முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

கூட்டணிக்கு வசதியாக ‘கொள்கையை’ மாற்றிய விஜய்காந்த்!

Sunday, March 22, 2009 at 11:39 am | 9,373 views

திமுக கூட்டணிக்கு வசதியாக ‘கொள்கையை’ மாற்றிய விஜய்காந்த்!

துவரை நாட்டில் நடந்த அனைத்து குளறுபடிகளுக்கும், பிரச்சினைகளுக்கும் ‘திமுக அரசும், கருணாநிதியின் கையாலாகாத்தனமும்’தான் காரணம் என்று பலமாக முழங்கிவந்த விஜய்காந்த் முதல் முறையாக முழக்கத்தை மாற்றிக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்.

காவிரி, பாலாறு, வேலையில்லாத் திண்டாட்டம், ஈழப் பிரச்சினை என அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கே இருப்பதாகவும், மக்களவைத் தேர்தல் வெற்றி மூலம் தேமுதிக இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று மாலை காஞ்சியில் துவங்குவதாகவும், அப்போதே யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார் விஜய்காந்த்.

கூட்டணி பேரம்

தேர்தலில் தனது கட்சி தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிடுமா என்பதை இதுவரை அறிவிக்காமல் இழுத்தடித்து வருகிறார் விஜய்காந்த். அவர் அறிவித்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என பாமகவும் மௌனம் சாதிக்கிறது. இருவருக்குமே இன்னும் பேரங்கள் வேறு முழுமையாகப் படியவில்லை என்பதும் இதற்கு ஒரு காரணம்.

காங்கிரஸுடன் தொடர்ந்து விஜய்காந்த் மச்சான் சுதீஷ் மற்றும் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் பேசி வருகின்றனர். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது இதை உறுதிப்படுத்தினார் தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.

எதிர்ப்பாளர்களுக்கு விஜய்காந்த் சொல்லும் சமாதானம்!

இதுவரை தமிழக, தேசிய பிரச்சினைகள் பலவற்றுக்கும் காரணம் திமுக அரசுதான் என்று குற்றம்சாட்டி வந்தார் விஜய்காந்த். ஈழப் பிரச்சினையில் மிகக் கடுமையாகவே அவர் கருணாநிதியைத் தாக்கி வந்தார்.

இப்போது தனது பிரச்சாரத்தில் எதை முன்நிறுத்தி, யாரை விமர்சித்து அவர் வாக்குக் கேட்பார் என்பது பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது (அரசியல் கொள்கை என ஒன்று இருந்தால்!).

எனவேதான் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், தனித்துப் போட்டியிடுவதே நமது அடையாளத்தைக் காப்பாற்றும், எனவே கூட்டணி வேண்டாம் என்ற கருத்தையும் தேமுதிக நிர்வாகிகளில் சிலர் முன் வைக்கின்றனர். இன்னும் சிலரோ, இத்தனை நாள் திமுகவையும் கருணாநிதியையும் கடுமையாக விமர்சித்துவிட்டு எப்படி மீண்டும் அவர்களுடன் ஒரே மேடையில் இணைந்து நிற்பது என்றும் கேட்டு வருகிறார்கள்.

இவர்களைச் சமாதானம் செய்வதுபோல, “காவிரி நதிநீர் பங்கீடு, பாலாற்று அணை, முல்லைப் பெரியாறு நீர் தேக்கம், ராமேஸ்வரம் மீனவர் பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை, மலேசியா போன்ற வெளிநாடுகளிலும், அண்டை மாநிலங்களிலும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைப்
பிரச்னை போன்றவை மத்திய அரசின் மூலமே தீர்க்கப்பட வேண்டும். இது மாநில அரசின்  பொறுப்பு மட்டுமல்ல.

தமிழகத்துக்கென உள்ள தனிப் பிரச்னைகளான வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், லஞ்சம், ஊழல் போன்றவற்றைப் போக்குவதில் கூட மத்திய அரசு முக்கியப் பங்காற்ற வேண்டியுள்ளது. தேமுதிகவின் பங்களிப்பும் இதற்கு தேவை. அதற்கு இந்த மக்களவை வெற்றி மிக முக்கியமானது”, என தெரிவித்துள்ளார் விஜய்காந்த், தனது நேற்றைய அறிக்கையில்.

அதாவது ‘இப் பிரச்சினைகளுக்கு மாநில அரசு மட்டும் பொறுப்பல்ல. மத்திய அரசுதான் அனைத்தையும் செய்து தரவேண்டும்’ என்பது போல்
விஜய்காந்த் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதே, அவர் திமுகவுடன் கைகோர்க்கத் தயாராகி விட்டதற்கான அறிகுறிதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

நிர்வாகிகளும் திமுக கூட்டணிக்கு தயார்!

திமுக கூட்டணிக்கு விஜய்காந்த் தயாராகிவிட்டதை சமீபத்திய சம்பவம் ஒன்றின் மூலம் உறுதிப் படுத்தினார் அவரது கட்சியின் வேலூர் மாவட்ட முக்கிய நிர்வாகி ஒருவர்.

சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் திமுகவுடன் நாம் கைகோர்ப்பதை மக்கள் ஏத்துப்பாங்களா? என்று கேட்டாராம்.

அதற்கு விஜய்காந்த், ‘500 நாள் ஜெயிலில் போட்ட அம்மாவுக்கே ஜூஸ் கொடுக்கிறார் வைகோ. அவரையென்ன போகுமிடமெல்லாம் கேள்வியா கேட்கிறார்கள் மக்கள்?  இதுல நமக்கென்னய்யா சிக்கல்!’ என்று திருப்பிக் கேட்டாராம் விஜய்காந்த்.

‘ஆக அவர் ஒரு முடிவுக்கு வந்துட்டார். எங்களைச் சமாதானப்படுத்தவே ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவதில் எங்களுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை’ என்ற தெளிவுக்கு வந்துவிட்டார்கள் தேமுதிக நிர்வாகிகளும்.

-எஸ்எஸ்

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

8 Responses to “கூட்டணிக்கு வசதியாக ‘கொள்கையை’ மாற்றிய விஜய்காந்த்!”
  1. palPalani says:

    /*
    ‘500 நாள் ஜெயிலில் போட்ட அம்மாவுக்கே ஜூஸ் கொடுக்கிறார் வைகோ. அவரையென்ன போகுமிடமெல்லாம் கேள்வியா கேட்கிறார்கள் மக்கள்? இதுல நமக்கென்னய்யா சிக்கல்!’ என்று திருப்பிக் கேட்டாராம் விஜய்காந்த்.
    */
    தலைவா இப்படியெல்லாம் பேசாதீங்க! அதற்க்கு உங்களுக்கு தகுதி இல்லை!

  2. kajan says:

    ‘நாயுடு’ தன் நிஜ முகத்த காட்டுறார். இவருக்கு இருக்கு ஆப்பு. வாழ்கையுளும் தான் நடிகன் என்று காட்டிட்டார்.

    ஈஸ்வர, தமிழ் நாடுக்கே கிடைச்ச சாபம், இந்த சினிமா நடிகர்கள்!

  3. FUTURE DIRECTOR says:

    எப்போதும் விஜயகாந்த் ஐ குறை குறுவது முறை அல்ல இந்த தமிழ் நட்டு அரசியல் வாதிகள் ஒரு சாதாரண அரசியல் வாதியையும் சும்மா விடுவது இல்லை.திறம்பட மக்களை அணுக வாக்கு இல்லாமல் கூட்டணிக்கு அவரை இழுப்பது யாரு??

    தமிழ் இனதளைவளியும்,தவளை தான் வாயால் கெடும் புத்திகொண்ட அம்மா வும் தான்.
    விஜயகாந்த் கு மக்களிடம் செலவாகும் ஒட்டு வங்கியும் உள்ளதால் தான்
    கூட்டணி கூட்டணி என்று பின்னாலே சுத்திவருகிரர்கள்.
    இருபினும் விஜயகாந்த் கட்சியில் உள்ள சில தலைகளின் ஆசைககவும் விஜயகாந்த் சம்மதிக்க வேண்டிய கட்டாயம் கூட இருக்கலாம். ஆசை யாரை விட்டது.

    திருமங்கலத்தில் அதிக ஒட்டு வங்கி வெற்றி பெற்றோம் என்று பீதிகொள்ளும் தி மு க ஏன் விஜயகாந்த் கு ஓலை அனுபிகொண்டே இருகின்றது ???

    கூட்டணி அமைக்காமல் வெற்றி பெற துப்பு இல்லை.

  4. Venkat says:

    Nothing is wrong. Could you tell me who one is the real politician in india(from 1947 to 2009).

  5. FUTURE DIRECTOR says:

    let’s say no one here is true politician

  6. Selva says:

    எப்போதும் விஜயகாந்த் ஐ குறை குறுவது முறை அல்ல

  7. kajan says:

    All here are actors. And the ones coming from cinema field have unfortunately, hijacked the state. It’s time for the youth to remove the veil about cine industry and attempt to make Tamilnadu into what its forefathers envisioned.

  8. GokulDass says:

    //எப்போதும் விஜயகாந்த் ஐ குறை குறுவது முறை அல்ல

    சரி,அப்ப ஏன் இவரு மட்டும் தான் உலகத்திலேயே யோகியன் மாதிரி பேசணும்

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)