ராஜீவ் கொலை வழக்கை மூடுகிறது இந்திய அரசு!
Friday, May 22, 2009 at 9:50 am | 194 views
ராஜீவ் கொலை வழக்கை மூடுகிறது இந்திய அரசு!
கொழும்பு: பிரபாகரன் ‘கொல்லப்பட்டதாகவும்’, அவரது டிஎன்ஏ மேப்பிங் மற்றும் இறப்புச் சான்றிதழை இலங்கை அரசு தயாரித்துக் கொடுப்பதாகக் கூறியுள்ளதாகவும், இதனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடித்துவிட இந்தியா தயாராக இருப்பதாகவும் இந்திய வெளியுறவு அதிகாரிககள் எம்கே நாராயணன், மேனன் ஆகியோர் கொழும்பில் அறிவித்துள்ளனர்.
கொழும்பில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இருவரும் மேலும் கூறியதாவது:
“இலங்கை அரசு பிரபாகரனைக் கொன்றுவிட்டதாக நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது. அதுகுறித்த டிஎன்ஏ சோதனை அறிக்கை மற்றும் இறப்புச் சான்றிதழை இலங்கை அதிபர் ராஜபக்சே தருவதாகக் கூறியுள்ளார்.
இந்த சான்றிதழ்கள் வந்ததும் ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடித்துவிடுவோம். பிரபாகரன் மீது இந்தியாவில் மேலும் பல வழக்குகள் உள்ளன. அவை அனைத்தையும் முடிக்க இந்த சான்றிதழ்கள் உதவும். அதற்கான நடைமுறைகளை இந்தியா தொடங்கிவிட்டது”, என்று கூறினர் நாராயணன் மற்றும் சிவசங்கர் மேனன்.
வன்னிப் போர்க்களப் பகுதியில் உண்மை நிலையைக் கண்டறிய சர்வதேச பத்திரிகையாளர்களை எப்போது அனுமதிப்பார்கள் என்ற கேள்விக்கு, “அங்கே நிலைமைகளைச் சரிசெய்த பிறகு இலங்கை அரசே அதுகுறித்து அறிவிக்கும்” என்றனர்.
வன்னிப் போர்க்களத்தில் இப்போது ஆயிரக்கணக்கான தமிழர் உடல்கள் சிதைந்தும், குற்றுயிரும் குலையுயிருமாகவும் கிடக்கின்றன. பல கிலோமீட்டா் பரப்பளவுக்கு பிணவாடையும், சிங்கள ராணுவம் வீசிய ரசாயண குண்டுகளின் கோர தாக்கமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சர்வதேச பார்வையாளர்கள் வருவதற்குள் அங்குள்ள தமிழர் பிணங்களை உருத்தெரியாமல் அழிக்கும் பணியில் மும்முரமாக உள்ளது இலங்கை ராணுவம். இதற்காக புல்டோசர்கள் வைத்து அனைத்தையும் அகற்றும் வேலையில் இறங்கியுள்ளனர் சிங்கள வீரர்கள்.
இவற்றை முடித்த பிறகு ராஜபக்சே அழைக்கும்போதுதான் தமிழர் பகுதிக்கு யாரும் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் மீறி போர்ப் பகுதிக்குச் செல்வோம் என எந்த நாடு கோரினாலும், அங்கு ஏராளமான கன்னிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், என்ன நடந்தாலும் நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றும் ராணுவம் கூறுவதால், யாரும் போக பயப்படும் நிலை உள்ளது.











- Do not vote for the party that gives you the fish. Vote for the party that teaches you how to fish
- If Tamilians have any kind of self respect all the free stuff should be thrown back at the people who gave it.
- LTTE has already closed the Murder case of innocent tamilians killed by IPKF sent by Rajiv gandhi