முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

கேள்வி உங்க வழியில்… பதில் ‘என்வழி’யில்!

Monday, April 13, 2009 at 11:59 am | 441 views

வணக்கம் நண்பர்களே…

ரு நல்ல வலைதளத்துக்குரிய அனைத்து அம்சங்களுடன் என்வழி.காம் வரவேண்டும் என்பது நமது ஆவல். அதன் விளைவாக இந்த தளத்தில் மேலும் ஒரு புதிய பகுதியாக கேள்வி – பதில்களை அறிமுகப்படுத்துகிறோம்.

இந்தப் பக்கத்தில் ரஜினி தொடங்கி ராகவேந்திரர் வரை, சாதாரண செய்திகளிலிருந்து சரித்திர நிகழ்வுகள் வரை, சுனாமியிலிருந்து சும்மா தமாசு வரை அனைத்து விஷயங்கள் குறித்தும் அலசலாம்…

கேள்விகளை நீங்கள் envazhi@gmail.com மின்னஞ்சலுக்கோ அல்லது இதே பக்கத்தில் உள்ள கமெண்ட் பகுதியிலோ அனுப்பலாம்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று இந்தக் கேள்விகள் அதற்கான பதில்களுடன் வெளியாகும்.

இந்த கேள்வி பதில்கள் நமது மேதைமையைக் காட்ட அல்ல. எல்லா விஷயங்கள் குறித்தும் எழுதிவிடுவது சாத்தியமல்ல. ‘தெரிஞ்சது கையளவு; தெரியாதது உலகளவு’ என்ற உலக நியதிக்கு உட்படாதவர்களே கிடையாது.

ஒரு செய்தியை அல்லது கட்டுரையை வெளியிடும் போது, நாம் கவனிக்கத் தவறிய அல்லது எழுதுபவருக்கு எழாத சந்தேகங்கள் உங்களுக்குள் எழலாம். அவற்றுக்கான பதில்களை முடிந்த வரை பெற்றுத் தர முயற்சிக்கிறோம். அந்த வகையில் இது ஒரு பரஸ்பர கற்றல் முயற்சியே.

ஒரு எழுத்தாளரைவிட பத்திரிகையாளனுக்கு உள்ள கூடுதல் சிறப்பு, தகவல்களைப் பெறுவதில் உள்ள சுதந்திரம்தான். அந்த சுதந்திரத்தை அனைவருக்கும் பயன்படும் விதத்தில் உபயோகிக்கலாமே!

இனி உங்கள் கேள்விக் கணைகளைத் தொடுக்கலாம்!

குறிப்பு: உங்கள் புகைப்படங்களையும் இணைத்து அனுப்புங்கள். வலையுலக நண்பர்களும் உங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுமல்லவா!

குறிப்பு 2: கேள்வி – பதிலின் முதல் பகுதி வரும் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகும்.

நன்றி

ஆசிரியர்
என்வழி.காம்
envazhi@gmail.com

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

18 Responses to “கேள்வி உங்க வழியில்… பதில் ‘என்வழி’யில்!”
  1. FUTURE DIRECTOR says:

    அருமையான யோசனை keep it up

  2. கிரி says:

    //இனி உங்கள் கேள்விக் கணைகளைத் தொடுக்கலாம்!//

    சொல்லிட்டீங்கல்ல.. இனி நீங்க காலி… நாங்க கேள்வியா கேட்டு தள்ள போறோம் ;-)

    இப்பவே கேள்விய கேட்கிறேன்

    எத்தனை கேள்வி-பதில்கள் வெள்ளிக்கிழமை இடம் பெறும்?

    ஒருவரே எத்தனை கேள்வி வேண்டும் என்றாலும் கேட்கலாமா!

    எது பற்றி வேண்டும் என்றாலும் கேட்கலாமா!(நாகரீகமாக)

    கிளம்பிட்டோம்ல :-)

  3. puyalaman says:

    i am having problems in typeing in tamil comments

  4. R.V.SARAVANAN says:

    very good

  5. palPalani says:

    கருனாநீதி கெட்டவரா? ரொம்ப கெட்டவரா?

    தங்கபாலு சுயமா சொன்ன பதில் எதாவது இருக்கா?

    சிதம்பரம் ஷூ எரிஞ்சவரை மன்னிசுட்டார், அதுனால நாங்களும், கடந்த 20 வருசமா ஒன்னும் செய்யாத சிதம்பரத்தை மன்னிச்சு ஒட்டு போடனுமா?

    ராமதாஸ் எப்போ கூட்டணி மாறமாட்டார்?

    கொஞ்ச வருசத்துக்கு முன்னால செல்வி, இப்போ அம்மா, எப்போ பாட்டி?

    தலைவர் குடும்பத்திளிருந்த் யார் அடுத்த மாநிலங்களவை உறுப்பினர்? அரிவுநிதியா? உதயநிதியா? வேற்ற எதாவது நிதியா?

    அடுத்த தி.மு.க முதல்வர் யார்? அன்பழகனா? ஆற்காடா?

    கருணாநிதியின் மிக பெரிய சால்ரா யார்?

  6. ganesh says:

    Excellent idea sir.

    Will be back with questions frequently.

    First question : Therthal vithi miralgal patriya “complaints” enge? yaridam koduppathu

  7. Kogulan says:

    vaalkaiyil vetri peruvathu kasdam. appadiye vetri petraalum athai thakka vaithu kolvathu miga kasdam. appadiye thakka vaithaalum athai vida periya vetrikalai thodarnthu peruvathu miga miga kasdam. anaal Mr.Rajinikanth itku maddum ithu eppadi saathiyam. oru murai vilunthaalum adutha murai athai vida miga periya uyarathitku elukiraare eppadi saathiyam ithu. eppadi naanum oru Rajinikanth aavathu?

  8. vasi.rajni says:

    வினோ சார் மிகவும் சிறந்த ஒரு திட்டம் .. நன் உங்களிடடில் பல கேள்விகளை ஏற்கனவே கேட்டுளேன் ஆதலால் நன் மற்ற வாசகர்களை நம் தலத்தில் கேள்விகளை கேட்க வழிவிடுகிறேன் .. மொத்ததில் மிக சிறந்த திட்டம் அங்கே சுந்தர்ஜி பின்னுகிறார் என்றல் நிங்கள் இங்கே கலகுரிங்கள் …. மொத்ததில் நம்முடைய siber fans க்கு மிகவும் ஒரு நல்ல திட்டமாக கருதுகிறேன் ..

    நம்முடைய நண்பர்கள் சிறந்த முறையில் இந்த வாய்ப்பை பயன்படுத்துவர்கள் என்று நம்புகிறேன்

    rajini will rule tamil nadu

    -vasi.rajni

  9. Kogulan says:

    வாழ்கையில் வெற்றி பெறுவது கஷ்டம். அப்படியே வெற்றி பெற்றாலும் அதை தக்க வைத்து கொள்வது மிக கஷ்டம். அப்படியே தக்க வைத்தாலும் அதை விட பெரிய வெற்றிகளை தொடர்ந்து பெறுவது மிக மிக கஷ்டம். அனால் Mr.ரஜினிகாந்த் இற்கு மட்டும் இது எப்படி சாத்தியம்?. ஒரு முறை விழுந்தாலும் அடுத்த முறை அதை விட மிக பெரிய உயரத்திற்கு எழுகிறார் எப்படி சாத்தியம் இது?. எப்படி நானும் ஒரு ரஜினிகாந்த் ஆவது?

  10. puyalaman says:

    ரொம்ப நன்றி palZ மிக்க உபயமாக இருக்கு

  11. puyalaman says:

    கேள்வி கேட்டா சன்மானம் என்னவோ mr.வினோ

  12. Selva says:

    palPalani-யின் பதில் எப்போது கிடைக்கும்?
    :) (:
    பதில் தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன்!
    :) (:

  13. kalyan says:

    My question,

    I know u would have met superstar lot of times personally, tell some Unforgettable experience with him

  14. raj says:

    super thittam…..kalakal site-a kondu varinga vino.

  15. KADKAT says:

    // ஒரு செய்தியை அல்லது கட்டுரையை வெளியிடும் போது, நாம் கவனிக்கத் தவறிய அல்லது எழுதுபவருக்கு எழாத சந்தேகங்கள் உங்களுக்குள் எழலாம். அவற்றுக்கான பதில்களை முடிந்த வரை பெற்றுத் தர முயற்சிக்கிறோம். அந்த வகையில் இது ஒரு பரஸ்பர கற்றல் முயற்சியே //
    THERE YOU ARE …

  16. Peraveen says:

    Congrats vino,
    excellent thought…!

    ENVAZHI SIRAKA EN VAZHTHUKAL…

    Kaelvigal miga viraivil…

  17. அன்பு நண்பருக்கு,

    நான் என் http://www.vimarisanam.wordpress.com
    வலைப்பதிவில்
    “பெப்ஸி விழா -கலைஞர் டிவி ஒளிபரப்பு
    பணம் எங்கே ? பல கேள்விகள் ” என்கிற தலைப்பில் – இன்று வெளியிட்டிருக்கும் இடுகை என் வழி வலைப்பதிப்பிலும் வெளிவர
    விரும்புகிறேன். ரஜினி அன்பர்கள் அனைவரும் அதைப் படிக்க
    வேண்டுமென்று விரும்புகிறேன்.
    அதன் பிரதியை கீழே அளித்துள்ளேன்.
    உங்களுக்கும் அது பொருத்தமாகத் தோன்றினால் தயவு செய்து
    வெளியிடவும்.
    ————————————————————————————————————————————-

    பெப்ஸி விழா -கலைஞர் டிவி ஒளிபரப்பு – பணம் எங்கே ?
    பல கேள்விகள் !

    அண்மையில் நடந்த பெப்ஸி விழாவில் அஜித் குமார் மற்றும்
    ரஜினி ஆகியோரின் பேச்சு காரணமாக பெரும் சர்ச்சைகள்
    உருவாகி இருப்பது பல கேள்விகளையும் சந்தேகங்களையும்
    எழுப்புகின்றன -

    1) விழாவை முன்னின்று நடத்தியது பெப்ஸியா அல்லது
    கலைஞர் தொலைக்காட்சியா ?

    2) நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த விழாவினை
    நடத்த அனுமதி கொடுத்தது யார் ?

    3) அதற்கான வாடகையும் முன்பணமும் வழக்கம்போல்
    பெறப்பட்டதா ?

    4) விழாவிற்கான – வரவேற்பு, விளம்பரங்கள்,
    இருக்கைகள்,மின்சாரம், ஒளி, ஒலி அமைப்புகள்,
    போக்குவரத்து, சாப்பாட்டு மற்றும் இதர வகை
    செலவினங்களை ஏற்றுக்கொண்டது யார் ?
    பெப்ஸியா ? அல்லது கலைஞர் தொலைக்காட்சியா ?

    5)மொத்த செலவு எவ்வளவு ?
    யார் கணக்கு வைத்திருக்கிறார்கள் ?

    6) விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு –
    யாருக்காவது பணம்
    கொடுக்கப்பட்டதா ? எவ்வளவு ?

    7) இந்த விழாவை முன்னிட்டு நன்கொடை/
    பண வசூல் எதாவது செய்யப்பட்டதா ? ஆம் என்றால்
    இந்த வகையில் சேர்ந்த பணம் எவ்வளவு ?

    8) செலவு போக மிகுந்த பணம் எவ்வளவு ?
    யாரிடம் இருக்கிறது ?

    9) நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் உரிமைக்காக கலைஞர்
    தொலைக்காட்சியிடம் பணம் எதாவது
    பெறப்பட்டதா ? எவ்வளவு ?தொகையை நிர்ணயம்
    செய்தது யார் ?

    10) இந்த நிகழ்ச்சிகளை கலைஞர் தொலைக்காட்சிக்கு
    தான் கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தது
    யார் ?
    அதைவிட அதிகம் தொகை கொடுக்க வேறு
    தொலைக்காட்சி நிறுவனங்கள் முன்வந்தன
    என்பது உண்மையா ?

    11) புதிதாக அரசாங்கம் கொடுத்துள்ள
    திரைப்பட நகரில்
    நிலம் ஒதுக்கும் முறை பற்றி தீர்மானம் செய்யப்பட்டு
    விட்டதா ?
    எப்போது ? எங்கே ?
    எந்த அமைப்பால் ?

    12) எந்த அடிப்படையில் நிலம் ஒதுக்கப்படும் ?

    13) பெப்ஸி உறுப்பினர்கள் அனைவருக்குமா ?
    அல்லது எதாவது வருமான அடிப்படையிலா ?
    கிடைக்கும் நிலம்
    அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒதுக்கீடு செய்ய
    போதுமானதா ?

    14)திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு
    இதில் முன்னுரிமை எதாவது உண்டா ?

    15) ஏற்கெனவே சொந்த வீடு வைத்திருக்கும்
    உறுப்பினர்களுக்கும்
    இங்கு நிலம் கொடுக்கப்படுமா ?

    16) ஏழை உறுப்பினர்களுக்கு மட்டும் தான்
    இந்தப் பயன் போய்ச்சேர வேண்டும்.
    ஏற்கெனவே வசதி படைத்தவர்கள்
    இதில் நுழைந்தால் நான் சும்மா
    பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்-

    நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் -
    என்று ரஜினி சொன்னது எதை வைத்து ?
    யாரை நினைத்து ?

    17) ரஜினியைக் குறி வைத்து தாக்குபவர்கள் –
    அவர் பேச்சால்
    பாதிக்கப்படுகிறவர்கள் என்பது உண்மையா ?

    18) மேடையிலேயே அஜித் குமார் முதல்வரிடம்
    மிரட்டுகிறார்கள் என்று புகார் கூறினாரே ? அப்படி
    மிரட்டியவர்கள் யாரென்று முதல்வர் கேட்டறிந்துக்
    கொண்டாரா ?

    19) முதல்வரிடம் தானே போலீஸ் துறை
    இருக்கிறது -
    மிரட்டியவர்கள் மீது என்ன
    நடவடிக்கை எடுக்கப்பட்டது ?

    20) அவசரம் அவசரமாக ரஜினி மீதும் அஜித் குமார்
    மீதும் கண்டனம் தெரிவிக்கும் பெப்ஸி தீர்மானத்தில்
    நடிகர் சங்கம் சார்பில் ராதா ரவி கையெழுத்துப்
    போட்டது எப்படி ? செயற்குழுவைக்கூட கலந்து
    ஆலோசிக்காமல்
    கையெழுத்துப்போட அவருக்கு அதிகாரம் கொடுத்தது
    யார் ?

    21) நடிகர்/நடிகைகளின் தன்மானத்தை பாதிக்கும்
    அந்த தீர்மானத்தை நடிகர் சங்கத்தின் மற்ற
    உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று எப்படி
    ராதா ரவி நம்பினார் ?

    22)அல்லது அப்படித்தான் செய்ய வேண்டுமென்று
    அவருக்கு எங்கிருந்தாவது கட்டளை வந்ததா ?

    23) நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவைகூட்டி
    இந்த கண்டன தீர்மானத்திற்கு ஒப்புதல் வாங்க
    அவரால் முடியுமா ?

    24) அஜித் குமாரும், ரஜினியும் அப்படிப் பேசியதால்
    அவருக்கு தனிப்பட்ட முறையில் ஏதேனும் பாதிப்பு
    உண்டா ? இல்லை மிரட்டியவர்களில் அவரும்
    ஒருவர் என்பது உண்மையா ?

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)