கூட்டணி குப்பையில் விழுந்த தங்கம்!
Friday, April 10, 2009 at 5:07 pm | 140 views
பத்தாண்டுகளுக்குப் பின் தேர்தலில் போட்டியிடும் வைகோ!
விருதுநகர்: இந்தியாவின் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவராகக் கருதப்படும் வைகோ பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேர்தல் களம் காணுகிறார்.
தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர் வைகோ. தனது சிம்மக் குரலால் நாடாளுமன்றத்தை கிடுகிடுக்க வைத்தவர். சிறந்த நாடாளுமன்றவாதி என புகழப்பட்டவர்.
தன் கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவ முயன்ற அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியை, ‘மிஸ்டர் பிரைம் மினிஸ்டர், என் கேள்விக்கு பதில் சொல்லாமல் இங்கிருந்து நீங்கள் போக முடியாது’ என்று முழங்கி, அதிர வைத்த துணிச்சலுக்கு சொந்தக்காரர்.
தன் சொந்தக் காரணங்களுக்காக எம்பி பதவியை இதுவரை பயன்படுத்தாதவர். டெல்லியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை பெரும்பாலான எம்பிக்கள் உள்வாடகைக்கு விடுவது வழக்கம். பிரபல தலைவர்களெல்லாம் கூட இந்த புகாரில் சிக்கியதுண்டு. ஆனால் வைகோ, தனக்கு வீடு ஒதுக்கப்படாவிட்டாலும் கூட பிரச்சினையில்லை என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் சொன்னவர். வைகோ போன்ற ஒருவர் எங்களுடன் இல்லையே என்று வெளிப்படையாக புகழ்ந்தார் வாஜ்பாய்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்றம் போகவில்லை. 1999ம் ஆண்டு நடந்த தேர்தலுக்குப் பின்னர் வைகோ எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை.
நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டி என்ற கிராமத்தில் வையாபுரி தம்பதிக்குப் பிறந்தவர்தான் வை. கோபாலசாமி. பெயர் வை. கோபாலசாமி என்றாலும் வைகோ என்று அனைவராலும் அழைக்கப்பட்டமையால் பின்னாளில் தனது பெயரையே வைகோ என்று மாற்றிக் கொண்டு விட்டார் வைகோ.
மனைவி பெயர் ரேணுகாதேவி. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.
எம்.ஏ பொருளாதாரமும், பி.எல். சட்டமும் படித்தவர் வைகோ. பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியிலும், சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் சென்னை சட்டக் கல்லூரியிலும் பயின்றவர். அரசியல்வாதி என்ற முகம் தவிர விவசாயி, வழக்கறிஞர், சிறந்த விளையாட்டு வீரர் என்ற முகங்களையும் கொண்டவர் வைகோ.
1978ம் ஆண்டு முதல் 1996 வரை மூன்று முறை திமுக ராஜ்யசபா எம்.பியாக இருந்துள்ளார்.
1994ம் ஆண்டு திமுகவை விட்டு நீக்கப்பட்டபோது கண்கலங்கியபடி வெளியேறி புயல் வேகத்தில் மதிமுகவை உருவாக்கி அதன் பொதுச் செயலாளரானார்.
1996ம் ஆண்டு திமுக, அதிமுக அணிகளை எதிர்த்து சிபிஎம், ஜனதாதளம் ஆகியவற்றுடன் இணைந்து தனி அணியாக சட்டசபைத் தேர்தலை சந்தித்தார். அப்போது விளாத்திகுளம், சிவகாசி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார்.
இருப்பினும் 1998ம் ஆண்டு சிவகாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் 1999ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலிலும் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் அவர் எந்தத் தேர்தலிலும் போட்டியிடாமல் தவிர்த்து வந்தார். 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிவகாசியில் மதிமுகவின் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனை போட்டியிட வைத்து எம்பியாக்கினார் வைகோ.
தற்போது சிவகாசி தொகுதி நீக்கப்பட்டு விருதுநகர் தொகுதியாகியுள்ளது. இந்தத் தொகுதியின் முதல் எம்.பி. ஆகும் பெருமை வைகோவுக்கு கிடைக்குமா என்பது மே 16-ம் தேதி தெரிய வரும்.
10 ஆண்டு காலத்திற்குப் பின்னர் முதல் முறையாக தேர்தல் களத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து களம் புகுந்துள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளாக திமுக, அதிமுக வேட்பாளர்களுக்காக மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்த இந்த ‘புரட்சிப் புயல்’, விருதுநகரை தன்வசப்படுத்துமா என்பதைக் காண தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய அரசியல் களமும் ஆவலுடன் காத்திருக்கிறது.
வைகோவின் அரசியல் நிலைப்பாடுகள், கூட்டணி அரசியலில் அவரது தடுமாற்றங்கள் போன்றவை அவரைப் பற்றிய மதிப்பீடுகளில் சின்ன மாறுபாட்டை ஏற்படுத்தினாலும், கொண்ட பதவிக்கு ஒருபோதும் துரோகம் செய்யாதவர் வைகோ. வேறு யாரை நம்பியும் இந்த வார்த்தைகளைச் சொல்ல முடியாது. ஆனால் வைகோவை நம்பிச் சொல்லலாம். பதவியைப் பயன்படுத்தி அவர் பெட்டி வாங்கிவிட்டார் என அவரை ஒழிக்கத் துடிக்கிற கருணாநிதியால் கூட குற்றம் கூற முடியாது.
என்ன செய்வது… கூட்டணி அரசியல் என்ற குப்பைமேட்டில் இன்று இந்த தங்கமும் விழுந்து கிடக்கிறது. ஆனால் தங்கம் எங்கிருந்தாலும் தரம் மாறாததல்லவா!
-எஸ்











வெற்றி பெற வாழ்த்துகிறேன்!
Thank God for a good politican still with us..Good man in a dirty politics.
hearly wishes
He is a Great politician,
He is a Great MAN
He is a Great LEADER Also, i thing Mr. Rajini when starting the party that time Our vaiko is there.
வைகோ வென்றால் கட்டாயம் இலங்கை தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்.ஆனால் அதுவரை மாவீரன் alexandar (நான் சொல்லவில்லை தமிழர் தலைவர் கலைஞர்தான் அப்படி அவரை சொல்லயுள்ளார் ) இலங்கை தமிழர்களை முற்றிலும் அழிக்காமல் இருக்கவேண்டும்.
Sorry,, How about the Petrol Pump scams by his Son.
He is probably less corrupted but can not believe he is Mr.Clean…
Actually, he is successful when he take commands from a good leader.. but not a leader himself ( do not say he is a party leader himself – it is in name that is it.) IF he is a good leader, he would have foreseen the political opportunities for long term and made his move accordingly. This man just believed Anbu Sahothari and she made sure Vaiko had no other option but to accept whatever she give. And Vaiko had to let of his all time follower’s ambitions.
Unfortunately he could Lead his party well.. A emotional man can never be a good leader.. It is open secret that VAIKO is a highly emotional person and give words with out any thoughts.. Recent controversy of ‘Ratha Aaru’ is one example..
Sorry Mr.Vaiko.. You need to have consistency in your thoughts and future plans.. You have proved as ‘Opportunistic’ like any other politician..
Nalla pathivu unmaiumkuda nanba.
I am sorry to say that Envazhi is not a nuetral website,your political news are one sided.
___________
Is it so? Thanks!!
நண்பர் என்வழி,
உங்கள் கருத்தை நான் வரவேற்கிறான். அது முற்றிலும் உண்மை .
நண்பர் yuvaraj and varadan அவர்களே..
1.வைகோ அவர்கள் பட்டனர் காலத்தில் இருந்தே பணக்காரர் .
2. முன்று முறை mp ஆகா இருந்தவர் .
3. கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் .
ஒரு உரையில் இரு கத்தி இருக்ககூடாது என கருணாநிதியீன் துரோகத்தால் நீக்கப்பட்டார் .
இந்த அரசியல் சாக்கடையில் அவருக்கு நீந்ததெரீயாமல் இருக்கலாம் . ஆனால் நேர்மை புலமை கொள்கை இவற்றில் அவருடன் யாரும் போட்டியிடமுடியது.
இன்றைய dmk mp களின் சொத்து மதிப்பு தெரியுமா ?
நேற்று கட்சி ஆரம்பீத்தவர்கள் எல்லாம் இன்று சொந்த டிவி ஆரம்பீக்கீரர்கள் . இவர் தன் கல்லுஉரி
காலம் முதல் அரசியலில் உள்ளார் என்னி பாருங்கள் தோழரே ?.
PROUDLY I CAN SAY VAIKKO IS PURE LIKE MOTHERS MILK.
BUT MOST OF THE PEOPLE (like soorian,yuvaraj,varadan etc) WANT ALCOHOL ONLY…!
No one in the politics is Mr. Clean. And we cannot expect the same also in current situation. Even we will not be Mr.Clean or allowed to be Mr. Clean. If each politician eat a part of the funds alloted to his constituency, a large number of good things.
Ellarume thirudanuga than. But the one who serves something is needed……..
Vaiko, should be elected as an MP.No doubt in it.Of course his leadership skills are questionable,but without doubt he is one of the most capable person to think and act for the welfare of every Indian Citizen
@varadan: கருனாநீதி புகழை வேண்டும் பாடவேண்டும் எதிபார்கிரீர்களா?
he is a very good leader.
hi vardan if u want to check that this site is neutral or not just free for an hour and read all the articles that have posted previously.if u do that u will come to know about this site, but for that u must be a neutral person.
Dear Mr. Vardan,
Did you noticed that this site discusses with both the positives and negatives of each and every politicians.
Not only you, nobody can not say that he is one sided on reading this VaiKo article. Right.
This site gives atmost its support to the Poor suffering Tamilians. So, whoever it may be, who does the need for needy people, they will be honoured in this site and also who does some silly comedy (tragedy), he will be very much discussed about his negatives in this site at every time.
SO PLEASE NEVER SAY THIS SITE IS NOT NEUTRAL.