‘ஒரு டெத் சர்டிபிகேட் தர முடியமா மிஸ்டர் பக்சே?’
Thursday, May 21, 2009 at 3:17 pm | 196 views
‘இந்த டிஎன்ஏ மேப்பிங் மாதிரியே ஒரு டெத் சர்டிபிகேட்டும் ரெடி பண்ணுங்க மிஸ்டர் பக்சே!!’
கொழும்பு: கொழும்பு வந்த இந்தியத் தூதர்களான எம்.கே.நாராயணன், எஸ்.எஸ். மேனன் ஆகியோருக்கு அதிபர் ராஜபக்சே காலை விருந்தளித்து உபசரித்தார். வன்னிப் பகுதியை முழுமையாக ‘க்ளியர்’ செய்துவிட்டார்களா? அந்தப் பகுதிக்கு எப்போது பிறரை அனுப்புவது போன்ற விஷயங்களை ஆலோசனை செய்தனர் இருவரும். 
புலிகளுடன் ஏற்பட்ட போரில் வென்றுவிட்டதாக வெற்றிக் கொண்டாட்டம் நடத்தி வரும் இலங்கைத் தலைநகருக்கு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும், வெளியுறவுத்துறை செயலாளர் மேனனும் சென்றுள்ளனர்.
இன்று காலை அவர்கள் இருவரும் அதிபர் ராஜபக்சேவை அவரது வீட்டில் சென்று சந்தித்தனர். அப்போது ராஜபக்சே இரு இந்தியத் தூதர்களுக்கும் விருந்தளித்தார். இருவருக்கும் காலை விருந்தளித்தார் ராஜபக்சே.
பின்னர் வன்னி முகாம்களில் நடைபிணமாக வாழும் தமிழர்களின் புனர்வாழ்வு, அதிகாரப்பகிர்வு, சுயாட்சி உள்ளிட்டவை குறித்து விருந்தை ருசித்தபடியே மேனனும், நாராயணனும், ராஜபக்சேவுடன் ஆலோசனை நடத்தினர்.
சொந்த மண்ணிலேயே அகதிகளாக இருக்கும் தமிழர்களுக்கு என்னென்ன உதவிகளை வழங்க வேண்டும், பாதுகாப்பு நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை நடத்தினார்களாம்.
இன்னும் சில தினங்களில் இந்தியா ரூ. 500 கோடி நிவாரண பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க உள்ளது. அவற்றை தமிழர்களுக்கு வினியோகிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்களாம்.
இந்த சந்திப்பின்போது இந்திய அரசு மறு சீரமைப்புக்காக தரும் நிதியுதவிக்கும், ஏற்கெனவே செய்த பெரும் ராணுவ மற்றும் பிற உதவிகளுக்கும் தாங்கள் நன்றிக் கடன் பட்டிருப்பதாக ராஜபக்சே, நாராயணன், மேனனிடம் தெரிவித்தார்.
ஒரு டெத் சர்டிபிகேட் கொடுங்க!
அதேபோல பிரபாகரன் மரணம் குறித்த மரணச் சான்றிதழ் (டெத் சர்டிபிகேட்) ஒன்றைத் தருமாறும் ராஜபக்சேவிடம் இந்தியத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாம்.
இந்த சான்றிதழ் இருந்தால், இன்னமும் வாய்பிளந்து கிடக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கோப்பை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இந்த சான்றிதழ் தேவைப்படுவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளதாம்.
இரண்டே மணிநேரத்தில் இலங்கை தயாரித்துக் கொடுத்த பிரபாகரன் டிஎன்ஏ மேப்பிங் மற்றும் பிங்கர்பிரிண்ட்ஸ் சான்றிதழை அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.












Intha Ulagathil Suriyanai Thottavanum illai.Thalaivar Prabakaranai Suttavanum illai.
( Nile Raja )
வினோ,
இவ்வுளவு செய்றாங்களே!!! எந்த தைரியத்தில்??? பலரும் இது பொய் என்று நம்பும் போது எந்த அடிப்படையில் இவ்வாறு செய்கிறார்கள்!! ?? என்னதான் மனது நம்பினாலும் சிறிது கலக்கமாகத்தான் உள்ளது. ஏனெனில் நண்பன் ஒருவன் இலங்கைத் தமிழர். அவருக்கு புலிகள் மற்றும் ராணுவத்தில் நண்பர்கள் உள்ளனர்.அவருக்கு கிடைத்த தகவல்கள் கலக்கமடையச் செய்கிறது.
மேல் விபரங்கள் கிடைக்குமா?
Makkalai Yematri Aatchiyai thakka vaikka ninaikum Rajapakshe! unaku dairiyam irundal prabhakran avarudaya DNA Report Submit Pannu pakkalam.
ராஜீவ் காந்தி கேசை முடிப்பதற்கு இவர்கள் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறார்கள் …. இது ஒருபுறம் இருக்க ” அப்பாடா நிம்மதி என்று ” இனி ராஜீவ் கொலையில் நமக்கிருக்கும் பங்கை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று சிலர் நிம்மதி பெருமூச்சி விடுகிறார்கள்…. பிரபாகரன் திரும்பி வந்தால் கூட ” இல்லை நாங்கள் “டெத் சர்டிபிகட் ” வாங்கியாச்சு நீ செத்துட்ட என்று சொல்வார்கள் போல …. முதலில் இன்டர்போல் வந்து ராஜீவ் கொலையை விசாரிகட்டும்… அப்புறம் கேக்கலாம் “டெத் சர்டிபிகட் “
அந்த டெத் சர்டிபிகடையாவது நல்லா டிசைன் பன்னுங்க …… பிரபாகரன் டெட் பாடி மாதிரி சொதப்பிடாதிங்க…
பொய்யான தகவலை சான்றிதழாக கொடுப்பதற்கு பயம் தான்.