நடிகர்களை மிரட்டுகிறார்கள்… குமுறிய அஜீத்… ரஜினி கைதட்டல்!
Sunday, February 7, 2010 at 12:50 am | 3,091 views
நடிகர்களை மிரட்டுகிறார்கள்… குமுறிய அஜீத்… ரஜினி கைதட்டல்!
நிகழ்ச்சிகளுக்கு கட்டாயம் வரவேண்டும் என்று திரையுலக அமைப்பினர் நடிகர்களை மிரட்டுகிறார்கள். இது நியாயமா என்று முதல்வர் முன்னிலையிலேயே குமுறினார் நடிகர் அஜீத்குமார்.
அவர் பேசி முடிந்ததும் ரஜினி எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினார்.
அதே நேரம் அவரது பேச்சு பெரும் பரபரப்பை உண்டாக்கிவிட்டது.
தமிழ் சினிமாக்காரர்களுக்கு, சென்னையை அடுத்த பையனூர் அருகே குடியிருப்பு நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல்வருக்கு கருணாநிதிக்கு தமிழ் திரையுலகின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், இன்று மாலை பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் கருணாநிதி 5.10 மணிக்கு விழா அரங்கிற்கு வந்தார்.
அவருடன், நடிகர்கள் அமிதாப்பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் வந்தனர். முதல்வர் கருணாநிதியை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் ஆகியோர் வரவேற்று அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தனர்.
விழாவில் நடிகர் அஜீத் பேசுகையில், “முதல்வர் கலைஞர் மீது நான் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருப்பதால் வந்துள்ளேன். ஆனால் சில நிகழ்ச்சிகளுக்கு நடிகர்கள் கட்டாயம் வந்தே தீர வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். காவேரி பிரச்சனை போன்ற அண்டை மாநிலங்களுடன் பிரச்சனை என்றால் நடிகர்கள் வந்து போராட வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். ஆனால் நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தால் எதிர்க்கிறார்கள்.
ஆனால் எனக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. நடிகர்கள் யாரும் அரசியலுக்கு செல்ல வேண்டாம். நடித்து முன்னேறுங்கள். நடிகர்களுக்கு வரும் மிரட்டல்களை முதல்வர்தான் தீர்க்க வேண்டும்.
நடிகர்களை நடிக்க விடுங்கள். அரசியலையும் சினிமாவையும் ஒன்று சேர்க்காதீர்கள். சினிமாவில் அரசியலை புகுத்தாதீர்கள். காவேரி பிரச்சனை போன்ற அண்டை மாநிலங்களுடனான பிரச்சனையை தீர்க்க அரசாங்கம் இருக்கிறது. எங்களைப் போன்ற நடிகர்களால் என்ன செய்ய முடியும். யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களை அனுசரித்துத்தான் செல்ல முடியும். மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் போராடுவார்கள்.
தமிழ் திரையுலகத்துக்கு கலைஞர் செய்துள்ள உதவிக்கு, நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று எண்ணத்திலும், நன்றி விசுவாசத்திலும்தான் நான் இங்கு வந்துள்ளேன்” என்றார்.
நடிகர் அஜீத்தின் இந்தப் பேச்சுக்கு எழுந்து நின்று கைதட்டினார் ரஜினி (மற்ற நடிகர்கள்-பிரமுகர்கள் முகத்தி்ல் ஈயாடவில்லை).
விசி குகநாதன் கண்டிப்பு!
வி சி குகநாதன் உடனே எழுந்து நின்று அஜீத்தின் இந்தப் பேச்சைக் கண்டிக்கும் விதத்தில் பேசினார். நாங்கள் யாரும் அஜீத்தையோ மற்ற நடிகர் நடிகைகளை மிரட்டவில்லை என்றும் கூறினார்.
கலைஞர்கள் விருப்பம் இருந்தால் வரலாம்.
பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இதுபோன்ற திரையுலகம் சார்ந்த விழா என்றால் திரைத்துறையில் இருக்கும் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கின்றனர். அப்போது அந்த நிகழ்ச்சியைப் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது.
திரையுலகில் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காகத்தான் இதுபோன்ற விழாக்களில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோமே தவிர, நாங்கள் யாரையும் மிரட்டவில்லை…” என்றார்.
நடிகர்களை யாரும் கட்டாயப்படுத்தவோ மிரட்டவோ முடியாது! – சரத்
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் பேசுகையில், “திரையுலகில் இருக்கும் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதைக் காட்டத்தான் இதுபோன்ற விழாவில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நடிகர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் யாரையும் நிர்பந்திக்கவில்லை. யாரையும் மிரட்டவில்லை. நடிகர்களை யாரும் மிரட்ட முடியாது. இந்த விழா கலைஞருக்கு நன்றி சொல்லும் விழா. கருத்து சொல்லுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. இந்த விழாவில் அஜீத் பேசும்போது அவருடைய சொந்த கருத்தை கூறியுள்ளார். இதை பத்திகையாளர்கள் திரை திருப்பி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழ் சினிமா துறையினருக்கு, சென்னையை அடுத்த பையனூர் அருகே குடியிருப்பு நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, முதல்வர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகம் எடுக்கும் நன்றி தெரிவிப்புக் கூட்டம் இது. இதில் அனைத்து திரைத் துறையினரும் கலந்து கொண்டால்தான் சிறப்பாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தோம். அதன்படி அனைவரும் கலந்துகொண்டதற்கு… நன்றி,” என்றார்.
நடிகர் சங்கச் செயலாளர் ராதாரவி போன்றோர் அஜீத்துக்கு ஆறுதல் கூறும் விதத்தில் பேசினார்.













well done ajith. You had the guts to tell the truth. I am sure, Tamil people are fed up with such praising functions again and again. Huge money is made through these functions by television rights and ads. Plenty of usual dance sequences with enough obscenity reaching every house. If DMK govt is doing something, it is from peoples money and not theirs. so ,it is their duty to do this. We have to praise them, but not necessarily by functions.
//விசி குகநாதன் கண்டிப்பு!
பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இதுபோன்ற திரையுலகம் சார்ந்த விழா என்றால் திரைத்துறையில் இருக்கும் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கின்றனர். அப்போது அந்த நிகழ்ச்சியைப் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது//
குகநாதன் நீங்க சொல்வது சரி தான்! ஆனால் அவர்கள் எல்லாம் உங்களை போல மாதாமாதம் விழா எடுப்பதில்லையே!
எபோதுமே எதுவுமே அது நடக்க வேண்டிய தேவை அவசியம் இருந்து நடந்தால் தான் அதற்க்கு மதிப்பு.. தொட்டதற்க்கெல்லாம் விழா எடுத்தால் அப்புறம் இப்படி தான் இருக்கும்!
வந்துட்டாருயா உதாரணம் காட்ட! போங்கய்யா போய் ஒரு நல்ல படம் எடுக்கிற வழிய பாருங்க..
தல படத்துலதான் சொதப்பல்! நேருல மிரட்டல்!
he is a gentleman who will able to stand on own support,superstar always bless the people who fight for right ,superstar knows ajith speech will be harmful to members in flim society.
so only he stand and claps for ajith speech, by telling i’m behind not only for ajith ,i’m behind the brave alone person who not only bother about him ,also bother about total people’s wealth..
welldone ajith!!!!!!!
well suported to ajith from our superstar……..the one man flim industry
The personality transformation to ajith is unbelievable. This man has been massively influenced by our super star. I reckon, he may be the sishyan of our thalivar. I may be wrong or right?
அஜித்தின் இந்த தைரியம் பாராட்டுக்குரியது.
ஆனால் கொஞ்ச நாள் கழித்து ‘மன்னிப்பு’ …இல்லை… இல்லை… ‘வருத்தம்’ தெரிவிக்காமல் இருந்தால் சரி.
தல படத்துலதான் சொதப்பல்!…….. நேருல மிரட்டல்!
superb indeed ur right…………ur much better better than era in real life.
அதெல்லாம் இருக்கட்டும், எப்போ முல்லைப் பெரியார் அணைக்காகத் தமிழ்த் திரையுலகம் போராட்டம் நடத்தி அதை மீட்கப் போகிறது. அதில் கட்டாயம் ஜெயராம் கலந்து கொள்ள வேண்டும்.
அஜித் சார் அசக் ரைட் . பெகுசே ஹி ச ஒன்லி அன் அக்டோர் சோ டோன்ட் காம்ப்ளே him
வெரி குட் அஜித் சார். பயப்பட வேண்டாம். ரஜினி சார் இருக்கார்
நியாயத்தை யார் பேசினாலும் தலைவர் துணை இருப்பார்.
சூப்பர் அஜித்……
தல பேச்சுக்கு தலைவர் கை தட்டினார் தில் இருப்பவர்கள் மட்டுமே பேசவும் கை தட்டவும் முடியும்
Excellent fearless Speech. Congrats for Ajith. My Appreciation to Rajni who stood up for him and encouraged such speech.
வெளிப்படையான உங்கள் பேச்சிற்கு வெரி குட் அஜித்
அஜித்தை பாராட்டிய ரஜினி அவர்களுக்கு நன்றி
அஜீத் சார் மனதில் பட்ட நியாய தர்மங்களை தயங்கம தைரியாம சொல்லூங்க நாங்க இருக்கோம். உங்கள் ரசிகர்கள்
வெளிப்படையான உங்கள் பேச்சிற்கு வெரி குட் அஜித்
அஜித்தை பாராட்டிய ரஜினி அவர்களுக்கு நன்றி
///நடிகர்களை நடிக்க விடுங்கள். அரசியலையும் சினிமாவையும் ஒன்று சேர்க்காதீர்கள். சினிமாவில் அரசியலை புகுத்தாதீர்கள். காவேரி பிரச்சனை போன்ற அண்டை மாநிலங்களுடனான பிரச்சனையை தீர்க்க அரசாங்கம் இருக்கிறது. எங்களைப் போன்ற நடிகர்களால் என்ன செய்ய முடியும். யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களை அனுசரித்துத்தான் செல்ல முடியும். மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் போராடுவார்கள்///
இதுதான் நிதர்சனம்.காவேரிப் பிரச்சனைக்கு நடிகர்கள் போராடி என்ன பயன் ? ரஜினி பேசவேண்டியதை அஜீத் பேசிவிட்டார்.தலயின் தைரியம் பாராட்டுக்குரியது. நிறைய பேருக்கு ஆப்பு.நிறைய பேருக்கு நிம்மதி.
/நடிகர்களை நடிக்க விடுங்கள். அரசியலையும் சினிமாவையும் ஒன்று சேர்க்காதீர்கள். சினிமாவில் அரசியலை புகுத்தாதீர்கள்//
அதாவது அரசியலையும், சினிமாவையும் தேவை படும் போது ஒன்று சேர்த்துக் கொள்வதற்கும், தேவை இல்லாத போது (அல்லது பிரச்சினை என்று வரும் போது) சேர்க்க வேண்டாம் என்று சொல்வதற்கும் நடிகர்களுக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது. அப்படி தானே அஜித்?
அரசியலையும், சினிமாவையும் ஒன்று சேர்க்க வேண்டாம் என்று, சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த நடிகர்களை பார்த்து சொல்லலாமே? நடிகர்கள் மட்டும் தங்கள் வசதிக்கு அரசியலை பயன் படுத்திக்கொள்ளலாம் ஆனால் பிரச்சினை என்று வரும் போது மற்றவர்கள் அதை ஒன்று சேர்க்கக்கூடாது. என்ன நியாயம் இது?
M.G.R, சிவாஜி, விஜயகாந்த், இன்னும் பலர் அரசியலை தங்கள் வாழ்க்கையின் முக்கிய பங்காகத் தான் வைத்திருந்தார்கள். ஏன், இன்றும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று எதிர்பார்ப்பில் காத்திருக்கும் உள்ளங்கள் எத்தனை, எத்தனை?
அஜித், எனக்கு என்னவோ நீங்கள் ஒரு வேளை பிரச்சினையை எதிர் கொள்ள தெரியாமல் புலம்புகிறீர்களோ என்று தோன்றுகிறது. இலங்கை பிரச்சினையின் போதும் இதே கருத்தை தான் நீங்கள் தெரிவித்தீர்கள். உங்களுக்கு இந்த பிரச்சினையை அணுகத் தெரியவில்லை என்றே தோன்றுகிறது. இத்தனை வருடமாக ரஜினியும், கமலும் ஆட்சிகள் மாறினாலும் எத்தனை சாமர்த்தியமாக அனைவரையும் சமாளித்துக் கொண்டு அதே சமயம் தங்கள் அந்தஸ்தையும் எத்தனை மரியாதையுடன் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நேராத நெருக்கடிகளா? பாபா படத்தின் போது ரஜினிக்கும், விருமாண்டி படத்தின் போது கமலுக்கும் அரசியல்வாதிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் கொஞ்சமா? ஒரு நாளும் அவர்கள் உங்களை போல் புலம்பியதில்லையே. யார் மிரட்டினாலும் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ என்ற ஆங்கில பெயரை மாற்றி தமிழில் பெயர் வைக்க முடியாது என்று தைரியமாக அறிவித்த கமலும் அன்று உங்கள் அருகில் தான் இருந்தார்.
கற்றுக் கொள்ள வேறு எங்கும் போக வேண்டாம். ரஜினியும், கமலும் போதும்.
நடிகர்களை மிரட்டுகிறார்கள் என்று குமுறியதை காட்டிலும், “என்னை யாரும் மிரட்ட முடியாது” என்று சொல்லியிருந்தீர்கள் என்றால், உங்கள் பாணியிலேயே சொல்ல வேண்டும் என்றால் “அது!!!”.
தல, இத அப்படியே மெயின்டன் பண்ணுங்க, மனசில பட்டதை மறைக்காம பேசுகிறவன் தான் மனிதன், நீங்க “அசல்” மனிதன் என்று நிரூபித்து விட்டீர்கள்.( அஜித் இன் இமெயில் முகவரி யாருக்காவது தெரிந்தால் இதை பார்வேட் பண்ணுங்க ப்ளீஸ்)
ajith spoke the truth without fear but i don’t know these politicians for this
ajith spoke the truth without fear but i don’t know these politicians do for this
ajith spoke the truth without fear but i don’t know what these politicians do for this
ajith sir, neenga sonnathu 100% correct, ipppa kalaingar tv unga peyar illaye (advertisement la ) …! ithula irunthu theriyalaiya …!
தர்மம் தலை காக்கும் , இது உண்மை தான்..!
அஜித் சார், உங்க தைரியம் இனி சினிமாலே உள்ள எல்லா ருக்கும் வரணும்…! அல்டிமேட் ஸ்டார் நீங்க அலடிக்காத ஸ்டார் …!