நான் எவனுக்கும் பயப்படமாட்டேன்… மனதில் பட்டதைப் பேசுவேன்! – ரஜினி
Sunday, February 7, 2010 at 1:18 am | 3,517 views
நான் எவனுக்கும் பயப்படமாட்டேன்… மனதில் பட்டதைப் பேசுவேன்! – ரஜினி
நான் மனதில் பட்டதைப் பேசுவேன்… எப்போதும் எவனுக்கும் பயப்பட மாட்டேன் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமா துறையினருக்கு, சென்னையை அடுத்த பையனூர் அருகே குடியிருப்பு நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, முதல்வர் கருணாநிதி வழங்கி இருக்கிறார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல் அமைச்சர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், சனிக்கிழமை மாலை பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. விழாக்களுக்கு வரும்படி தங்களை மிரட்டுவதாக நடிகர் அஜீத் பேசிய பிறகு ஏற்பட்ட சலசலப்பு அடங்குவதற்குள் ரஜினி பேச அழைக்கப்பட்டார்.
விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினி பேசியதாவது:
“இது, ஒரு மகத்தான விழா. சாதாரண விழா அல்ல. இதில் கலந்துகொண்டதற்கு வாய்ப்பளித்ததற்காக, நன்றி சொல்லிக்கொள்கிறேன். இந்த நன்றியை எப்படி சொல்வது என்று தெரியவில்ல. மூன்று மாதங்களுக்கு முன்பு இதே இடத்தில் நடைபெற்ற விழாவில், சினிமா தொழிலாளர்களுக்கு வீட்டு மனை வழங்குவதாக கலைஞர் அறிவித்தார்.
அறிவித்ததோடு நிற்காமல், நிலத்தை அனுமதிப்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டார். பெப்சி தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் அவர் வீட்டு மனை அளித்து இருக்கிறார். இந்த நிலத்தில் எவ்வளவு சீக்கிரம் வீடுகளை கட்ட முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வீடு கட்டி, அதை நான் பார்க்கணும் என்று கலைஞர் சொன்னார். அதற்கு எப்படி நன்றி சொல்வது? வாழ்நாளில் அவரை மறக்கக்கூடாது.
இந்த நிலத்தில் கட்டப்படும் வீடுகள், கஷ்டப்படுகிற தொழிலாளர்களுக்கு போய்ச்சேர்ந்தால்தான் அவர் சந்தோஷப்படுவார். வசதியாக இருப்பவர்கள், கை நீட்டக்கூடாது.
உண்மையை பேசுவதில், சத்தியம் பேசுவதில், யாருக்கும் எவனுக்கும் நான் பயப்பட மாட்டேன். மனதில் பட்டதைத்தான் பேசுவேன். உண்மையை பேசும்போது, சிலர் மனம் புண்பட்டு இருந்தால், என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இல்லாதவர்களுக்கு கிடைத்தால்தான் கலைஞர் சந்தோஷப்படுவார்.
கஷ்டப்படாம எதுக்காவது ஆசைப்பட்டா…
மதுரைக்குப் போக வேண்டிய ஒருத்தன் பாக்கெட்டில் 350 ரூபாய் வைத்திருந்தான். மதுரைக்குப் போக 300 ரூபாய் பஸ் செலவு. மீதி 50 ரூபாயை சாப்பாட்டுக்கு வைத்திருக்கிறான். ஒரு ஹோட்டலுக்கு போகிறான். ஹோட்டலுக்கு வெளியில் சாப்பாடு இலவசம். அதற்கு பணம் உங்களோடு பேரன் கொடுப்பான் என்று எழுதியிருந்தது.
ஹோட்டலுக்கு போய் கேட்கிறான். என்னங்க சாப்பாடு இலவசம்னு போட்டிருக்கீங்க, பேரன் வந்து பணம் கொடுப்பான் என்று எழுதியிருக்கீங்க. எனக்கு 4 வயது பையன் இருக்கான். நான் சாப்பிட முடியுமா என்று கேட்கிறான். சாப்பிடுங்க. உங்கள் பேரன் வந்து பணம் கொடுப்பான் என்று ஹோட்டல் முதலாளி சொல்கிறார்.
ஹோட்டல் முதலாளி சொன்ன பின்னர் சிக்கன், மட்டன் அது இதுன்னு எவ்வளவு சாப்பிட முடியுமோ ஃபுல்லா சாப்பிடுறான். சாப்பிட்டு எழுந்து கிளம்பும்போது, ஹோட்டல் முதலாளி பணம் கேட்கிறார். சாப்பிட்டவன் சொல்கிறான், என் பேரன் வந்து பணம் கொடுப்பான்.. என்று. அது இருக்கட்டும். உங்கத் தாத்தா சாப்பிட்டத்துக்கு நீதானே பணம் கொடுக்கணும். அப்படின்னு சொல்லி பாக்கெட்ல இருந்த பணம், கையில் இருந்த வாட்ச், இடுப்பில் இருந்த வெள்ளி கயிறு உட்பட அனைத்தையும் ஹோட்டல் முதலாளி கழட்டிக்கொள்கிறார்.
இப்படித்தான் கஷ்டப்படாம நாம எதுக்காவது ஆசைப்பட்டா, நம்ம கையில் இருப்பது எந்த வழியில் போகும்னு தெரியாது. அதனால வசதியா இருக்கிறவங்க, கலைஞர் கொடுக்கிற வீட்டை ஏமாத்தி வாங்கினா. உங்க கையில இருக்கிறது எந்த வழியில போகும்னு உங்களுக்கே தெரியாது.
எப்படி எவ்வளவு காலம் அரசியலில் இருக்கிறீர்கள்?
அரசியல்ல இருக்கிறவங்களுக்கு இரும்பு மனுசும், வைர நெஞ்சும் கொண்டவங்களாதான் இருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனால் பராசத்தி படத்தை திரையில போட்டதும், இந்த காட்சியை ஒரே டேக்கில நடித்து முடிச்சுட்டாருனு சொல்லி தேம்பி அழுதிங்களே. இவ்வளவு மென்மையான மனசு கொண்ட நீங்க எப்படி இந்த அரசியல்ல இத்தனை நாளா இருக்கீங்க?
அமிதாப்பச்சன் சின்ன வயசுல ஜெயித்தது பெரிய விஷயமல்ல. அவரது 60வது வயதில் பெரிய கஷ்டம் வந்தது. வீட்டையே அடமானம் வைத்துவிட்டார். படமும் எதுவும் கிடைக்கல. அவ்வளவு கஷ்டப்பட்ட நேரத்திலும் யாருக்கிட்டேயும் உதவிக்காக நின்னதுல்ல. ஆனால் தனி மனிதனா நின்னு ஜெயிச்சு அந்த வீட்டை மீட்டதும் இல்லாம. அதே ஏரியாவுல்ல இன்னும் 2 வீடு வாங்கியிருக்காரு. அதுதான் அமிதாப் பச்சன்…” என்றார்.













ஆனால் அஜித் பேசினதுக்கு பின்னாடிதான் இன்னைக்கு தலைவர் பேசின பேச்சு.பூனைக்கு யாரு மணிகற்றதுன்னு நெனச்சப்போ தல சும்மா கலகிட்டாறு.
சூப்பர் ஸ்டாரின் பேச்சின் முழு விவரம் கொடுங்களேன். ப்ளீஸ்
ரஜினி ஒரு ************ பேசனா யாரு இந்த நாட்டுல கேப்பாங்க
தலைவர் ஸ்பீச் வீடியோ ப்ளீஸ்
please delete tamilan indecent comment..or i have to give bad reply to him..
உண்மையை பேசினால் சிலருக்கு வலிக்கத்தான் தோன்றும் ….அதனால் அந்த
உண்மையை பேசுபவர்களுக்கு மட்டும் வருத்தம் தெரிவிச்சார் ..மற்றபடி அந்த
சிலருக்கு (ஓசியில் பிச்சை கேட்பவர்களுக்கு (வசதி இருந்தும் வீடு கொடு )
வருத்தம் தேவை இல்லை தலைவா ….
மற்றவர்கள் மன்னிப்புனு சொன்ன வருத்தம்னு சொல்ர உலகம் ..
நீங்கள் வருத்தம்னு சொன்ன மன்னிப்பு கேட்டார்னு சொல்ர உலகம் ..
நீங்கள் மன்னிப்புனு சொன்ன காலிலே விழுந்து கேட்டார்னு சொல்ர உலகம் வெகு விரைவில் இல்லை தலைவா !!!!
திரை உலகத்துக்கு நன்மைகள் செய்ய கலைஞர் இருக்கிறார் ..
இறை உலகத்துக்கு நன்மைகள் செய்ய நீங்கள் இருகிறிர்கள் …
மற்ற ஏழை மக்களுக்கு நன்மை செய்ய யார் ?வருவார்களோ …..
என்று தான் துடைப்பார்கள் ஏழையின் கண்ணீரை ..???
அது தானா உரையுட்டும் ……
அது ஒன்றும் இல்ல……….எந்திரன் பட வெளியீட்டு வேளையில் இறங்கிவிட்டார் ரஜனி. அப்புறம், அப்புறம் என்ன ? கடைசியா சொல்வார் , எந்திரன் படத்த பாருங்க , அதுல விடை இருக்கும்ன்னு சொல்வாரு… இது அவரோட repeated மார்க்கெட்டிங் technic .
தலைவா….!
திரை நட்சத்திரங்களுக்கு பிரச்சனை என்றால் முதல்வரை நேரில் சந்திக்க முடியும்….. அதற்கு நீங்களும் கூட செல்வீர்கள்…. மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால்…. அந்த மக்களே நேரில் சென்று முதல்வரிடம் உதவி கேட்க முடியுமா…..? திரை நட்சத்திரங்களும் சாதாரண மக்கள்தானே…. அவர்களுக்கு நடிப்பு என்பது ஒரு தொழில்…. அப்படினா மற்ற தொழில் செய்யும் மக்களுக்கு கிடைப்பது தான் அவர்களுக்கும் கிடைக்கிறது….. அப்படி இருக்க திரை உலகினருக்கு மட்டும் ஏன் அதிக அக்கறை காட்ட வேண்டும்…..? அரசாங்கத்தின் சலுகை எல்லா மக்களுக்கும் போய் சேரனும்… கேட்டுக்கறேன் தலைவா…….
//நான் மனதில் பட்டதைப் பேசுவேன்… எப்போதும் எவனுக்கும் பயப்பட மாட்டேன் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்//
கொஞ்ச நாளைக்கு முன்னாலே, ஒகேனக்கல் பிரச்சினையிலே, அதை கிளப்பின பக்கத்து மாநிலத்தை சேர்ந்த ஆட்களை உதைக்கனும்னு சொல்லிட்டு, அப்புறம் குசேலன் ரிலீஸ் நேரத்துலே ‘மன்னிப்பு’… இல்ல.. இல்ல.. ‘வருத்தம்’ தெரிவிச்சது ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது.
“டேய் ஆப்பக்காரா, உனக்கு அறிவே கிடையாதா? உனக்கு இப்போ சரி ஆப்பு இருக்குடி”.
tamilan says:
February 7, 2010 at 4:28 am
ரஜினி ஒரு ************ பேசனா யாரு இந்த நாட்டுல கேப்பாங்க
——————————————————————————————
your grandmothers grandmother has slept with somebody from africa and your mother came from that origin. Please change the name tamilan from your name. blo***************.
//ஆப்பக்காரன் says:
“டேய் ஆப்பக்காரா, உனக்கு அறிவே கிடையாதா? உனக்கு இப்போ சரி ஆப்பு இருக்குடி”/
அறிவா !!! அதை உங்களிடம் எதிர்ப்பார்த்தால் நாங்கள் தான் அறிவில்லாதவர்கள் !!!
தலைவர் மீது பொறம்மை படுபவர்கள் அவர் இடத்தில நிங்கள் இருந்தால் என்ன அட்டம் போடுவிர்கள் yosiyinkal
Srinivas says:
//அறிவா !!! அதை உங்களிடம் எதிர்ப்பார்த்தால் நாங்கள் தான் அறிவில்லாதவர்கள் !!!//
ஆரம்பிசிட்டாருப்பா! அகில உலக அறிவு ஜீவிகள் சங்க தலைவரு!
உங்க சரித்திரத்துல, பூகோளத்துல, என்னைக்காவது நேரடியா point ஐ பத்தி மட்டும் பேசி இருக்கீங்களா? அது சரி, பதில் இருந்தா இந்நேரம் வரிஞ்சிகட்டி வந்திருக்குமே. சட்டியில இருந்தா தானே அகப்பையில வரும். பதில் இல்லேன்னா இப்படி தான் சைடு டிஷ்ஐ மெயின் டிஷ் ஆக்கிடனும்.
மறுபடியும் நான் என்ன சொல்றேன்னா, “கொஞ்ச நாளைக்கு முன்னாலே, ஒகேனக்கல் பிரச்சினையிலே…………… ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது.”
/நான் மனதில் பட்டதைப் பேசுவேன்… எப்போதும் எவனுக்கும் பயப்பட மாட்டேன் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்//
கலைஞரை பக்கத்தில் வைத்துக் கொண்டு இதை பேசியதை பார்த்தால், இது கலைஞருக்கான message போல தான் தோன்றுகிறது. உங்க தைரியமே தனி தான். காரணம் இல்லாம மதுரைக்கு பஸ், ஹோட்டல்னு எல்லாம் உதாரணம் சொல்ல மாட்டீங்க. அழகிரி பக்கத்துல மதுரைல தான் இருக்காரு. பாத்து பகுமானமா நடந்துக்குங்க. அம்புட்டுதேன்.
கஷ்டப்படாம நாம எதுக்காவது ஆசைப்பட்டா, நம்ம கையில் இருப்பது எந்த வழியில் போகும்னு தெரியாது. அதனால வசதியா இருக்கிறவங்க, கலைஞர் கொடுக்கிற வீட்டை ஏமாத்தி வாங்கினா. உங்க கையில இருக்கிறது எந்த வழியில போகும்னு உங்களுக்கே தெரியாது.
சரியான நெத்தியடி …………
என்னடா அநியாயமா இருக்கு …ஆத்து தண்ணி தானே நீ குடி நான் குடி ந்னு இந்த கருணாநீதி சொல்றாரு….மக்கள் வரி பணத்தை வாரி வாரி இறச்சாரு.இப்போ சினிமாகாரனுக்கு இறைக்க ஆரம்பிச்சிட்டாரு..இதை கேட்க்க இந்த மனுசனுக்கு துப்பு இல்ல..தைரியம் இல்ல..வேலை இல்லா இளைஞர்கள் மலிந்த இந்த நாட்டுல சினிமா காரனுக்கு நிலம் கொடுத்ததும் இல்லாம அதை கட்டியும் கொடுக்கறிங்க…அரசு உழியன் அதான் அந்த சோம்பேறி பயலுகளுக்கு வாரி வாரி வழங்குனது போதாதா…இப்ப புதுசா இது வேறயா…
நானும் நியும் ஒண்ணுன்றிங்க…அடிச்சுக்காம போறுமையா சாப்புடு ந்னு சொல்றிங்க…சினிமா தொழிலாளி மட்டும் நேர்மையா நடந்துக்கணுமாம்…காசு இருக்கிறவன் கை நீட்ட கூடாதாம்.அப்ப கலைஞர் மந்திரி பதவிக்கு டெல்லி போய் எத்தனை தடவை கை நீட்டி இருப்பாரு.அப்ப சத்தியம் பேசுர இவரு எவனுக்கும் பயப்படாத இவரு ,குரல் கொடுக்க வேண்டியதுதானே…வாழை பழம் கொடுத்தது மட்டும் இல்லாமல் அதை உறித்தும் கொடுக்கும் இந்த செயல்(வீடு கட்டியும் கொடுப்பது)மோசமான அரசியலுக்கு உதாரணம்
இது சினிமாகாரர்கள் கவர்ச்சியை பயன்படுத்தி அல்லது மக்களுக்கு காட்டி…..பாரு சினிமாகாரன் பூரா கலைஞர் பக்கம் என பேச வைப்பது…இதன் மூலம் எப்பவும் திருவிழா நடத்தி கொண்டே இருந்தால் மக்களுக்கு மற்ற விசயங்கள் மறந்து போகும் அல்லவா…அந்த உத்தி..
சினிமா நடிகர்கள் ரஜினி…கமல்,,,,விஜய்….சூர்யா….இவர்கள் நினைத்தால் ஐநூறு வீடுகள் கட்ட முடியாதா….சினிமாவில் சம்பாதித்த இவர்கள் சினிமா அடிமட்ட தொழிலாளர்களுக்கு உதவ கூடாதா ..இதில் எதிர் கட்சிகள் கருத்து தெரிவிக்க முடியாது.தெரிவித்தால் அவர்கள் சினிமாகாரர்களுக்கு எதிரி ஆகிவிடுவார்கள் என்ன கொடுமை..இதில் வேகம் காட்டும் கலைஞர் ஏன் மற்ற விசயங்களுக்கு காட்டுவதில்லை ?
இதில் அஜித் மட்டுமே சுய மரியாதை சிங்கம்…என்னை நிகழ்ச்சிக்கு வர சொல்லி கட்டாயபடுத்தினார்கள் என உண்மையை ஒப்பு கொண்டார்…
இதுல தான் சொல்றார் ரஜினி கருணாநிதி யை பார்த்து …..அய்யா.. உங்களுக்கு எப்படி இவ்வளவு இளகின மனசு …..ன்னு……அட போய்யா ஒண்ணும் தெரியாத ***…நீ..
thalaiva unga intrest kalaiulagam mela mattum thana? plz neja ulaga makkal methum erukattume…