்தமில்லா ஊளையோடே
    இருந்து இருக்கலாம்!

    பாழாய்ப்போன மொழியை நம்பாத
    ஊமை சகோதரர்களே உங்களைப் பார்த்துப்
    உண்மையிலேயே பொறாமைப் படுகிறோம்!
    ———-
    ———–
    ——-

    ஈ ரா
    _________________
    நண்பர் ஈராவின் இந்தக் கவிதையை தனி பதிவாகவே தந்துள்ளோம்.
    http://www.envazhi.com/?p=8728
    அவருடைய பதிவுகள் முழுவதையும் படிக்க:
    http://www.padikkathavan.blogspot.com

    -Editor

  6. Manoharan says:

    இலங்கை மீது நீண்ட நாட்களாக அமெரிக்காவும்,சீனாவும் கண் வைத்துள்ளன. பிரபாகரன் இருந்தவரை ஒன்றும் செய்யமுடியவில்லை. இப்போது சீனா காய் நகர்த்த தொடங்கிவிட்டது. எதிர்காலத்தில் நம்மைவிட பலமுள்ள‌ சீனாவிடம்தான் இலங்கை நட்பு பாராட்டுமே தவிர,இந்தியாவிடம் என்றைக்கும் பணியாது.பிராந்திய வல்லரசாகும் கனவு இந்தியாவுக்கு என்றைக்குமே பலிக்கப்போவதில்லை. மாறாக சீனா அந்த இடத்துக்கு வந்துவிடும். நான்கு மலையாளிகளும்,ஒரு சீக்கியனும்,ஒரு இத்தாலிக்காரியும் தமிழனை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு தங்கள் தலையிலேயே மண்ணை வாரிப்போட்டுக்கொண்டார்கள்.மேற்கே பாகிஸ்தான்,வடக்கே சீனா,கிழக்கே வங்கதேசம் என்று எதிரிகள் புடை சூழ இருந்த இந்தியா,விடுதலைப்புலிகளை ராணுவரீதியாக சிறுமைப்படுத்தியதன் மூலம் தெற்க்கேயும் எதிரியை உருவாக்கிவிட்டார்கள். இனிமேல் சீன ஆதிகம் எப்படி பரவும் என்பதை இந்தியா உணரப்போகிறது.

  7. Kesava says:

    மனோகரன் உங்கள் விமர்சனத்தை ௱% ஆமோதிக்கிறேன் …இது ஜீரணிக்க கஷ்டமாக இருந்தாலும் யதார்த்தமான உண்மை…மேற்கே பாகிஸ்தான்,வடக்கே சீனா,கிழக்கே வங்கதேசம் என்று எதிரிகள் புடை சூழ இருந்த இந்தியா,விடுதலைப்புலிகளை ராணுவரீதியாக சிறுமைப்படுத்தியதன் மூலம் தெற்க்கேயும் எதிரியை உருவாக்கிவிட்டார்கள். இனிமேல் சீன ஆதிகம் எப்படி பரவும் என்பதை இந்தியா உணரப்போகிறது.

  8. Kesava says:

    மனோகரன் உங்கள் விமர்சனத்தை 100% ஆமோதிக்கிறேன் …இது ஜீரணிக்க கஷ்டமாக இருந்தாலும் யதார்த்தமான உண்மை…மேற்கே பாகிஸ்தான்,வடக்கே சீனா,கிழக்கே வங்கதேசம் என்று எதிரிகள் புடை சூழ இருந்த இந்தியா,விடுதலைப்புலிகளை ராணுவரீதியாக சிறுமைப்படுத்தியதன் மூலம் தெற்க்கேயும் எதிரியை உருவாக்கிவிட்டார்கள். இனிமேல் சீன ஆதிகம் எப்படி பரவும் என்பதை இந்தியா உணரப்போகிறது.

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)