முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

‘பிரபாகரன் மனைவி குழந்தைகளை கொன்றதாக நாங்கள் சொல்லவே இல்லையே!’ – ராணுவம்

Friday, May 22, 2009 at 11:07 am | 677 views

‘பிரபாகரன் மனைவி குழந்தைகளை கொன்றதாக நாங்கள் சொல்லவே இல்லையே!’  – ராணுவம்

கொழும்பு: பிரபாகரன் மனைவி மற்றும் குழந்தைகள் இறந்துவிட்டதாக நான் எங்கே சொன்னேன்… அப்படியெல்லாம் இல்லை. அது பொய்யான தகவல்”, என்று பிளேட்டைத் திருப்புகிறார் இலங்கை ராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார. udaya-nanayakkara

வன்னிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும், அவரது மனைவி மதிவதனி, குழந்தைகள் பாலச்சந்திரன் மகள் கொல்லப்பட்டதாகவும் கடந்த இரு தினங்களாக ராணுவம் கூறி வருகிறது. அதனை அவர்களது இணைய தளத்திலும் வெளியிட்டிருந்தனர். ஆனால் இவை பொய்த் தகவல்கள் என்றும், மதிவதனி மற்றும் குழந்தைகள் பத்திரமாக வெளிநாட்டில் இருப்பதாகவும் உடனடியாக தமிழ் அமைப்புகளும், புலிகளும் கூறிவிட்டனர்.

இப்போது பிரபாகரன் குடும்பத்தினர் குறித்த செய்தியை ராணுவ இணைய தளத்திலிருந்து நீக்கியுள்ளனர். மேலும் நேற்று கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த ராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார, ‘பிரபாகரன் மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து நான் ஒன்றுமே சொல்லவில்லையே’ என்றார்.

கடந்த இரு தினங்களாக ராணுவத்தை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் செய்தி குறித்து கேட்டபோது, “அது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. பிரபாகரன் மனைவி மற்றும் குழந்தைகளை ராணுவம் கொல்லவில்லை, அவர்கள் இருப்பிடம் எங்களுக்குத் தெரியாது” என்று கூறினார் உதய நாணயக்கார.

மேலும் அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் கடைசி வரையில் கடுமையாகப் போராடினார்கள் என்று குறிப்பிட்டார்.

ஆனால் இந்திய ஊடகங்கள் திரும்பத் திரும்ப பிரபாகரன் குடும்பத்தினர் படங்களை தொலைக்காட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட முறை ஒளிபரப்பியதையும், அந்த செய்திக்கு ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டியதையும் யாரும் மறந்திருக்க முடியாது.

குறிப்பாக சமாதானம் பேச வெள்ளைக் கொடிகளுடன் வந்த புலிகளின் உயர் தளபதிகளை  ராணுவம் சுட்டுக் கொன்றது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது சர்வதேச அளவில்.  இதற்கான ஆதாரங்களை புலிகள் தரப்பிலும் திரட்டி வருகின்றனர்.

இன்னொரு பக்கம், சர்வதேச போர்க்குற்றவாளிகள் பட்டியலில் இலங்கை அதிபர், அவர் தம்பி மற்றும் ராணுவ அதிகாரிகளைச் சேர்க்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தீவிரமாக முயற்சித்து வருவதால் இப்படி திடீரென பல்டியடித்துள்ளார் உதய நாணயக்கார.

இலங்கை ராணுவம் கூறும் எதற்குமே உரிய ஆதாரமோ, நம்பகத் தன்மையோ கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளவே இந்தச் செய்தியைத் தருகிறோம். அவர்கள் செய்துள்ள ஒரே ஒரு விஷயம் மட்டுமே முழுமையான உண்மை…அதுதான் இந்த உலகம் இதுவரை கண்டிராத மகா கோரமான தமிழர் இன படுகொலை.

அதன் தடயங்களை அழிக்கும் முகமாகவே திரும்பத் திரும்ப பிரபாகரன் ‘மரணம்’ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்த அவதூறுகளைப் திரும்பத் திரும்ப பரப்பி வருகிறது ராணுவம்.

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

11 Responses to “‘பிரபாகரன் மனைவி குழந்தைகளை கொன்றதாக நாங்கள் சொல்லவே இல்லையே!’ – ராணுவம்”
  1. சூர்யா says:

    குடும்பப்படங்களை வெளியிட்டு ‘இங்கேதான் இறந்துகிடந்தார்கள்’ என்று வரைபடமும் போட்டுக்காட்டிய ‘தினமலம்’ தூக்கில் தொங்கட்டும்…

  2. Joe says:

    நல்ல பதிவு!

    “தினமலம்”, இதெற்கெல்லாம் அஞ்சுமா, சூர்யா?
    அவாளுக்கு இதெல்லாம் சாதரண மேட்டர்!

  3. Manoharan says:

    தினமலர் ஆசிரியன் ஒரு அப்பனுக்கு பிறந்தவன் கிடையாது. அவன் தமிழனே அல்ல. சிங்கள நாய்களின் மலம் தின்பவன்.

  4. mani says:

    சரியா கூறினீர்கள் திரு.சூர்யா!!!

  5. vasanth says:

    LONG LIVE THALIVAR PRABHAKARAN AND LONG LIVE LTTE

  6. Sunder says:

    Dears

    What Dinamalar will do in this!!

    SL Govt is declaring the death matter to all over the world !!

    If Prabaharan come again that wil also the news and they will publish that too.

  7. uzooo says:

    hi all..chk this site….nakeeran photo trciks has been revealed…it is a cheat and it capitalise on the sentiments of millions of tamilians..

    http://****.org/?p=40936&cpage=1#comment-9346
    __________
    Hi..
    We already mentioned it… Everyone knows that that one is a good photoshop work of Mr Gopal. According to Kamaraj, it is their style of publishing exclusives… But the news is real one. Thanks
    -Editor

  8. uzooo says:

    Thanks…I doubted prabhakaran’s living from yesterday’s jayalalitha statement on tamil eelam..It was well crafted and articulated statement …JJ who usually accuse KK has requested him to help for srilankan tamils..It seems JJ doesnt said ” INDEPENDENT EELAM” for votebank stunt..She is serious and know the concerns of Srilankan tamilians….

  9. G. Balu says:

    நேற்று மாலையில் இருந்து கடும் மன உளைச்சலில் இருந்தேன் ….. தற்போது உங்கள் செயதியை படித்த பிறகுதான் மனம் நிம்மதி அடைந்தது… ஆனால் எந்த ஒரு விடுதலைப்போரையும் மக்களை கொன்றுகுவிப்பதன் மூலம் அடக்க முடியாது என்பது இவ்வுலகம் இதுவரை கன்ட உன்மை…. “புலிகள் மக்களை மனித கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று இலங்கை அரசுக்கு ஆதரவாக “அல்லகை” வேளையை செய்து கொன்டிருந்த ஒரு சில தமிழக மீடியாக்கலும் அதைப் படித்து கருத்து சொல்லிக்கொண்டு திரியும் அறிவு ஜீவிகளும் இனி விவாத பொருளாக வைக்க ஒரு பிரச்சினை இல்லை… பாவம்… ஆனால் என் பிரார்தனை எல்லாம் இதுதான் ” இறைவா என் தமிழ் மக்களுக்காக நிஜ தமிழ் உணர்வுடன் உள்ள எங்கள் ஒரே தலைவன் பிராபாகரனை எங்களிடமிருந்து பிரித்துவிடாதே” என்பது மட்டும்தான்.. நிச்சயமாக மறுபடி தமிழர் போராட்டம் தொடர வேண்டும்…

  10. Thanmanamillatha Tamilan says:

    Boycott Dinamalar !
    Boycott Hindu !

    Soranai illaatha Tamiliname Sinthi ! Moolai illatha Tamiliname Sinthi ! Pirinthu kidakkum Tamiliname ondrupadu ! Jaathikal Ozhiyattum ! Ariyaamai neengattum !

    Tamilina iyakkam thotrathu Tamilanukku Thalai kunivu. Athai purinthu kollaatha ariyaamai Tamilan thaan Tamilnattil iruppavan

  11. kiran says:

    தினமலர் இஸ் கிரேட்

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)