முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

சரத் பொன்சேகா கைது.. போலீசாரால் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்!

Monday, February 8, 2010 at 11:48 pm | 1,108 views

சரத் பொன்சேகா கைது.. போலீசாரால் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்!

கொழும்பு: இலங்கையின் ராணுவத்துக்கெதிராக செயல்பட்டமை, மகிந்த ராஜபக்சேவைக் கொல்ல முயற்சி, ராணுவப் புரட்சி முயற்சி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இன்று கைது செய்யப்பட்டார் அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா.

கைது செய்யப்பட்ட அவரை ராணுவ போலீசார் தரதரவென இழுத்துச் சென்றதாகவும், பின்னர் ரகசியமான ராணுவ விசாரணை முகாமில் வைத்து விசாரித்து வருவதாகவும் கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவத்துக்கு வெற்றியைத் தேடித் தந்ததாக கூறப்படுபவர் சரத் பொன்சேகா.

ஆனால் இந்த வெற்றி தங்களால்தான் கிடைத்தது என்று கூறிவருகின்றனர் ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்கள்.

இந்த கருத்து மோதலின் விளைவாக ராணுவத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டார் சரத் பொன்சேகா. பின்னர் இலங்கை ராணுவத்திலிருந்து தனது பொறுப்புகளை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட அதிபர் தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கூட்டணி அமைத்து மகிந்த ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிட்டார் பொன்சேகா. தேர்தலில் இவரே வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டது.

ஆனால் பெருமளவு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இதைத் தொடர்ந்து அவர் ராணுவப் புரட்சியில் ஈடுபடக் கூடும் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதனால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட கையோடு பொன்சேகா மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் கைதாகக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அன்றே பொன்சேகா கிட்டத்தட்ட வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவரது அலுவலகம் சோதனைக்குள்ளானது.

ஆனாலும் அவரைக் கைது செய்ய தமது அரசு முயற்சிக்கவில்லை என மகிந்த ராஜபக்சேவும் அவரது சகோதரர்களும் தொடர்ந்து கூறிவந்தனர்.

இந்த நிலையில், தமது உயிருக்கு இலங்கையில் ஆபத்து இருப்பதாகவும், நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடொன்றில் தஞ்சமடைய முயற்சிப்பதாகவும் பொன்சேகா கூறினார்.

அப்போதும், அவரைக் கைது செய்யப்போவதில்லை என்றே ராஜபக்சே பிரதர்ஸ் தெரிவித்து வந்தனர்.

நேற்றே பொன்சேகா கைதாவார் என்று கூறப்பட்டது. ஆனால் கைதாகவில்லை. இதனால், திங்களன்று காலை பத்திரிகையாளர்களிடம், “இலங்கை அரசு என்னைக் கைது செய்து பார்க்கட்டும்… அவர்கள் செய்த போர்க்குற்றங்களுக்கு ஆதாரமான அனைத்தையும் உலகின் முன் வைக்கத் தயாராக இருக்கிறேன். யாருக்கும் பயப்பட மாட்டேன். இதுவரை என்னைக் கைது செய்யவில்லை. அப்படியானால் அரசு சொல்லும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றுதானே அர்த்தம்…” என்றார்.

உடனே, பொன்சேகாவை கைது செய்ய மாட்டோம் என்று பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சே மீண்டும் தெரிவித்தார்.

இப்படிச் சொன்ன சில மணி நேரங்களில் இலங்கை ராணுவ போலீசாரால் கைது செய்யப்பட்டார் பொன்சேகா. ராஜகீய மாவத்தையில் அமைந்துள்ள அலுவலகத்தில் வைத்து  திங்களன்று இரவு 9.30 மணிக்கு இந்தக் கைது நடந்தது.

தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்…

இந்தக் கைதின் போது பொன்சேகா பலவந்தப்படுத்தப்பட்டதாகவும், கைதுக்கு ஒத்துழைப்பு மறுத்தார் என்று கூறி தரதரவென அவரது அலுவலகத்திலிருந்து ராணுவத்தினரால் இழுத்துச் செல்லப்பட்தாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளன.

அவரது மக்கள் தொடர்பு அலுவலர் சேனக டி சில்வாவையும் கைது செய்துள்ளனர். இருவரும் ரகசிய ராணுவ முகாமில் வைத்து ராணுவ போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து இலங்கையின் முக்கியப் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

உண்மையான காரணம்…

இந்தக் கைதுக்கு உண்மையான காரணம், ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச சமூகம் முன் வீடியோ ஆதாரங்களுடன் சாட்சி சொல்ல பொன்சேகா தயாராக இருந்ததுதான் என்று கூறப்படுகிறது.

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

12 Responses to “சரத் பொன்சேகா கைது.. போலீசாரால் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்!”
  1. valaiyapathi says:

    வரம்பு மீறி ஆடினவனுக்கெல்லாம் இது தாண்டா கதி இன்னும் உன்னக்கு என்னவெல்லாம் நடக்க போகுது பார் நாயீ

  2. ராஜபக்ச நாயே, உன்னையும் ஒருநாள் தெருத்தெருவாக இழுத்துப் போவதை பார்க்கவேணும்டா. அதிலும் என் தலைவன் கண் முன்னால் அந்த கண்கொள்ளா காட்சி அரங்கேரணும்.

  3. கண்ணையா says:

    செய்தி உண்மையாய் இருக்கும் பட்சத்தில், இது நாகரீகமற்றதாக தெரிந்தாலும், நம் ஈழ சொந்தங்களுக்கு நேர்ந்த துயருக்கு பொன்சேகாவும் ஒரு முக்கிய காரணம் என்று நினைக்கும் போது ஏனோ அவர் மீது எந்த பரிதாபமும் எழவில்லை. ஆனால் ஒன்று. காலச் சக்கரம் சுழலும். ராஜபக்சேவுக்கும் இப்படி ஒரு நிலை வரலாம். ஆனானப்பட்ட சதாமுக்கே, அந்நிய நாட்டில் இருந்து ஆப்பு வரவில்லையா?

    மன்மோகன், சோனியா, கருணாநிதி கூட்டணியின் மன நிலை இப்போது என்னவாக இருக்கும்?

  4. sakthivel says:

    நான்காவது மாடிக்கு கொண்டுபோய் விருந்து வையுங்கோ….. சிங்களனுக்கு சிங்களனே வைத்துகொண்ட ஆப்பு…. இன்று பொன்சேகா, நாளை ஓநாய் ராஜபக்சே…..

  5. praba says:

    அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது பொய்யாகவில்லை. தெய்வத்தின் திருவிளையாடல் தொடங்கிவிட்டது ஜனாதிபதி தேர்தல் அறிவித்த உடனேயே… தமிழனாய் பார்க்கும் போது பொன்சேகா ராஜபக்சே எல்லாமே ஒன்னு தான்.

    Newton’s 3rd Law – For every action there will be a reaction…….

    ithu thamilanin neram…. poruththirunthu parppom intha nadagaththai.

  6. எத்தனையோ தமிழ் பெண்கள் தரதர..வென இழுத்து செல்லபட்டு கற்பழிக்கபட்டபோது வேடிக்கை பார்த்தவனை அப்படித்தான் இழுத்து செல்வார்கள்

  7. Mugundan says:

    :-) .. Good News… Expecting soon the same happened to the Dogs “Pakse brothers”..

  8. வினை விதைத்தவன் வினை அறுப்பான். நாளை இதே நிலைமை ராஜபக்சேவுக்கும் வரும்.

  9. pataas says:

    ஒழிந்தான் ஒரு எதிரி இனி அடுத்து அந்த தே…… பயலுக ராஜபக்ஷே நாய்ங்க ….உங்களுக்கும் இதே நிலைமை வரும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் தூ

  10. Muru says:

    சும்மா அதிருதில்லே

  11. s says:

    இந்த செய்தி பற்றி மேலதிக விபரம் ஏதும் தராமல் என்வழி மௌனம் சாதிப்பதேன்???

  12. r.v.saravanan says:

    கெடுதலுக்கு துணை நின்றால் தொடர்வது கெடுதலே………..

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)