நாட்டாமை பேசும் நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்! – விகடன் சவுக்கடி
Friday, June 5, 2009 at 1:08 pm | 234 views
நாட்டாமை பேசும் நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்! – விகடன் சவுக்கடி
கொத்துக் கொத்தாக யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டது எத்தனை நிஜமோ… அத்தனை நிஜமானதுதான் பல்லாயிரம் தமிழர்களின் துடிதுடித்த மரணமும்கூட! 
இந்த மரணங்களுக்கு ஒரு நியாயமான நீதி விசாரணை கட்டாயம் தேவை. இதைச் செய்யத் தவறினால் நாட்டாமை பேசும் நாடுகள் எல்லாம் நாளை வரலாற்றின் முன் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கும் என்று ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆனந்த விகடனின் இன்றைய தலையங்கம்:
விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் குண்டு மழை பொழிந்த முள்ளிவாய்க்கால் இறுதித் தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள் சுமார் 20 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா. தாக்கல் செய்த இரகசிய அறிக்கையை ஆதாரம் காட்டி, ‘மனித உரிமை மீறல் குறித்த விசாரணை நடக்க வேண்டும்’ என்று ஒரு சில நாடுகள் கோரிக்கை வைத்தன.
“புலிகளை நாங்கள் வென்றதைப் பொறுக்க முடியாமல் இப்படிக் கேட்கிறார்கள். அப்படி எந்த விசாரணையும் தேவை இல்லை” என்று சர்வ சாதாரணமாக அந்த கோரிக்கையைப் புறக்கணித்திருக்கிறது இலங்கை அரசு!
போருக்குத் துளியும் தொடர்பு இல்லாத பொதுமக்கள் வாழ்ந்த பகுதிகளில் இப்போது அணிவகுத்துக் காட்சியளிக்கும் சவக்குழிகளைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள், அடிவயிற்றில் அமிலத்தைப் பாய்ச்சுகின்றன.
முகாம்கள் என்ற பெயரில் திறந்தவெளி சிறைச்சாலைகளில் அடைத்துவைக்கப்பட்டு இருக்கும் மிச்சம் மீதித் தமிழர்களின் நிலை குறித்து வரும் தகவல்களோ ரத்தக் கண்ணீரைப் பெருக்கெடுக்கச் செய்கின்றன.
யுத்தம் என்ற பெயரால் அங்கே என்னதான் நடந்தது என்பதை உலகத்தின் பார்வைக்கு வெளிப்படையாக முன்வைக்க இப்போதும்கூட இலங்கை அரசு தயங்கும் மர்மம் என்னவாக இருக்க முடியும்?
மனித உரிமைகள் பற்றிய முழுமையான விழிப்பு உணர்வு ஏற்படாத இரண்டாம் உலகப் போர் காலத்திலேயே, ஹிட்லர் ஆட்சியின் மிருக வெறிச் செயல்களை விசாரித்துத் தண்டிக்க சர்வதேச அளவில் நாடுகள் திரண்டதை மறந்துவிடக் கூடாது.
சண்டித்தனத்தின் உச்சத்துக்கே போய் கடைசியில் தற்கொலை செய்துகொண்டு ஹிட்லர் செத்துப்போனாலும், அவன் தளபதிகளை எல்லாம் சட்டத்தின் முன் நிறுத்திய ‘நூரம்பர்க் விசாரணை’ போலவே, இப்போதும் ஒரு சர்வதேச விசாரணைக்கான தேவை வந்திருக்கிறது!
கொத்துக் கொத்தாக யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டது எத்தனை நிஜமோ… அத்தனை நிஜமானதுதான் பல்லாயிரம் தமிழர்களின் துடிதுடித்த மரணமும் கூட!
கட்டாயம் தேவை – ஒரு சர்வதேச விசாரணை… உரியவர்களை இதற்கு உடன்படச் செய்யாவிட்டால்… நாட்டாமை பேசும் நாடுகள் எல்லாம் நாளை வரலாற்றின் முன் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளது விகடன்.












… INTHA LIST La INDIA um Unda..?
சீனாவின் முத்துமாலை திட்டம் பற்றி இந்தியா அலட்டிக்கொள்வதாக இல்லை. ஆனால் ஈழத்தமிழனை பழிவாங்குவதில் மட்டும் பெரிய சாதனை செய்துவிட்டார்கள்!
—
சின்ன தகவல்: http://tvs50.blogspot.com/2009/06/type-eveywhere-in-tamil.html இந்த தளத்தின் தகவல் மூலம் தமிழில் இங்கேயே டைப் செய்தேன்!
இந்தியா ஏன் இன்னும் இலங்கைக்கு பாதுகாக்கிறது? அதுவும் இவ்வளவு விலைகொடுத்து?
நண்பர்களே,கட்ச தீவில் சிங்கள அரசு அங்குள்ள காடுகளை அழித்து கடற்படை தளம் அமைப்பது இந்தியாவுக்க்கு தெரியுமா?அந்த இடம் இந்திய கொடுத்தது.
It seems nobody outside Tamilnadu bothers about Ealam Tamils. Why this mentality ? As a Tamilian Manirathnam brought the Kashmir Isssue and Bombay Violence in Celluloid. But even he also ignored the real sufferings of Tamils in Kannathil Muththamilttal. I have read one interview of Prabhakaran telling that Manirathnam did not portray enough about Ealam. Mani made us to feel the pain of Kashmiris and Mumbaikars. But who will make the Indans to feel the pain of Ealam Tamils ? Except our Politicians it seeems everyody is concerned about Ealam tamils. But there is no symptoms of a revolution. But in 1983 there was so much of support for Ealam tamils. The photographs of the sufferings of Tamils in the hands of Sinhalese were kept everywhere including Busstops, kalyana mandapams etc. But now there is no such thing now. Even Tamil Electronic media is ignoring this. But then there was an MGR to support. Now ……..?
This is very shameful act by India.Tamil eelam people never ever forget about this.
ஈழத்தில் நடந்த இனவெறி படுகொலைகள் நவீன யுகத்தையே எள்ளி நகையாடுவது போல் உள்ளது…
நாட்டாமை நாடுகள் எப்போதோ தீர்ப்பை ஒருபக்கம் மாத்தி சொல்லி விட்டன… இவர்கள் தலைகுனிய மாட்டார்கள்.. ஏனெனில் அவர்களுக்கு முன்னாள் காதையும் கண்களையும் மூடிக்கொண்ட சொந்த சகோதரன் நாடு தலை குனியாமல், முனகல்களையும் அழுகைகளையும் வைத்து அப்பாவிகளை காட்டிக் கொடுக்கிறது….
சொந்தக்காரனே சோலியை முடிப்பதால் நாட்டாமைகள் நகர்ந்து விட்டார்கள்… இதுதான் உண்மை…
ஈ ரா