முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

முதல்வர் கருணாநிதிக்கு தங்க பூமி நினைவுச் சின்னம்.. திரையுலகம் பாராட்டு!

Sunday, February 7, 2010 at 12:44 am | 719 views

முதல்வர் கருணாநிதிக்கு தங்கத்தில் நினைவுச் சின்னம்.. கலையுலக விஞ்ஞானி பட்டம்!

சினிமா ‘விண்மீண்கள்’ இன்று தங்கள் ‘பாசத் தலைவர்’ முதல்வர் கருணாநிதிக்கு நடத்திய பாராட்டு விழாவில் அவருக்கு தங்கத்தில் நினைவுப் பரிசு வழங்கி மகிழ்வித்தனர். மேலும் கருணாநிதியை கலையுலக விஞ்ஞானி என்று பட்டம் சூட்டி மகிழந்தனர்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி நடுநாயகமாக வீற்றிருக்க வலது பக்கம் ரஜினியும் இடது பக்கம் அமிதாப்பும் அமர்ந்திருந்தனர்.

மாலை 5.30 மணிக்கே துவங்கிய கலை நிகழ்ச்சிகளை ரசித்து மகிழந்தார் முதல்வர். அமிதாப்பும் கலை நிகழ்ச்சிகளை மிகுந்த ஆர்வத்தோடு ரசித்தார். ரஜினி மற்றும் அமிதாப்பிடம் கலைநிகழ்ச்சிகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்த வண்ணம் இருந்தார்.

விழாவில், தமிழ் சினிமாக்காரர்களுக்கு கருணாநிதி செய்துள்ள நன்மைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கு தங்கத்திலான நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

கருணாநிதி கலையுலக விஞ்ஞானி என்று திரையுலகினர் பாராட்டுத் தெரிவித்தனர்.

முன்னணி நடிகர் நடிகைகளின் நடனம், கமல் ஹாஸன் நடத்திய நாடகம், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வாலி எழுதி நடிகர் நடிகைகள், பாடகர்கள் பாடிய துதிப் பாடல் என கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.

அமிதாப் புகழாரம்

அமிதாப் பச்சன் பேசுகையில், கருணாநிதி மிகச் சிறந்த மனிதாபிமானி என்றும், திரையுலகினருக்கு அவரைப் போல நன்மை செய்தவர் யாருமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “தமிழ் சினிமா எப்போதும் ஒழுக்கம் நிறைந்ததாகவும், திறமை மிக்கதாகவும், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியும் வருகிறது

இந்தியாவில் சிறந்த படங்கள் எடுக்கப்படும்போதெல்லாம், அவற்றில் பெரும்பாலானவை தமிழகத்திலிருந்துதான் வெளிவந்திருக்கின்றன. தமிழ் திரையுலகில் உள்ள இதுபோன்ற திறமைகள் மும்பை படவுலகத்தில் கூட இல்லை. அதை தமிழ் திரையுலகத்திடம் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த உணர்ச்சிகரமான மாலைப் பொழுதில் உங்களது முதல்வரின் பார்வை மற்றும் பேனா வழியாக ஒரு சிறப்பான கலைப்பயணத்தை நான் பார்க்கிறேன்.

முதல்வரது பேனா வலிமையானது… தமிழகத்தில் சிறந்த திரைப்படங்கள் வெளி வருவதற்கு மட்டும் அது காரணமாக இல்லை. தமிழகத்தில் ஒரு சமூக மாற்றத்தையே கொண்டு வந்திருக்கிறது. அதற்கு உங்களுக்கு நாங்கள் பெரிதும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்,” என்றார்.

அவதார கலைஞர்… ! – கமல்ஹாஸன் பேச்சு

கமல்ஹாஸன் பேசுகையில், “இந்த விழாவில், மீண்டும் நான் அடக்கத்தை கற்றேன். நடிகர் திலகம் சிவாஜி வசனம் பேசி நடித்த அந்த காட்சியை திரையில் பார்த்தபோது, நான் எல்லாம் எங்கே? என்று நினைத்தேன்.

அதைப் பார்த்து என் கண்கள் பனித்தன. திரும்பி பார்த்தால், ஒரு குழந்தை (கருணாநிதி) தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்தது. பதவியை எல்லாம் பார்க்காமல், நட்புக்காக அவர் கண்ணீர் விட்டது என்னை உருக்கியது.

பகுத்தறிவுவாதி, அதுவும் விடுதலை என்று பெயர் வைத்திருப்பவர், கலைஞர் ஒரு அவதாரம் என்றார். என்ன அவதாரம் என்பதை ரஜினி தெரிவிப்பார் என்றார். எங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக உருக்கி எடுத்த கலைஞர் அவதாரம் அவர்.

அவரிடம் குடியிருக்க நிலம் கேட்டோம். தந்தார். எந்த ஒரு விழாவிலும் அவருக்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.

இந்த சரித்திரத்துடன் கலக்கும் தகுதி எனக்கு இருக்கிறதோ, இல்லையோ, கலந்துகொள்ள அழைத்ததற்காக நன்றி. வாழ்த்தும் வயதும், தகுதியும் இல்லை. என் அருகில் அமர்ந்திருந்த அமிதாப்பச்சன், கலைஞருக்கு 87 வயதா? என்று ஆச்சரியப்பட்டார். அவருடன் பேசிப்பாருங்கள். 27 வயதாக மாறுவார் என்றேன். அமிதாப், எங்கள் குடும்பத்தில் ஒருவர். மூத்த அண்ணன்…” என்றார்.

கலைஞருக்கு சிலை… விஜய் ஐஸ்!

நடிகர் விஜய் பேசியதாவது:

“கலைஞர் பல வருடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு பாடலில், எல்லோருக்கும் இருக்க இடம் வேண்டும் என்று ஒரு வரி வரும். இன்று அந்த வரியை அவர் நிறைவேற்றி விட்டார்.

சினிமா தொழிலாளர்களுக்கு வீட்டு மனை வழங்குவது சாதாரண விஷயம் அல்ல. நம் கனவு நிஜமாகி இருக்கிறது. சினிமா மீதும், சினிமா கலைஞர்கள் மீதும் அவர் எவ்வளவு பாசம் வைத்து இருக்கிறார் என்பதை இது காட்டுகிறது.

வீடு கட்டப்படும் இடத்துக்கு, ‘கலைஞர் நகர்’ என்று பெயர் வைத்தால் மட்டும் போதாது. அந்த இடத்தில், அவருடைய சிலையை வைக்க வேண்டும். அவருடைய 100-வது வயதில், இதேபோல் ஒரு விழா எடுத்து, அவருடன் சேர்ந்து அந்த சிலையை நான் ரசிக்க வேண்டும்”, என்றார்.

இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோரும் விழாவில் பேசினர்.

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

4 Responses to “முதல்வர் கருணாநிதிக்கு தங்க பூமி நினைவுச் சின்னம்.. திரையுலகம் பாராட்டு!”
  1. thava says:

    செ‌ங்க‌ல்ப‌ட்டு ‌சிற‌ப்பு முகா‌மி‌ல் அடை‌த்து வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ஈழ‌த் த‌மி‌ழ் ஏதிலிக‌ள் ‌மீது காவல் துறையினர் தாக்கியதில் படுகாயமடைந்தவர்களின் பட்டியல் செ‌ங்க‌ல்ப‌ட்டு ‌சிற‌ப்பு முகா‌மி‌ல் அடை‌த்து வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ஈழ‌த்த‌மி‌ழ் ஏதிலிக‌ள் ‌மீது காவல்துறையினர் தாக்கியதில் படுகாயமடைந்தவர்களின் பட்டியல் கீழே அளிக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் அனைவரும், காவல் துறையினரின் மொழியில் கூறுவதென்றால், லாடம் கட்டுதல் (குப்புற படுக்க வைத்து உள்ளங்கால், உடலின் மற்ற இடங்களில் தொடர்ந்து நீண்ட நேரம் தடியால் அடிப்பது) உட்படுத்தப்பட்டுள்ளனர்.

    1) ரமணன் (வயது 33),

    கால், தலை, முதுகு, கை, புட்டம் ஆகிய இடங்களில் காயம். பறிக்கப்பட்ட பணம் ரூ.3,500

    2) பத்மராஜா (வயது 28),

    கால், புட்டம், கை, பாதம், தொடை ஆகிய இடங்களில் காயம். பறிக்கப்பட்ட பணம் ரூ.5000

    3) ஜெயமோகன் (வயது 28),

    கழுத்து, புட்டம், கால் ஆகிய இடங்களில் காயம்.

    4) மிதுரன் (வயது 30)

    வலது கை, புட்டம், முதுகு, இடது தொடை ஆகிய இடங்களில் காயம். பறிக்கப்பட்ட பணம் ரூ.3,700

    5) பிரதீபன் (வயது 33)

    கை, முதுகு, புட்டம் ஆகிய இடங்களில் காயம்.

    6) அருள் (வயது 25)

    புட்டம், இடது தோள் ஆகிய இடங்களில் காயம்.

    7) கிரிதாஸ் (வயது 35)

    புட்டம், முதுகு, இடது கை ஆகிய இடங்களில் காயம்.

    பரமேஸ்வரன் (வயது 35)

    தோள்பட்டை, புட்டம், முழங்கால் ஆகிய இடங்களில் காயம். பறிக்கப்பட்ட பணம் ரூ.800

    9) அமலன் (வயது 33)

    புட்டம், முதுகு ஆகிய இடங்களில் காயம். கை முறிவு. பறிக்கப்பட்ட பணம் ரூ.3.700

    10) கிருஷ்ணநீதன் (வயது 26)

    புட்டம், கை, கால் ஆகிய இடங்களில் காயம்.

    11) கெங்காதரன் (வயது 43)

    தலை, முகம், தோள்பட்டை, புட்டம், முதுகு, வலது கால் ஆகிய இடங்களில் காயம்.

    12) பிரதிதாசன் (வயது 24)

    புட்டம், கை, முதுகு, கால் ஆகிய இடங்களில் காயம்.

    13) ருக்ஸான் (வயது 26)

    புட்டம், தலை, இடுப்பு, முதுகு ஆகிய இடங்களில் காயம்.

    14) சேகர் (வயது 30)

    தலை, கை, கால், புட்டம் ஆகிய இடங்களில் காயம். பறிக்கப்பட்ட பணம் ரூ.700

    15) செல்லக்குமார் (வயது 33)

    ஏற்கனவே கால் இல்லாதவர். கால், கை, தலை, புட்டத்தில் பலத்த காயம். பறிக்கப்பட்ட பணம் ரூ.3000

    குறிப்பு : ரமணன் என்பவ‌ரி‌ன் ஆண் குறியை காலணி [ஷூ]அணிந்த காலால் மிதித்துள்ளார்கள்.

  2. S.Vijay says:

    அடுதவளுடைய புருஷனை அபகரித்து ஒரு மாநில முதலமைச்சருக்கு முன்னாலே ஆட்டமும் போடுகிற கூத்து எ ல்லாம் தமிழகத்திலே தான் நடக்கும், இதையும் கூட கருணாநிதியின் சாதனை பட்டியலில் சேர்க்கலாம். இந்த சாதனைக்காக கூத்தாடிகள் எல்லாரும் சேர்ந்து மீண்டுமொரு பாராட்டுவிழா நடத்த வேண்டும்
    **************************************************************************************************************
    வினோ, இது உண்மையா?

  3. Saravanan_atps says:

    //முதல்வர் கருணாநிதி பற்றி வாலி எழுதிய துதிப் பாடல் ஒன்றை நடிகர்கள் ரஜினிகாந்த் , கமல்ஹாஸன் உள்ளிட்ட கலைஞர்களும், ஏராளமான பாடகர்களும் இணைந்து பாடவிருக்கிறார்கள்.//
    இது போன்ற செய்தி இரண்டு மூன்று நாட்களுக்கு முன் வந்தது. முதல்வர் பாராட்டு விழாவில் இது நடந்ததா?.. தலைவர் பாடினாரா?..

  4. envazhi says:

    முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவை அஜீத் பேச்சுக்கு முன், அஜீத் பேச்சுக்குப் பின் என்று பிரித்துக் கொள்ளலாம். மேடையில் அந்தப் பாட்டு பாடப்பட்டது. ஆனால் ‘தலைவர்’ கலந்து கொள்ளவில்லை. அவர் மட்டுமல்ல, வேறு முன்னணி கலைஞர்களும் பாடச் செல்லவில்லை. கடைசியில் சின்னத் திரைக் கலைஞர்களும், பின்னணி பாடகர்களும் இணைந்து அந்தப்பாட்டை பாடினார்கள்.

    இந்த பாட்டு அறிவிப்பை பத்திரிகைகளுக்கு செய்தியாக வெளியிட்டதே விசி குகநாதன் அண்ட் கோதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது மட்டுமல்ல, பல நடிகைகளும்கூட அன்று நடனமாடுவதிலிருந்தும் தப்பித்து, பாதியிலேயே விடு ஜூட்!

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)